காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை மனித வாழ்க்கை இயந்திரமாகவே செல்கின்றது. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் மனிதனிடம் அவசரம் தான் உள்ளது. நிதானம் என்பது இல்லை.
ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து மரணிக்கின்ற வரை அவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்கின்ற வரை தன்னுடைய ஒவ்வொரு செயலையும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதயும், அந்தச் செயல்களைச் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் என்னென்ன என்பதையும் இஸ்லாம் சொல்லி தருகின்றது.
படுக்கைக்குச் செல்லும் முன் தொழுகைக்கு உளுச் செய்வது போன்று உளூ செய்ய வேண்டும்.
பராபின் ஆசிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
" நீ உன்னுடைய படுக்கைக்கு செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிததில் கூறினார்கள்.
நூல் : புகாரி 247
இது நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுங்கு முறையாகும். ஆனால் இன்று பலர் இதைக் கடைபிடிப்பதில்லை.
படுக்கை விரிப்பை உதறுதல்
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
" நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டி விடுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 7393
ஓத வேண்டிய துஆக்கள்
"நீங்கள் படுக்கைக்கு செல்லும் போது, ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேஇருப்பார் . காலை நேரம் வரை சைத்தான் உங்களை நெருங்க மாட்டான்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரலி)
நூல் : புகாரி 3275
மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.
"எவர் அல்பகரா எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 5009
மேலும் படுக்கைக்கு செல்லும் போது திருக் குர் ஆனின் 112, 113, 114 அத்தியாயங்களையும் ஓதி, நமது உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்கு சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங் கைகளை இணைத்து அதில், "குல்ஹுவல்லாஹு அஹத், குல்அவுத்து பிரப்பில் ஃபலக் , குல் அவூது பிரப்பின்னாஸ்" ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு ) தமது உடலில் இயன்ற வரை தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி ௫௦௧௭
பின்வரும் துஆக்களில் ஒன்றை ஓத வேண்டும்.
பிஸ்மிக்க ரப்பீ, valadhu ஜன்பீ வபிக்க அற்பவுஹூ, இன் அம்சக்த நப்சீ பர்ஹம்ஹா வ இன் அர்சழ்த்தஹா பஹ்பல்ஹா பீமா தஹ்பளு பிஹி இபாதக்கஸ்
சாலிஹீன்.
பொருள் : என் அதிபதியே! உன் பெயரால் நான் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பாயாக! அதை நீ (கைப்பற்றாமல்) விட்டு விட்டால் உன் நல்லாடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பையோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 7393
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா
பொருள் : இறைவா! உன் பெயரால் மரணிகின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன்.
நூல் : புகாரி 6325
இவை அனைத்தையும் ஓதி முடித்த பின் வலப்புறமாக ஒருக்களித்து படுத்து, பின்வரும் துஆவை ஓதி அந்த வார்த்தைகளையே அன்றைய தினத்தின் இறுதி வார்த்தைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
"நீ உன்னுடைய படுக்கைக்கு செல்லும்போது தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் வலது கைப்பக்கமாகச் சாய்ந்து படுதுகோல் பின்னர்,
அல்லாஹும்ம அச்லம்து வஜ்ஹு இலைக்க வபவ் வல்து அம்ரீ இலைக்க வ அல்ஜஃ த்து ளஹ்ரீ இலைக்க ரஃபத்தன் இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜ்அ மின்க்க இல்லா இலைக்க அல்லாஹும்ம ஆமன்து பிகிதாபிக் கல்லதீ அன்சள்த வபி நபியிக்க் கல்லதீ அர்சழ்த்த
பொருள் : யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும், உன்னை பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன் வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்.
என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூயமையனவனாய் ஆகி விடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிகொள் " என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ இப்னு ஆசிப் (ரலி)
நூல் : புகாரி 247
இவ்வாறு உன்னதமான உறங்கும் முறையை இஸ்லாம் போதிக்கின்றது. எனவே இதன் அடிப்படையில் நாமும் செயல்பட்டு, நம் சந்ததிகளையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் செயல்படச் செய்து, நபி மொழியைப் பின்பற்றியவர்களாக அல்லாஹ் என்றென்றும் நம்மை ஆக்கி வைப்பானாக!
Assalamualaikkum,
ReplyDeleteDear brothers, Please do not write arabic words in tamil which may wrongly pronounceable better try to avoid in futere.
haleem.