நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208)
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்திச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். ஆவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்ளூ எனக்கே பயப்படுங்கள். (3:175)
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங் களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடை யவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத் தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை (4:117)
(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக் கின்றான்ளூ அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும் ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (4:120)
இத்தகையவர்கள் செல்லுமிடம் நரகம்தான். ஆவர்கள் அதிலிருந்து தப்ப யாதொரு வழியையும் காணமாட்டார்கள். (4:121)
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) (5:91)
(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடை களில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக்கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச் சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (6:142)
நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை யையே கருதுகிறேன் என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து. (7:21)