Jul 31, 2012

ஈமானுக்கு வேட்டு வைக்கும் கொடியேற்ற விழா




நாம் எல்லோரும் மரணிக்கக்கூடியவர்கள். மறுமை நாள் ஒன்று உள்ளது. அதிலே நாம் எல்லோரும் எழுப்பப்படக்கூடியவர்கள். அந்நாளில் உலகில் வாழ்ந்து மரணித்த அனைவரும் எழுப்பப்படுவார்கள். அனைவரிடமும் அல்லாஹ்வின் விசாரணை நடைபெறும். அவனிடத்திலிருந்து எவரும் தப்பிவிடமுடியாது.
அவன் யார்? அணுவளவு நன்மை செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமாட்டான். அணுவளவு தீமை செய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவுமாட்டான். யாரெல்லாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து மரணித்தார்களோ அவர்களுக்கு அங்கே மிகப் பெரிய வெற்றியுள்ளது. யாரெல்லாம் அவனுடைய கட்டளையை மீறி நடந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வின் மிகப் பெரிய வேதனை உள்ளது.
இஸ்லாம் ஒரு பூரணமான மார்க்கமாகும். இம்மார்க்கத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பது அல்லாஹ் எமக்கு விதித்த கட்டளை. 'நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!' (அல்குர்ஆன் 8:1) யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து மரணிக்கின்றார்களோ அவர்கள் மறுமை நாளில் நஷ்டமடைந்தவர்களாவார்கள்.
இஸ்லாம் மார்க்கம் ஒருவர் எச்சித் துப்புவதிலிருந்து ஆட்சி செய்யும் வரை அனைத்திற்கும் வழிகாட்டுகின்றது. ஒருவர் இவ்வுலகில் ஏதாவது ஒரு காரியத்தை செய்வதென்றாலும் அது அல்லாஹ்வுடைய பேச்சான அல்குர்ஆனுக்கும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும். அது அல்லாமல் அவ்லியாக்கள், ஷுஹதாக்கள், நாதாக்கள், பெரியோர்கள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள், செய்திருக்கின்றார்கள், அங்கீகரித்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டு எந்தவொரு காரியத்தையும் யாரும் செய்யக்கூடாது.
எந்தவொன்றாக இருந்தாலும் அது குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உட்படுத்திப் பார்க்கவேண்டும் என்பதை அல்லாஹ்வே நமக்கு தெளிவுபடுத்துகின்றான். 'ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்குமுமாகும்.'(அல்குர்ஆன் 4:59)
ஒரு விஷயத்தை ஒரு பெரியார் சொல்லிவிட்டார் என்று மௌலவிமார்கள்(?) கூறினால் அதனை மார்க்கம் என நினைத்து தம் வாழ்வில் செயற்படுத்துகின்ற அறியாத மக்கள் நம்மில் இருக்கின்றார்கள். இம்மக்களிடத்தில் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத, மார்க்கம் தடை செய்த எத்தனை அநாச்சாரங்களை மார்க்கம் என்ற பெயரில் எத்திவைத்து வருகின்றார்கள். இதற்கு காரணம் என்ன என்றால் தங்களின் பொருளாதாரத்தையும் வயிறுகளையும் வளர்ப்பதற்காகவே தவிர வேறொன்றுமில்லை. இது உண்மை என்பதற்கு இவர்கள் மார்க்கம் என்று செய்யும் காரியங்களை ஒவ்வொரும் நடுநி;லையாக சிந்தித்துப் பார்த்தாலே எல்லோரும் இப்போலி மௌலவிமார்களை இனங்கண்டு கொள்ளலாம்.
கத்தம்-பாத்திஹா,
கப்ர் வழிபாடு,
ஸுப்ஹான மௌலிது,
முஹைதீன் மௌலிது,
குடி மௌலிது,
பத்ர் மௌலிது,
நடமௌலிது,
மீலாத் விழா,
கொடியேற்றவிழா
இன்னும் இதுபோன்ற ஏராளமானவைகள் இருக்கின்றன. இவையனைத்தையும் நாம் பார்த்தால் இவையனைத்தும் மௌலவிமார்களின்(?) மடிகள் நிரம்புகின்றவையாகத்தான் இருக்கின்றன. இஸ்லாமிய உறவுகளே! சிந்தியுங்கள்!
உதாரணத்துக்கு, ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களிடம் கத்தம் ஓதவேண்டும் என்று சொல்லி இருட்டுக்கத்தம், 3ம் நாள் கத்தம், 7ம் நாள் கத்தம், 40ம் நாள் கத்தம், வருஷக் கத்தம் என்றெல்லாம் சொல்லி அந்நாட்களில் வயிறுவளர்க்கும் மௌலவிப்(?)பட்டாளம் மரணித்தவரின் வீட்டுக்குச்சென்று தங்களின் மடிகளை நிரப்புவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம்.

பெண்கள் ஓடிப்போக காரணம் யார்?



Jul 26, 2012

ஃபர்தா என்ன சாதித்துவிட்டது



அட அல்லா! சரிடி.. ஃபோன மொதல்ல வைய்யி..அம்மா கத்துராக... பேச ஆரம்பிச்சா நிறுத்த்தமாட்டியே..!! வச்சுட்டேம்மா...என அம்மாவுக்கு பதில் சொல்லியவாரே.. வைய் வைய் நீ சொன்னதுலா நியாபகம் இருக்க்க்கு...சரி சரி.... என அம்மாவின் தொனதொனப்பு பொருக்காமல் ஹதிஜா போனை துண்டித்தாள்..ஏம்மா ராத்திரி நேரத்துல தொண்டத்தண்ணி வத்த, இப்டி கத்திட்டு இருக்க? என பொய்ச்சடவுடன் அறைக்குள் நுழைந்தாள்.. அந்த ராதிப்புள்ளக்கி போன எடுத்தா வெக்கெத்தெரியாதெ..என தனக்குத்தானே அம்மா புலம்புவதை கவனிக்காதவளாய், கவரை பிரித்து புதிதாய் வாங்கிய புடவையை தோளில் போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஹதி....இன்னும் லைட்ட அமத்தலியாடி..என அம்மா குரல்கொடுக்க... அமத்திட்டேம்மா என்ற குரலோடு விளக்கை அணைத்துவிட்டு,புடவையை கொடியில் போட்டுவிட்டு உறங்கச்சென்றாள்.

மறுநாள்:பரபரத்தவளாய்!..காலேஜுக்கு நேரமாச்சுமா...ராதிவேர நேரா காலேஜுக்கே வந்துர சொல்லிட்டா.. நான் கேண்டீன்ல எதாவது சாப்டுக்கிறேன்.. என சொல்லியவாரே, சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டுவிட்டாள்..அடியே அடியே ஒருவா சாப்டு போடி... அம்மாவின் அடுப்படி குரலுக்கு, நீ சாப்டுமா என தெருவிலிருந்தே பதில் கொடுத்தவாறு ஹதிஜா சைக்கிளை அழுத்த..அம்மாவின் குரலும் மெல்ல ஓய்ந்தது..

நேரமாச்சே! என மனதுக்குள் புலம்பியவளாய், மூச்சுவாங்க கல்லூரிக்குள் நுழைந்ததும்,ராதி எங்க என பிறரிடம் விசாரித்துக்கொண்டே வகுப்பறைக்கு சென்றாள்.ராதிகா படு பிஸியாக அன்றைய கல்லூரி விழாவுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஹே ராதி..என உற்சாகக் குரலுடன் அவளை ஹதீஜா நெருங்க...ஹாய் ஹத்.....திஜா என பேச்சை நிறுத்தியவளாய் மேலும் கீழும் பார்த்துவிட்டு, முகத்தை திருப்பி வேலையை செய்பவளாய் கோபம் காட்டினாள் ராதிகா.

Jul 25, 2012

மிஸ்டு கால் - தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!






o வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு தேவையான கல்வி நமது குடும்பங்களில் இருந்தோ, கல்வி நிலையங்களில் இருந்தோ, மார்க்க நிறுவனங்களில் இருந்தோ கிடைப்பதில்லை.
o தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சமூகம் அலட்சியமான போக்கை கையாண்டு வருகிறது. காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பழைய சம்பிரதாயங்களில் இருந்து மாத்தி யோசிக்க சமூகம் தற்பொழுதும் தயாராகவில்லை.
o பெண்களில் தீவிரமாக காணப்படும் எதனையும் எளிதில் உள்வாங்கும் குணம் பாலியல் ரீதியான தவறுகளை புரிய துணைபுரிகின்றது. தன் மீதான அதீத நம்பிக்கையில் வளரும் இந்த தகாத உறவுகள் வெகுவிரைவில் தீவிரமடைந்துவிடுகிறது.
o மிஸ்டு கால் மூலமாக இளம்பெண்களின் அந்தரங்க வாழ்வில் ஊடுருவும் ஆசாமி உடனான உறவில் ஒரேயொரு அடிப்படையாக அமைவது செல்ஃபோன் நம்பர் மட்டுமே. இந்த ஆசாமி, குடிகாரனாகவோ, போதைப் பொருளுக்கு அடிமையானவனாகவோ, பெண்களை ஆபாச வலையில் சிக்கவைத்து அதன் மூலம் சம்பாதிப்பவனாகவோ, மனநோயாளியாகவோ, ரெளடியாகவோ இருக்கலாம்.
மேலே கூறப்பட்ட நபர்களுக்கு காதலும், பாலியலும் எல்லாம் ஆதாயமும், பொழுது போக்குமாகும். முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகிப் போன விடலைப் பையன்களும் இதில் அடங்குவர். இத்தகைய நபர்கள் மிஸ்டுகால்களை விடுத்து காதில் ஓதும் மந்திரங்களை நம்பும் இளம் பெண்கள் வரப்போகும் துயரங்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.]
 மிஸ்டு கால் - தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!
மிஸ்டு கால் (Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.

இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!



இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான்.
ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்றுண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.
இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.
இந்த சுய இன்பத்தைப் பற்றியோ அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியோ பெரும்பாலானவர்கள் பெரிதாக எதையும் நினைப்பதில்லை.அதற்க்கு மிக முக்கியமான காரணம் ஒரு சில வைத்தியர்களும்,ஆய்வாளர்களும்,அதுபோல் சில கட்டுரையாளர்களும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்ற கருத்தை மக்களிடம் விதைப்பது தான்.
முதலாவதாக இஸ்லாமிய மார்க்கம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விட்டு விஞ்ஞான ரீதீயாக இவர்களின் கருத்து எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.
முதலாவது ஒருவன் சுய இன்பத்தினை நாடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி விஞ்ஞான உலகம் கூறும் போது பல காரணங்களைப் பட்டியலிடுகிறார்கள்.
1.தான் விரும்புகின்ற அல்லது ஆசைப்படுகின்ற பெண்னை அடைய முடியவில்லை என்பதால் அவளுடன் இருப்பதாக என்னிக் கொண்டு இந்த நிலைக்கு சிலர் சென்று விடுகின்றனர்.
2.தனிமையை அதிகம் விரும்புவது.
3.பாடசாலை,அல்லது கல்லூரியில் தன்னுடன் சேர்ந்திருக்கும் கெட்ட நண்பனின் தீய நடவடிக்கைகளால்.
4.அடிக்கடி ஏற்படுகின்ற தீய எண்ணங்கள்.
5.ஆபாச திரைபடம்,அல்லது புகைப்படங்களின் மோகம்.
இது அல்லாத இன்னும் பல காரணங்களைக் கூறினாலும் மிக முக்கியமானவைகளைப் மட்டுமே இங்கு நாம் பட்டியலிட்டுள்ளோம்.
இந்த வகையில் இப்படிப் பட்ட பிரச்சினைக்கு இஸ்லாம் என்ன தீர்ப்பைச் சொல்கிறது?
எந்நேரமும் நம்மை அல்லாஹ் கண்கானிக்கிறான் என்ற பயம் இருக்க வேண்டும்.

நான்கில் நான்காவதைத் தேர்வு செய் !

ஏகத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் நம் சகோதரர்கள் பல பிரச்சினைகளை சமுதாயத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் இளைஞர்களாக இருப்பவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வு தொடர்பாக பல சிக்கள்களையும், பிரச்சினைகளையும், கேள்விக் கணைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் வாழ்வுரிமை காத்த இஸ்லாமிய மார்க்கத்தில் வரதற்சனை என்ற கொடுமையினால் இஸ்லாமிய சகோதரிகள் தங்கள் வாழ்வின் வாசலைக் கூட அண்மிக்க முடியாத ஒரு துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரியத்தினால் அல்ஹம்துலில்லாஹ் நமது இளைஞர்கள் படை வரதற்சனை என்ற வஞ்சகத்தனத்தை தவிர்த்து ஏகத்துவம் காட்டிய இனிய வழியில் இஸ்லாமிய போதனைகளின் படி வரதற்சனை இல்லாத் திருமணங்களை நடத்திக் காட்டி தங்கள் கொள்கையின் பிடிப்பை நடை முறையில் வாழ வைக்கிறார்கள்.
ஷைத்தானின் சிந்தனைக்கு அடி பணிந்து, கொள்கையில் கோமான் என்று வாயளவில் சொல்லிக் கொள்ளும் பலர் தமது திருமணம் என்று வரும் போது தாம் கொண்ட கொள்கையை காற்றில் பறக்கும் பட்டத்தைப் போல் பறக்கவிட்டு விட்டு, பெண் விட்டின் சீதனமாக வரதற்சனை என்ற கொடிய செயலை மனதில் சிறு குழப்பம் கூட இல்லாமல் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
வரதற்சனை ஒரு வன் கொடுமை.
பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்.
பெண்ணின் கண்ணியம் காத்த இஸ்லாம்.
மணக் கொடை கொடுத்து திருமணம் புரிவோம்

ஒட்டகம் அமர்வதைப் போல் அமர வேண்டாம்.

முஸ்லீம்கள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்பவர்களில் பலர் தொழுகையை கடைப்பிடிப்பதில்லை.
கடைப்பிடிக்கும் பெரும்பாலானவர்கள் சரியாக தொழுவதில்லை.ஏனோ தானோ என்று தொழுதுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
இப்படித் தொழக் கூடியவர்கள் முதலில் தொழுகை முறையை சரியாக தெரிந்துகொள்ள வேண்டும்.
பள்ளிக் வாருங்கள் என்று அழைக்கக் கூடிய பெரும்பாலான தப்லீக் வாதிகளுக்கே தொழத்தெரியவில்லை.
பள்ளிக்கு ஒருவனை அழைத்து வந்தால் மாத்திரம் தங்கள் வேலை முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்.அழைத்து வரப்படுபவருக்கு சரியான முறையில் தொழுகையை கற்றுக் கொடுக்க வேண்டும்.
தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்.
(முஹம்மதே!) வேதத்தி­ருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும் தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.  (அல்குர்ஆன் 29:45)
உங்களில் ஒருவரது வாச­ல் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள் என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது என நபித்தோழர்கள் கூறினர் இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­), நூல்கள் : புகாரீ (528) முஸ்லி­ம் (1071)

Jul 16, 2012

நோன்பின் மாண்பு!



சரஹ் அலி, உடன்குடி
வாழ்க்கை அனைத்துத் துறைகளுக்கும் வழி காட்டக்கூடிய நெறிநூலாகிய அல்குர்ஆன் அருளப்பட்ட பாக்கியமுள்ள ரமழான் மாதத்தை நாம் அடையப்போகிறோம். பகல் பொழுதில் உண்ணாமலும், பருகாமலும், நோன்பிற்கான விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நோன்பு நோற்று ஏக இறைவனின் கட்டளையை செயல் படுத்தத் துவங்குவோம் அல்ஹம்துலில்லாஹ்!
பசி, தாகம், உடலிச்சை ஆகியவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத பலகீனர்களாக நாம் இருந்தும் அல்லாஹ் கட்டளையிட்டு விட்டான் என்பதற்காக கட்டுப்படுத்திக் கொள்கிறோம். நமது இயல்புக்கு மாற்றமாக இருந்தும் இறைவனுக்கு அஞ்சி உணவையும், தண்ணீரையும், உடலிச்சையையும் தியாகம் செய்கிறோம். இந்த அச்சம் நோன்புடன் நின்று விடாமல் மொத்த வாழ்க்கையிலும் பிரதிபலித்தால்தான் இறைவனுக்காக இவற்றை செய்ததாக பொருள். நோன்பை கடமையாக்கிய இறைவன்தான் தொழுகை, ஜகாத், ஹஜ் போன்றவற்றையும் கடமையாக்கியிருக்கிறான்! அவன்தான் கொலை, திருட்டு, மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளை விலக்கியிருக்கிறான். புறம், கோள், பொய், மோசடி, ஆணவம், மார்க்கத்தில் பிரிவினை போன்றவற்றைக் கூடாது என விலக்கியிருக்கிறான். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ஏற்படுத்தியவனும் அவன் தான்! இறையச்சத்தின் காரணமாகத்தான் நோன்பு நோற்கிறோம் என்பது உண்மையானால் அதே இறையச்சத்திற்காக இவற்றையும் பேணியாக வேண்டும். இறைவனின் அனைத்துக் கட்டளைகளையும் செயல்படுத்தி, அவனது அனைத்து விலக்கல்களையும் விட்டு விலகிக் கொள்வதாக முடிவு செய்பவர்களையே நோன்பு பக்குவப் படுத்துகிறது எனலாம். இந்தப் பக்குவத்தைப் பெற முயல்வோம்! நமது நோன்பை அர்த்த முள்ளதாக்குவோம்!

ரமழான் இரவுத் தொழுகை (தராவீஹ்)


 

நீண்டகாலமாக உலகமெங்குள்ள முஸ்லிம்கள் ரமழான் அரவுகளில் தராவீஹ் என்ற பெயரால் 20 ரகஅத்துகள் தொழுது வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக 20 ரகஅத்துகள் தொழுது வருவதால் அதை நியாயப்படுத்தவே மனிதமனம் விரும்புகிறது. ஆனால் மன விருப்பம் மார்க்க விருப்பம் ஆக முடியாது. அல்லாஹ்(ஜல்), நபி(ஸல்) அவர்களைக்கொண்டு, மார்க்கமாகக் காட்டித்தந்தது மட்டும் தான் மார்க்கமாக முடியும்.
மார்க்கம் நிறைவு பெறவில்லையா?
குர்ஆனிலும், ஹதீஸிலும் மார்க்கம் நிறைவாக இல்லை. அதை நிறைவு படுத்த மனித அறிவு அவசியம் என்று எண்ணுவதே ஈமானைப் பங்கப்படுத்தும் சிந்தனையாகும். குர்ஆனிலும், ஹதீஸிலும் மனிதனின் நேரான வாழ்க்கைக்குத் தேவையானவை, நிறைவாகவும் தெளிவாகவும் இருக்கின்றன என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கிறது.
இந்த அடிப்படைச் சிந்தனைகளோடு, ரமழான் இரவுத் தொழுகை எத்தனை ரக்க அத்துகள் என்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் கொண்டு ஆராய்வோம். நாம் இன்று பயன்படுத்திவரும் தராவீஹ் என்ற பதம் ஹதீஸ்களில் காணப்படவில்லை என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். இரவுத் தொழுகை, ரமழான் தொழுகை. தஹஜ்ஜத் வித்ர் என்ற பெயர்களாலேயே இந்தக் குறிப்பிட்ட தொழுகை பல ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள், உமர்(ரழி) அவர்கள், மற்றும் சிறப்புக்குரிய நபித் தோழர்கள் 8+3=11 ரகஅத்துகளுக்கு மேல் இந்த ரமழான் தொழுகை தொழுததில்லை என்றுதான் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தராவீஹ் என்று பெயர் மாற்றம் செய்தவர்களும், 20 ரகஅத்துகளாக ஆக்கியவர்களும் பின்னால் தோன்றியவர்களே அல்லாமல் அல்லாஹ்(ஜல்) தனது தூதரைக் கொண்டு கற்பித்தது அல்ல என்பதை விளங்கி கொள்வோமாக.
ரமழான் தொழுகை 8+3 ரகஅத்துகள்
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் அபூசல்மதுப்னு அப்துர் ரஹ்மான்(ரழி), நபி(ஸல்) அவர்களின் ரமழான் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு “ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ஸல்) 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை” என்று கூறிய ஹதீஸ் காணப்படும் நூல்கள் :

ரமலான் விநோதங்கள்

மவ்லவி எஸ்.கே ஜமால்
ரமலான் மாதத்தில் இஸ்லாம் அனுமதிக்காத, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டாத பல வினோதச் செயல்களை தமிழக முஸ்லிம்களிடையே பரவலாக நம்மால் காண முடிகின்றது.
ஹனபிகளும், ஷாபிகளும் உள்ள ஊர்களில் இரு சாராரும் ஐங்காலத் தொழுகைகளையும், தராவிஹ் தொழுகைகளையும் ஒரு இமாமின் பின்னே ஒன்றாகத் தொழுகின்றனர். ஆனால் ரமலான் இரவுகளில் தொழப்படும் வித்ருத் தொழுகையில் மட்டும், ஹனபிகள் தனி ஒரு இமாமின் பின்னேயும் ஷாபிகள் இன்னொரு இமாமின் பின்னேயும் தொழுவதைக் காண முடிகின்றத. இன்னும் சில பகுதிகளில் இமாம் தராவீஹ் முடிந்தவுடன், இமாமுடைய மத்ஹபைச் சேராதவர்கள் தனித்தனியாக வித்ரு தொழுவதைக் காணமுடிகின்றது.
ஷாபி இமாமை ஹனபிகளும், ஹனபி இமாமை ஷாபிகளும் பின்பற்றித் தொழுதால், காலம் காலமாகத் தொழுது வரும் ஐவேளைத் தொழுகை கூடும். வித்ரு தொழுகை மட்டும் கூடாது என்றால் விந்தையாக இல்லை. பர்ளான தொழுகையே கூடிவிடும் போது, பர்ளு இல்லாத இந்த வித்ரு தொழுகைக்கு மட்டும் தனி இமாமைத் தேட வேண்டிய அவசியம் என்ன?
தங்கள் மத்ஹபு இமாம் சொன்னதே சரி என்று வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதால் ஏற்பட்ட விளைவே இது. இருசாரரும் கூடி, நபிகள் நாயகம் (ஸல்) எப்படித் தொழுதார்கள் என்று ஆராய்ந்து ஏன் ஒரே முறையாகத் தொழக் கூடாது? தங்களை இரண்டு தனி இனங்களாகக் காட்டிக் கொள்வது இவர்களுக்கு தவறானது என்று தோன்றவில்லை. நபிகள் நாயகத்தை பின்பற்றுவது தவறாகத் தோன்றுகிறது.
“நிய்யத் சொல்லிக் கொடுப்பது”
  —————————
“நிய்யத்” என்றால் நினைப்பது என்று பொருள். தான் செய்யக்கூடிய காரியம் என்ன நினைவோடு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். நோன்பு வைக்கும் ஒருவன் சஹர் உண்ணும் போதே நோன்பை வைக்க வேண்டும் என்பதற்காகவே உண்ணுகிறான். இதிலே சொல்லிக் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிய்யத் சொல்லிக் கொடுத்தார்களா? இல்லையே! அவர்கள் சொல்லிக் கொடுக்கும் நிய்யத்தை பார்ப்போம்.

நோன்பு தரும் பாடம்





இப்னு எஹ்யா – சங்கரன் பந்தல்  
“ஈமான் கொண்டவர்களே! உங்களக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நீங்கள் துாய்மையுடையோகராகலாம்” அல்குர்ஆன் 2:183
   மதங்கள் என்றால்,மனிதனைக் காடுகளிலும், வனாந்தரங்களிலும், குகைகளிலும், மடாலயங்களிலும், சர்ச்சுகளிலும் ஒழுக்க உயர்வைப் பெறுவதற்காக, தவ வலிமையை அடைவதற்காக அலைய விடுவதுதான்” என்ற தவறான நம்பிக்கையை முதலும் கடைசியுமாக இஸ்லாம் தான் தகர்த்தெறிந்தது.
   காடுகளிலும், குகைகளிலும், மடாயலயங்களிலும் அமர்ந்து பசித்திருப்பது, விழித்திருப்பது, உணர்வுகளை அடக்குவது போன்ற தவங்களை தனித்த இடங்களில் செய்வதைவிட மக்கள் மத்தியில் அன்றாடப் பிரச்சினைகளுக்கிடையில் செய்து காட்டுவதுதான் உண்மையான, வல்லமையான தவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஏனெனில் சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் எளிமையாக இருக்கிறேன் என்று கூறுவதைவிட எல்லா வசதியும் படைத்த ஒருவன் எளிமையாக இருப்பதுதான் உண்மையான எளிமை என்பதில் ஐயமில்லை.
   அதே சமயத்தில் இஸ்லாம் மனிதனை காலம் முழுவதும் பட்டினி கிடக்கவேண்டுமென்றோ திருமணத்தை வெறுத்து துறவறத்தை ஏற்று கொள்ளவேண்டுமென்றோ, பாசத்திற்கும், அன்புக்கும் விடைகொடுக்க வேண்டுமென்றோ  சொல்லவில்லை. மாறாக நடுநிலையான ஒரு வாழ்க்கையை கடைபிடிக்கச் சொல்கிறது. இறைவன் தன் திருமறையில் முஸ்லிம் சமுதாயத்தை “உம்மதுன்வஸத்” நடுநிலை சமுதாயம் என்றே குறிப்பிடுகின்றான்.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )