Sep 30, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள்


''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும்பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள்அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
இரு பெரு நாட்கள்
''அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களுக்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான்அவைஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!)மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு தெரிவித்தார்கள். (ஆதாரம் அபூ தாவூது நஸயீ)
ஈதுல் ஃபித்ர் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும்ரமளான் மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது.

குர்பானியின் சட்டங்கள்


இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.அறிவிவப்பவர் பரா ரளியல்லாஹு அன்ஹுநுல் புகாரி (955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை

Sep 20, 2013

இஸ்லாத்தின் பெயரால் போலிச் சடங்குகள்!!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!
நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?
இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.
இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.
பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.
அது மட்டுமா?

இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!



அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4:48,116)
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள் செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை உனக்கு வழங்குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி
சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம் பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும் பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி விடுவதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.
அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம்பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும் கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது. (7:56)
அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்”

ஜும்மாத் தொழுகை



ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)
வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)
ஜும்ஆவும் அதானும்
ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இரு குத்பாக்கள்
நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள.; பின்னர் உட்கார்ந்து விட்டு மீண்டும் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம் )
நாயகத் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவு ஆற்றினார்கள். அவர்கள் (மிம்பர்; மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி;விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மயின்னத்துன் மின் ஃபிக்ஹிஹி) மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள்.
قال صلي الله عليه وسلم : ان في البيان لسحرا 

Sep 18, 2013

ஹிஜாபை ஆண்கள்(!) ஏன் எதிர்கிறார்கள்?



[ பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று கேள்வியை நாம் அவர்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கிருந்தும் முறையான பதில் கிடைக்கவில்லை

"அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் - நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்று முழங்கும் பெண்களும் கூட இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனையை என்ன வென்று சொல்வது?]

ஹிஜாபை ஆண்கள்(!) ஏன் எதிர்கிறார்கள்?

Sep 10, 2013

தொழுகையின் சிறப்பும் அதனை விட்டவரின் நிலையும்

Photo: ‎தொழுகையின் சிறப்பும் அதனை விட்டவரின் நிலையும்

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9

குழந்தைகளுக்கு தொழுகை
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு  அத்தொழுகை பிரகாசமாகவோ,  ஈடேற்றமாகவோ  இருக்காது.  (மாறாக) அவன் மறுமை  நாளில் காரூன், ஃபிர்அவ்ன்,  ஹாமான்,  உபைபின் கஃப்  ஆகியோருடன்  இருப்பான்  என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்

(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து “உங்களை நரகத்தில் புகுத்தியது எது?” என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் “நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்.”என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42

சிறந்த அமல்: 
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்: 
“(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்.” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: 
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

தொழுகையை விட்டவனின் நிலை: 
நமக்கும் அவர்களுக்குமிடையே (நிராகரிப்பவர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும்.யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காபிராகிவிட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, அஹ்மது

பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை: 
என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி

நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது சாட்சி கூறுவதாக இருக்கிறது. அல்குர்ஆன்17:78

இரண்டு தொழுகைகள் முனாபிக்கீன்கள் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாத்தும் இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபிصلى الله عليه وسلم அவர்கள் நவின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் “ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கிய பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் ‘நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்  உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும்’ என உளருகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து  எழுந்து  அல்லாஹ்வை  நினைவு  கூர்ந்தால்,  முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு  படுக்கையிலிருந்து  எழுந்து உளு செய்தபின்,  இரண்டாவது  முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:புகாரி,  முஸ்லிம், முஅத்தா,  நஸயீ,  அபூதாவூத்‎
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.அல்குர்ஆன் 23:1,2,9
குழந்தைகளுக்கு தொழுகை
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்(தும் தொழாமலிருந்தால்)தால் அதற்காக அவர்களை அடியுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஜபு நூல்:அஹ்மத், அபூதாவூத்
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ள வில்லையோ அவனுக்கு  அத்தொழுகை பிரகாசமாகவோ,  ஈடேற்றமாகவோ  இருக்காது.  (மாறாக) அவன் மறுமை  நாளில் காரூன், ஃபிர்அவ்ன்,  ஹாமான்,  உபைபின் கஃப்  ஆகியோருடன்  இருப்பான்  என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் இப்னு அம்ருஇப்னுஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்
(மறுமை நாளில்) சுவர்க்க வாசிகள் சுவர்க்கத்தில் இருந்துக்கொண்டு நரகவாசிகளைப் பார்த்து “உங்களை நரகத்தில் புகுத்தியது எது?” என்று கேட்ப்பார்கள். அதற்கவர்கள் “நாங்கள் தொழாதவர்களாகவே இருந்தோம்.”என்று பதில் கூறுவார்கள். அல்குர்ஆன் 74:42
சிறந்த அமல்: 
அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்
பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புக்கள்: 
“(பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார்.” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமாரா இப்னு ருவைபா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:முஸ்லிம் நஸயீ
கூட்டுத் தொழுகையின் சிறப்பு: 
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
தொழுகையை விட்டவனின் நிலை: 

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்


Post image for அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்

உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். “”யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)
நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேர த்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.
ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார்:
அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள் “”அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன்(ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்”. (நூல்: பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகிறார்கள். அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்… பாருங்கள்!
அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள். படுக்கை, போர்வை, மனைவி மக்களின் அரவணைப்பு அத்துணையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான்: “”வானவர்களே எனது இந்த அடியானைப் பாருங்கள்…! படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக…? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? “எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனது தண்டனையைப் பயந்தா…? பின்னர் வானவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்: “”உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலி ருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (நூல்: அஹ்மத்)
அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும் வரை தூங்குபவர்கள் அல்லாஹ்வின் அருளையும், பாதுகாப்பையும் அலட்சியம் செய்யும் மக்கள் அல்லவா? அல்லாஹ்வின் பாதுகாப்பையே அலட்சியம் செய்பவர்களுக்கு ஷைத்தான் அல்லாமல் வேறு யார்தான் பாதுகாவலனாக இருக்க முடியும்? ஆனால், மனிதர்களில் சிலர் இப்படியும் இருக் கின்றார்கள். உலகம் எப்படி மாறினாலும் சரி, மக்கள் அனைவரும் எப்படிப் போனாலும் சரி, தொலைக் காட்சியில் எவ்வளவு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிப் பரப்பினாலும் சரி… மனதில் ஸுபுஹ் தொழுகையை நினைத்த வண்ணமே படுக்கைக்குச் செல்வார்கள். அவ்வண்ணமே அதிகாலையில் எழுவார்கள். அவர்கள்தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்.

உறுதிமொழியை காப்பாற்றுகிறவர் யார்?


Post image for உறுதிமொழியை காப்பாற்றுகிறவர் யார்?

சாந்தி மார்க்கம் இஸ்லாத்தில் நுழைபவர் எந்த இடைத்தரகரோ, மதகுருவோ கிளிப்பிள்ளை பாடமாகச் சொல்லித் தருவதை உளப்பூர்வமாக அறியாமல் நாவால் மட்டும் மொழியாமல், சுயமாகத் திட்டமாக விளங்கி, உணர்ந்து மனதார ஏற்று உறுதியாகச் சொல்லும் உறுதிமொழி ‘நிச்சயமாக இறைவனே இல்லை அல்லாஹ்வைத் தவிர என நான் உறுதி கூறுகிறேன்” இன்னும் திடனாக முஹம்மது அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார் என நான் உறுதி கூறுகிறேன்” என்பதுதான். இதுவே ஏற்கத்தக்கது.
இந்த உறுதிமொழியை முறையாகச் சரியாக விளங்கி அதன்படி நடப்பவர் ஒருபோதும் கோணல் வழிகளில் செல்ல மாட்டார். இந்த உறுதிமொழியின் முற்பகுதியை நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களும் தங்களின் சமூகத்தாருக்கு எடுத்துச் சொன்னதை அல்குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கிறது. இப்படி அனைத்து சமூகங்களுக்கும் அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் இல்லவே இல்லை என்று மீண்டும் மீண்டும் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?
ஷைத்தான் அவனது சபதப்படி ஆதத்தின் சந்ததிகளை அல்லாஹ்வுக்கு இணை(ஷிர்க்) வைக்கும் இறைவனால் மன்னிக்கப்படாத குற்றத்திற்கு (4:48,116) ஆளாக்கி பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளுகிறான். அவனது இச்சபதத்தை நிறைவேற்ற ஷைத்தானுக்கு உறுதுணையாக  இருந்து செயல்படுவது இடைத்தரகர்களான மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மத குருமார்களே! இறைவனுக்கு இணைவைத்தல் பலவிதம். இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களை இறைவனது அவதாரங்களாகக் கற்பனை செய்து அவர்களை வழிபடுவது” இறைத் தூதர்களையும், நல்லடியார்களையும் சிலைகளாக வடித்து அச்சிலைகளை வணங்கி வழிபடுவது. மேலும் பல பொய்க் கடவுள்களை இவர்களாகக் கற்பனை செய்து பலவிதமாக சிலைகள் வடித்து அவற்றை வணங்கி வழிபடுவது. வழிகாட்டுவது மத குருமார்களே!
யூதர்கள் உஜைர்(அலை) அவர்களையும், கிறித்தவர்கள் ஈசா(அலை) அவர்களையும் அல்லாஹ்வுடைய மகன் என கற்பனை செய்து வணங்கி வழிபடுகிறார்கள்.(9:30) அதல்லாமல் அவர்களது மதகுருமார்களையும், துறவிகளையும் அல்லாஹ்வாக்கி அவர்களை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதை அல்குர்ஆன் 9:31 உறுதிப்படுத்துகிறது. அந்த மத குருமார்களும், துறவிகளும் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்” நேர் வழியைத் தடுத்து மக்களை கோணல் வழிகளில் இட்டுச் செல்கிறார்கள் என்பதை 9:34 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )