Feb 28, 2014

இஸ்லாமிய ஹிஜாபும் பெண்ணுரிமையே!

 ''இங்கு யாருக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் பெண்ணுரிமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை'' என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால், இஸ்லாம் கூறும் பெண்ணுரிமைகள் அனைத்தையும், பெண்ணடிமைத்தனம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும் மோசமான போக்குதான் இஸ்லாத்திற்கு எதிரான ஏதோ ஒரு வஞ்சக சூழ்ச்சியாக தோன்றுகிறது.

மற்றவர்களுக்கு அரைகுறையாக ஆடை அணிய இருக்கும் பெண்ணுரிமை, முழுமையாக ஹிஜாப் ஆடை அணிய நினைக்கும் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் ஏன் எதிர்க்கப்படுகிறது?
இரண்டுமே இருவேறுபட்ட பெண்களின் உரிமைகள் என்று ஹிஜாபை எதிர்ப்பவர்கள் யாருமே ஏன் உணர்வதில்லை? அதாவது, இஸ்லாம் என்றாலே வேண்டுமென்றே கண்மூடித்தனமாய் எதிர்ப்பது. அதுதான் உங்களுக்கே தெரியாமல் நடந்து கொண்டும் இருக்கிறது. நம்பவில்லையா?

ஹிந்து பெண் துறவிகள் அல்லது பெண் கிருஸ்த்துவப்பாதிரிகளின் உடையை எவரேனும் கண்டிருக்கிறீர்களா? மற்ற சாதாரண கிருத்துவ பெண்களுக்கு இல்லாமல் ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வாடை? கடவுளுக்கு சேவகம் புரிபவர்கள் தூய்மையானவர்கள் மற்றும் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே? இதை என்றேனும் எவரேனும் 'பெண்ணடிமைத்தனம்' என்று கூவி இருக்கிறார்களா?

மாறாக, இஸ்லாமிய ஹிஜாபை ஒருபுறம் 'பெண்ணடிமைத்தனம்' என்று எதிர்த்துக்கொண்டே மறுபுறம் பின்நவீனத்துவ பன்னாட்டு முற்போக்கு முதலாளித்துவத்தால் கவரப்பட்டு அரைகுறை ஆடைகளுடன் காதலர்தினம், டிஸ்கோத்தே, நைட் பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளும் பெண்களை அவமரியாதை செய்து நையப்புடைப்பது தானே வழக்கம்? இஸ்லாம் என்றதும் ஏனிந்த இரட்டை நிலை? 

திருமணத்தில் தீய பழக்கங்கள்

 

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
 
ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?
 
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

பெண்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஆண் நண்பர்கள்


பழகும் போதே மொத்தத்தில் `பாய்பிரண்டின்` மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். உங்கள் லட்சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்! பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது.
பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள். பள்ளி வயதில் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக ஆரம்பிக்கின்றனர்.

சிலருக்கு பெற்றோரை விட்டு தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.

Feb 18, 2014

பரிந்துரை செய்யும் குர்ஆன்



1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
 
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
 
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
 
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
 
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
 
6) “”எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்”" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
 
விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
 
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
 
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
 
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.  குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
 
K.L.M இப்றாஹீம் மதனி
 

கண்ணியமிக்க எனது சகோதரர்களே!

கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?
    அதாவது, பெயர் ரீதியான அடிப்படையைத்தவிர வேறு எந்த வகையிலும் நமக்கும் மற்றவர்களுக்கு மிடையில் வேறுபாடு கிடையாது. இறைவனை அலட்சியம் செய்வது, இறையச்சமின்மை, இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமை முதலான செயல்களில் நாமும் அவர்களைப் போல் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றோம். திருக்குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்று நமக்கு தெரிந்த போதிலும், ஒரு நிராகரிப்பாளன் அந்த தெய்வ நூலுடன் எவ்வாறு நடந்து கொள்கிறானோ அதே போல்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.
    நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதர் என்று நமக்குத் தெரியும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாதவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட்டு விலகிச் செல்வதைப்போல் நாமும் அவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலகிச் செல்கிறோம்.

மன்னிக்கப்படாத பாவம்



அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை  ஆக்கிஅவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி  பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை  அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை  சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய  இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.
    எனவே மனிதன்  தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ்  கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக்  கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான்   செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின்அப்பாவங்கள்  அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக  மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால்  அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின்  நாட்டத்தை பொருத்தாகும்.
    ஆனால் ஒரே ஒரு  பாவத்தை மட்டும் அல்லாஹ் மறுமையில்மன்னிப்பதே இல்லை. எல்லா பாவங்களையும் தான்  மன்னித்து விடுவதாக கூறிவிட்டு, ஒரு பாவத்தை மட்டும் மன்னிப்பதில்லை என   கூறும்போது அது மகா கொடிய பாவன் என்பது புலனாகிறது. இந்த பாவத்தை செய்யக்  கூடியவன் சதா நரகத்திலேயே இருப்பான் எனவும் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறாயின்  இவ்வளவு பெரிய கொடிய பாவம் எது? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதில்லை என்பதை ஒவ்வொரு  முஸ்லிமும் அறிய வேண்டியது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
        அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:     நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது  அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை   வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு  தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.  (அல்குர்ஆன் 4:116)

Feb 5, 2014

மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்


ஈமானின் ஃபர்லுகளில் ஒன்று மறுமை நாளை நம்புவது. இன்று நாம் வாழ்கின்ற உலகம் ஓரு சோதனைக் கூடம், இது நிரந்தரம் அல்ல. இந்த உலகம் ஓரு நாள் அழிக்கப்படும். பின் மறுமை நாள் என்று ஒன்று உண்டு. அதில் நாம் இந்த உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றார் போல் இறைவன் தீர்ப்பு வழங்குவான். நன்மை தட்டு கனத்தவர்களுக்கு சுவர்க்கமும், தீமைத்தட்டு கனத்தவர்களுக்கு நரகமும் வல்ல இறைவனால் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறுமை நாளின் வாழ்க்கையே நிரந்தரமானது. சுவர்க்க வாதிகளும், நரக வாதிகளும் அதில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டால்தான் நாம் ஈமானில் பரிபூரணப்பட்டவர்கள் ஆவோம். இன்று மக்களிடத்தில் நன்மையை ஏவினாலோ அல்லது தீயசெயல் ஒன்றை தவிர்க்கச் செய்தாலோ எளிதாக அவர்கள் நாவிலிருந்து உதிக்கும் சொல்.. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் பாய்! என்பது தான். மறுமை நாள் வருவதற்கு இன்னும் பல 100 ஆண்டுகள் மீதமிருக்கிறதா? அல்லது 100 ஆண்டுகள் வாழ உத்திரவாதம் ஏதும் பெற்றிருக்கின்றோமா?

அல்லாஹ் தனது திருமறையில் மறுமையின் காரியம் இமை மூடித் திறக்கும் நேரத்திற்குள் அல்லது அதைவிட சமீபமாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையோன். (அல்குர்ஆன் 16:77)

மேலும் மறுமை நாளின் நெருக்கத்தைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது,

நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம் என்று தனது சுட்டு விரலையும, நடு விரலையும் இணைத்துக் காட்டி கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம்)

நன்மையைப் புறக்கணித்து தீயச் செயலில் ஆர்வங்காட்டிக் கொண்டிருக்கும் தோழர்களே! மறுமை நாள் வெகு தொலைவில் இல்லை! 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெகு நெருக்கத்தில் உள்ளதென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்க, நாமோ 1400 ஆண்டுகளையும் கடந்து வந்து விட்டோம்.

இறந்தவர்களுக்காக என்னென்ன செய்யலாம்?


முஸ்லிம் எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காக” ஃபாத்திஹா ஓதுதல்” என்ற பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை இருக்கும்.

அடக்கம் செய்து வந்த பிறகு இறந்த நாளிலிருந்து 3ம் நாள்,10ம் நாள், 40ம் நாள், அரை வருட ஃபாத்திஹாக்கள், ஒரு வருட பாத்திஹாக்கள் என்று விஷேசம் நடைபெரும். சில ஊர்களில் 10,20,30 என்று நாட்கணக்கிலும், ஏன் சில ஊர்களில் தினமும் இரவு மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு 40 நாட்களுக்கும் பாத்திஹாக்கள் ஓதி வருவர்.

இது உண்மையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால் இல்லை இந்த பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து இது மார்க்கதில் இல்லாத ஒன்றும், பித்அத் என்றும் அறியலாம்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தவர்களுக்கு இது போன்ற ஃபாத்திஹாக்களை ஓதும்படி கற்றுத்தரவில்லை. இறந்தவர்களுக்கு ஏதாவது நன்மை போய் சேரவேண்டுமென்று தான் மக்களில் பலர் ஃபாத்திஹாக்களை ஓதி வருகின்றனர். இறந்தவர்களுக்கு என்ன செய்யலாமென்று இனி ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம்.

மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்!


இந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது.

மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும் சந்திக்க உள்ளார்கள்.

மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும் அடைய உள்ளார்கள்.

இது ஒரு பரீட்சைக்கூடம்!

இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்:
2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.

இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா?

இறைவன் கேட்கிறான் பாருங்கள்:

பெண் தனியே பயணம் செய்யலாமா?


கணவன் அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா?

செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்கள் மத்தியில் நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
ஒரு பெண், திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்; அதற்கு மேல் பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் ஒரு சாரார் கூறுகின்றனர்.
பெண்ணின் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு இருக்கும் காலத்தில் அவள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் சிலர், ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர்.

இது தொடர்பாக வரும் செய்திகளில் ஒன்றை ஏற்று, மற்றதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் தான் கருத்து வேறுபாடு உருவாகின்றது.
அனைத்து ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தால் குழப்பமின்றி தெளிவான முடிவுக்கு வரலாம்.

இது தொடர்பாக வரும் செய்திகளை நாம் ஆய்வு செய்யும் போது "அச்சமற்ற காலத்தில் பெண் தனியே பயணம் மேற்கொள்வதில் தவறல்ல' என்ற இரண்டாவது சாராரின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

நமது நிலைபாட்டுக்குரிய ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன்னால் "குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்' என்று கூறுவோர் ஆதாரமாகக் கருதும் செய்திகளின் உண்மை நிலையை முதலில் அறிந்து கொள்வோம்.

முரண்பட்ட செய்திகள் பெண்கள் மஹ்ரமான துணை இல்லாமல் அதிகப்பட்சமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

பாவங்கள் பாவங்களே!



சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி சன் என்ற தினப் பத்திரிகை ஐந்து பிரபலங்களின் படத்தை வெளியிட்டு கீழ்கண்டவாறு கேட்டிருந்தது:
இவர்களில் ஒருவர் ஆயிரம் பெண்களோடு படுத்தவர். ஒருவர் ஒன்றோடு நிறுத்திக் கொண்டவர். யார் அவர்கள்? கண்டு பிடியுங்கள் என்று வாசகர்களுக்கு புதிர் விடுத்திருந்தனர்.
இச்செய்தியை பலரும்.... ஏன் பெரும்பான்மையானவர்கள் மிகவும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பது என்னவோ உண்மை. பத்திரிகைக்கும் சரி, அதன் வாசகர்களுக்கும் இது ஒரு பொழுதுபோக்கு அம்சம். பலரும் மிகவும் சீரியஸாக இப்புதிரை விடுவிப்பதில் ஈடுபட்டிருப்பார்கள்.

மேலை நாட்டில் மட்டுமல்ல நம் நாட்டுப் பத்திரிகையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ இப்படி ஒரு புதிர் விடப்பட்டாலும் அதை அவிழ்ப்பதில் மக்களில் பெரும்பாலோர் மூழ்கியிருப்பார்களே தவிர அதன் சாதக பாதகங்களை அல்லது உள்ள நன்மை தீமைகளை ஆராய யாரும் முற்பட மாட்டார்கள் என்பதே உண்மை. அந்த அளவுக்கு நமது எதிரியான ஷைத்தானின் தாக்கம் நம்மீது உள்ளது. பாவங்கள் மலிந்து காணப்படுவதால் அவற்றை ஒரு பொருட்டாகவே கொள்ளாத நிலை இன்று காணப்படுகிறது.

விபச்சாரம் என்பது சமூகத்தில் எவ்வளவு பெரிய கொடுமை!

திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் அதில் ஈடுபடும்போது என்னென்ன விளைவுகள் உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அதில் ஈடுபடும் பெண் கன்னியாக இருந்தால் திருமணத்துக்கு முன் அவளது கற்பு பறிபோகிறது.

அவள் மணமானவளாக இருந்தால் தன கணவனல்லாத ஒருவனின் குழந்தையை சுமக்க நேரிடுகிறது.

தொடர்ந்து குடும்பத்தில் குழப்பங்கள், கலகங்கள், என தொடங்கி கொலைகளில் முடியும் அவலம்.

தந்தைகள் அற்ற குழந்தைகள் பெருகுதல், குடும்ப உறவுகள் அற்றுப் போதல்
இன்னும் இவைபோன்ற பலவும் சேர்ந்து ஒரு ஒழுக்கமற்ற அமைதியற்ற சமூகம் உருவாகக் காரணமாகின்றது.

விபச்சாரம் என்பது நம்மைச்சுற்றி தீய விளைவுகளை உண்டாக்குகிறதோ இல்லையோ அதை நாம் காண்கிறோமோ காணாமல் இருக்கிறோமோ அல்லது கண்டும் காணாமல் இருக்கிறோமோ எதுவானாலும் சரி..... இது இவ்வுலகைப் படைத்தவனின் பார்வையில் இது ஒரு கொடிய பாவமே! தண்டனைக்குரிய பெரும் பாவமே!

பெரும்பான்மையானவர்கள் இச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதனாலோ நாட்டு அரசாங்கங்கள் இதை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதனாலோ இதன் வீரியம் ஒரு சிறிதும் குறைவதில்லை. இப்பாவத்தை நேரடியாக செய்பவர்களும் சரி, இதை அங்கீகரிப்பவர்களும் சரி, இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்களும் துணை செய்பவர்களும் சரி அவரவர்களது மரணத்துக்கு முன் இறைவனிடம் உரிய முறையில் பாவப் பரிகாரம் செய்யாவிட்டாலோ பாவ மன்னிப்பு தேடா விட்டாலோ மறுமையில் இறைவனின் தண்டனைக்கு ஆளாவது உறுதி!

நாடு எதுவானாலும் சரி, கலாச்சாரம் எதுவானாலும் சரி நாம் பூமியின் எந்த பாகத்தில் அல்லது எக்காலத்தில் வாழ்வோரானாலும் சரி ஒன்று மட்டும் உறுதியான உண்மை. நாம் அனைவருமே மனிதர்களே! நாம் சுயமாக இங்கு வரவில்லை. நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனால் இயக்கப்படுபவர்கள். நமது பிறப்பும் இறப்பும் இடமும் நாடும் நாம் தேர்ந்தெடுப்பது போல அமைவதில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )