Dec 22, 2010

இஸ்லாத்தைப் பற்றி ...

                                சமத்துவத்தை பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு சாதித்துக் காட்டிய மதம் இஸ்லாம்தான்; இஸ்லாம் மட்டுமே.
                                                             - சுவாமி விவேகானந்தா 
                                                            (COMPLETE WORKS OF VIVEKANANDHA VOL:6 PARA 415)
                                
                              இறைவனுக்கு முன்பு அனைவரும் சமம் என்ற கருத்தை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மதமும் செயல்படுத்திக் காட்டவில்லை.
                                                              - பி. ராமசாமி அய்யர் 
                                                            ( EASTERN TIMES, 22nd DECEMBER 1944)

                                முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்றும் கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக மிக அதிகமாக தேவைப்படுகிறது.
                                                             - வரலாற்றாசிரியர். ஆர்னால்டு டாயின்பீ 
                                                             ( CIVILIZATION ON TRAIL)

                                   இஸ்லாம் சமத்துவத்தைத் தூக்கிப் பிடித்தது. இஸ்லாம் சகோதரத்துவத்தைக் கொண்டாடியது. அதற்கு நேர்மாறாக தொன்மையான, அதே சமயம் வீழ்ச்சிப் பாதையில் வேகமாக சரிந்து கொண்டிருந்த பண்டைய பண்பாடுகள் செழிந்தோங்கியிருந்த நாடுகளில் சமத்துவமும் சகோதரத்துவமும் மறக்கடிக்கப் பட்டிருந்தன என்பதுதான் உண்மை. 
                                                             - M.N. ராய்
                                                            ( HISTORICAL ROLE OF ISLAM)

                                  இஸ்லாத்தைப் பொறுத்த வரை சமயம் என்றோ, மதம் என்றோ சொல்லுவதில்லை. மார்க்கம் - வழி என்று சொல்லுவார்கள்.
மதம் என்று சொன்னாலே பல பேருக்கு 'மதம்' பிடித்து விடுகிறது. மதமான பேய் பிடிக்காதிருக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் பாடினார்கள். எனவே, இது ஒரு வழி; வாழும் வழி; அவ்வளவுதான்! வாழும் வழியைச் சொல்வது இஸ்லாம்; வாழும் வழியை வாழ்ந்து காட்டியர் நபி பிரான். 
                                                            - பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் 
                                                            ( என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்)-பக்கம்:4 )

                                   ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சொல் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுக்குதான் பொருந்தும். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதும், ஏழை - பணக்காரன் , உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாததும் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றில் தான். இது வேறு மதத்திலும் கிடையாது. மானிட சமத்துவம் இதில்தான் கொடுக்கப்படுகிறது. 
                                                            - T.P.கணபதி(முன்னாள் காவல்துறை ஆய்வாளர்) 
                                                            ( மானிட சமத்துவம்: பக்கம்:26)

                                 இந்த மண்ணின் மைந்தர்களாகிய மக்கள் சுய மரியாதையோடும், தன்மானத்தோடும், பகுத்தறிவோடும் வாழ ஆசைப்பட்டார்கள். சமத்துவம் - சகோதரத்துவம் உள்ளவர்களாக வாழ விரும்பினார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்மானம் உள்ள கூட்டமாகவும் சுயமரியாதை, பகுத்தறிவு உள்ள கூட்டமாகவும் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். 
                                                            - T.M. மணி
                                                            (கடவுளர்களை மாற்றுவோம் - பக்கம்: 13)



தொகுப்பு : K.A. முஹம்மது ஆசிப். 
                       இளையான்குடி.      


                                                                                

Dec 19, 2010

தீமைகளும் தீர்வுகளும்

              கண்ணியம் நிறைந்த நமது இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு முன்னுதாரணமாக இரண்டு பெண்களையே ( மர்யம்(அலை),பிர்ஆனின் மனைவி ஆசியா அவர்களையும் (பார்க்க திருக் குர் ஆன் 66:11,12) அல்லாஹ் திருக்குர் ஆனில் குறிப்பிடுகின்றான். இந்த சிறப்புக்குரிய பெண்கள் வாழ்ந்து சென்ற இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று வாழக்குடிய நம்முடைய சில பெண்களின் நிலை மிகவும் மோசமானதாகவே உள்ளது. காதல் மற்றும் நாகரிகம் என்ற பெயரில் காமக்களியாட்டங்களை டி.வி மற்றும் பத்திரிக்கைகளில் மட்டுமே பார்த்தும், கேட்டும் வந்த நாம் தற்போது நமது ஊரிலேயே காணக்குடிய பரிதாப நிலை.

                செல்போன், டி. வி , சீரியல்கள்  மற்றும் பத்திரிக்கைகள் போன்றவற்றின் மூலம் பெறப்படும் ஆபாசமான செய்திகளில் ஈர்க்கப்படும் நமது மக்கள் அதிகமான தீமைகளைப் புரிந்து அல்லாஹ்விடம் பாவிகளாக நிற்கின்றோம். நாகரிகம் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு மாற்றமாக ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டு ஒரு வாழ்வினை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மார்க்கத்தை முறையாக பின்பற்றி நடக்காமல் இருக்கும் ஆண்களைப் போலவே அவர்களை சார்ந்து இருக்கும் பெண்களும் இருப்பதால் தீமைகள் அரங்கேறுகிறது. இவ்வுலகில் பெண்களை காமப் பொருளாக மட்டுமே பார்க்கும் நிலையில், இஸ்லாமிய பெண்கள் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது என்று இஸ்லாம் சில விதிமுறைகளை கூறுகின்றது.

               தமது பார்வைகளை தாழ்திக்கொள்ளுமாரும் , தமது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவிராக ! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். 
                                                                                             (பார்க்க திருக்குர் ஆன் 24:31)
             ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
                                                                                             ( பார்க்க திருக்குர் ஆன் 7:26)
              
                மேற்கண்ட அல்லாஹ்வின் வேத வரிகளை சற்றே சிந்திப்பீர்! ஆடை மனிதனின் மானத்தை மறைத்தாலும் உண்மையாகவே அவனுடைய மான மரியாதையை காப்பற்றவது இறையச்சம் மட்டுமே. மனிதர்கள் அல்லாஹ்வை அஞ்சி வாழாமல் இருப்பதே இன்றைய நவீன உலகில் நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் காரணமாக உள்ளது.  
                  மக்களை அதிகம் சொர்கத்திற்கு நுழையச் செல்கின்ற காரியம் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட போது, அதற்கு அவர்கள் இறையச்சமும், நற்குணமும் தான் கூறினார்கள்.
                                                                                              (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) திர்மீதி)

                   இன்று பெரும்பாலான தீமைகள் பெண்ணாசையின் காரணமாக நடக்கிறது. மறுமையில் நரக வாசிகளில் அதிகமானோர் விபச்சார குற்றத்திற்காக நரகத்தில் புகுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                  மக்களை அதிகமாக நரகத்தில் எது தள்ளுகிறது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, அதற்கு அவர்கள் வாயும், மர்ம ஸ்தானமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்.
                                                                                            (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) திர்மீதி)

                   விபச்சாரத்திற்கு நெருங்காதிர்கள்! அது வெட்க கேடானதகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
                                                                                            ( பார்க்க திருக்குர் ஆன் 17:32)

                     ஒரு ஆணும், பெண்ணும் தவறான முறையில் இணைவதை மட்டும் இஸ்லாம் விபச்சாரம் என்று கூறவில்லை. மாறாக விபச்சாரத்தை தூண்டக்கூடிய அனைத்து வழிகளையும் விபச்சாரம் என்றே இஸ்லாம் கூறுகிறது. 

                      நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வை தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.
                                                                                              (அறிவிப்பவர் அபுஹுரைரா (ரலி) புகாரி)

                      பொழுது போக்கிற்காகவோ அல்லது மற்ற காரனங்களுக்ககவோ சில பெண்கள் தேவையின்றி அந்நிய ஆண்களுடன் பேசுவதும், செல்போனில் பேசுவதும் தனியாக பயணிப்பதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது. இந்த இழிசெயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

                       நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண்களில் இச்சராரை நான்(இன்னும்) கண்டதில்லை. இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். எவ்வளவோ தொலைவிற்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். அனால் இவர்கள் அதன் வாடையை கூட நுகர மாட்டார்கள்.
                                                                                          (அறிவிப்பவர் அபுஹுரைரா (ரலி) முஸ்லிம்)

                      நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல், ஒரு இரவு தொலைவுடைய பயனத்தி ( மணம் முடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம்.
                                                                                          ( அறிவிப்பவர் அபுஹுரைரா (ரலி) புகாரி)

                    ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆணும் தனிமையில் இருக்கக் கூடாது. (மணம் முடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர் இருக்கும் போது தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                                                                          (பார்க்க திருக் குர் ஆன் 33:32, 33)

                       நாம் எதற்காக இந்த இஸ்லாமிய கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால் மறுமையில் கிடைக்க கூடிய சொர்க்கத்திற்குத்தான். ஆனால் நாம் செய்யக் கூடிய இச்செயல்கள் மூலம் அதை அடைய முடியாமல் பெரும் நஷ்டவாளிகளாக நரகை அடையக்கூடிய சூழ்நிலை வரும் (அல்லாஹ் காப்பாற்றுவானாக)
பெற்றோர்கள் கவனத்திற்கு
                     நமது ஊரில் நடக்க கூடிய விரும்பத் தகாத சில நிகழ்வுகள் நம்முடைய இளைய சமுதாயம் எந்த அளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து விலகி தூரமாகி இருக்கின்றது என்பதையே காட்டுகிறது. இந்த இழிசெயலகளுக்கு நுள்ளகும் நமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இவ்வுலகிலும் நாம் மான மரியாதையை இழப்பதுடன் மறுமையில் சொர்க்கத்தையும் இழக்க கூடிய நிலை வரும். பெற்றோர்கள் டி.வி , சினிமா , சீரியல் பார்ப்பதை விட்டும் இஸ்லாமிய மார்க்க சிந்தனைகளை தாமும் கடைபிடித்து, தமது பிள்ளைகளுக்கும் வழிகாட்ட வேண்டும். மேலும் நமது வீட்டுக்கு வரும் தவிர்க்க முடியாத ஆண்களுடன் (தெருவில் வரும் வியாபாரிகள், ஆட்டோக்காரர்கள்  , காஸ் கொண்டு வருபவர்கள் போன்றவர்கள்) பேசும் போது நமது பெண்கள் இஸ்லாம் சொன்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாறாக அவர்களுடன் தனியாக இருக்கும் படியான சூழ்நிலையோ அல்லது தனியாக தேவையின்றி பேசுவதையோ தவிர்க்க சொல்ல வேண்டும்.

செல்போன்: இப்போது நடக்க கூடிய குற்றங்களின் ஆணிவேராக செல்போன் இருக்கிறது. ஆகவே நமது பிள்ளைகளுக்கு தேவையாக இருந்தால் மட்டுமே செல்போன் வழங்க வேண்டும். அல்லது அவற்றினை கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு செல்போன் நம்பரை கொடுப்பதோ அல்லது தவறான அழைப்பு எண்களை (wrong call) எடுத்து பேசுவதோ கூடாது.
    
                      நமது பகுதியில் நடக்கும் இது போன்ற இழிசெயல்களிலிருந்தும் நம்மை காத்துக் கொள்வதுடன் நமது சமுதாயத்தையும் காப்பதற்கு இஸ்லாத்தினை முறையாக கடைபிடிப்பதே இதற்கு தீர்வாகும். கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!  நாம் அல்லாஹ்விற்கு அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சி முஸ்லிம்களாகவே வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போம்.

( இது தக்வா டிரஸ்ட் சார்பாக வெளியிட்ட பிரசுரம்)

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )