May 29, 2014

இஸ்லாம் விரும்பும் முஸ்லிம்…

முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேடவேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
    உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான்  இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.
 
    வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)
 
    இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்

May 20, 2014

மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது?

1. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
 
அறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
 
என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.
 
2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.
 
அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய 'ஞரசயn யனெ ஆழனநசn ளுஉநைnஉந ஊழஅpயவiடிடந ழுச ஐnஉழஅpயவடைடிடந' என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது). குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.
 
உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை. இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.
 
அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.
 
மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்ற கருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.
 

சுய இன்பம் செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்... என்ன செய்ய?!

 
 
ஐயம் :  நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா?
 
 தெளிவு :  "மனிதன் நன்மையைக் கோருவது போலவே தீமையையும் கோருகிறேன். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்". என அல்லாஹ்(ஜல்) பரிசுத்த நெறி நூலின் 17:11 வசனத்தில் தெரிவிக்கிறான். ஹராமான செயல்களில் ஈடுபடும்படி ஆகிவிடும் என்பதற்காக, தங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது.
 
"இதைச் செய்ய்வில்லையென்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்" என தாங்கள் கூறுவதிலிருந்து தங்களின் (Will – Power) மன உறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிகிறது.
 
ஹராமானதில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தங்கள் மேற்கொண்ட வழி மட்டும் ஹலாலானதா என ஒரு விநாடி சிந்தித்துப் பாருங்கள். பொருளீட்டுவதற்காக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவன் அது பாவனம் என்பதை உணர்ந்த பின், வீடுகளில் கொள்ளையடிக்க முயல்வானா? உழைத்து பொருளீட்டவே முயல்வான். அது போல சுய இன்பம் தேவைப்பட்ட உடனே, திருமணம் செய்திருக்கலாமே!
 
"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்பது அல்லாஹ்வின் கட்டளை. (அல்குர்ஆன் 24:32)
 
"திருமணம் செய்யாதவர்கள் ஒழுக்கம் பேணட்டும்". (அல்குர்ஆன் 24:33)
 
என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கும்போது, தாங்கள் ஒழுக்கத்தைப் பேணாமல் இருந்து விட்டீர்கள்.
அது மட்டுமின்றி, ஹராமானதைத் தடுக்க ஹலாலானதை தேடிக் கொண்டதைப் போலல்லவா நியாயம் கற்பிக்கிறீர்கள். "மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்" எனும் 10:44 ஆம் வசனம் நமக்கு படிப்பினைத் தரவேண்டும்.
 
"எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார். எவன் ஓர் அணுவளவு பாவம் செய்திருந்தாலும், அதனையும் அவன் (மறுமையில்) கண்டு கொள்வான்". (அல்குர்ஆன் 99:7,8)
 

மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்

 
[ இன்று ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் முடிக்கும் போது தாம் தேர்ந்தெடுக்கும் துணையிடத்தில் மார்க்கப் பற்றை தேர்ந்தெடுப்பது இரண்டாம் பட்சமாகவே உள்ளது.
மார்க்கம் இல்லாத துணையை தேர்ந்தெடுத்து அவர்களை மனமுடிப்பதற்காக இவ்வாறும் நியாயம் கற்பிக்கின்றார்கள். அதாவது இன்னார் மார்க்க சிந்தனை அற்றவர் தான் ஆனால் நான் திருமணம் செய்து அவரை மார்க்கத்தின் பக்கம் கொண்டு வருவேன் என்று வியாக்கியானம் சொல்கின்றார்கள்.
இப்படி சொல்வதற்கு இலகுவாக இருப்பினும் நாம் நினைத்தோரை நேர்வழியின் பால் கொண்டு செல்ல முடியாது.
 
''அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்''.  (அல்குர்ஆன் 2:272)
 
கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவருக்காவது மார்க்கப் பற்று இல்லாமல் இருப்பது குடும்ப வாழ்வில் பெரும் சிக்களை உண்டாக்கும். இருவரில் மார்க்கத்தில் உறுதியாக இருக்கக் கூடியவரின் கொள்கையில் கூட தளம்பல் ஏற்படலாம்.]
 
மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்
  ஷப்னா கலீல் – மாளிகாவத்தை 
 
 
 
கணவன் மனைவி அல்லாஹ் மனித இனத்தை ஆண் பெண் என ஜோடியாக படைத்ததே அவர்கள் இரு சாராரும் இன்பமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கே ஆகும்.
அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர். (அல்குர்ஆன் 7: 189)
 
கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு திருமண உறவு தலாக்கில் முறிந்து போகக் கூடிய சவால்களை இன்று அநேகமான முஸ்லிம் குடும்பங்கள் எதிர் கொண்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப் பற்று இன்மை தான்.

May 14, 2014

அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா வாழ்த்துவதின் பின்னணி

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்
 
திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.
 
 
1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?

May 2, 2014

ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும்.

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர...்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)

வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)
Photo: ‎ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். 

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)

வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)

ஜும்ஆவும் அதானும்
 ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரு குத்பாக்கள்
 நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள.; பின்னர் உட்கார்ந்து விட்டு மீண்டும் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம் )

நாயகத் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவு ஆற்றினார்கள். அவர்கள் (மிம்பர்; மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி;விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மயின்னத்துன் மின் ஃபிக்ஹிஹி) மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள்.

قال صلي الله عليه وسلم : ان في البيان لسحرا  

(இன்னஃபில் பயானி லஸிஹ்ரா) நிச்சயமாக பயானில் (சொற்பொழிவில் பிறரை வயப்படுத்தும்) ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூவாயில், நூல்: முஸ்லிம்)

இந்த நபி மொழிகளிலிருந்து சொற்பொழிவின் நோக்கமே மக்களுக்கு போதனை செய்வதும் அவர்களின் உள்ளங்களை ஈர்ப்பதுமாகும். அவர்களுக்கு புரியாத மொழியில் நீண்ட உரை நிகழ்த்தி தூங்க வைப்பதல்ல என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.

குத்பா (சொற்பொழிவு) உரையைக் கேட்பது
 இரு ரகஅத்துகளுக்குப் பதிலாக ஓதப்படும் ஜும்ஆ குத்பாக்களை (சொற்பொழிவுகளை) கேட்பதும் அவசியமாகும். இதில் மார்க்க நெறிமுறைகளையும் அன்றாட வாழ்வில் ஏற்படும் மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும், ஐயங்களையும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை மக்களுக்குப் புரியும் வகையில் ஆற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஜும்ஆ உரை அமையவேண்டும்.

புரியும் மொழியில் குத்பா உரை 
 இன்று அதை ஒரு மந்திரமாக ஜபிக்கப்படுவதையும், சம்பிரதாயமாக ஓதப்படுவதையும்;, இராகமாகத் தாலாட்டுப் பாடுவதையும் பார்க்கிறோம். இந்தச் சொற்பொழிவு ஒவ்வொருவருக்கும் பயன்பட வேண்டுமாயின் அவரவர் மொழியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இரு குத்பாக்களுக்கு பதில் மூன்று குத்பாக்கள் 
 நம்மில் சிலர் குத்பா பேருரையில் கலந்து கொள்ளாது வெறும் தொழுகையில் கலந்து கொள்ளும் அவல நிலையையும் இன்று சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. இதற்கு நம் நாட்டு சம்பிரதாய குத்பாக்களும் முக்கியக் காரணமாகும். சிலர் நாங்கள் அரபியில் தான் குத்பா உரை நிகழ்த்துவோம் எனக் கூறி குத்பாவுக்கு முன்னர் மேடையில் ஏறுமுன் தமிழில் ஒரு (குத்பா) உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். இதையும் சேர்த்து மூன்று குத்பாக்களாகி விடுவதால் நபிகள் (ஸல்) ஆற்றிய இரு உரைகளுக்கு மாற்றமான (ஒரு பித்அத்) செயலாகி விடுகிறது.எனவே இதைத் தவிர்த்து மிம்பர் மேடையிலேயே இரு குத்பாக்களையும் அவரவர் மொழியில் ஆற்றப்படுவதற்கு ஆவன செய்யப்படவேண்டும்.

உரையை கவனமாகக் கேட்பது
 குத்பா உரையை மிகவும் கவனமாகக் கேட்கவேண்டும். அந்த வேளையில் பேசுவதும் வேறு சிந்தனைகளிலும் பராக்குகளிலும் ஈடுபடுவதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

யார் குத்பாவை கேட்கும்போது தரையில் கிடக்கும் பொடிக்கற்களை இங்குமங்கும் புரட்டிக்கொண்டிருக்கிறாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மை வீணாகிவிட்டது என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினால் நீயும் வீணான காரியத்தில் ஈடுபட்டவனாவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்) மிம்பரில் (குத்பா உரை நிகழ்த்த) நின்று விட்டால் எங்கள் முகங்களை அவர்களை நோக்கி வைத்துக் கொள்வோம் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  இதிலிருந்தே ஜும்ஆ குத்பாவின் உரையின் முக்கியத்துவத்தை உணரலாம்.

ஜும்ஆவுக்கு குளித்து நறுமணம் பூசி வருவது
 உங்களில் ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளவும் என நபி(ஸல்) கூறினார்கள்.
 (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா (1088), நஸயீ -1315) )

ஜும்ஆ நாளில் குளித்து இயன்றவரை தூய்மைப்படுத்தி பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி பள்ளிக்கு வந்து (அங்கே அமர்ந்திருப்பவர்களைப் ) பிரிக்கும் விதமாக அமராமல் விதிக்கப்பட்டதை தொழுது பின்னர் இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வந்ததும் மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் மறு ஜும்ஆவுக்குமிடையேயுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்பார்ஸி (ரலி) நூல்;: புகாரி, அஹ்மது)

ஜும்ஆ நாளன்று பருவமெய்திய ஒவ்வொருவரும் குளித்து மிஸ்வாக்குச்செய்து இயன்ற வரை நறுமணம் பூசிக் கொள்வது கடமையாகும் என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி), நூல்;: அபூதாவூது-371)

ஜும்ஆவுக்கு வருபவர் குளித்து மிஸ்வாக்குச் செய்து தூய்மையோடும் நறுமணம் பூசியும் வரவேண்டுமென்பதையும் மவுனமாக இருந்து குத்பாவை கருத்தூன்றிக் கேட்பதையும் இந்த நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.

ஜும்ஆவிற்கு முன்னரே செல்வது
 ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பைப் போன்று குளித்து அதன்பிறகு (பள்ளிக்குச் செல்லுபவர் ஒரு ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறத்துப்பலியிட்டவராவார். இரண்டாவது வேளையில் செல்வோர் ஒரு மாட்டை அறுத்துப்பலியிட்டவராவார். மூன்றாவது வேளையில் செல்வோர் ஒரு கொம்புள்ள ஆட்டை அறுத்துப்பலியிட்டவராவார். நான்காவது வேளையில் செல்வோர் ஒரு கோழியை அறுத்துப்பலியிட்டவராவார். ஐந்தாவது வேளையில் செல்வோர் ஒரு முட்டையை கொடுத்தவராவார்.

இமாம் குத்பா ஓதுவதற்காக புறப்பட்டு வந்துவிட்டால் (நன்மைகளை பதிவு செய்யும்) வானவர்கள் (தங்கள் பதிவேடுகளை) மூடிவிட்டு இமாம் நிகழ்த்தும் குத்பா உரையைக் கேட்பதற்காக (பள்ளிக்கு) ஆஜராகிவிடுவார்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: இப்னுமாஜா, நஸயீ, புகாரி, முஸ்லிம்)

உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள்
 முஸ்லிம்களின் (ஈத்) பெருநாளாக விளங்கும் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னரே சென்று வானவர்களின் பதிவேட்டில் நமது பெயர்களைப் பதிவு செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவதற்கு முனைப்போடு இருந்து வரவேண்டும்.

ஜும்ஆவின் முன் ஸுன்னத்து தொழுகை உண்டா?
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் நுழைந்தார். நீர் தொழுது விட்டீரா என்று நபி(ஸல்) கேட்க, அவர் இல்லை என்றார். (அப்போது) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என நபி(ஸல்) அவரிடம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது)

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். ஸுலைக் இரண்டு ரகஅத்கள் சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி(ஸல்) அவரிடம் கூறிவிட்டு, இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது யாரேனும் வந்தால் சுருக்கமாக அவர் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த உத்தரவுக்கு மாற்றமாக தாமதமாக வருபவர் குத்பா வேளையில்  தொழாமல் உட்காருவதையும் தொழுபவரை தடுப்பவர்களையும் இன்று காண முடிகிறது. இது நபி வழிக்கு மாற்றமாகும்.

ஜும்ஆ தொழுகைக்கு முன் ஸுன்னத்து தொழுகை கிடையாது. ஆனால் பள்ளிவாசலுக்குரிய தஹிய்யத்துல் மஸ்ஜித் இரு ரகஅத்துகளையே நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சிலர் இது காணிக்கை தொழுகை இல்லை. முன் ஸுன்னத் தொழுகையெனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்தவர்களில் முன் ஸுன்னத் தொழாதவர்களை தொழவேண்டுமென கட்டளையிட்டிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து நேராக பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி குத்பா உரையை துவங்கி விடுவதால் இது முன் ஸுன்னத் அல்ல என்பது தெளிவாகிறது.

ஜும்ஆவின் பின் ஸுன்னத்து தொழுகை
 உங்களில் எவரேனும் ஜும்ஆ தொழுதால் அதன் பின் நான்கு ரகஅத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: முஸ்லி;ம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது) நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவின் பின் வீட்டிற்குச் சென்று இரு ரகஅத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்.)

அத்தியாயங்கள் 
1.நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் ஜும்;ஆ என்ற (62ஆவது) அத்தியாயத்தையும், முனாஃபிக்கீன் என்ற (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்:முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ

2. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் அல் அஃலா என்ற (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்னும்87ஆவது) அத்தியாயத்தையும், அல் காஷியா எனற ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா என்னும் 88ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி), நூற்கள்:அஹ்மது, அபூதாவூது, நஸயீ )

பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை
 பெண்களுக்கு ஏனையத் தொழுகையைப் போன்றே ஜும்ஆ தொழுகைக்கும் நபி(ஸல்) அவர்கள் தொழ அனுமதித்துள்ளார்கள்.
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழ அனுமதி கேட்டால் அவர்களின் (அந்த) உரிமைகளை நீங்கள் தடுக்க வேண்டாம் என நபி(ஸல்) கூறியுள்ளனர். (நூல்: முஸ்லிம்)

பள்ளி வாசலுக்குத் தொழவரும் உங்கள் பெண்களை நீங்கள் தடை செய்யாதீர்கள். எனினும் (தொழுவதற்கு) அவர்களுடைய வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூற்கள்: அபூதாவூத், மிஷ்காத்-1062.)

பெண்களே! ஜும்ஆ நாளன்று இமாமுடன் நீங்கள் ஜமாஅத்தில் தொழுதால் ஜும்ஆவை (இரு ரகஅத்கள்) தொழுங்கள்! நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுதால் ளுஹரை நான்கு ரகஅத்துகள் தொழுங்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் எங்களுக்கு கூறுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு மிஃதானின் பாட்டி கூறுகிறார்கள். (நூல்: இப்னு அபீ ஷைபா)

பெண்கள் தாராளமாக பள்ளிவாசல் சென்று தொழலாம். இன்று அவர்களுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்ட பள்ளிவாசல்களை உலகெங்கும் பரவலாகக் காண முடிகிறது.

ஜும்ஆவை தவற விட்டவர் 
 ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரகஅத்தைப் பெற்றுக் கொண்டவர் ஜும்ஆவைப் பெற்றுக் கொண்டவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: நஸயீ

ஜும்ஆவின் இரண்டு ரகஅத்துகளும் ஒருவருக்குத் தவறிவிட்டால் அவர் நான்கு ரகஅத்துகள் தொழவும் என நபி(ஸல்)கூறினார்கள். நூல்: அல் தப்ரானீ

ஜும்ஆவுடைய ஒரு ரகஅத்தை தவற விட்டடவர் இமாமுடன் ஒரு ரகஅத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தபின் எழுந்து ஒரு ரகஅத் தொழவேண்டும். இரண்டாவது ரகஅத்தின் ருகூவுக்குப்பிறகு ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் இமாமுடன் வந்து சேர்ந்தால் அவர் ளுஹரை மனதில் எண்ணி நான்கு ரகஅத்து ளுஹரை நிறைவேற்றவும். அவர் ஜும்ஆவாக நிறைவேற்றினால் அது நிறைவேறாது.

ஜும்ஆவின் ஜமாஅத்திற்கு பிறகு வருபவர் தனியாகவோ அல்லது ஜமாஅத்தாகவோ தொழுவதாக இருந்தால் நான்கு ரகஅத்துகள் ளுஹர் தொழவேண்டும். அவர் பயணத்திலிருந்தால் ளுஹராகவும் கஸ்ராகவும் தொழுது கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் பயணத்திலிருந்தால் ஜும்ஆ நாளன்று ளுஹர் தொழுவார்கள். ஜும்ஆ தொழுகை ளுஹருக்கு பரிகாரமாகும்

அல்பாகவி.காம்‎
ஜும்ஆவும் அதானும்
ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரு குத்பாக்கள்

‘களா’ தொழுகையை

 இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தி...ல் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.
Photo: ‘களா’ தொழுகையை

இன்று பலரும் சர்வ சாதாரணமாகத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் “களா’வாக ஆக்கிக் கொண்டி ருக்கின்றனர். ஒரு சில காரணங்களுக்காக தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் தொழுகையை “களா’வாக, ஆக்க முடியாது. அப்படி ஒரு நிலமை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

தூங்குபவன் விழிக்கும் வரையிலும், பைத்தியக்காரன், பைத்தியம் தெளியும் வரையிலும், சிறுவன் பருவமடையும் வரையிலும் (செய்கின்ற செயல்களுக்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்.

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:

 ”மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக தொழுகை உள்ளது”. (அல்குர்ஆன் 4:103)

தொழுகையை அதற்கென குறிக்கப்பட்ட நேரத்தில் தான் தொழுதாக வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டதால் நோன்புடன் தொழுகையை ஒப்பிட முடியாது.

இன்னொரு வேறுபாட்டையும் நாம் காண்போம்.
“”மாதவிடாய்க் காலங்களில் நாங்கள் விட்டு விட்ட நோன்புகளை “”களா” செய்யும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டிருந்தோம். ஆனால் அதே காலங்களில் விடுபட்ட தொழுகைகளை “”களா” செய்யும்படி நாங்கள் ஏவப்படவில்லை”. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்: முஸ்லிம்.

“”களா” விஷயத்தில் நோன்பும், தொழுகையும் வெவ்வேறானவை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. நமது இஷ்டத்திற்கு காலம் கடத்திவிட்டு நாம் விரும்புகின்ற எந்த நேரத்திலாவது அதை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இஸ்லாத்தில் அறவே கிடையாது.

இன்னொரு வேறுபாட்டைக் காண்போம்.
நோன்பு என்பது எல்லா மாந்தருக்கும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய கடமை.மாற்று முறை எதுவும் கிடையாது. அதனால் அதை நிறைவேற்ற இயலாத நோயாளிகளாக நோன்பை நோயுற்ற நாட்களில் நோற்க இயலாது போகலாம்.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அந்த நிலமை இல்லை. நின்று தொழ முடியவில்லை என்று காரணம் கூறி காலதாமதப் படுத்த முடியாது.

“எனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக (என்னால் தொழ முடியாமலிருப்பதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் “”நின்று தொழு” அதற்கு இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு!” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரழி) நூல்கள்: புகாரி, அபூதாவூது, அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, நஸாயீ.

எனவே இயலாமையைக் காரணம் கூறி தொழுகையை களாவாக ஆக்க முடியாது. பயணத்திலிருப்பவன் பட்டினியாகப் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் நோன் புக்குச் சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் தொழுகையைப் பொறுத்து அந்த அனுமதி கிடையாது.

நான்கு ரகாஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக குறைத்துக் கொள்ளத்தான் அனுமதிக்கின்றான் அல்லாஹ். (அல்குர்ஆன் 4:101)

ஆக நோன்புக்கு இருப்பது போன்ற “களா’ என்பது தொழுகைக்குக் கிடையாது என்பதை நாம் தெளிவாக உணரலாம். மனித வாழ்வில் ஏற்படுகின்ற எந்தப் பிரச்சனைக்காகவும் தொழுகையைப் பிற்படுத்த முடியாது. போர்க்களத்தில் கூட ஒரு பிரிவினர் போர் செய்யும் போது, இன்னொரு பிரிவினர் தொழ வேண்டும். பின்னர் இவர்கள் போர் செய்யும் போது அவர்கள் தொழ வேண்டும் என்பதைத் திருகுர்ஆனின் 4:102 வசனம் குறிப்பிடுகின்றது. “களா’ செய்ய அனுமதி இருக்குமானால் இந்த இக்கட்டான கட்டத்தில் களா செய்ய இஸ்லாம் அனுமதித்திருக்கும். ஆனால் இந்தக் கட்டத்திலும் “களா’வை அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, ஓர் இடத்தில் நின்று தொழுதால் எதிரிகளால் ஏதேனும் ஆபத்து வந்து விடுமென்று அஞ்சினால் அப்போதும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. மாறாக நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழுதாக வேண்டும் என்பதை திருகுர்ஆனின் 2:239 வசனம் குறிப்பிடுகின்றது.

ஒளூ செய்வதற்குத் தண்ணீரைப் பயன்படுத்த இயலவில்லை என்றும் காரணம் கூறி களாவாக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் கிடைக்காதவர்கள் “தயம்மம்’ செய்து தொழும்படி திருகுர்ஆனின் 4:43 வசனம் கட்டளை இடுகின்றது.

பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது எப்படியும் குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்ற முடியாது போகும் என்றும் கூற முடியாது. லுஹரையும், அஸரையும் ஒரே நேரத்தில் மஃரிபையும், இஷாவையும் ஒரே நேரத்தில் களா இல்லாமலே தொழவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

ஆக எந்தக் காரணத்திற்காகவும் தொழுகையைக் களாவாக ஆக்க முடியாது. அப்படிக் காலம் கடந்து தொழுவதால், அது அந்தத் தொழுகைக்கு எந்த விதத்திலும் ஈடாக முடியாது.

“எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனது பொருளும், குடும்பமும் தவறிவிட்டது போன்றதாகும்” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இதிலிருந்து தவறியது தவறியதுதான். அதைத் திரும்ப அடைய முடியாது என்று உணரலாம். இவ்வாறு களாவாக்குவது மிகப் பெரும் குற்றம்தான். அல்லாஹ் மிக அதிகமாக வற்புறுத்துகின்ற ஒரு கடமையை வீணடித்தவனாக அவன் ஆகின்றான்.

நீண்ட காலமாகவோ,அல்லது சில வேளைகளோ தொழுகையை விட்டவன் என்ன செய்யவேண்டும்? இதற்குப் பரிகாரமே கிடையாதா? அதையும் அல்லாஹ் அழகாகச் சொல்லித் தருகிறான்.

“அவர்களுக்குப் பின்னால் தொழுகையை பாழ்படுத்தி, தங்கள் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் தோன்றினார்கள். அவர்கள் நரகில் போடப்படுவார்கள். (நடந்து விட்ட இந்த பாவத்துக்காக) திருந்தி மன்னிப்புக் கேட்டு நற்கருமங்களைப் புரிந்தவர்கள் தவிர (மற்றவர்கள் தான் நரகை அடைவர்) இவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் 19:59,60)

இப்படித் தொழுகையைப் பாழ்படுத்தியவர்கள் இனிமேல் இப்படிப் பழாக்க மாட்டோம் என்று மனம் திருந்தி செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவர்கள் அந்த மாபெரும் குறையை நிவர்த்தி செய்வதற்காக இயன்ற அளவு நபிலான வணக்கங்களில் ஈடுபடவேண்டும்.

ஆக தொழுகையைக் களாவாக ஆக்குவதற்கு இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. களாவாக ஆக்கி விட்டு வேறு நேரத்தில் தொழுவது அதற்கு ஈடாக ஆகவும் முடியாது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

“உமர்(ரழி) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரழி) ஸல்மான் அல்பார்ஸி(ரழி) போன்ற நபிதோழர்களின் கருத்தும், முஹம்மது இப்னு ஸீரின்(ரஹ்) உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) போன்ற அறிஞர் களின் கருத்தும் இதுதானே” என்று இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: ஃபிக்ஹுஸுன்னா)

ஆரம்ப காலத்தில் களா செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் அவ்வாறு “களா’வாக ஆக்கி இருக்கின்றார்கள். பின்னர் அந்த அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்துவிட்டான்.

அதற்கான ஆதாரம் வருமாறு:
“”அகழ்ப் போரின் போது, (அகழ்ப் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிபு ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் தொழவில்லை. இஷா நேரத்தில் வரிசைக் கிரமமாக பாங்கு, இகாமத்துடன் அந்தத் தொழுகைகளை நிறைவேற்றினார்கள்” இந்த நிகழ்ச்சி திருகுர்ஆனின் 2:239வது வசனம் இறங்குவதற்கு முன் நடந்ததாகும் என்று அபூஸயீது (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(ஹதீஸின் கருத்து). நூல்கள்:அஹமது, நஸயீ.

“போர்க் காலங்களில் கூட உரிய நேரத்தில் தான் தொழ வேண்டும்” என்ற உத்தரவு வருவதற்கு முன்பு தான் இந்த நிலமை இருந்திருக்கின்றது என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக்குகிறது.

இரண்டே இரண்டு காரணங்களினால் மட்டுமே, உரிய நேரம் தவறிய பிறகும் நிறைவேற்ற வேண்டும்.

“யாரேனும் மறதியின் காரணமாகவோ, அல்லது தூக்கத்தின் காரணமாகவோ, (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, விழித்தவுடன் அதைத் தொழட்டும்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

(இதே கருத்துக் கொண்ட பல ஹதீஸ்கள், புகாரி, முஸ்லிம் அபூதாவூது, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் காணப் படுகின்றன)

ஒருவன் தூங்கிவிட்டு தொழுகையின் நேரம் முடிந்த பிறகு எழுந்தான் என்றான், எழுந்த உடனே அதைத் தொழ வேண்டும். அது போல் மறதியின் காரணமாக ஒரு தொழுகையை நேரம் தவறவிட்டு விட்டால், நினைவு வந்தவுடன் தாமதிக்காது தொழுதிட வேண்டும் என்பதை நபி(ஸல்) தெளிவுபடுத்துகின்றார்கள். இந்த இரண்டு காரணங்கள் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் “களா’வாக ஆக்க முடியாது.

“நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் பயணத்தில் செல்லும்போது ஓரிடத்தில் உறங்கி விடுகிறார்கள். உறங்குவதற்கு முன் பிலால் (ரழி) அவர்களை மட்டும் விழித்திருக்கும்படியும், சுபஹு தொழுகைக்கு எழுப்பும்படியும் கூறுகிறார்கள். பிலால்(ரழி) அவர்களும் தன்னை அறியாது உறங்கி விடுகிறார்கள். சூரியன் நன்றாக உதித்த பின்னர் தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் அவ்விடத்தை விட்டு அகன்று வழக்கம்போல பாங்கு சொல்லி சுன்னத் தொழுது பின்னர் இகாமத் சொல்லி ஜமா அத்துடன் தொழுதிருக்கிறார்கள்” (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ கதாதா(ரழி) நூல்கள்: அஹ்மத், முஸ்லிம்

(நஸாயீயிலும் இதே கருத்து பதிவு செய்யப் பட்டுள்ளது)

தூக்கம் மறதியின் காரணமாக விட்டுவிட்ட தொழுகைகளைத் தாமதமின்றி விழித்தவுடன், நினைவு வந்தவுடன் தொழுதிட வேண்டும். உரிய நேரத்தில் தொழும்போது எப்படி பாங்கு, இகாமத், சுன்னத்களுடன் தொழ வேண்டுமோ அவ்வாறே அதனை நிறை வேற்றவும் வேண்டும். அந்தத் தொழுகைக் குரிய நேரம் அதுதான் என்றாகி விடும்போது, களா என்ற பிரச்சனையே இல்லை.

ஆக கடந்த காலங்களில் தொழுகைகளை விட்டது மிகப் பெரும் பாவம். இணை வைத்தலுக்கு அடுத்தபடியாக பெரும் பாவம். மிகப் பெரும் பாவத்திற்கு எப்படி உள்ளம் உருகி பாவமன்னிப்புக் கோர வேண்டுமோ அவ்வாறு பாவ மன்னிப்புக் கோருவதும், உபரியான வணக்கங்கள் புரிவதும் தான் அதற்குப் பரிகாரம். மேற்கூறிய இரண்டு காரணங்கள் தவிர வேறு காரணங்களால் தொழுகையைத் தாமதப்படுத்தக் கூடாது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

அந்நஜாத்

கடந்த காலங்களில் விடுபட்ட தொழுகைகளை எப்படி “களா’ செய்வது என்று கேட்டிருக்கின்றீர்கள். இது பற்றி விரிவாகவும் விளக்க மாகவும் சொல்ல வேண்டும்.

“களா’வாக ஆக்குவதையும், களா தொழுகையையும் அனுமதிப்பவர்கள் அதற்கு நேரடியான குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ எடுத்துக் கூறவில்லை. மாறாக அவர்கள் நோன்பு பற்றி அல்லாஹ் கூறுகின்ற வசனத்திலிருந்து தான் களா தொழுகையை நியாயப்படுத்துகின்றனர்.

“பயணிகளாகவோ, நோயுற்றவர்களாகவோ நீங்கள் இருந்தால் அந்த நோன்பை வேறு நாட்களில் நோற்கலாம்” என்று அல்லாஹ் திருகுர்ஆனின் 2:185 வசனத்தில் குறிப்பிடுகிறான்.

ரமழானில் மட்டுமே நோற்க வேண்டிய நோன்பை, அந்த மாதத்தில் வைக்காதவர்கள் வேறு நாட்களில் நோற்கும்படி அல்லாஹ் அனுமதிக்கிறான். அதுபோல உரிய நேரத்தில் தொழப்படாத தொழுகைகளை வேறு நேரத்தில் தொழுது கொள்ளலாம் என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதம் எந்த விதத்திலும் சரியானதல்ல. நோன்பை வேறு மாதங்களில் நோற்கலாம் என்று கூறிய அல்லாஹ் தொழுகையை வேறு நேரத்தில் தொழலாம் என்று கூறுகின்றானா? என்றால் இல்லை. ஒரு இடத்திலும் கூறவில்லை.

மாறாக அல்லாஹ் பின் வருமாறு குறிப்பிடுகிறான்:

திருமணத்தில் தீய பழக்கங்கள்



 சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை... உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
Photo: திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.

ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும்  மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும்   பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும்   ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும்   எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?

சமுதாயம் சீர் பெற   இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பெருமைக்காகவும்   ஆடம்பரத்துக்காகவும்   செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.

‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)

வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.

கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.

வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.

என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.

சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல்   பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு   கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.

மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.

இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் சுன்னாஹ்வின் வழியில் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )