"இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்"
இஸ்லாம் ஒருமைத்துவத்தையும், அமைதியையும் இதர வாழ்க்கை சம்மந்தமான அனைத்து இன்னோரன்ன சமூக ஒருமையையும் விரும்புகின்றது, காலை மலர்ந்து மாலை உதிரும் பூப் போல அல்ல உலக முஸ்லிம்களின் ஒருமைப்படும் வெற்றியும் நாம் ஒவ்வொரு தனி நபரின் மூலம்தான் ஒரு குழுவாக மாறும்.
மனிதனின் சிந்தனையின் இலக்கு என்னவாக இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும் வெகுமதியும் அமைகின்றது, மனிதன் ஏன் குறுகலாகவும் கோணலாகவும் தன்னுடைய சிந்தனையை ஓட்டிட வேண்டும்? இறைவன் விசாலமான நேர்வழியை காட்டித் தந்திருக்கும்போது மனிதன் ஏன் தன்னுடைய சிந்தனையை முடமாக்கி வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்த்துக் கொண்டு சண்டையிட்டு மடிய வேண்டும்?
மனிதர்கள் பிரிந்து கிடக்கின்ற, பிளவுபட்டுக் கிடக்கின்ற சூழ்நிலைகளை நாம் ஆழ்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். உலக இலாப-நாட்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும். பலமும் வளமும் ஒற்றுமையில்தான் இருக்கிறது.
“....இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்....’’ (அல்குர்ஆன்- 22:78)
நம்மில் முஸ்லிம் என்ற ஒருமையும், இஸ்லாம் என்ற கொள்கையும்தான் இருக்க வேண்டும், முஸ்லிம்கள்தங்களுக்குள் துணை நிற்பதில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு உவமையாக,
“இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொருபகுதிக்கு வலுவூட்டுகிறது“ என்று அல்லாஹ்வின் தூதர் – முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அப்படிக் கூறும்போது தங்கள் கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னிக் காட்டினார்கள்.
கட்டி அடுக்கி எழுப்புவதால் ’கட்டடம்’ என்றானது. முஸ்லிம்கள் ஒருவரோடொருவர் பிணைந்திருக்க வேண்டியதை, “கட்டடம்” உவமை மூலம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சுருங்கக்கூறி விளக்கினார்கள். அண்ணலாரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் சமுதாயமாக இருப்பதால் தான் நம் சமகால முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறதென்றால் மிகையில்லை.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பலநூறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் அவற்றுள் பெரும் பிரிவுகளாக ஷியா-ஸுன்னீ பிரிவும் மாத்திரமே உள்ளது எனினும் நாம் பல ஜமாத்துக்களாக பிரிந்து இஸ்லாத்தை உலகத்தார் அருவருப்புடன் பார்ப்பதற்கு வழிவகுத்து வைத்திருக்கின்ரோம்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்- 3:104)
முஸ்லிம்கள் அனைவரும் பிரிவுகள் அனைத்தையும் சற்று ஒருபுறம் ஒதுக்கி விட்டு, இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்துக்களை / செயல்களை, நியாயப்படுத்துவதை / ஆதரிப்பதை / எதிர்ப்பதை / தாக்குவதைக் கைவிட்டு, தவறில் தொடர்ந்து இருப்பவர்கள் நேர்வழியில் வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்துக்கும் முதலாவதாக, உலக முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதை மனமார விரும்பி அதற்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய சக்திகளும் சியோனிஸ, ஃபாஸிஸ சக்திகளும் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுப்பதற்கு, முஸ்லிம்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் உலக முஸ்லிம்களுக்கான தனித்ததொருதலைமை இன்மையும் முக்கிய காரணங்களாக இதுகாறும் இருந்து வந்திருக்கின்றன
எத்தனையோ வளர்ந்த முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன இவ்வுலகில். ஆனால் அவரகளுக்குள் ஷியா-முஸ்லிம் பிளவு தவிர வேறு எந்த ஜமாத் பிரிவகளும் இல்லை. எனினும் பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற சிறு நாடுகளில்தான் இத்தனை ஜமாத் பிளவுகளும் பிரச்சினையும்..!
ஒரு சிறிய உதாரணம் ’ உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும்,எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும்அதான் ஒலி எல்லா நாடுகளிலும் ஒரே விதமான அரபு மொழியில் சொல்வதையும் ஒரே விதமான இகாமத்தும் ஒரு நல்ல சான்றாகும்’
மாத்திரமல்ல உலகத்தில் உள்ள எந்த மூளையில் உள்ள முஸ்லிமும் குர்ஆனின் ஆரம்ப சூரவும் (அல்-ஃபாதிஹா) இருதி சூராவுமான (நாஸ்) வாய்ப்பாடமக சொல்வார்கள்
‘உன்னைத் திருத்து உலகம் திருந்தும்’ என்பது போல நானும் திருந்தி நம் குடும்பமும் திருந்தினாலே போதும் உலக முஸ்லிம்களின் ஒருமைப் பட்டை நிலை நாட்டலாம்.
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப்பிரிந்து விட்டோரைப்போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்- 3 : 105)
உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 219 கோடியாக உயரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2010-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 161 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்காவின் PEW எனும் சமயம் மற்றும் பொதுவாழ்வு ஆய்வு மையம், அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் மக்கள் தொகை 35 விழுக்காடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 2010-இல் 1.5 மில்லியராக இருந்த இந்த எண்ணிக்கை, 2030-இல் 2.2 மில்லியராக உயரலாம்.
ஆக, நாம் முஸ்லிம் என்ற நாமத்துடன் இஸ்லாம் என்ற கொள்கையுடன் இருகப் பிடிப்போமையானால நாளை நாம் ஒரு குடும்பமாக வாழலாம்.
சுஹைர் அலி (கபூரி)
Zuhair Ali (Ghafoori-UoC)
source: http://www.dawahworld.com
0 comments:
Post a Comment