Feb 6, 2012

மரணத்தின் பின் பயனடையும் விடையங்கள்


v
ü  மரணத்தின் பின் ஒரு மனிதனுக்குள்ள உலகத்தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே ஒரு விடயத்தின் மூலம் மையித் பயனடைவதாக இருந்தால் அதனை நபி (ஸல்) அவர்களே கற்றுத்தரவேண்டும், அதற்கு மாறாக நாங்கள் நினத்ததையெல்லாம் அவருக்கு பயனளிக்கும் என முடிவுசெய்யமுடியாது. எனவே ஆதாரத்தின் அடிப்படையில் எவையெல்லாம் சென்றடையும் என்பதைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
ü  மூ/மீன்கள் செய்யும் துஆக்கள் மரணித்தவருக்கு பயனளிக்கும். எனவே அதிகம் துஆ செய்வதன் மூலம் மரணித்தவர்களின் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கமுடியும்.
Ø  அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னித்தருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (59: 10)
ü  மேலும் ஜனாசா தொழுகை முழுக்கவுமே பிரார்த்தனையாகவே இருப்பதோடு,மரணித்தவர்களுக்கு பிரார்த்தனை செய்தமைக்கு நபிமொழிகளில் நிறையவே சான்றுகளும் காணப்படுகின்றன.
ü  மரணித்தவருக்காக அவர் விட்டுச்சென்ற நோன்புகளை நிறைவேற்றுதல். இன்று பழக்கத்தில் இல்லாமல் போய்விட்ட ஒன்றாகும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யாராவது தன் மீது கடமையான நோன்புள்ள நிலையில் மரணித்துவிட்டால், அவருக்காக அவரது பொறுப்புதாரி நோன்பு பிடிப்பார்.' (புஹாரி, முஸ்லிம்)
Ø  அபூ/த் (றழி) அவர்கள் நபிகளாரிடம் வந்து, 'எனது தாய் அவள் மீது நேர்ச்சைக் கடமை உள்ள நிலையில் மரணித்துவிட்டார். (என்ன செய்வது) என விழக்கம் கேட்க,' அவருக்காக நீர் நிறைவேற்றும்.' என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
Ø  இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! னது தாய் அவளின் மீது ஒரு மாத நோன்பு உள்ள நிலையில் மரணித்துவிட்டார், அவருக்காக அதை நான் நிறைவேற்ற முடியுமா?’ எனக் கேட்க, ‘ஆம், முடியும், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய கடனே நிறைவெற்ற மிகத்தகுதியானது.என்று கூறினார்கள்.’  (புஹாரி, முஸ்லிம்) முஸ்லிமில் நேர்ச்சை நோன்பு என வந்துள்ளது.
ü  மரணித்தவர் கடனுள்ள நிலையில் இருந்தால் அதனையும் நிறைவேற்றமுடியும்,ஒரு வகயில் அது பொறுப்புதாரிகள் மீது கடமையும்கூட.
Ø  ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை!" என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்!" என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!" என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!" என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (புஹாரி: 2295)
ü  பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்யும் சதகாக்களும் சென்றடையக்கூடியதாகும்.
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, 'எனது தாய் திடீரென்று இரந்துவிட்டார், அவர் ஏதும் பேசியிருந்தால் சதகா செய்யுமாறு ஏவியிருப்பர் என நினைக்கின்றேன், அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு கூழி கிடைக்குமா.?' என்று கேட்க, நபியவர்கள் :'ஆம்,(சேரும்).' என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)
Ø  /த் (றழி) அவர்கள் நபிகளாரிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே நான் இல்லாத நேரத்தில் எனது தாய் மரணித்துவிட்டார், அவருக்காக ஏதாவது ஒன்றை தர்மம் செய்தால் அவருக்கு பயனளிக்குமா.? எனக் கேட்க, ‘ஆம்(பயனளிக்கும்) என நபிகளார் கூறினார்கள். அப்போது /த் (றழி) அவர்கள், பழம் நிறைந்த இந்த மரம் அவருக்கு தர்மமாகிவிட்டது என்பதற்கு நீங்கள் ஷாட்சி.என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)
ü  மரணித்கவருக்காக ஹஜ் செய்தல், மரணித்தவர் ஹஜ் செய்ய கடமையான நிலையில் இருந்திருந்தால் அதையும் உயிருள்ளவர்கள் அவருக்காக நிறைவேற்றலாம்.
Ø  இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மனி நபிகளாரிடம் வந்து, எனது தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை வைத்துவிட்டு, மரணிக்கும் வரை ஹஜ் செய்யவில்லை, அவருக்காக நான் ஹஜ் செய்யட்டுமா? என்று கேட்டார், அதற்கு நபிகளார், சரி அவர்க்காக ஹஜ் செய், உனது தாய் மீது கடன் இருந்தால் நீ நிறைவேற்றுவாயல்லவா? என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள், அதுவே நிறைவேற்ற மிகத்தகுதியானது.என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ü  மரணித்தவர் நிறந்தர தர்மங்களை (கினறு, பள்ளி, பாடசாலை) செய்திருந்தால், அல்லது பயனளிக்கும் விதத்தில் யாருக்கும் கல்வியை கற்றுக்கொடுத்திருந்தால், அல்லது ஸாலிஹான பிரார்த்திக்கும் ஒரு குழந்தையை விட்டுச்சென்றிருந்தால் அதன் நன்மைகளும் தொடர்ந்து அவருக்கு பயனளிக்கும்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் மரணித்துவிட்டால் மூன்று விடயங்களைத் தவிர அவரது அமல் துண்டிக்கப்பட்டுவிடுகின்றது, அவை நிறந்தர தர்மம், பயனளிக்கும் கல்வி, அவருக்காக பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தை.’  ( முஸ்லிம்)
v  ஸியாரதுல் குபூர்,   அடக்கஸ்தலங்களை தரிசித்தல்.
ü  கப்ருகளை போய் பார்வையிடுவதென்பது ஆரம்பத்தில் நபிகளாரால் தடுக்கப்பட்டிருந்தாலும் பிறகு அனுமதிக்கப்பட்ட ஒரு சுன்னாவாகும். ஆனாலும் இன்று குறிப்பிட்ட சிலரின் கப்ருகளை கட்டி, அதன்மீது கட்டிடங்களை எழுப்பி அங்கு சென்று குர்ஆன் ஓதி, விழக்கு, சந்தனக்கூருகளை பத்தவைத்து, சாம்புரானி போட்டு கப்ரு ஸியாரத்செய்யும் முறை இருக்கின்றது, இப்படி நபிகளார் அதைக் காட்டித்தரவில்லை. எனவே அதனை நபி வழியில் அமைத்துக்கொள்ள ஒரு சில விடயங்களை பார்ப்போம்.
Ø  புறைதா (றழி)அவர்கள் கூறினார்கள்:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களை நான் கப்ருகள் தரிசிப்பதைவிட்டும் தடுத்திருந்தேன், (இப்போது) நீங்கள் அவற்றை தரிசியுங்கள், ஏனெனில் அது உங்களுக்கு மறுமையை ஞாபகப்படுத்தும்,’  (முஸ்லிம், அஹ்மத்)
ü  பெண்களைப் பொறுத்தவரை அவர்களும் உங்களைஎன்ற பொதுக்கட்டலைக்குள் வருவார்கள், எனவே அவர்களும் ஸியாரத் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களே, மேலும் கப்ரிடம் இருந்து அழுதுகொண்டிருந்த பெண்ணை தடுக்கவுமில்லை. மேலும் அவர்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளார்கள்.
Ø  கப்ரிடத்திலிருந்து அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கருகாமையால் நபியவர்கள் நடந்து சென்றபோது அல்லாஹ்வைப் பயந்து, பொருமையாக இருஎன்று கூறினார்கள். அவர் நபியென்று அறியாத  அந்தப் பெண் எனக்கு ஏற்பட்ட சோதனை உமக்கு ஏற்படவில்லை, தூரப் போய்விடும், என்று கூறினார், பின்னர் அவர் நபிகளார் என்று அந்தப் பெண்ணிடம் கூறப்பட்டபோது, அவள் நபிகளாரின் வீட்டுக்கு வந்து  முறைப்பாடு செய்த போது, நபியவர்கள் : பொருமை என்பது முதல் கட்டத்தில் வரவேண்டியது.என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்) 
Ø  ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் தங்கும் முறையாக இருந்த போது,  (வெளியில் சென்று) திரும்பி (வந்து) தங்களது மேலாடையை (கழற்றி) வைத்து விட்டு, தங்களது இரு காலனிகளையும் கழற்றி தங்களது கால்களுக்கு கீழ் வைத்தனர். தங்களது மேலாடையின் ஒரு பகுதியை தங்களது (படுக்கையின்) விரிப்பில் விரித்துவிட்டு படுத்துக் கொண்டனர். கொஞ்ச நேரம் படுத்திருந்த நபிகளார். நான் தூங்கிவிட்டதாகவும் எண்ணி, மெதுவாக தங்களது மேலாடையையும் காலணிகளையும் மாட்டிக்கொண்டு, கதவை மெதுவாக திறந்துகொண்டு வெளியேறி, கதவையும் மெதுவாக சாத்திவிட்டனர்.
(உடனே நான் எழுந்து) என் சட்டையை போட்டுக்கொண்டு (முகத்தையும்) மூடிக்கொண்டு என் கீழ் ஆடைமூலம் என்னை மறைத்துக் கொண்டு அவர்களின் பின்னே  நடந்தேன். அவர்கள் பகீயை வந்தடைந்து அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். அதன்பிறகு தங்களது கைகளை மும்முறை உயர்த்திவிட்டுத் திரும்பினார்கள். நானும் திரும்பினேன். அதன்பின் அவர்கள் விரைவாக நடந்தார்கள், நானும் விரைவாக நடந்தேன், இன்னும் வேகமாக (அவர்கள்) நடந்தார்கள். நானும் (அதே போன்று) வேகமாக நடந்தேன். அதைவிட வேகமாக நடந்தார்கள். நானும் அதை விட வேகமாக நடந்து அவர்களை முந்திக்கொண்டு (வீட்டினுள்) நுழைந்து  நான் படுத்துக்கொண்டேன். (அப்போது) அவர்களும் (வீட்டினுள்) நுழைந்தனர். வேகமாக நடந்ததின், காரணமாக (எனக்கு) மூச்சு இறைக்க, வயிறு மேலும் கீழும் ஏறி இறங்குவதைப் பார்த்து, வேகமாக ஓடிவந்தவருக்கு ஏற்பட்ட நிலை போன்றிருந்ததைப் பார்த்து, ஆயிஷாவே! உனக்கு என்ன நேர்ந்தது? எனக்கேட்டார்கள். (அதற்கு) நான் ஒன்றுமில்லை எனக் கூறினேன். (அதற்கவர்கள்) நிச்சயமாக நீ எனக்கு (இது பற்றி) தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் செய்திகளை அறிந்தவனும் நுட்பமானவனுமான அவன் (அல்லாஹ்) எனக்கு அறிவிப்பான் என்றனர்.
(உடனே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! எனது தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் என நான் கூறிவிட்டு (நடந்த) விஷயத்தைக் கூறிவிட்டேன் என ஆயிஷா  (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். (அப்போது) எனக்கு முன்பாக நான் கண்ட கருப்பு உருவம் நீ தானே எனக்கேட்டார்கள். (அதற்கு) நான் ஆம்! என்றேன். (அப்போது) தங்களது முன்கையினால் எனது நெஞ்சின் மேல் ஒரு அடி அடித்து விட்டார்கள். அது என்னை நோவினை செய்துவிட்டது. அதன்பிறகு, அல்லாஹ்வும் அவனது தூதரும் உனக்கு அநீதி இழைப்பார்களென நீ எண்ணி விட்டாயா? எனக்கேட்டனர். ஜனங்கள் எவ்வளவு தான் மறைத்தாலும் அல்லாஹ் நிச்சயமாக அறிந்து கொள்வான் என ஆயிஷா (ரளி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்)) அவர்கள், ஆம்! என்று கூறிவிட்டு, நிச்சயமாக ஜிப்ரில் அலைஹிஸலாம் அவர்கள் உன்னைப்பார்த்த சமயம் என்னிடம் வந்து என்னை அழைத்துவிட்டு உன்னை விட்டும் அவர் தன்னை மறைத்துக் கொண்டார். அவருக்கு நான் பதில் கூறினேன். ஆனால், அதை நான் உன்னிடமிருந்து மறைத்து விட்டேன். நீ உறங்குவதற்கு துணிகளை எடுத்துவிட்ட சமயத்தில், அவர் (ஜிப்ரீல்) உள்ளே நுழையத்த தயாராக இல்லை. (மேலும்) நான், நீ தூங்கிவிட்டதாக எண்ணி உன்னை எழுப்புவதை நான் வெறுத்தேன். மேலும் என்னைப் பார்த்து வெறுப்பாகிவிடுவாயோ? எனவும் (நான்) பயந்தேன் எனக்கூறினார். அதன்பிறகு, நிச்சயமாக உமது இரட்சகன் பகீஉவாசிகளிடம் வந்து அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்குமாறு கட்டளையிடுகிறான் எனவும் கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களுக்கு (பகீஉ வாசிகளுக்கு) நான் என்ன கூற வேண்டுமெனக் கேட்டேன்? அதற்கவர்கள்
السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ ».
அஸ்ஸலாமு அலா அஹ்லியத்தியாரி மினல் மூஃமினீனவல் முஸ்லிமீன வயர்ஹமல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னாவல் முஸ்தஃகீரீன வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லலாஹிகூன்”  எனக்கூறினார்கள்.
ü  ஆனாலும் பெண்கள் அதிகப்படுத்திக்கொள்ளக்கூடாது.ஏனெனில் அது பெண்களின் விடயத்தில் கண்டிக்கப்பட்டுள்ளது.
Ø  அபூ ஹுறைறா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் அதிகம் கப்ருகளை தரிசிக்கும் பெண்களை சபித்தார்கள்.’  (அஹ்மத், திர்மிதி)
ü  முஸ்லிமாக மரனிக்காதவர்களின் கப்ருகளை படிப்பினைக்காக மாத்திரம் தரிசிக்கலாம், ஆனால் அவர்களுக்காக மன்னிப்புத் தேடக்கூடாது.
Ø  அபூ ஹுறைறா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தன் தாயின் கப்ரை சியாரத்செய்துவிட்டு, அழுதார்கள் சூழ உள்ளவர்களும் அழுதனர். மேலும், ‘எனது றப்பிடம் என் தாய்க்காக மன்னிப்புக் கேட்க அனுமதி கேட்டேன், எனக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை, அவரது கப்ரை சியாரத்செய்ய அனுமதி கேட்டேன், அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது, எனவே கப்ருகளை சியாரத்செய்யுங்கள் ஏனெனில் அது மௌத்தை ஞாபகப்படுத்தும்.என்று கூறினார்கள்.  (முஸ்லிம்,)
ü  கப்ருகளை சியாரத்செய்வது வணக்கம் என்று வரும் போது அதனை நபியவர்கள் எப்படி செய்தார்கள் என்று பார்த்து அதுபோன்றே செய்யவேண்டும், மாறாக இன்று நடப்பது போன்று ஷிர்க்கான, பித்அத்தான காறியங்களை செய்யக்கூடாது.
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார், அவர்களிடம் இருக்கும் இரவிலெல்லாம் பின்னிரவில்  பகீ மையவாடிக்கு சென்று,
السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ
அஸ்ஸலாமு அலைகும் தார கௌமின் முமினீன், வஅதாகும் மாதூஅதூன Gகதன் முஅஜ்ஜலூன், வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்அல்லஹும்மGக்பிர் லிஅஹ்லில் பகீ. என்று கூறுவார்களாம்.  (முஸ்லிம்)
முமீன்களின் வீட்டில் கப்ரில் உள்ளவர்களே உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும், நீங்கள் நாளை சந்திக்கப்போவதாக வாக்களிக்கப்பட்ட ஒன்று , தவனை அளிக்கப்பட்டபின்னர் உங்களிடம் வந்துவிட்டது, நாங்கள் அல்லாஹ் நாடினால் உங்களோடு வந்து சேருவோம், இறைவா பகீஇல் உள்ளவர்களுக்கு மன்னிப்பளிப்பாயாக.
Ø  புறைதா (றழி) அவர்கள் கூறினார்கள்.: நபியவர்கள் அடக்கஸ்தலங்களை தரிசிக்கச் செல்பவர்களுக்கு அந்த நேரத்தில் சொல்லவேண்டியதைக் கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தார்கள்,
السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
அவர்களில் ஒருவர் அஸ்ஸலாமு அலைகும் அஹ்லத்தியாரி மினல் முமினீன வல்முஸ்லிமீன், வஇன்னா இன்ஷா அல்லாஹு லலாஹிகூன், அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா. என்று சொல்பவராக இருந்தார்.  (முஸ்லிம்)
கப்ருகளில் உள்ள முமீன்கள் முஸ்லீம்களுக்கு சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ் நாடினால் நாங்களும் வந்து சேறுவோம், எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடம் ஆபியத்தை ஆரோக்கியத்தை வேண்டுகின்றேன்.
السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ
Ø  இப்படி ஒரு துஆவை நபிகளார் சியாரத்துக்காக ஓதியதாக ஒரு செய்தி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளத் அது மிகவும் பலவீனமான செய்தியாகும்.
ü  ஸியாரத் செய்வதன் பெயரில் அங்கு சென்று குர்ஆன் ஓதுவது நபி வழியில் இல்லாத பித்அத்தான விடயமாகும், ஏனெனில் ஸலாம் சொல்வதையும் துஆ கேட்பதையும் கற்றுத் தந்த நபிகளார் அப்படி குர்ஆன் ஓதுவதை கற்றுத் தரவில்லை. மாறாக குர்ஆன் ஓதக்கூடாது என்றுதான் சொல்லித் தந்தார்கள்.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்காதீர்கள், எந்த வீட்டில் ஸூரதுல் பகரா ஓதப்படுகின்றதோ அங்கிருந்து ஷைத்தான் விரன்டோடுகின்றான்.  (முஸ்லிம்)
·         எனவே எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படவில்லையோ அது மையவாடி, எது மையவாடியோ அது குர்ஆன் ஓதப்படும் இடமல்ல என்பது தெளிவாகின்றது.
·         மேலும் ஆயிஷா (றழி) அவர்கள் சியாரத் செய்யும்போது என்ன கூறவேண்டும் எனக் கேட்டபோது துஆவைத்தான் கற்றூக்கொடுத்தார்களேதவிர குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுக்கவில்லை.
·         மையவாடியில் குர்ஆன் ஒதியதாக சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவை பலவீனமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ü  மையவாடியில் பிரார்த்தனையின்போது கையேந்தவும் முடியும்.
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து வெளியேரினார்கள், நான் அவர்கள் எங்கு செல்கின்றார்கள் என்பதை அறிவதற்காக பரீராவை பின்னால் அனுப்பினேன், திறும்பி வந்த பரீரா அவர்கள் கூறினார்கள்: பகீ மையவாடியின் பக்கம் சென்ற நபிகளார், அதன் கீழ் பகுதியில் நின்று, இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்தனை செய்துவிட்டு திறும்பி வந்தார்கள். காலை நேரத்தில் நபிகளாரிடம் அல்லாஹ்வின் தூதரே இரவு எங்கு சென்றீகள் எனக் கேட்டபோது, நபியவர்கள்: பகீ வாசிகளுக்கு பிரார்த்திப்பதற்காக அனுப்பப்பட்டேன். என்று கூறினார்கள்.  (அஹ்மத்)
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்பகீயை வந்தடைந்து அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். அதன்பிறகு தங்களது கைகளை மும்முறை உயர்த்திவிட்டுத் திரும்பினார்கள். (முஸ்லிம்)
ü  ஸியாரத் செய்வதன் பெயரில் கப்ருகளை தொடுவதும் முதமிடுவதும் நபிகளார் காட்டித்தராத, ஷிர்க்கிற்கு இட்டுச்செல்லும் செயலுமாகும். எனவே இதுபோன்ற விடயங்களும் தடுக்கப்படவேண்டியவையாகும்.
ü  மையவாடிகளில் நடக்கும் போது பாதணிகளை கலட்டிவிட்டு செல்வதே சிறந்தது, ஏனெனில் நபிகளார் அதனை தடுத்துள்ளார்கள் .
Ø  பஷீர் பின் கஸாஸியா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் கப்ருகளுக்கிடையில் பாதணியுடன் நடக்கும் ஒரு மனிதரை கண்டபோது, ‘செருப்புகளையுடையவரே அவ்விரண்டையும் கலட்டிவிடுவீராகஎன்று கூறினார்கள். (அஹ்மத்)
·         புஹாரியில் வரும் ஹதீஸில்; அடக்கியவர்கள் திறும்பிச் செல்லும்போது  செறுப்போசை சத்தம் ஜனாசாவுக்கு மறைவதற்கிடையில் விசாரனைக்காக மலக்குமார்கள் வந்துவிடுகின்றனர் என்று வந்துள்ளது, இதைவைத்து செறுப்பு அணியலாம் என்று விழங்க முடியுமாக இருந்தாலும் தடையை முற்படுத்தி அணியாமல் செல்வதே சிறந்தது அல்லாஹ் அறிந்தவன்.
v  கப்ருகளுக்கு பக்கத்தில் மையவாடிகளில் செய்யக்கூடாத விடயங்கள்
ü  அறுத்துப் பலியிடுவது கூடாது
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாத்தில் (கப்ருகளிடம்) அறுத்துப் பலியிடுவது கூடாது.அப்துர்ரஸ்ஸாக் என்ற அறிவிப்பாளர் கூறும் போது, அவர்கள் கப்ர் உள்ள இடத்தில் மாடு ஆடுகளை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர்.  (அபூதாவுத், அஹ்மத், பைஹகீ)
ü  கப்ருகளை சுன்னாம்பு போன்றவற்றால் பூசுவது, அதற்கு மேல் அமர்வது, அதற்கு மேல் நடப்பது, அதற்கு மேல் எழுதுவது அனைத்தும் தடுக்கப்பட்டதாகும்..
Ø  ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: கப்ருக்கு சுன்னம்பு பூசப்படுவதையும், அதற்குமேல் அமர்வதையும், அதற்குமேல் கட்டப்படுவதையும் நபியவர்கள் தடுத்தார்கள்.’ (முஸ்லிம்)
Ø  அபூதாவுதில் வரும் அறிவிப்பில் அதன் மீது எழுதப்படுவதையும் தடுத்தார்கள் என வந்துள்ளது.
Ø  அபுல் ஹய்யாஜ் என்பவர் கூறுகின்றார் : அலி (றழி) அவர்கள் என்னிடம் நபிகளார் என்னை அனுப்பிய ஒன்றிற்காக உம்மை நான் அனுப்பட்டுமா? அதுதான் எந்த சிலைகளையும் அழிக்காமல் விடாதே, பூமியை விட உயர்ந்த எந்தக்கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதேஎன்பதாகும் என்று கூறினார்கள்.’  (முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நெருப்புக் கங்குக்குமேல் அமர்ந்து, ஆடையும் எரிந்து, தன் உடலில் நெருப்பு பட்டுவிடுவது, கப்ரின் மீது அமர்வதைவிட சிறந்தது.’  (முஸ்லிம்)
Ø  மற்றொரு அறிவிப்பில் நான் நெறுப்புக் கங்குக்கு மேலாலோ, வாலுக்கு மேலாலோ நடப்பது, ஒரு முஸ்லிமின் கப்ருக்கு மேல் நடப்பதைவிட எனக்கு விருப்பமானதாகும்.என்று நபிகளார் கூறியதாக வந்துள்ளது.  (இப்னு மாஜா)
ü  கப்ருகளுக்கு மேல் கட்டடங்களை (தர்காக்களை, பள்ளிகளை) கட்டுவதும் தடுக்கப்பட்டதாகும்.
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள் :உம்மு ஹபீப, உம்மு ஸலமா ஆகிய இருவரும் எத்தியோப்பியாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஒரு வணக்கஸ்தலத்தை ஞாபகப்படுத்தி, நபிகளாரிடம் கூறினார்கள். அப்போது நபியவர்கள்: அவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால் அவர்களில் ஒரு நல்ல மனிதர் இருந்து, அவர் மரணித்துவிட்டால் அவரது கப்ரின் மீது பள்ளியைக் கட்டி, அதில் அந்தப் படங்களை  வைத்துவிடுவார்கள், அவர்கள்தான் கியாமத் நாளில் அல்லாஹ்விடத்தில் படைப்பில் மிகக் கெட்டவர்களாவர்.என்று கூறினார்கள்.  (புஹாரி, முஸ்லிம்)
Ø  ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் தான் மரணப் படுக்கையில் இருக்கும்போது அல்லாஹ் யூதர்களையும் நஸாராக்களையும் சபிப்பானாக, அவர்கள் தம் நபிமார்களின் கப்ருகளை பள்ளியாக மாற்றினர்.என்று கூறினார்கள். மேலும் ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: அது (அந்த அச்சம்) இல்லையென்றிருந்தால் அவரது கப்ரையும் (பொது மையவாடிக்கு) வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனாலும் நானும் பயந்தது அதை (நபிகளாரின் கப்ரை) பள்ளியாக ஆக்கப்படுவதைத்தான்.’  (புஹாரி, முஸ்லிம்)
ü  கப்ருகளை நோக்கி தொழுவதும் கூடாது,மையவாடிகள் கப்ருகள் உள்ள இடங்களிலும் தொழுவதுகூடாது.  எனவே ஒரு பள்ளியின் கிப்லா திசையில் மையங்கள் அடக்கப்பட்டு அதை வித்தியாசப்படுத்தாமல் இருக்குமாக  இருந்தால், அல்லது பள்ளிக்கு கீழ் மையங்கள் அடக்கப்பட்டிருந்தாலோ, அங்கு தொழுவதும் தடுக்கப்படவேண்டியதே.
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கப்ருகளை நோக்கி தொழவும் வேண்டாம், அவற்றின் மீது அமறவும் வேண்டாம்.’  (முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமி முழுக்கவுமே ஸுஜூத் செய்வதற்கான இடமாகும், மைய வாடியையும், குளியலறையையும் தவிர.’  (அபூதாவுத், திர்மிதி)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகையில் சிலதை உங்கள் வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள், மேலும் அவற்றை கப்ருகளாக (மையவாடியாக) ஆக்காதீர்கள்.’  (புஹாரி, முஸ்லிம்)
·         எனவே எது கப்ரு உள்ள இடமோ அங்கு தொழக்கூடாது, எது வீடோ அங்கு தொழாமல் இருக்கக்கூடாது என்பது இந்த நபி மொழியின் மூலம் தெழிவாக விழங்குகின்றது.
ü  கப்ருகள் உள்ள இடங்களில் விழாக்கள் கொண்டாடுவதும் தடுக்கப்பட்டதே
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது கப்ரை நீங்கள் விழாவாக (கொண்டாடும் இடமாக) ஆக்கிக்கொள்ளாதீர்கள்.’  (அல் பஸ்ஸார்)
·         எனவே இன்று கப்ருகள் உள்ள இடங்களில் விஷேடமாக தர்காக்களில் நடக்கும் நபி வழிக்கு முரனான எல்லா கருமங்களையும் தவிர்த்து, நபி வழியில் எமது ஸியாரத் என்ற வணக்கத்தை நிறைவேற்றுவதோடு, ஷிர்க்கை ஏற்படுத்தும் எல்லாக் கருமங்களையும் தவிர்ந்து வாழ்ந்து மரணிக்க முயற்சிப்போம், அதற்கு அல்லஹ் எமக்கு துனை புரிவனாக.
வஆகிரு தவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )