Dec 22, 2010

இஸ்லாத்தைப் பற்றி ...

                                சமத்துவத்தை பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு சாதித்துக் காட்டிய மதம் இஸ்லாம்தான்; இஸ்லாம் மட்டுமே.
                                                             - சுவாமி விவேகானந்தா 
                                                            (COMPLETE WORKS OF VIVEKANANDHA VOL:6 PARA 415)
                                
                              இறைவனுக்கு முன்பு அனைவரும் சமம் என்ற கருத்தை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மதமும் செயல்படுத்திக் காட்டவில்லை.
                                                              - பி. ராமசாமி அய்யர் 
                                                            ( EASTERN TIMES, 22nd DECEMBER 1944)

                                முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்றும் கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக மிக அதிகமாக தேவைப்படுகிறது.
                                                             - வரலாற்றாசிரியர். ஆர்னால்டு டாயின்பீ 
                                                             ( CIVILIZATION ON TRAIL)

                                   இஸ்லாம் சமத்துவத்தைத் தூக்கிப் பிடித்தது. இஸ்லாம் சகோதரத்துவத்தைக் கொண்டாடியது. அதற்கு நேர்மாறாக தொன்மையான, அதே சமயம் வீழ்ச்சிப் பாதையில் வேகமாக சரிந்து கொண்டிருந்த பண்டைய பண்பாடுகள் செழிந்தோங்கியிருந்த நாடுகளில் சமத்துவமும் சகோதரத்துவமும் மறக்கடிக்கப் பட்டிருந்தன என்பதுதான் உண்மை. 
                                                             - M.N. ராய்
                                                            ( HISTORICAL ROLE OF ISLAM)

                                  இஸ்லாத்தைப் பொறுத்த வரை சமயம் என்றோ, மதம் என்றோ சொல்லுவதில்லை. மார்க்கம் - வழி என்று சொல்லுவார்கள்.
மதம் என்று சொன்னாலே பல பேருக்கு 'மதம்' பிடித்து விடுகிறது. மதமான பேய் பிடிக்காதிருக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் பாடினார்கள். எனவே, இது ஒரு வழி; வாழும் வழி; அவ்வளவுதான்! வாழும் வழியைச் சொல்வது இஸ்லாம்; வாழும் வழியை வாழ்ந்து காட்டியர் நபி பிரான். 
                                                            - பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் 
                                                            ( என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்)-பக்கம்:4 )

                                   ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சொல் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுக்குதான் பொருந்தும். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதும், ஏழை - பணக்காரன் , உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாததும் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றில் தான். இது வேறு மதத்திலும் கிடையாது. மானிட சமத்துவம் இதில்தான் கொடுக்கப்படுகிறது. 
                                                            - T.P.கணபதி(முன்னாள் காவல்துறை ஆய்வாளர்) 
                                                            ( மானிட சமத்துவம்: பக்கம்:26)

                                 இந்த மண்ணின் மைந்தர்களாகிய மக்கள் சுய மரியாதையோடும், தன்மானத்தோடும், பகுத்தறிவோடும் வாழ ஆசைப்பட்டார்கள். சமத்துவம் - சகோதரத்துவம் உள்ளவர்களாக வாழ விரும்பினார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்மானம் உள்ள கூட்டமாகவும் சுயமரியாதை, பகுத்தறிவு உள்ள கூட்டமாகவும் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். 
                                                            - T.M. மணி
                                                            (கடவுளர்களை மாற்றுவோம் - பக்கம்: 13)



தொகுப்பு : K.A. முஹம்மது ஆசிப். 
                       இளையான்குடி.      


                                                                                

2 comments:

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )