Sep 25, 2014

குர்பானியின் சட்டங்கள்

o குர்பானி கொடுக்கும் நாட்கள்
o அறுக்கும் முறை
o ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
o குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை விநியோகம் செய்தல்
o குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
o குர்பானிப் பிராணியின் வயது
o நாமே அறுக்க வேண்டும்.
o தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது
o அரஃபா தினத்தன்று நோன்பு
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். (அறிவிவப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு, நுல் புகாரி955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

களா தொழுகை


இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம்

 உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்: மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது. ரமழான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின்போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..?
 
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். “”யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்)
 
நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேர த்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.
 
ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார்:

அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள் “”அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன்(ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகின்றான்”. (நூல்: பைஹகீ)
 
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகிறார்கள். அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்… பாருங்கள்!
 

Sep 9, 2014

ஒழுக்கங்கள்

 
அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம்
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ...  (سورة النور : 31)
 
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.                         
(அல்குர்ஆன் 24:31)
 
மெல்-லி ய ஆடைகளை அணிய வேண்டாம்
3971 حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
 
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்-லி ய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலி ருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர-லி )நூல் : முஸ்-லி ம் (4316)

பகட்டுத் திருமணம் பரக்கத்தை மறுக்கும் பணக்கார வர்க்கம்

கடந்த ஜூன் 17, 2014 அன்று என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியானது. ஆனந்த்ஜி என்பவர் ஒரு பெரிய வியாபாரி! அவர் தனது 22 வயது மகளுக்கு மாயாஜாலக் கதை பாணியில் திருமணம் நடத்தி முடித்தார். மயக்க வைக்கும் இந்தத் திருமண நிகழ்வு தான் தனது மகளின் நீண்ட நாள் கனவு என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

திருமண அரங்கம் பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதி! பத்து நாடுகளிலிருந்து விருந்தினர்கள், சமையல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டனர். பட்டத்து அரசி திருமணத்தின் பிரம்மாண்டம் அழைப்பிதழில் பளபளத்தது; பணத்தின் வலிமையைப் பறைசாற்றியது.
 
இதைத் தொடர்ந்து இத்தகைய டாம்பீக, ஆடம்பரத் திருமணங்கள் மீது கர்நாடக அரசின் கழுகுப் பார்வை திரும்பியுள்ளது. பணக்கார, பகட்டுத் திருமணங்களின் படோடபச் செலவுகளைக் கட்டுப்படுவதற்கு ஆடம்பர வரி விதிக்க முடிவு செய்துள்ளது. ஐந்து லட்ச ரூபாய்க்கு மேலாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்ற திருமணங்கள் இந்த வரி வரம்புக்குள் வருகின்றன. எத்தனை சதவிகித வரி என்பது இனிதான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
 
"கொழுத்த பணக்கார வட்டம் நகர்ப் பகுதிகளில் திருமணக் கூடங்களில் பணத்தை வாரியிறைத்து, தங்கள் பணத்திமிரை வெளிப்படுத்துகின்றனர். இதைப் பார்க்கின்ற கிராமப்புற ஏழை மக்கள் அந்தப் பணக்காரர்களை அப்படியே பின்பற்றி அதுபோன்று ஆடம்பரத் திருமணங்களை நடத்துகின்றனர். இருவருக்கும் உள்ள வித்தியாசம் பணக்கார வர்க்கம் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய காசு பணத்தைச் செலவழித்து திருமணத்தை நடத்துகின்றது. ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்குகின்றனர். ஒரு வேளைச் சோற்றுக்கு உணவில்லாமல் எத்தனையோ பேர் வாடுகின்றனர். ஆனால் இவர்களோ ஒரு கல்யாண அழைப்பிதழில் ஏழாயிரம் ரூபாயைக் காலி செய்கின்றனர்'' என்று கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா தெரிவிக்கின்றார்.
 
"கோபுரத்தில் வாழ்கின்ற பணக்காரர்களின் ஆடம்பரத் திருமணத்தில் வசூல் செய்யப்படும் இந்த வரிப்பணம் குடிசையில் வாழ்கின்ற ஏழையின் திருமணச் செலவுக்குத் திருப்பி விடப்படும்' என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மறுமையின் சாட்சிகள்

 ஒருவருக்கொருவர் சாட்சியாக இருக்கும் மனிதர்கள்

இவ்வுலகில் வாழும் போது மனிதர்கள், தங்களது விருப்பு வெறுப்புகளுக்குத் தோதுவான குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து நற்காரியங்களையோ அல்லது தீய காரியங்களையோ செய்கிறார்கள். பல்வேறு காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். ஆதரவு தெரிவித்துக் கொள்கிறார்கள்.
 
இங்கே இப்படி இருக்கும் மனிதர்கள், மறுமை நாளில் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறரைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் செயல்களுக்கு சாட்சியம் செல்லும் நிலையில் நின்று கொண்டிருப்போம். இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
 
இந்த வகையில், ஒவ்வொரு சமுதாயத்தாருடைய காரியங்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் சாட்சியாளர்களாக இருப்பார்கள். தங்களுடைய சமுதாயத்தினர் செய்திருக்கும் காரியங்கள் தாங்கள் போதித்தவையா? இல்லையா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவார்கள். நபிமார்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் யார்? மாறு செய்து தட்டழிந்தவர்கள் யார்? என்பது அன்றைய தினம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.
 
(முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
(அல்குர்ஆன் 4:41,42)
 
(அது) ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை நாம் நிறுத்தி, (முஹம்மதே!) உம்மை இவர்களுக்கு எதிரான சாட்சியாகக் கொண்டு வரும் நாள்!
(அல்குர்ஆன் 16:89)

காலத்தின் மீது சத்தியமாக...

sura 103
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(103:1-3)

திருமறையில் உள்ள சூராக்களில் சிறியவைகளில் ஒன்று மேலே தரப்பட்டுள்ளது. இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ‘இந்த சூராவைத் தவிர வேறு ஒரு ஆதாரமும் அல்லாஹ்வினால் அவனது படைப்பினங்களுக்கு இறக்கப்பட வில்லையாயினும் இதுவே போதுமானதாக இருக்கும்’ என்று சொல்லும் அளவிற்கு கருத்துச் செறிவு மிக்கது.
 
நம்மைப் படைத்து போஷித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வாக்குகளே திருக்குர்ஆன் என்பதை நாம் உளப்பூர்வமாக நம்புகிறோம்; வெளிப்படையாகச் சொல்லுகிறோம்; இத்தகைய திருமறையில் அல்லாஹ் சத்தியம் செய்து கூற வேண்டியதன் காரணம் என்ன? உண்மையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே அறிவான்.

Sep 1, 2014

அவர்கள் மட்டும் எப்படிக் குடித்தார்கள்?

எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் சுவர்க்கம் செல்வார்கள்? எப்படிப்பட்ட கணவனும் மனைவியும் நரகம் செல்வார்கள்?
 
எழுத்தாளரும் கதை சொல்வதில் வல்லவருமான ஸப்ரினா A. அக்பர் அவர்கள் சொன்ன ஒரு கற்பனைக் கதையைக் கீழே தருகிறோம். நீங்களும் படித்துப் பாருங்கள்:
 
ஒரு ஊரில் ஒரு தாத்தாவும் பேரனும் இருந்தார்களாம். ஒரு நாள் பேரன் தாத்தாவிடம் கேட்டானாம். ஏன், தாத்தா, ஒரு சிலர் மட்டும் சுவர்க்கம் சென்று விடும்போது மற்ற சிலரால் ஏன் சுவர்க்கம் செல்ல முடியவில்லை?
 
தாத்தா தனது பேரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேரனின் புத்திக்கூர்மையை வியந்தவராக பேரனுக்குப் பொருத்தமான பதில் ஒன்றை சிந்திக்கத் தொடங்கினார்.
தாத்தா சொன்னார்: சுவர்க்கத்துக்கு வாசல்கள் உள்ளது போலவே நரகத்துக்கும் வாசல்கள் உண்டு; உனக்கு அது தெரியும் தானே! கொஞ்சம் கற்பனை செய்து பார்; நரகத்தின் கதவு ஒன்றை நாம் திறப்போம். அங்கே என்ன தெரிகிறது? ஒரு பெரிய கூடம் அது; நடுவிலே ஒரு பெரிய சாப்பாட்டு மேஜை. மேஜையின் நடுவிலே ஒரு பெரிய பாத்திரம். அதில் மூக்கைத் துளைத்தெடுக்கும் வாசனையுடன் ஒரு அருமையான பாயாசம். நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வாசனை அது. ஆனால் அந்த மேஜையைச் சுற்றியிருந்த அனைவரும் நோயாளிகளைப் போல ஒல்லியாகக் காட்சியளிக்கின்றனர். அவர்கள் பட்டினியால் பல நாட்கள் வாடியிருப்பது தெரிந்தது.

தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும்!

இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வா தாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையி டுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது.
 
இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது.
 
தடை ஏன்?
 
எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான்.
வரையரைகளை மீறுபவர்கள் மீது இறைவனின் கோபம் அவன் மீது ஏற்பட்டு விடுகின்றது. இதனால் அவனுடைய பிரார்த்தனையும், நல்லமல் களும் மறுக்கப்பட்டு விடுகின்றது.
 
மக்கள் பாதிக்கப்படும்போது மக்களில் சிலர் சமுதாயத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வட்டி, லஞ்சம், மோசடி, பதுக்குதல், அளவை நிறுவை களில் குறைவு ஏற்படுத்துதல் போன்றவைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகின்றது.
 
நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி காலத்தில் மக்கள் பொருளாதா ரத்தை திரட்டும்போது வரம்பு மீறுவார்கள் என்று முன்னறிவிப்பு செய்தி ருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா? ஹராமா? என்று மக்கள் பொருட் படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2059)
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தது போன்று, இன்று நமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் பல புதுமையான வழிகளில் மக்களை ஏமாற்றி சம்பாதித்து சாப்பிடுகின்ற னர்.
 
ஹராமான பொருளாதாரத்தை
திரட்டுவதற்குரிய காரணங்கள்
 
தடைசெய்யபட்ட வழிகளில் மக்களை ஏமாற்றி சாப்பிடுவதற்கும், பொருளை சேமிப்பதற்கும் உள்ள காரணங்கள் என்ன?
 
அல்லாஹ்வின் பயமின்மை
 
பொருளாதாரத்தை திரட்ட சொன்ன இஸ்லாம் அந்த பொருளாதாரத்தை திரட்டும்போது இறைவனை அஞ்சும் படியும் போதிக்கின்றது.

நபிகளார் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்த இடங்கள்

எல்லா இடங்களில் பிரார்த்தனை செய்யலாம் என்றாலும் நபி (ஸல்) அவர்கள் சில இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த இடங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.
 
ஹஜ்ஜின்போது  மினா பள்ளிவாசலுக்கு
அருகில் உள்ள மூன்று ஜம்ராக்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு இரண்டா வது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப் பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறுகற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பின்பு அங்கிருந்து திரும்பிவிடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் :புகாரி (1753)
 
கஅபத்துல்லாஹ்வின் அனைத்து திசைகளும்
 
(மக்கா வெற்றிகொண்ட நாளில்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழா மலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, "இது தான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி (398)
 
ஸஃபா மர்வா என்ற இரண்டு குன்றிற்கிடையில்...
 
...பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ் வத்' அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா' மலைக் குன்றை நோக் கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர் வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்'' எனும் (2:158ஆவது) வச னத்தை ஓதிக் காட்டிவிட்டு, "அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட் டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்'' என்று சொன் னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா' மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறை யில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழி யும் தக்பீரும் சொன்னார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )