அமைப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
தோற்றம் :
அல்லாஹ்வின் பேரருளால் 2010 பிப்ரவரி மாதம் (01-02-2010) தேதி முதல் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. (பதிவு எண் : 24/2010).
நோக்கம் :
குர் ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பிற மனிதர்களையும் அதன் படி வாழச்செய்வதற்கு தேவையான இயன்ற உதவிகளை செய்து மனித இனத்தின் இம்மை, மறுமை வாழ்க்கையை அழகானதாக்கி வெற்றியை பெற முயற்சிப்பது!
ஏன்?
ஏற்கனவே இயக்கங்கள், அமைப்புகள் பல இருக்க நீங்கள் ஏன்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும் இது இயற்கையே! குர் ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று நம்பும் நாங்கள் எந்த கொடியின் கீழும் பயனிக்க விருப்பமில்லை. எங்களுக்கு கொடிகள் தேவையில்லை கொள்கை மட்டும் போதும். ஆகவே இறை மார்க்கத்தை இளையாங்குடியில் எடுத்துச்சொல்ல இது ஓர் சுதந்திரமான அமைப்பாகும்.
எதற்கு?
1. இறை மார்க்கமான இஸ்லாத்தின் அடிப்படை குர் ஆன் மற்றும் ஹதீஸே என்று கூறி இளையாங்குடி மக்களை மார்க்கத்தை கடைபிடித்து வாழச்செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது.
2. மனித குலத்திற்கு தேவையான சமூக உதவிகளை இயன்ற வரை செய்து மன நிறைவுடன் வாழச்செய்வது
கட்டமைப்பு:
இளையாங்குடியைச் சேர்ந்த மார்கத்தின் அடிப்படையில் வாழும் ஒன்பது சகோதரர்கள் கொண்ட குழுவால் இது ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சமூக மற்றும் மார்க்க பணிகள்:
1. ஏழைப்பெண்களுக்கு வாழ்வாதார உதவி (தையல் மிஷின், கிரைண்டர்) வழங்குதல்.
2. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குதல்.
3. இஸ்லாமிய நூலகம் (மார்க்க புத்தகங்கள், சீடிகள்).
4. மார்க்க பிரச்சார நோட்டீஸ்கள் வெளியிடுதல்.
5. மார்க்க பிரச்சார சுவரொட்டிகள் அமைத்தல்.
6. சுவர் விளம்பரம் மூலம் மார்க்க பிரச்சாரம் செய்தல்.
7. ஃபித்ரா மற்றும் ஜகாத் வசூலித்து விநியோகித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )