Mar 14, 2013

இது வேண்டாம்..அது...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ


ஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்....



ஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா? அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா?


ஹராம் வேணாம்... ஹலால் உணவு:

ஆனால் ஹராம் என்பது பன்றியின் இறைச்சி மட்டும் தானா? அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த ஒரு பிராணியும் நமக்கு தடுக்கப்பட்டவை தானே? நாம் உட்கொள்ளும் உணவு ஹலாலாக இல்லாத பட்சத்தில் நாம் கேட்கும் எந்த துவாவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட வழிபாடு, கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில் நாம் செல்லும் இடமெல்லாம் ஹலால் உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தானே? அப்போது என்ன செய்யலாம்? என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.



Mar 4, 2013

தாடி வளர்த்தல்

 http://www.jazakallah.in/wp-content/uploads/2012/07/muslim_beard.jpg
முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.


மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர்.

“மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம்

இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான் உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை

Post image for வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
    நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்


http://www.allah.org/allah.jpg



هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأَخِرُ وَٱلظَّـٰهِرُ وَٱلۡبَاطِنُ‌ۖ وَهُوَ بِكُلِّ شَىۡءٍ عَلِيمٌ
அவனே முதலாமவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். (ஸூரா அல்ஹதீது 57:3)
يَعۡلَمُ مَا يَلِجُ فِى ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡہَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيہَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ
பூமிக்குள் பதிகின்ற (வித்து முதலிய)வைகளையும், அதிலிருந்து வெளிப்படும் (மரம், செடி முதலிய) இவைகளையும் வானத்திலிருந்து இறங்குபவைகளையும் அதன் பக்கம் ஏறுகின்றவைகளையும் அவன் நன்கறிவான். (ஸூரா ஸபா 34:2)
وَعِندَهُ ۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَ‌ۚ وَيَعۡلَمُ مَا فِى ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ‌ۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٍ۬ فِى ظُلُمَـٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٍ۬ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَـٰبٍ۬ مُّبِينٍ۬
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (ஸூரா அல்அன்ஆம் 6:59)
وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۚۦ
…அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை… (ஸூரா ஃபாதிர் 35:11)
 ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبۡعَ سَمَـٰوَٲتٍ۬ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَہُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىۡءٍ۬ قَدِيرٌ۬ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَىۡءٍ عِلۡمَۢا

நிலத்தில் மிதக்கும் மலைகள்

“இன்னும் மலைகளைப் போல் கடலில் செல்பவையும் (கப்பல் மற்றும் பனிப் 
பாறை (Ice berg) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ள வையாகும்.” அல்குர்ஆன் 42:32


அல்குர்ஆனின் வழியில் அறிவியல்…..
இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர்ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ள டக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங்களில் ஒன்றுதான்,
“அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன” அல்குர்ஆன் 55:24
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )