May 22, 2013

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா

கேள்வி 
நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். 

இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? 

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! 4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார்கள். அது "கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது "யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம்  விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, "இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், "தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இறைவா!) "அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!'' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387

 4357 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், "சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, "அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். "அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், "இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒரு போதும்) எந்த குதிரையி-ருந்தும் விழுந்ததில்லை. "துல் கலஸா' என்பது யமன் நாட்டி-ருந்த "கஸ்அம்' மற்றும் "பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது "அல் கஅபா' என்று அழைக்கப் பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறிகேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்கüடம் நீ சிக்கிக் கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்த போது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன். "

நரகில் பெண்கள் - ஓர் விளக்கம்



''இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2911)
உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)
''நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்''. என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3241, 5198)
மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ''ஆஹா அப்படியா?'' என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!
ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் - பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.

இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?




அன்புக்குரிய பெற்றோர்களே! கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது.
கல்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
பிரசித்திப் பெற்ற பாடசாலைகளிலும் International Schools களிலும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். அத்தோடு மேலதிக வகுப்புகளில் (Tution Class) பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அனுப்பிவைக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகைளின் எதிர்கால முன்னேற்றம் கருதி இரவு பகலாக கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிறார்கள்.
பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா என்பதை பெற்றோர்கள் ஒரு முறை சிந்திக்கவேண்டும்.
வளர்ந்து வரும் இளம் சமூகத்தினதும் மாணவ மாணவிகளினதும் செயற்பாடுகள் இன்று பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதை யாவரும் அறிந்ததே. பாடசாலைக்கும் Tution Class க்கும் செல்வதாக கூறிக் கொண்டு தங்களுடைய காதலன் காதலியுடன் தெரு ஓரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் சினிமா அரங்குகளிலும் சுற்றித்திரிகிறார்கள். குறிப்பாக சனி ஞாயிறு தினங்களில்அதிகமாக இக்காட்சி காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெளிப்பகுதிகளிலிருந்து கொழும்புக்கு Tution Class வரும் பிள்ளைகளும் இத்தகைய செயல்களில் அதிகமாக ஈடுபாடுகொள்கிறார்கள்.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய கண்ணியமான ஆடை தான் ஹிஜாப் அபாயா என்னும் ஆடை. அந்த ஆடை இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டு காதல் லீலைகளுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கப்படுகிறது. இந்த அபாயா ஆடையை கள்ள உறவுக்காகவும் தங்களை அடையாளம் காணாமல் இருக்கும் பொருட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
Room Services என்ற இடத்திற்கு போய் தவறான செயல்களில் ஈடுபடவும் இவ் ஆடையை (முகமூடி அபாயாவை) பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு நடந்து கொண்ட பல பெண்கள் பிடிக்கப் பட்டிருக்கிறார்கள். அபாயா அணிந்து காதலனுடன் எமது பெண்பிள்ளைகள் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் Bus-லும் Train-லும் செய்யும் அசிங்கங்களையும் சில்மிஷங்களையும் பார்க்க சகிக்க முடியவில்லை.

May 15, 2013

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்


அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:
''எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்:
'அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!
உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்.
மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும்.
இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்!'' (அல்குர்ஆன் 41 : 30-32)
''திண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்.'' (அல்குர்ஆன் 46 : 13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
1. அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2- எவர்கள் அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோஸ அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோஸஎன்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3. மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்க ள் நற்செய்தி கூறுவார்களாம்.
4. அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். "உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்" என்று அவ்வானவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 40 : 30)
5. இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். "இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்". (அல்குர்ஆன்)
6. உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். "உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்"". (அல்குர்ஆன்)
7. இந்த உறுதிப்பாடு அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.
தற்போது இஸ்லாமிய சமுதாயம் மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர்.

திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன?


திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக் கொடை) எனப்படும்.
ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.
இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. ஆண் பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும்பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)
மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது.
''ஒரு மனைவியை விவாக ரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?'' (அல்குர்ஆன் 4:20)
மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள்.
''நிர்ணயம் செய்த பின் ஒருவருக் கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.'' (அல்குர்ஆன் 4 : 24)
தன்னிடத்தில் பொருளாதாரம் இருக்கும் பட்சத்தில் அதை மஹராக கொடுப்பது ஆண் மீது கடமை. பொருளாதாரம் இல்லை என்றாலோ அல்லது சிறிதளவு செல்வம் இருந்தாலோ மணமகள் பொருந்திக் கொண்டால் தன்னால் இயன்றதை அவர் கொடுத்து மணமுடிக்கலாம். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

நம்மிடம் புகுந்துள்ள அந்நிய அநாச்சாரம்...! மாற்றம் வருமா?


அன்பின் முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே!
அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை மிகவும் அழகிய படைப்பாக படைத்துள்ளான்.
அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ள மனித உடலில் ஆன்மா என்ற ரூஹூம் இரண்டரக் கலந்துள்ளது.
இறைவனை மட்டுமே வணங்கவேண்டிய மனிதனை, இறை நினைப்பை விட்டும் மாற்றி தாங்கள் வணங்கும் ஷைத்தானை வணங்கச்செய்வது எவ்வாறு என்று இந்த ஷைத்தான்கள் சிந்தித்தனர்.
இவர்களின் ஆராய்ச்சிபடி மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் வசப்படுத்திவிட்டால் அம்மனிதனை தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட்டிப்படைக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இவர்கள் மனித இனத்தின் புனிதத்தை எவ்வாறெல்லாம் அழிவிற்கு உட்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ளஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.
''திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.'' (அல்குர்ஆன் 95:4)
''இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை''. (அல்குர்ஆன் 51:56)
''உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!'' (அல்குர்ஆன் 15:99)
இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிறம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்ட ஆணவத்தால் களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்திற்கு சிறம்பணிய மறுத்ததுடன் கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி வந்தான். இனி என் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதை தடுத்து அவர்களுக்கு முன்னும்,பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்து வருவேன் என கூறினான்.
1. இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டவன்.
2. மனிதர்ளை கெடுப்பதற்கு கியாமத் நாள் வரை அல்லாஹ்விடத்தில் அவகாசமும் வாங்கி உள்ளான்.
3. இப்லீஸின் வேலை ஆதமுடைய மக்களை நேரான வழியில் செல்வதை தடுத்து அவர்களுக்கு முன்னும், பின்னும், இடமும், வலமும் சென்று அவர்களை நரகத்தின் பக்கம் இழுத்துச்செல்வது ஆகும்.
4. நேரடியாக ஷைத்தானை வணங்குபவரகள் இலுமனாட்டிகள் (யூதர்கள்)
5. யூதர்கள் பின்பற்றும்வேதம் (தல்மூத்) தவ்ராத்திற்கு ஷைத்தான் சொல்லிகொடுத்த விளக்கமும் யூத வழி முறைகளும்
6. ஷைத்தானின் உறுதிமொழி
a. உலக ஆட்சி
b. யூதர்களுக்காக ஒரு தலைவர் (தஜ்ஜால் - Messiah)
உலக ஆட்சியை அமைப்பதன் ​அடிப்டையில் தான் இன்று யூதர்கள் ஷைத்தான்னை முன்னிலைப்படுத்தி உலக முஸ்லிம்களை அல்லாஹ்வின் கட்​டளைக்கு மாற்றம் செய்வதிலும் முஸ்லிம்களை வழிகெடுத்து ஷைத்தான்னை திருப்திபடுத்துவதிலும் திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )