அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்பு
பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள்
புறப்பட மாட்டார்கள்.
மற்றோர்
அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படையில் உண்பார்கள்
என்று கூறப்பட்டுள்ளது
புகாரி
: 953
அபு சயீத் (ரலி) அவர்கள்
கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு
பெருநாளிலும் ஹஜ்ஜு பெருநாளிலும் (பள்ளியில்
தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையே
துவக்குவார்கள். தொழுது முடிந்து எழுந்து
மக்களை முன்னோக்குவர்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசையில் அப்படியே
அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்கு போதனை செய்வார்கள். (வலியுறுத்த
வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளை இட வேண்டியதை)
கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு
படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள்.
எதை பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். ..................
புகாரி
: 956
நபி (ஸல்) அவர்கள் நோன்பு
பெருநாள் மற்றும் ஹஜ்ஜு பெருநாள்
தொழுகைகளை தொழுதுவிட்டு பிறகு உரை நிகழ்த்துவார்கள்.
புகாரி
: 957
ஜாபிர்
(ரலி) இப்னு அப்பாஸ் (ரலி)
அவர்கள் ஆகியோர் கூறினார்கள்.
நோன்பு
பெருநாளிலும் ஹஜ்ஜு பெருநாளிலும் பாங்கு
சொல்லப்பட்டதில்லை.
புகாரி
: 960
நபி (ஸல்) அவர்கள் நோன்பு
பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு
பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். அவர்களுடன் பிலால்(ரலி) அவர்கள்
இருந்தார்கள். தர்மம் செய்வதன் அவசியம்
குறித்து அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள்
விளக்கினார்கள்.பெண்கள் (தங்கள் பொருட்களை ) போடலானார்கள்.
சில பெண்கள் தங்கள் கழுத்து
மாலைகளையும் வளையல்களையும் போடலானார்கள்.
புகாரி
: 964
நபி(ஸல்) அவர்கள் கன்னி
பெண்களையும் மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு புறப்படச்
செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடயுள்ள
பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள்.
புகாரி:
974
பெருநாள்
தொழுகை இரண்டு ரகத்கள் தொழ
வேண்டு. தக்பீர் தஹ்ரீமாவிற்கு பின்னர்,
முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ...அல்லது
வஜ்ஜஹது வஜ்ஹிய லில்லதீ...என்ற
துவாவை ஓதி விட்டு அல்லாஹ்
அக்பர் என்று இமாம் ஏழு
தடவை கூற வேண்டும்.
பின்பற்றி
தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றி
கூற வேண்டும்.
பின்னர்
சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை
ஓதி ருகூ சஜ்தா மற்றும்
மற்ற தொழுகையில் செய்யும் அனைத்து காரியங்களையும் செய்ய
வேண்டும்.
பின்னர்
அல்லாஹ் அக்பர் என்று கூறி
இரண்டாம் ரக் அத்திர்க்கு எழுந்தவுடன்
சூரத்துல் பாதிஹா ஓதுவதற்கு முன்னர்
இமாம் ஐந்து தடவை அல்லாஹ்
அக்பர் என்று கூற வேண்டும்.
பின்பற்றி தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை கூற
வேண்டும்.
பின்னர்
சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை
ஓதி ருகூ சஜ்தா மற்றும்
மற்ற தொழுகையில் செய்யும் அனைத்து காரியங்களையும் செய்ய
வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும்போது
தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த
துவவையும் நபி(ஸல்) அவர்கள்
கற்றுத்தரவில்லை. எனவே கூடுதல் தக்பீர்களுக்கிடையில்
எந்த துவவையும் ஓத கூடாது.
நபி(ஸல்) அவர்கள் முதல்
ரக் அத்தில் ஏழு தக்பீர்களும்,
இரண்டாம் ரக் அத்தில் ஐந்து
தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராத்திர்க்கு முன்பு
கூறுவார்கள்.
நூல்கள்:
அபுடவூத் 971, தாரகுத்னி பாகம் 2 பக்: 48, பைகஹீ
5968
பெருநாள்
வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள்
(போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றி கொள்வார்கள்......
புகாரி
: 986
0 comments:
Post a Comment