Aug 30, 2013

நமக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர் யார்?

Post image for நமக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர் யார்?
பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :
    1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?
    (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.   (39:43,44)
    2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர்.  (43:86)
    3. அவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை.   (6:70)
    4. (நபியே!) அண்மையில் வரும் (கியாமத்) நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக; இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக் குழிக்கு வரும் (அவ்) வேளையில் அநியாயக் காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ; அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.  (40:18)
    5. இன்னும் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படமுடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக; (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அதற்காக எந்த பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.  (2:48,123)
    6. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?    (32:4)
    7. (மறுமையில்) அவனைத் தவிர அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ இல்லை.  (6:51)
    8. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?  (2:255)

அல்லாஹ் யாரை சபிக்கிறான்?

2:88
2:88.  அவர்கள் (யூதர்கள்) “எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
2:159
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
4:93
4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
4:155
4:155. அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
4:156
4:156. (யூதர்கள்) அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
4:157
4:157.  “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!


Post image for மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி!

அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்யவில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிருடன் புதைத்தனர். இவ்வாறான பெரும் பாவங்களிலிருந்து மக்களை மீட்பதற்கு அல்லாஹ் இறுதித் தூதரை அனுப்பி நேர்வழி காட்டினான். நோய் வாய்ப்பட்டவன் செய்ய வேண்டிய நிவாரணத்தை இறைத் தூதர்(ஸல்) பின்வருமாறு போதித்தார்கள்.
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும். (முஸ்லிம்: 4432)
ஒரு மனிதனுக்கு இரண்டு முறைகளில் நோய் ஏற்படலாம். அவையாவன:
1. அவனின் உடலுக்கு ஏற்படும் நோய்.
இதனை உலகில் மனிதனுக்காக அல்லாஹ் படைத்துள்ள மருந்துகளை மனிதன் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
2. மனிதனின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உள்ளத்தில் எழும் நோய்..
இதற்குரிய மருந்து அல்லாஹ்வின் இறைநெறி நூலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும்.
இதனை இறுதி இறைநெறி நூல் அல்குர்ஆன் இவ்வாறு விபரிக்கின்றது.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். ”நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லா விதமான கனி(களின்) மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (நோய் தீர்க்க வல்ல மருந்து) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (அல்குர்ஆன் 16:68,69)
இறைவன் தேனீக்களின் செயற்பாடுகளை வெளிப்படுத்தி ஒவ்வொரு மரம், மலர்களை சிந்தித்து மனிதன் ஆராய்ச்சி செய்தால் மனிதனுக்கு உபயோகமான  நோய் தீர்க்கும் மருந்துகளைக் கண்டு பிடிக்கலாம் என்ற உள்ளுணர்வை ஏற்படுத்துகின்றான். 1433 ஆண்டுகளுக்கு முன்பே உம்மி நபி(ஸல்) அவர்கள் மெளட்டீக வழிகளைத் தவிர்த்து மனிதன் சிந்தித்து ஆராய்ந்தால் மனித வாழ்வுக்கு உகந்த பல மருந்துகளைப் பெறமுடியும் என விளக்கினார்கள். இதன் பயனாக இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் பல மருத்துவர்கள் பல ஆராய்ச்சி நூல்களை விட்டுச் சென்றனர். இதன் தாக்கமாக ஸ்பெயினில் பல வாசக சாலைகள், கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன.

Aug 23, 2013

ருகூவு செய்தல்,ஸஜ்தா செய்யும் முறை

ருகூவு செய்தல்
   சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்தபின் ருகூவு செய்யவேண்டும்.
    ருகூவு செய்யும்போது கைகளை உயர்த்த வேண்டும்
   நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரு தோள் புஜங்கள்வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இதே போல் செய்வார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, இப்னுமாஜ்ஜா
   நாங்கள் எங்கள் கைகளை (ருகூவின் போது) முழங்கால்கள் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம். அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
     நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் இரு கைகளால் தமது இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். தனது இரு கைகளையும் நாண் போல் தனது விலாப்புறங்களை விட்டு அகற்றி வைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ, அபூதாவூத்
     முதுகை சமமாக வைக்கவேண்டும்
    நபி صلى الله عليه وسلم அவர்கள் ருகூவுச் செய்யும்போது தம் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள்; உயர்த்தவும் மாட்டார்கள். மாறாக இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக வைப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُநூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜ்ஜா
    ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யவேண்டும்
    திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன் என்று நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறியபோது, இறைவனின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என நபித்தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அஹ்மத்
     தொழுகையில் கோழி கொத்துவதைப் போல் (அவசரமாகக்) குனிந்து நிமிர்வதை நபி صلى الله عليه وسلم அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்
     ருகூவின் போது ஓத வேண்டியவை

தொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை




 1. தொழும் போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது:
நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன்.  அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும்படியானதோர் அபகரிப்பாகும் என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ,அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இதுவரையில் மிக  எச்சரிக்கையோடு நடந்து கொள்வார்களாக!
2. தொழும்போது கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது:  நபி(ஸல்) அவர்கள், தொழும்போது இடுப்பில் கைவைத்துக் கொண்டிருப்பதைத் தடை செய்துள்ளார்கள்.  (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், திர்மிதீ,அபூதாவூத்)
3. தொழுகையின் போது வானத்தை நோக்கி முகத்தை உயர்த்துதல் தொழும்போது வானத்தின்பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுததுக் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
(அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)
4. ஸுஜூது செய்யும்போது முழங்கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வது: ”ஸுஜூதை முறையாகச் செய்யுங்கள்! உங்கள் முழங்கைகளை நாய் விரிப்பது போல் தரையில் விரித்துக் கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி),அபூதாவூத்)
3. தொழும்போது கொட்டாவி விடுவது:
”உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவிவிட நேர்ந்தால் தம்மால் இயன்றளவு (அதை) அடக்கிக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு ஸஃது(ரழி),அபூதாவூத்)
6. தூக்கம் மிகைத்த நிலையில் தொழுவது:
”உங்களில் ஒருவருக்குத் தூக்கம் (கடுமையாக) வருமாயின் அவர் தூக்கம் போகும் வரைத் தூங்கிக்கொள்வாராக! (ஏனெனில்) அவர் தாம் தூங்கும் நிலையில் தொழ முற்பட்டால் அவர் (தொழும்போது) பாவ மன்னிப்புத் தேட வேண்டிய கட்டத்தில் (ஒன்றிருக்க ஒன்றை ஓதி) தம்மைத் தாமே ஏசிக்கொள்ள நேரிடலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)
”உங்களில் ஒருவர் இரவில் விழித்துத் தொழும்போது, (தூக்கத்தின் மேலீட்டால்) குர்ஆன் ஒதுவதற்கு நாவு தடுமாறி, தாம் ஓதுவது தமக்குப் புரியாத நிலை ஏற்பட்டு விடுமாயின், உடனே அவர் படுத்துக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், அஹ்மத்)
தொழுகை என்பது சுய உணர்வோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு அமலாக இருப்பதால், தூக்கம் மிகைத்த நிலையும் சுய உணர்வை அகற்றி விடுகிறது. இந்த நிலையில் தொழுகையில் ஓத வேண்டியவைகளை முறையாக ஓதித் தொழ இயலாது. தூங்கி விழித்த பிறகு தொழ வேண்டியவற்றைத் தொழுது கொள்ள வேண்டும்.
பர்ளான தொழுகையைத் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட கடும் முயற்சி!
நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் பிரயாணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்காக ஓர் இடத்தில் இறங்கினால், தமது வலப்புறமாகப் படுத்திருப்பார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகைக்கு சற்று முன்னர் இறங்கினால் தமது தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தவர்களாக, முழங்கையை நட்டி வைத்து (உஷார் நிலையில்)  படுத்திருப்பார்கள். (கதாதா(ரழி), முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திலிருந்து திரும்பும் போது, இரவுப் பிரயாணம் செய்து வந்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு இலேசாகத் தூக்கம் வந்தது. அப்போது பிலால்(ரழி) அவர்களிடத்தில் இன்றிரவு நீர் விழித்திருந்து, சுப்ஹுத் தொழுகைக்காக எங்களுக்கு பாதுகாப்புப் பணி செய்வீராக! என்றார்கள்.
அப்போது பிலால்(ரழி) அவர்கள் (அதை ஏற்று சுப்ஹு வரையுள்ள இடை நேரத்தில் அல்லாஹ்வால் விதிக்கப்பட்டுள்ள ஓரளவு நேரம் வரை (நபிலான தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது  நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்களும் (அயர்ந்து) தூங்கிக் கொண்டிருந்தார்கள். சுப்ஹு நேரம் நெருங்கியபோது பிலால்(ரழி) அவர்கள் சுப்ஹு நேரத்தை எதிர்பார்த்தவர்களாக, ஒட்டகத் தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த பிலால்(ரழி) அவர்களை அவர்களின் கண்கள் மிகைத்துவிட்டன. (அதனால் அவர்களும் அயர்ந்து விட்டார்கள்) நபி(ஸல்) அவர்களும், பிலால்(ரழி) அவர்களும், மற்றும் சஹாபாக்களில் எவரும் தங்கள் மீது வெயில் அடிக்கும் வரை விழிக்கவில்லை. அவர்களில் முதன்மையாக விழித்தவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவார்கள்.

ஸுஜூதுஸ்ஸஹ்வு – மறதிக்கான ஸஜ்தாக்கள்

ஸுஜூதுஸ்ஸஹ்வு – என்றால் என்ன?
நாம் தொழும்போது, மறதியாக நிகழும் கூடுதல், குறையுதல் முதலியவற்றை நிவர்த்திச் செய்வதற்காக தொழுகையின் இறுதியில் செய்யப்படும் இரு ஸஜ்தாக்களாகும்.
”ஸுஜூதுஸ்ஸஹ்வு” எவ்வாறு செய்ய வேண்டும்?
ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்வதற்கு இரு முறைகள் உள்ளன.
1. தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறுவதற்கு முன் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறுதல்.
2. தொழுகையின் இறுதியில் ஒரு ஸலாம் கூறிவிட்டு பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு மீண்டும் ஸலாம் கூறுதல்.இவ்விரு முறைகளில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம்.
”ஸுஜூதுஸ்ஸஹ்வு” செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்:
1. முதல் இருப்பில் (நடு இருப்பில்) உட்காராமல் எழுந்துவிட்டால் (ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தாம் இரண்டாவது ரகாஅத்திலிருந்து உட்காரமல் எழுந்து விட்டார்கள். அவர்களுடன் (சேர்ந்து) மக்களும் எழும்பி விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் தருவாயில், மக்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் தாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் சொல்லி, 2 ஸஜ்தாக்கள் செய்துவிட்டு பின்னர் ஸலாம் கூறினார்கள். (இப்னுபுனஹனா(ரழி), பாடம்: ஸுஜூதுஸ்ஸஹ்வு, புகாரீ, முஸ்லிம்)
2) தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு பின்னர் அதற்காக ஸுஜூதுஸ்ஸஹ்வு செய்ய வேண்டும்.
உங்களில் ஒருவருக்கு தமது தொழுகையில் சந்தேகம் தோன்றிவிட்டால், எது சரியானது என்ற முடிவுக்கு வந்து, அதன்படி தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பின்னர் 2 ஸஜ்தாக்கள் செய்து கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னுமஸ்ஊத்(ரழி), முஸ்லிம், அபூதவூத், நஸயீ, இப்னுமாஜா)
3. எது சரியானது? என்பதை தம்மால் ஊர்ஜிதம் செய்ய இயலாவிடில், சந்தேகத்தை அகற்றிவிட்டு, தமக்கு ஊர்ஜிதமானது எதுவோ அதன்படி அமல் செய்துவிட்டு, பின்னர் ”ஸுஜூதுஸ்ஸஹ்வு” செய்து கொள்ளவேண்டும்.

நல்லதொரு குடும்பம்



இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி

சொர்க்கவாதிகளின் பண்புகள்..!


Post image for சொர்க்கவாதிகளின் பண்புகள்..!

“அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முவு இவர்களுக்கே உரிதானது.” (திருக்குர்ஆன் 13 : 20 22)
இந்த வசனங்களில் சொர்க்கவாதிகளைக் குறித்து ஒன்பது வகையான பண்புகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
1. வாக்குறுதியை நிறைவேற்றல் “அஹ்தில்லாஹ்”எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு “அல்லாஹ்வின் வாக்குறுதி’ என்று பொருளாகும். மனிதர்கள் அனைவரும் படைக்கப்படுவதற்கு முன் உயிரணுக்களாக இருந்த போது அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான். அதை 7 : 172இல் இறைவன் கூறிக் காட்டுகிறான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அதாவது ஓர் இறைவனை ஏற்குமாறும், அவனுடைய கட்டளைக்குப் பணியுமாறும் இதன் மூலம் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
2. உடன்படிக்கையை முறிக்காதீர்கள் இங்கே உடன்படிக்கை என்பது, கொடுக்கல் வாங்கல், கடன், வியாபாரம், இரு நாடுகள், இரு குழுக்களிடையே எழுதப்படும் உடன்படிக்கை என எல்லாவற்றையும் குறிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் செய்த முதல் காரியம் அங்கு வாழ்ந்து வந்த யூதர்களோடு உடன் படிக்கை செய்துகொண்டார்கள். அதை முமையாக நிறைவேற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். சொர்க்கத்தைப் பெறுவதையே தங்களது இலட்சியமாகக் கொண்ட நபித்தோழர்கள் அந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றினார்கள். ஆனால் யூதர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து இழிவையும் கேவலத்தையும் சந்தித்தார்கள் என்பது வரலாற்றுத் தெளிவு.

Aug 7, 2013

பெருநாள் தொழுகை



தொழுகை நேரம்  

இன்றைய தினத்தில் நாம் முதல் தொழுகையை ஆரம்பிப்போம். அதன் பின் அறுத்துப் பயிடுவோம். யார் இவ்வாறு செய்கின்றாரோ அவர் நமது வழிமுறையைப் பேணியவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி) நூல்: புகாரி 951, 965, 968, 976, 5545, 5560, 
மேற்கண்ட ஹதீஸ் பெருநாள் தினத்தில் முதல் காரியமாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வயுறுத்துகின்றது. முதல் காரியமாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் சுபுஹ் தொழுது முடித்த மறு நிமிடமே தொழுது விடவேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
 ஏனெனில் பொதுவாக சுபுஹு தொழுகைக்குப் பின்னர் சூரியன் நன்கு வெப்படும் வரை தொழுவதற்குத் தடை உள்ளது. 

சுபுஹுக்குப் பின் சூரியன் உதித்துப் பிரகாசிக்கின்ற வரை தொழுவதையும், அஸருக்குப் பின் சூரியன் மறைகின்ற வரை தொழுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 581

 இந்த ஹதீஸில் சுபுஹுக்குப் பின்னர் சூரியன் முழுமையாக வெப்படும் வரை தொழுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதால் அந்த நேரம் முடிந்தவுடன் பெருநாள் தொழுகையின் நேரம் துவங்கி விடுகின்றது. தமிழகத்தில் அனேக இடங்கல் காலை 11 மணி வரை தாமதப்படுத்தி பெருநாள் தொழுகையைத் தொழுகின்றார்கள். இது தவறாகும். பெருநாள் தொழுகை மைதானத்தில் தொழவேண்டிய தொழுகையாகும். தொழுகையைத் தாமதப்படுத்தும் போது வெயின் கடுமை காரணமாக மைதானத்தில் மக்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெப்பாடாகும். 

எனவே வெப்பம் கடுமையாகும் போது தொழுகையை (வெப்பம் தணியும் வரை) தாமதப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 534, 537, 538, 539 

பள்வாசல் சென்று தொழ வேண்டிய கடமையான தொழுகைகளைக் கூட வெயின் கடுமையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமதப்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளார்கள். மக்கள் சிரமப்படக் கூடாது என்பதில் அந்த அளவுக்குக் கவனமாக இருந்துள்ளார்கள்.

 எனவே நபிவழியைப்

இஃதிகாஃபின் சட்டங்கள்



இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
  ரமலானில் இஃதிகாப் எதற்காக?  
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின் 813 செய்தி ஆதாரமாக உள்ளது.
  இஃதிகாபின் ஆரம்பம்  
இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். (நூல்: முஸ்லிம் 2007)
ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.
அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.
  இஃதிகாபின் முடிவு நேரம்  
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.
ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.
அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்) (நூல்: புகாரி 2018)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும் போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.
பெருநாள் தொழுகை முடித்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )