May 20, 2014

மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்

 
[ இன்று ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் முடிக்கும் போது தாம் தேர்ந்தெடுக்கும் துணையிடத்தில் மார்க்கப் பற்றை தேர்ந்தெடுப்பது இரண்டாம் பட்சமாகவே உள்ளது.
மார்க்கம் இல்லாத துணையை தேர்ந்தெடுத்து அவர்களை மனமுடிப்பதற்காக இவ்வாறும் நியாயம் கற்பிக்கின்றார்கள். அதாவது இன்னார் மார்க்க சிந்தனை அற்றவர் தான் ஆனால் நான் திருமணம் செய்து அவரை மார்க்கத்தின் பக்கம் கொண்டு வருவேன் என்று வியாக்கியானம் சொல்கின்றார்கள்.
இப்படி சொல்வதற்கு இலகுவாக இருப்பினும் நாம் நினைத்தோரை நேர்வழியின் பால் கொண்டு செல்ல முடியாது.
 
''அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்''.  (அல்குர்ஆன் 2:272)
 
கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவருக்காவது மார்க்கப் பற்று இல்லாமல் இருப்பது குடும்ப வாழ்வில் பெரும் சிக்களை உண்டாக்கும். இருவரில் மார்க்கத்தில் உறுதியாக இருக்கக் கூடியவரின் கொள்கையில் கூட தளம்பல் ஏற்படலாம்.]
 
மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்
  ஷப்னா கலீல் – மாளிகாவத்தை 
 
 
 
கணவன் மனைவி அல்லாஹ் மனித இனத்தை ஆண் பெண் என ஜோடியாக படைத்ததே அவர்கள் இரு சாராரும் இன்பமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கே ஆகும்.
அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர். (அல்குர்ஆன் 7: 189)
 
கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டு திருமண உறவு தலாக்கில் முறிந்து போகக் கூடிய சவால்களை இன்று அநேகமான முஸ்லிம் குடும்பங்கள் எதிர் கொண்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப் பற்று இன்மை தான்.
 
வண்டி ஓட இரண்டு சக்கரங்களும் சீராக இருக்க வேண்டும் என்பதைப் போல வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் கணவன் மனைவி என்ற இருவரிடத்திலும் மார்க்கப் பற்று இருக்க வேண்டும் இல்லா விட்டால் வாழ்கை என்ற வாகனம் சீராக பயணிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இன்று ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் முடிக்கும் போது தாம் தேர்ந்தெடுக்கும் துணையிடத்தில் மார்க்கப் பற்றை தேர்ந்தெடுப்பது இரண்டாம் பட்சமாகவே உள்ளது. மார்க்கம் இல்லாத துணையை தேர்ந்தெடுத்து அவர்களை மனமுடிப்பதற்காக இவ்வாறும் நியாயம் கற்பிக்கின்றார்கள். அதாவது இன்னார் மார்க்க சிந்தனை அற்றவர் தான் ஆனால் நான் திருமணம் செய்து அவரை மார்க்கத்தின் பக்கம் கொண்டு வருவேன் என்று வியாக்கியானம் சொல்கின்றார்கள்.
இப்படி சொல்வதற்கு இலகுவாக இருப்பினும் நாம் நினைத்தோரை நேர்வழியின் பால் கொண்டு செல்ல முடியாது.
அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்.  (அல்குர்ஆன் 2:272)
 
கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவருக்காவது மார்க்கப் பற்று இல்லாமல் இருப்பது குடும்ப வாழ்வில் பெரும் சிக்களை உண்டாக்கும். இருவரில் மார்க்கத்தில் உறுதியாக இருக்கக் கூடியவரின் கொள்கையில் கூட தளம்பல் ஏற்படலாம்.
எனவே கொள்கை பிடிப்புள்ளோரை திருமணம் செய்தாலேயே இருவரின் ஈமானும் பாதுகாக்கப்பட்டு சுவனத்தை அடைய ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் வாழ்வார்கள்.
 
நபிமார்கள், ஸஹாபாக்களின் வாழ்வில் கணவன் மனைவி இருவரும் மார்க்கத்தின் பால் ஒருவருக்கு ஒருவர் எந்தளவுக்கு ஒத்துழைப்பாகவும், ஈடுபாடுடனும் வாழ்ந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் தெளிவாக நாம் காணக் கிடைக்கின்றது.
தியாகத்திற்கு பெயர் போன இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் தம்பதியினர் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
 
இப்றாஹீம் நபியை அல்லாஹ் உற்ற தோழனாக தேர்ந்தெடுக்க காரணம் அல்லாஹ் சோதித்த அனைத்து சோதனைகளையும் பொறுமையாகவும், தியாகத்துடனும் எதிர்கொண்டார்கள். அப்படிப்பட்ட இப்றாஹீம் நபியின் தியாக வாழ்வை இஸ்லாமிய வரலாறாக மாற்றிய பெருமை அண்ணை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சாறும்.
 
....பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்து விட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை.
அங்கு தண்ணீர் கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம் பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீளின் அன்னை ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின் தொடர்ந்து வந்து, இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத் தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டார்கள்.
 
இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அல்லாஹ் தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா? என்று கேட்க, அவர்கள், ஆம் என்று சொன்னார்கள்.
 
அதற்கு ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான் என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்:  ”எங்கள் இறைவா! (உன் ஆணைப் படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்கற்ன் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர் களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர் களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள். (அல் குர்ஆன் 14:37) – ஹதீஸின் சுருக்கம்.  (நூல் : புகாரி 3364)
 
யாரும் அற்ற பாலை வனத்தில் அல்லாஹ்வுக்காக தன் மனைவியையும், குழந்தையையும் தியாகத்துடன் விட்டுச் சென்கின்றார;கள் இப்றாஹீம் நபியவர;கள். அண்ணை ஹாஜர; அவர;களும் இறைவனுக்காக தம் கணவனையே பிரிவதற்கும், மகனுடன் மாத்திரம் தனித்திருப்பதற்கும் யாரும் அற்ற பாலை வனத்தில் முன் வருகின்றார். ஹாஜர் அவர்களின் இடத்தில் தற்காலத்தில் வாழும் எந்தவொரு பெண் இருந்தாலும் இத்தகைய தியாகத்தை செய்ய முன்வந்திருக்க மாட்டார். அதனால் தான் ஹஜ், உம்ரா கிரிகைகள் இன்று வரை இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம், ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் குடும்ப வாழ்வை பிரதிபளிக்கின்றது.
 
அது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஒருவரான அண்ணை ஜுவைரிய்யா அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.
 
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார்) ஜுவைரியா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்  என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், நான் உன்னிடமிருந்து சென்றது முதல்  இதே நிலையில்தான் நீ  இருந்துகொண்டிருக்கிறாயா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்) என்றார்கள். (பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.) (நூல் : முஸ்லிம் 5272)
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவதற்காக பள்ளிவாயலுக்கு சென்ற அதே வேலை, நபியின் மனைவியான ஜுவைரிய்யா அவர;களும் தனக்கு விதியாக்கப்பட்ட தொழுகையை தொழுது நபியவர்கள் வரும் வரை தொழுத இடத்தை விட்டும் நீங்காமல் இறை தியானத்தில் ஈடுபட்டுள்ளார;கள். நபியவர்கள் வீட்டிற்கு வந்ததும் தம் மனைவிக்கு நன்மையில் சிறந்ததை அதிகாலைப் பொழுதிலேயே கற்றும் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் இன்றைய கால கணவன் மனைவியை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஐந்து வேலை தொழுகையை (சுப்ஹை விட்டு) நான்கு நேர தொழுகையாக்கியிருப்பார்கள். அல்லது சுப்ஹு தொழுகையை சூரிய உதயத்திற்குப் பின் அமைத்திருப்பார்கள். அந்தளவுக்கு தொழுகையின் விடயத்தில் அதிகமான குடும்பத்தினர்கள் மிகவும் பொடுபோக்காகவே இருக்கின்றார்கள்.
 
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
 
உஹுதுப் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (த் தனியே) விட்டு விட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
 
மேலும், அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்துவிடுவார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல் வார்கள். அந்த நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி)  மக்களை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.
 
அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணி விடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றி விட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ  மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. (நூல் : புகாரி 3811)
 
யுத்த களத்தில் கணவர் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பில் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றார்கள். இதே நேரத்தில் மனைவி உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அண்ணை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இணைந்து யுத்தத்தில் காயமுற்றோருக்கு உதவி, ஒத்தாசைகளை செய்கின்றார்கள்.
 
மார்க்கத்தின் தெளிவும், பற்றும், தியாகமும் இவர;களை மிகைத்திருந்த காரணத்தினால் தான் கணவன் மனைவி இருவருமாக யுத்த களத்தில் தமது பங்களிப்பை செய்தார்கள்.
 
இன்று மார்க்கப் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளும் கணவர;களை ஏதோவொரு காரணத்திற்காக அவைகளில் கலந்து கொள்ள வேண்டாம் என தடுக்கும் பெண்களுக்கு உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
 
ஆக்கம் : ஷப்னா கலீல் – மாளிகாவத்தை.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )