Apr 25, 2013

இளையான்குடி தக்வா டிரஸ்ட் ( ITT) நடத்தும் இஸ்லாமிய கட்டுரைப் போட்டி 2013

அஸ்ஸலாமு அழைக்கும், 


                                          ஒழுக்கம்  பற்றிய  விழிப்புணர்வு ஏற்படும் விதமாக இளையான்குடி தக்வா டிரஸ்ட் " இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்த முடிவெடுத்துள்ளது. இப்போட்டி இளையங்குடியில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் மதரசா மாணவ/ மாணவியருக்காக நடத்தப்படுகிறது.  

                                              கட்டுரை போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமல்லாது  பங்கு பெறும் அனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்படும். இதற்காக தங்களால் இயன்ற அளவு நன்கொடை வழங்கி போட்டியை சிறப்பாக நடத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.                        

கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 





இளையான்குடி தக்வா டிரஸ்ட் ( ITT) நடத்தும்   இஸ்லாமிய கட்டுரைப் போட்டி 2013

கட்டுரையின் தலைப்பு
" இஸ்லாம் கூறும் ஒழுக்கம்"

முதல் பரிசு Rs. 2000/- & இஸ்லாமிய புத்தகங்களுடன் பரிசுப்பொருட்கள்

இரண்டாம் பரிசு Rs.1000/- & இஸ்லாமிய புத்தகங்களுடன் பரிசுப்பொருட்கள்

மூன்றாம் பரிசு Rs.500 /- & இஸ்லாமிய புத்தகங்களுடன் பரிசுப்பொருட்கள்

பங்கேற்கும் அனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்களும் பரிசுப் பொருட்களும் உண்டு....



விதிமுறைகள்:

1. பள்ளி, கல்லூரி மற்றும் மதரசா மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்க வேண்டும்.

2. கட்டுரையில் ஆதாரங்களாக திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸையே மேற்கோள் காட்ட வேண்டும்.

3. A4 தாளில் 4 பக்கங்கள் மட்டுமே கட்டுரை இருக்க வேண்டும்.

4. திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை தவிர உரைநடையில் உங்களது கருத்துகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்

10-05-2013


கட்டுரை கொடுக்க வேண்டிய முகவரி
இளையான்குடி தக்வா டிரஸ்ட் ( ITT)
8/721, கலிபா தெரு, (கீழ்த்தளம்), இளையான்குடி.

நேரம் : மக்ரிப் முதல் இஷா வரை

தொடர்புக்கு:

 இளையான்குடி : 9487213388, 9940515751
சென்னை: 9940437900, 9940612204, 9500160005


இஸ்லாம் கூறும் தீமைகள் - 2011 கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள் விபரம்.

போட்டியில் பங்கேற்ற 170 நபர்களுக்கும், இஸ்லாமிய புத்தகமும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

முதல் பரிசு             : A. தஸ்னிம் பாத்திமா

இரண்டாம் பரிசு   : S. அப்துல் ரசீத் அசார்

மூன்றாம் பரிசு      : ( 4 நபர்கள்)
                                     : F.பிரோஜா நஸ்ரின்
                                     : S.K.பத்ருல் சுமையா
                                     : K.T. முஹம்மது ஆசிக்
                                     : K.U. மரியமுள் ஜமிலா



 இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திடும் வகையில் ....

* திருக்குர்ஆன் தமிழாக்கங்கள்
* ஹதீஸ் தமிழாக்கங்கள்
* திருக்குர்ஆன் விரிவுரைகள்
* நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இஸ்லாமிய உரைகளின் CD கள், DVD கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள்

இஸ்லாமிய நூலகம்
8/72, கலிபா தெரு, இளையான்குடி.
நேரம் : மக்ரிப் முதல் இஷா வரை.

குறிப்பு: புத்தகங்கள், CD கள், DVD கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் வசதி உண்டு

Account Information: 

Name: Ilayangudi Thakwa Trust 
A/C No: 146911100000201
IFSC Code: ANDB0001469 
Bank Branch: Andhra Bank, Ilayangudi  


ஜமாஅத்துக்கு செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?



பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா?
கரீம்

பதில்
கடமையான தொழுகைகளை பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும். எந்த விதக் காரணமும் இல்லாமல் வீட்டில் தொழுதால் அத்தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

785 عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ إِلَّا مِنْ عُذْرٍ رواه إبن ماجه

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் (பாங்கு) அழைப்பைச் செவியுற்று காரணமில்லாமல் (பள்ளிக்கு) வரவில்லையென்றால் அவருக்குத் தொழுகை கிடையாது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : இப்னு மாஜா (785)

462حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ حَدَّثَنِي يَزِيدُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ الْأَصَمِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ فِتْيَتِي فَيَجْمَعُوا حُزَمًا مِنْ حَطَبٍ ثُمَّ آتِيَ قَوْمًا يُصَلُّونَ فِي بُيُوتِهِمْ لَيْسَتْ بِهِمْ عِلَّةٌ فَأُحَرِّقَهَا عَلَيْهِمْ قُلْتُ لِيَزِيدَ بْنِ الْأَصَمِّ يَا أَبَا عَوْفٍ الْجُمُعَةَ عَنَى أَوْ غَيْرَهَا قَالَ صُمَّتَا أُذُنَايَ إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَأْثُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ذَكَرَ جُمُعَةً وَلَا غَيْرَهَا رواه أبو داود
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )