{ஸைமா. – 753)அன்னை ஜுவைரிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வில் கிடைக்கும் இந்தப் படிப்பினையை நமது பெண்களும் கடைப்பிடிக்குமிடத்து அதில் அதிக நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
மார்க்கமுள்ள பெண்ணே தனது கணவனின் வெற்றிக்கு காரணமாக இருப்பாள். இதை நபியவர்களின் ஹதீஸில் இருந்து நாம் அறிய முடியும்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவேஇ மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (புகாரி –5090)
மேற்கண்ட நபி மொழியில் திருமணம் முடிக்கத் தகுதியான பெண்ணைப் பற்றி நபியவர்கள் குறிப்பிடும் போது மார்க்கம் உள்ள பெண்ணை மணமுடிக்கும் படி ஏவுகின்றார்கள். காரணம் மார்க்கத்துடன் வாழும் ஒரு பெண்மணிதான் சுவர்க்க வாழ்வை நேசித்து அதற்காக தனது வாழ்வை அமைத்துக் கொள்வாள். அப்படிப் பட்ட பெண்களாக நாமும் வாழ்வதுடன், நமது பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். அவள் தான் ஆணின் உண்மை வெற்றிக்கு காரணமாக அமைய முடியும். ஆதலால் இஸ்லாத்தை தெளிவாகவும் பிடிப்பாகவும் பின்பற்றும் மக்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கிஅ ருள் புரிவானாக!
ஆக்கம் : ஷப்னா கலீல்.
0 comments:
Post a Comment