Nov 24, 2014

“அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்”

“இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் (1:5). தம் தொழுகையின்போது ஒவ்வொரு அடியானும், ஒவ்வொரு ரக்அத்திலும் அல்லாஹ்(ஜல்)விடம் இப்படித்தான் பிரார்த்திக்கிறான். தம்மை படைத்து பாதுகாத்து வளர்க்கும் ரப்புல் ஆலமீனிடம், “நேரிய பாதையை எங்களுக்கு அருள்வாயாக”, என்று மனமுருகி கேட்கும் அடியான் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை உண்மையிலேயே அல்லாஹ்வுடைய நேரிய பாதையின் வழிகாட்டலில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொள்ள கடமைப்பட்டவனாக இருக்கிறான்.
 
இக்கால கட்டத்தில் உலகளாவிய அளவில் பல இஸ்லாமிய சகோதரர்கள் அல்லாஹ் காட்டிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதையை விட்டும் மாறி தடம் புரண்டு வெறும் மனித யூகங்களால் உண்டாக்கப்பட்ட அபிப்பிராயங்களையே தம்முடைய மார்க்கமாகவும், தமது வாழ்க்கைப் பாதையாகவும் கருதி தடுமாறி நிற்கின்றனர். இதன் காரணம் என்ன? என்று ஆராயும்போது பல திடுக்கிடும் உண்மைகள் நமக்கு தெரியவருகிறது. இஸ்லாத்தின் பரம விரோதிகளும், முனாபிக்கீன்களும் (நயவஞ்சகர்களும்) சேர்ந்து திட்டமிட்டு அல்லாஹ்வின் நேரிய பாதையை பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்கு தெரியப்படுத்தாமல், இருட்டடிப்பு செய்த சூழ்ச்சி, தந்திரங்கள் இப்போது நமக்கு தெரியவருகின்றன. உண்மை இஸ்லாத்தை மறைத்து போலிச்சடங்குகளையும், சம்பிரதாய வழக்கங்களையும் புகுத்தி முஸ்லிம்களை ஆண்டாண்டு காலமாக வழிகெடுத்தவர்களை அல்லாஹுத்தஆலா அடையாளம் காட்டி இவர்களது சுயரூபத்தை நமக்கு பகிரங்கப்படுத்திவிட்டான். (அல்ஹம்துலில்லாஹ்).
 
 
இஸ்லாம்… என்ற பெயரில் மார்க்கத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத எத்தனையோ வழிகேடுகளையும், முரணான கொள்கைகளையும் பின்பற்றி வரும் எத்தனையோ சகோதரர்கள் நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே, ”நாங்கள் அல்லாஹ் அருளிய நேரான பாதையிலேயே இருப்பதாக”, கூறிக் கொள்கின்றனர். இது அவர்களது வீண் கற்பனையே! அல்லாஹ் அருளிய ஸிராத்துல் முஸ்தகீம் என்ற நேரிய பாதைக்கும், மனித அபிப்பிராயங்களால் ஏற்பட்ட “பாதை”க்கும் உள்ள வேற்றுமைகளையும், வித்தியாசங்களையும் நாம் சற்று ஆராய்வோம்.

மகனின் சாதுரியம் (சிறுகதை)

மவ்லவி நூர் முஹம்மது, ஃபாஜில் பாகவி  
[ நம்மில் பலர் தந்தையோடு இணக்கமாக நடந்து கொளளும் அதே வேளையில் தாயை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். அதற்கு காரணம், 'தன் மனைவியோடு தகராறு செய்வது சண்டைக்கு நிற்பது தாய்தான்' என்ற தவறான எண்ணம்தான்.
 
இவ்வுலகில் ஆயிரம் மனைவிகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். ஒரு தாயை ஒருக்காலும் மாற்றிக் கொள்ள முடியாது என்பதையும், மனைவியின் சாபத்தை விட ஒரு தாயின் சாபம் பல மடங்கு வலிமை உள்ளது என்பதையும், மனைவியின் அன்பை விட தாயின் அன்பு பல வகையில் வீரியம் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
''பெற்றோரை திருப்தி படுத்துவதில்தான் இறைவனின் திருப்தி உள்ளது. பெற்றோர் இருவரை அல்லது இருவரில் ஒருவரை வயது முதிர்ந்த நிலையில் பெற்றுக்கொண்டவன், சுவனம் செல்ல வில்லையென்றால் அவன் நாசமாகட்டும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளதை இங்கே கவனத்தில் கொண்டு மனைவியின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்படாமல் தாயை அணுசரித்து நடப்பதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.]
 
மகனின் சாதுரியம் (சிறுகதை)

குறுக்கு வழியும், நேர் வழியும்!

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது.
 
குழப்பத்தைத் தீர்க்க வேண்டியவர்களே குழம்பிப் போய் நிற்கின்றனர். தெளிவு படுத்த வேண்டியவர்களே தெளிவின்றி நிற்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் மார்க்கம் ஒரு குழப்பமான மார்க்கமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. நிச்சயமாக இது குழப்பமான மார்க்கமில்லை.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களை நான் தெளிவான மார்க்கத்தில் விட்டுச் செல்கிறேன்; அதன் இரவும் பகலைப் போன்று பிரகாசமானது”. ஆதாரம்: இப்னுமாஜா
ஆகவே குழப்பம் மார்க்கத்தில் இல்லை. அதை எடுத்துச் சொல்கின்றவர்களிடமும், ‘அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என்ற ரீதியில் தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் நம்மிடமும் தான் இருக்கிறது. அப்படியானால் எந்த அடிப்படையில் ஒன்றை ஏற்றுக் கொள்ளவோ. மறுக்கவோ வேண்டும்?
 
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். “உங்கள் மத்தியில் நான் இரண்டை விட்டு செல்கிறேன். அவற்றை நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்; மற்றொன்று என்னுடைய வழிமுறை.” (ஆதாரம் : முஅத்தா)
நம்மிடம் தெளிவான ஆதாரங்கள் தரப்பட்டுவிட்டன. இவற்றைக் கொண்டு யார் எதைச் சொன்னாலும் உரசிப்பார்த்து அது சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளவும். மாற்றமாக இருந்தால் புறக்கணிக்கவும் தயாராகி விட வேண்டும்.

Nov 11, 2014

துன்பத்தின் போது நபிகளாரின் அணுகுமுறை

நம்மில் பலர் சிறியதொரு துன்பம் வந்தால்கூட அதையே நினைத்து நினைத்து தங்களையே மாய்த்துக் கொள்(ல்)கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை எப்படி எதிர்கொண்டார்கள்? நபிகளாரின் வாழ்க்கையில் துன்பத்திற்கா பஞ்சம்?
நபிகளார் பட்ட துன்பத்தை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்கிற அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் பெரும் துன்பங்கள் இடம் பெற்றிருக்கிறது. அவைகளையெல்லாம் எந்த முறையில் அணுகினார்கள்.
 
அந்த வழிமுறைகளை நாமும் கண்டறிந்தால் துன்பங்களை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடம் வருவதோடு எப்படிப்பட்ட துன்பமானாலும் ஒரு போதும் துவண்டு விட மாட்டோம்.
 
முன்னோர்களின் சிரமத்தை நினைத்துப் பார்த்தல்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின் போது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும் போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள்.
 
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்" என்று கூறினார். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்" என்று கூறினேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் சென்று அதைத் தெரிவித்தேன்.

தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம்

மாறாக தற்கொலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம் இஸ்லாம்

முஸ்லிம்களுக்கு இந்த உலகம் ஒரு சோதனைக்கூடமாகும். இதில் வசிக்கும் மாந்தர்கள் இவ்வுலக வாழ்வு எனும் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுச் சோதிக்கப்படுவார்கள்.
துன்பங்களைக் கண்டுத் துவண்டு போகாமலும், துயரங்களால் முடங்கிப் போகாமலும் இறைவனின் கருணையை எதிர் நோக்கிப் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.
எந்த நிலையிலும் ஒரு முஸ்லிம் இறைவனைச் சார்ந்தே நிற்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் நிரந்தரமல்ல. இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை அதனை இறைவன் கொசுவின் இறக்கைக்குத் தான் ஒப்பிடுகிறான்.

மறுமையின் நிலையான வாழ்வுக்கு முன்னால் அற்பமான இம்மை வாழ்வில் வரும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு சஞ்சலம் அடையாமல் இறைவனின் உதவியை மட்டுமே எதிர்பார்த்து ஒரு முஸ்லிம் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
 
அதனால் எந்தவொரு சோதனைக்கும் தற்கொலையைத் தீர்வாக இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை. மாறாக தற்கொலை செய்வதை வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தில் தொழுகையின் நிலை

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)
 
“என்னைத் தொழக் கண்டவாரே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.
 
‘அஸ்ஸலாத்” (தொழுகை) அரபிப் பதத்திற்கு “அத்துஆஉ” (பிரார்த்தனை) என்பது பொருள். மார்க்க ரீதியில் தக்பீரைக் கொண்டு துவங்கி, ஸலவாத்தைக் கொண்டு நிறைவுபெறும் குறிப்பிட்ட சொற்செயலைக் கொண்டதோர் வணக்க வழிபாடு என்பதாகும்.
 
இஸ்லாத்தில் தொழுகையின் நிலை:
 
இஸ்லாத்தில் தொழுகை என்பது ஏனைய வணக்க வழிபாடுகளுக்கு மத்தியில் ஒப்பற்ற உன்னத ஸ்தானம் வகிப்பதோடு, அதன் இன்றியமையாத் தூணாகவும் திகழ்கிறது. இதுவே வணக்க வழிபாடுகளில் முதன்மையாகக் கடமையாக்கப்பட்டுள்ள முக்கிய அனுஷ்டானங்களாகும்.
அனஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவு வழி நடத்தப்பட்ட (மிஃராஜின்) போது, 50 ஆகக் கடமையாக்கப்பட்டு, பின்னர் அவற்றைக் குறைத்து 5 ஆக்கப்பட்டது. பின்னர் “முஹம்மதே” என்று அழைக்கப்பட்டு நிச்சயமாக என்னிடம் சொல்லில் மாற்றம் ஏதும் செய்யப்பட மாட்டாது. உண்மையாக உமக்கு இவ்வைந்து (நேரத் தொழுகை)க்கும் 50(நேரத் தொழுகையின் கூலி உண்டு என்று கூறப்பட்டது. (நஸயீ, திர்மதீ,அஹ்மத்)
 
மறுமையில் முதல் விசாரணை தொழுகையைப் பற்றியே!
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )