Sep 8, 2011

தொழக்கூடாத மூன்று நேரங்கள்

தொழக்கூடாத மூன்று நேரங்கள்
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
  • சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
  • நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை
  • சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி). நூல் : முஸ்லிம்

இந்த ஹதீஸில் தொழுகைக்குத் தடை செய்யப்பட்ட நேரங்கள் எவை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
சூரிய உதயம், உச்சி , அஸ்தமனம் போன்றவை ஒரு வினாடியில் முடிந்து விடுவதில்லை. உதாரணமாக சூரியன் உதிக்கத் துவங்கி அது முழுமையாக வெளியே வருவதற்கு சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகும். (இந்த நேரம் குறித்து முறையான ஆய்வு யாரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. நாம் விசாரித்தவரை.

உளூச் செய்யும் முறை



நிய்யத் எனும் எண்ணம்

ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது

அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரீ1,முஸ்லிம் 3530

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும்.

பல் துலக்குதல்

பல் துலக்குதல் உளூவின் ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும்.

நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1233

பல் துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் உளூச் செய்தார்கள் என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் பல் துலக்கினார்கள் என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது.

உளூவின் சட்டங்கள்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும் கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால் அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும் தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன்5:6

உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ ,முஸ்லிம் 330 

தண்ணீர்

ஆறு குளம் கண்மாய் ஏரிகள் கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர் நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம் குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை. கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது. நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.

உளூவை நீக்குபவை

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம்.

மலஜலம் கழித்தல்

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ , பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும் , கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் , மன்னிப்பவனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன் 4:43

தயம்மும் சட்டங்கள்

தொழுகை நேரம் வந்து உளூச் செய்வதற்கான தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீர் கிடைத்து அதைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தால் அதைக் காரணம் காட்டி தொழாமல் இருக்க முடியாது. மாறாக தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி உளூவுக்கு மாற்றுப் பரிகாரமான தயம்மும் செய்து அதன் பின்பே தொழ வேண்டும்

 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணமாகப் புறப்பட்டோம்.பைதாஎன்ற இடத்தை நாங்கள் அடைந்த போது எனது கழுத்து மாலை அறுந்து விட்டது. அதைத் தேடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அங்கே தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினார்கள். அவர்களின் அருகில் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை. மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து,உங்கள் மகள்) ஆயிஷா செய்ததைப் பார்த்தீர்களா நபிகள் நாயகத்தையும் மக்களையும் தங்க வைத்து விட்டார். அவர்கள் அருகில் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தலையை எனது தொடையில் வைத்து உறங்கிக் கொண்டிருந்த போது அபூபக்ர் (ரலி) வந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் தடங்கலை ஏற்படுத்தி விட்டாய். அவர்களருகிலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறி என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் எதைக் கூற வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் கூறினார்கள். எனது இடுப்பிலும் தமது கையால் குத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தொடை மீது படுத்திருந்ததால் நான் அசையாமல் இருந்தேன். தண்ணீர் கிடைக்காத நிலையில் நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தார்கள். அப்போது தான் தயம்மும் பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். நான் அமர்ந்திருந்த ஒட்டகத்தை எழுப்பிய போது அதன் அடியில் என் கழுத்து மாலை கிடைத்தது.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரீ334,முஸ்லிம் 550

தயம்மும் பற்றிய வசனம் திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ளது. அதைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் இங்கே குறிப்பிடுகின்றார்கள். அந்த வசனங்கள் வருமாறு

Sep 5, 2011

நன்மை பயக்கும் நபிமொழி

o "உங்களில் எவரும் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று புஹாரியில் இடம் பெற்றுள்ளது.





o "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ர்கள் கூறினார்கள், குளிப்புகடமையாக இருக்கும் நிலையில் உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் (இறங்கி) குளிக்க வேண்டாம்" (நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத்)





o "கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்க்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். (தேவை ஏற்பட்டால்) இருவரும் சேர்ந்து அள்ளி அள்ளி குளித்துக் கொள்ளலாம்" நபி தோழர்களில் ஒருவர் அறிவிக்கின்றார் (நூல்கள்: அபூ தாவூத், நஸயீ) (ஹதிஸ் தரம்: இது ஆதரபூர்வமான ஹதிஸ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டது)




o "(உம்முல் முஃமினீன்) மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளித்தார்கள்" என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)

சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்!


சொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்!



மறுமை நாளில் இறைவன் வழங்கும் உயர்ந்த சொர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பல நற்காரியங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இச்சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த நற்காரியங்களில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அன்புத் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக, சொர்க்கத்தை கடமையாக்கும் காரியங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவற்றை பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?'' என்று கேட்டார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?'' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நான்' என்றார்கள். ''இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?'' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 'நான்' என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை'' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1865)

நோன்பு நோற்றல், நோயாளியை நலம் விசாôரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், ஏழைக்கு உணவளித்தல் என்ற நான்கு காரியங்கள் ஒரு மனிதரிடம் ஒரு நாளில் ஒரு சேர நடந்து விட்டால் அவர் சொர்க்கத்திற்குப் போவது உறுதியாகி விடும். எனவே இந்த நான்கு காரியத்தையும் செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


இந்த நான்கு நல்லறங்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் தனித் தனியாகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம் கூறும் கழிப்பறை ஒழுக்கங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன. 


0 கழிவரையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவரையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும். (இப்னு மாஜா)


0 முடிந்தவரை குனிந்து ஆடைகளைத் திறக்க வேண்டும். (நூல்: அபூதாவூ)

0 இறைவசனம் அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் கண்ணுக்குத் தென்படுகிற அளவு எழுதப்பட்டுள்ள மோதிரம் போன்ற வஸ்துக்களை கழிவரையில் நுழையும் முன்பு களைந்து விட்டுச் செல்ல வேண்டும். (நூல்: மிஷ்காத்)

0 கழிவறையில் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது. பின்னோக்கவும் கூடாது. (நூல்: மிஷ்காத்)

0 மலஜலம் கழிக்கும்போது அந்தரங்க உறுப்பை வலது கையால் தொடாமல் இருக்க வேண்டும். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

0 மலஜலத் துளிகள் உடலில் படாது பார்த்துக் கொள்ள வேண்டும். கப்ருடைய (மண்ணறையுடைய) வேதனை பெரும்பாலும் சிறுநீர்த்துளிகளில் கவனக்குறைவாக இருப்பதினால் ஏற்படுகிறது. (நூல்: திர்மிதீ)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )