Feb 19, 2013

நரகத்திற்கு முன்பதிவு!


''எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.'' (ஸூரத்துல் முல்க் - 1,2)
ஆனால், இறைவன் மனிதனைக் கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை சோதித்தாலோ அவன்,"என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.(ஸூரத்துல் ஃபஜ்ரி15,16)
இவ்வுலகில் தோன்றிய அனைத்து மனிதனும் சோதனைக்குட் படுத்தப்பட்டே தீருவான் இதில் யாரும் விதிவிலக்கில்லை. வேதனைஎன்னவென்றால் அனைவருக்குமே சோதனை வரும் என்பதை நன்கு அறிந்துள்ள மனிதம்,தானும் அதில் அடங்கியவன் என்பதை உணர மறுப்பதுதான்.
பிறருக்கு ஒரு பிரச்சனையெனில் அல்லாஹ் கைவிடமாட்டன் என ஆறுதல்கூறும் மனிதன், அதேபோல சோதனை தனக்கு வரும்போது கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றான். இதில் நம் தாய்மார்களில் பலரின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியது. அதுபற்றிய ஒரு சிறு தொகுப்பை காண்போம்.

சொர்க்கம்! முஸ்லிம்களுக்கு மட்டுமா?



கேள்விக்குறியுடன் முடிந்த இவ்வாக்கியத்தை பார்த்ததும், சிலர் முகத்தில் ஆச்சரியக்குறி! பலர் முகத்தில் கோபத்தின் அறிகுறி!
ஆனால் உண்மையில் -கேள்விக்குறியுடன் முடிந்த அவ்வாக்கியமே உண்மை.
பார்த்தீர்களா... உலகத்தை படைத்து அனைத்து மக்களையும் இரட்சிக்கும் கடவுள் இப்படி பாரபட்சமாக நீதி செலுத்தலாமா.?-என போர்க்கொடி தூக்கும் சக மனித நல விரும்பிகள் அதற்கு முன்பாக இஸ்லாம் ஏன் அவ்வாறு கூறுகிறது என்பதை அறிய நடுநிலை சிந்தனையை மேற்கொள்ளவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.
இந்நிலையில் யாராக இருந்தாலும் ஒரு விசயத்தில் உடன் பட வேண்டும். ஒன்று, இஸ்லாத்தின் அடிப்படையில் இக்கோட்பாட்டை விளங்குவதற்கு முன் வர வேண்டும், அவ்விளக்கங்களில் உடன்பாடு இல்லையென்றால் குறைந்தபட்சம் சமுக நிலை ஒப்பிட்டு அடிப்படையிலாவது அதை ஏற்க முன் வர வேண்டும்.
முதலில் சமுக நிலை ஒப்பிடு - புரிதலுக்காக...
ஒரு தேர்ந்த பள்ளியில் மாணவர்கள் சேர்வதாக இருந்தால் முதலில் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்பட்ட பிறகே அப்பள்ளியில் சேர்க்கப்படுவர்.மாறாக சமுக அந்தஸ்து பெற்றவராக இருப்பினும், பொருள் வளம் நிரம்ப பெற்றவராக இருப்பினும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்டவராக இருந்தாலும்-மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக அப்பள்ளியில் அவரது சேர்க்கை இருக்காது.
வேண்டுமானால் அச்சேர்க்கைக்கான கூடுதல் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் மேற்குறிப்பிட்ட பண்புகள் பெற்றிருப்பினும் அப்பள்ளியின் சட்டத்திட்டங்களுக்கு உடன்படவில்லையென்றால் அப்பள்ளியில் சேர்க்கவே படமாட்டார் ஏனெனில் அப்பள்ளியின் செயல் திட்டங்கள் யாவருக்கும் பொதுவாக முன்னரே வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்த ஒரு மாணவனும், ஒன்று அப்பள்ளியின் வரையறைக்கு உட்பட்டு அதில் சேரலாம் அல்லது தன் சுய விருப்பத்தின் பேரில் அப்பள்ளியில் சேராமலும் இருக்கலாம்.சேர்ந்த மாணவர்களை மட்டுமே அப்பள்ளியின் நிர்வாகம் கட்டுப்படுத்தும். அஃதில்லாத ஏனைய மக்களை அப்பள்ளி கட்டும் படுத்தாது தம் மாணவர்கள் என்றும் சொல்லாது,அப்படி ஒரு நிலையை அத்தகையோரும் எதிர்ப்பார்க்கவும் மாட்டார்கள்.
மேலும் கல்விப்பயிலும் தம் மாணவர்களை மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கும்.அதன் விளைவால் அவர் பெற்ற வெற்றிக்காக அவருக்கும் பாராட்டும்,வெகுமதியும் அப்பள்ளி வழங்கும். மாறாக அப்பள்ளியின் சட்டடத்திட்டங்களை பேணாத, படிக்கவும் செய்யாத ஏனையோர் பாராட்டையோ, வெகுமதியையோ எதிர்ப்பார்க்கவும் கூடாது, எதிர்ப்பார்ப்பதில் எத்தகையே நியாயமும் கிடையாது (இங்கு ஒரு +)எனினும் அப்பள்ளியின் அடிப்படை சட்டத்திட்டங்களை உணர்ந்து கல்வி பயில விரும்பும் எவராக இருப்பினும் அவரின் செயல் திறன் அடிப்படையில் அவருக்கு வெகுமதியோ பாராட்டோ வழங்கப்படும். (இங்கு ஒரு -)
இந்த சம கால நிகழ்வு உதாரணத்தை ஒப்பிடாக கொண்டு (அளவு கோலாக அல்ல)மேற்காணும் தலைப்பின் கீழ் செல்லுங்கள்.,

இறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!


ஒழுக்கக் கேடு, அநீதி, துயரம், தோல்வி மனப்பான்மை, தொந்தரவு, தனிமை, பயம், பதற்றம், ஏமாற்றம், அவநம்பிக்கை, பழியஞ்சாமை, கவலை, கடுங்கோபம், பொறாமை, மனக்கசப்பு, போதை மருந்துக்கு அடியாமையாதல், விபச்சாரம், சூதாட்டம், பசி, வறுமை, மரணம் பற்றிய பயம், ஆகிய அனைத்தையும் பற்றிய செய்திளை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோம்; தொலைக் காட்சிகளிலும் கேட்கின்றோம்.
பிரபலமான பத்திரிகைகள் இந்தச் செய்திகளுக்கு முழுப்பக்கங்களை ஒதுக்குகின்றன; இவை மனோதத்துவ ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் விளைவிக்கும் பாதிப்புகளைப் பற்றி சில பத்திரிக்கைகள் இடையறாது எழுதி வருகின்றன. ஆனாலும் மேலே கூறியவைப் பற்றி நாம் இந்த ஊடகங்கள் மூலம் மட்டும் அறிந்து கொள்கிறோம் என்று சொல்ல முடியாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகையப் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்; அவற்றை நாம் வாழ்க்கையில் அடிக்கடி அனுபவிக்கிறோம்.
நீண்ட நெடுங்காலமாக உலகெங்கும் பரவி நிலவும் ஒழுங்கீனம், கொடுமை போன்ற பல்வேறு துயரங்களிலிருந்து விடுபடத் தனி மனிதர்களும், சமுதாயங்களும் முயன்று வருகிறார்கள். பண்டைய கிரேக்க நாடு, மகா ரோமப் பேரரசு, ட்ஸார் மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட கதியையும், இரண்டு உலகப் போர்கள் நிகழ்ந்ததும் உலகளாவிய அளவில் சமுதாயச் சீர்கேடுகள் பரவலாக நிலவி வந்ததும், ஆகிய "விழிப்புணர்வு அடைந்த யுகம்" என புகழப்பட்ட இருபதாம் நூற்றாண்டை எண்ணிப்பார்த்தாலே எல்லாம் விளங்கும். வேறு எந்த நூற்றாண்டின் சரித்திரத்தை ஆய்ந்தாலும் அல்லது உலகிலுள்ள எந்த நாட்டின் கடந்த காலச் சரித்திரத்தை நோக்கினாலும் சரி உங்கள் மனக்கண் முன் தோன்றும் காட்சிகளில் எந்த வேறுபாட்டையும் காணவியலாது.
நிலமை இவ்வாறு இருக்கும்போது, இந்தப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேடுவதில் மக்கள் வெற்றிபெறாதது ஏன்? சமுதாயத்தில் நிலவும் இத்தகையச் சீர்கேடுகளை நீக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாதது ஏன்?
இத்தகையத் துயரங்களையும் பிரச்சனைகளையும் மக்கள் எல்லாக் காலங்களிலும் அனுபவித்தே வந்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து விடுபட மக்கள் முயன்ற ஒவ்வொரு தடவையும் அவர்கள் தோல்வியே அடைந்தனர் ஏன்? அவர்களுடைய அணுகு முறைகள் எல்லாம் பொருத்தமற்றவை என்பதுதான் காரணம். பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டனர்; வெவ்வேறு அரசியல் வியூகங்களைக் கையாண்டனர்; நடைமுறைக்கு ஒவ்வாத எதேச்சாதிகார நியதிகளையும் சட்டங்களையும் புகுத்தினர்; புரட்சிகள் செய்தனர்; விகற்பமான கருத்துக்களை பரப்பினர். வேறு பலர் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் சமுதாயத்தோடு ஒத்து வாழ்ந்து வந்தனர்.
நாம் வாழும் இன்றைய கால கட்டத்தில் மக்கள் இந்த வாழ்க்கை முறையை எவ்வித ஆதங்கமுமின்றி ஏற்று நடந்து உணர்ச்சியற்றவர்களாகவே ஆகிவிட்டார்கள். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் "வாழ்க்கையின் யதார்த்தங்கள்" என எண்ணி மறுப்பும் தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டார்கள். இத்தகையப் பிரச்சினைகளிளிருந்து விடுபட்ட ஒரு சமுதாயம் அமைவது சாத்தியமே அல்ல; கனவு உலகில் அல்லது கற்பனை உலகில்தான் அது சாத்தியம் ஆகும் என்பது அவர்களின் வாதம். பிரச்சினைகள் மிகுந்த வாழ்க்கையை வெறுப்பதாக வெளிப்படையாக அவர்கள் கூறாமலில்லை என்றாலும், அந்த வாழ்க்கையையே தழுவிக் கொண்டார்கள்; வேறு வழியே இல்லை என்று சப்பைக் கட்டும் கட்டுகிறார்கள்.
'உண்மையான மார்க்கம்' வலியுறுத்தும் கோட்பாடுகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகள் நீங்கும். உண்மையான மார்க்கப் பண்பாடுகளை மக்கள் பேணும்போது துயரமும் துன்பமும் நிறைந்த பாதிப்பு மிக்க சூழ்நிலை மாறி அமைதி நிலவும்; மகிழ்ச்சிப் பெருகும். இறைவன் வகுத்தளித்த நெறிமுறைகள் மீறப்படும் காலம் வரை இந்த அவல நிலை நீடிக்கத்தான் செய்யும். குர்ஆன் வலியுறுத்தும் பண்பாடுகளை மக்கள் உதாசீனம் செய்யும் காலமெல்லாம் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபடவே முடியாது. இறை நிராகரிப்பு – இறைவன் வகுத்தளித்த மார்க்கத்தை உதாசீனம் செய்வது – உருவாக்கும் பயங்கர விளைவுதான் இது.

ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்!


இஸ்லாத்தை சாராதவர்களின் பார்வையில் இஸ்லாம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அப்படிபட்ட விமர்சகர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் 'இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்' என்பதே...
இந்த ஆயுதம் உண்மையில் கூரிய கத்தியா அல்லது அட்டை கத்தியா   என தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், இறைவனின் கட்டளைகள் இறங்கிக்கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையின் கீழ் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலையை பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். சில இடங்களில் இஸ்லாமிய ஆண்கள் எல்லாம் பாவம் என சொல்ல வைக்கும் :-) மேலும்  எந்த இடங்களில் தான் (?) பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்று புரியும்! அல்லது எவ்விதத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் இன்ஷா அல்லாஹ்!
இன்றைய காலகட்டத்தில் காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு தான் வீட்டிற்கு திரும்புகிறான். ஆனால் அவன் மனைவியோ காலை முதல் இரவு  தூங்க போறதுக்குமுன் பாத்திரம் கழுவுற வரைக்கும் மிஷின்னா செயல்படணும். இது தான் இன்றைய 99 சதவீத பெண்களின் நிலை. ( மிச்சம் 1 சதவீதம்  ஆளுங்க அதிஷ்ட்டக்காரங்களா இருப்பாங்க... கண்டுக்கவேண்டாம் விட்டுதள்ளுங்க :-)  பெண்ணினத்திற்காக எழுதப்படாத  இந்த 'மாடா உழைக்கணும்' விதியில்  இன பாகுபாடே கிடையாது! இஸ்லாமும் அதையே தான் சொல்கிறது என்கிறீர்களா? ம்ம் ஆமா.. ஆனா இல்ல :-)
கணவனுக்கு பொருளாதார பொறுப்பும், மனைவிக்கு குடும்ப பொறுப்பும் கொடுத்து, ஆனால் சின்னதா மாற்றம்... நாம்  இன்று ஆண்-பெண் சமம் என்று சொல்லக்கூடிய வீட்டுவேலைகளில் ஆண்களும்  பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற சமத்துவ விதி அக்காலத்திய பெண்களுக்கும் கிடைத்திருந்தது. தன் தூதனின் வழியாக கணவன் மனைவியிடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென படைத்தவன் எடுத்துக்காட்ட வைத்தான்!
சமுதாயத்தை மாற்றி அமைக்கும் பொறுப்பு, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய பொறுப்பு, மனைவி மக்களுக்கு பொருளாதார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டி தொழில் செய்வது, இது போக அவ்வபோது போர் செய்ய வேண்டிய சூழலில் இருக்க கூடிய நபியோ, வீட்டிற்கு வந்தால் ஹாயாக சோபாவில் அமர்ந்து தங்கதட்டில் சாப்பிட்டு, மனைவியை கால் பிடிக்க சொல்பவரா இருந்தாரா எனில்...... ம்ஹும்.... இல்லை!
தனக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் வீட்டில்  கிழிந்த தன் ஆடையை தைப்பதும் , அறுந்து போன தன் செருப்பை தைக்கிறதும், மனைவிக்கு வீட்டுவேலையில் மனைவிக்கு உதவியஅக  இருக்கிறதும் என இருந்ததுடன்  தன் தனிபட்ட வேலைகளையும் செய்பவராக இருந்திருந்தாங்க! (நான் ஒரு முஸ்லீம் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஆண்களும்  சுயபரிசோதனை செய்துக்க வேண்டிய இடம்  இது:-) ஒரு சாம்ராஜ்யத்தை ஆளும், மக்கள் போற்றும் மனிதர், மனைவியை நடத்திய விதம் பாத்தீங்களா?

சூனியம் - ஒரு பார்வை!!


விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள இன்றைய காலத்திலும் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. மக்கள் சிந்திக்கத் தவறியதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒவ்வொருவரும் தம்மைத்தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் 'சூனியம்' என்பதும். ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டால் போதும், அந்த சூனியத்தின் மூலமாக அவனைக் கொல்லவோ, கை கால்களை முடக்கவோ, தீராத நோய்களை உண்டாக்கவோ முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். இன்னும் சூனியத்தால் பல அற்புதங்கள் செய்ய முடியும் என்றும் நம்புகின்றனர்.
இவர்கள் நம்புவது போன்று சூனியத்தால் எதையும் செய்ய முடியும் என்றிருப்பின், தமக்குப் பிடிக்காத ஒரு சாரார் மற்றொரு சாராரை சூனியம் செய்து கொன்று விடலாமல்லவா? ஏன் கத்தி களையும், தடிகளையும் பெரும் ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு கலவரம் செய்து கச்சேரி செல்ல வேண்டும்? சரி, குறைந்த பட்சம் சூனியம் செய்பவர்கள் அவர்களின் தொழிலிற்கு இடைறாக இருப்போரையாவது கொன்று சூனியத்தின் சக்தியை நிரூபிக்கலா மல்லவா? பலர் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அது ஏன்? எப்படி? என்று நமக்குச் சந்தேகம் எழுவது எதார்த்தமானதே.! இதை நாம் நன்றாக அறிந்து கொண்டால் இவ்வாறு ஏற்படும் சந்தேகங்களைத் தவிர்க்கலாம். சூனியம் என்பது மனதைக் குழப்பும் ஒரு கலை, இந்த கலையைச் செய்வதால் அவர்கள் மனக்குழப்பத்திற்கு உள்ளாகி சூனியத்தின் பெயரால் ஒவ்வொருவரும் தமக்குத்தாமே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்களே தவிர, உண்மையில் எவ்விதப் பாதிப்பையும் சூனியம் ஏற்படுத்துவதில்லை.
ஒரு மனிதன் நன்றாகவே இருப்பான். அவனுக்கு எந்தக் குறையும் இருக்காது. அவனிடம் எவனாவது உனக்கு இன்ன ஆள் சூனியம் செய்து விட்டான் என்று மட்டும் கூறிவிட்டால் போதும், அவன் தன் மனதில் பல கற்பனைகளை வளர்த்து குழப்பமடைந்து தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று எண்ணும் காரணத்தால் இவனாகவே பல பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறான். உண்மையை அறிய வேண்டுமானால் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் ஒருவனைச், சோதிப்பதற்காக உனக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது என்று சொல்லிப் பாருங்களேன்! அன்று முதலே அவன் அதிர்ச்சியில் அலைவதைக் காண்பீர்கள். சூனியம் மனிதனுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுத்தப் பொய். இதைத் தெளிவாக தெரிந்தும் கூட மார்க்க அறிஞர்கள் என்று பெருமையடித்துக் கொள்பவர்கள் தகடு, தாயத்து, முட்டையில் எழுதுதல், அஸ்மா வேலைகள் என்று மக்களை ஏமாற்றுகின்றனர். இறைவனுடைய பாதையைவிட்டும் மக்களை வழிதவறச் செய்கின்றனர். இந்த லெப்பைகள் தங்கள் தொப்பைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக மனித இனத்தை வழிகெடுப்பதைப் பார்க்கும் சிலர் இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு என்று எண்ணுகிறார்கள்.
அவர்கள் நன்கு தெரிந்து கொள்ளட்டும், இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்பது கடுகளவும் கிடையாது. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திற்குப் பின்பு ரூதர்கள் தங்கள் கைச்சரக்குகளை முஸ்லிம் மக்கள் மத்தியில் புகுத்தியதன் காரணமாகத்தான் முஸ்லிம்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் வளர்ந்தன. ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற்கு ஏற்பச் சட்டங்களை வளைத்துக் கொள்வது இஸ்லாமியச் சட்டமாகவோ கொள்கையாகவோ ஆகிவிடாது. இறைவனால் கொடுக்கப்பட்ட குர்ஆன் கூறுவதும்; அவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காண்பித்த வாழ்க்கை முறையும் தான் இஸ்லாம் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும். சூனியம் செய்து மூட நம்பிக்கைகளை உண்டாக்கி வழி கெடுப்பது அழிவை உண்டாக்கும் ஏழு பாவங்களில் ஒன்று என்று இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சூனியம் என்பது ஒரு கலை தானே, அதை ஏன் இஸ்லாம் தடைசெய்கிறது என்று நமக்குச் சந்தேகம் எழலாம். நன்மையான செயல்களை உண்டாக்கும் கலை என்றால் அதை இஸ்லாம் நிச்சயம் தடை செய்திருக்காது. ஆனால் சூனியக்கலை மக்களை இறை நிராகரிப்பிற்கு இழுத்துச் செல்வதாலும் மக்கள் ஏமாற்றப்படுவதா லும் இஸ்லாம் அதைத் தடை செய்கிறது. கண்களை ஏமாற்றுவதே சூனியம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எதிர்ப்பதற்காக பிர்அவ்ன் சூனியக் காரர்களை ஒன்று திரட்டினான். அவர்கள் செய்த சூனியம் எந்த அளவிற்கு இருந்தது என்பதை இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
(அவர்கள் எறிந்த) கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் தோன்றியது. (அல்குர்ஆன் 20.66) அந்த சூனியக்காரர்கள் எறிந்த கயிறுகளும், தடிகளும் பாம்புகளாக மாறவில்லை; பாம்புகள் போன்று தான் காட்சியளித்தன என்று இறைவன் தெளிவாகக் கூறுகின்றான். இந்த வசனத்தில் இறைவன்''யுகய்யலு'', என்ற வார்த்தையைப் பயன்படுத்தி யுள்ளான். இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பித்தல், மாயையை ஏற்படுத்துதல் என்பது இதன் பொருளாகும்.
சூனியம் (ஸிஹ்ர்) என்ற கலையின் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காண்பிக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அப்படியானால் அதைக் கொண்டு ஏதும் தீங்கு செய்ய முடியுமா என்ற ஐயம் வரலாம். சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான். (அல்குர்ஆன் 20.69) ''கணவன் மனைவி இடையே பிரிவினையை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.'' (அல்குர்ஆன் 2.102) என்னதான் சூனியம் செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது என்பது இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது. அப்படியே அது தீங்கு செய்தாலும் மனதில் குழப்பத்தை உண்டாக்கி, கணவன் மனைவிக் கிடையே பிரிவினையைத்தான் உண்டு பண்ண முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதையும் இந்த வசனத்தில் இறைவன் தெளிவாக்கி விட்டான்.
ஷைத்தான் மனிதனை வழிகெடுக்க ஏற்படுத்திய சசூழ்ச்சிகளில் ஒன்றுதான் சூனியம் என்ற உண்மையை விளங்கிக் கொண்டால் குழப்பம் ஏற்படாது. நீ என்னைக் கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால் (ஆதமின் சந்ததியினரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன். பின்பு நிச்சயமாக நான் அவர்கள் முன்பும், அவர்கள் பின்பும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (வழிகெடுப்பதற்கான அனைத்து முறைகளையும் கையாண்டு அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய் என்று (இப்லீஸ்) கூறினான். (அல்குர்ஆன் 7:16,17) உன் கண்ணியத்தின் மீது ஆணையாக, அவர்களில் அந்தரங்கச் சுத்தியான உன் அடியார்களைத் தவிர நிச்சயமாக அவர்கள் யாவரையும் நான் வழிகெடுப்பேன் என்றும் (இப்லீஸ்) கூறினான். (அதற்கு) அதுவே உண்மை; உண்மையையே நானும் கூறுகிறேன். நிச்சயமாக உன்னைக் கொண்டும், உன்னைப் பின்பற்றுவோர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன் என்று இறைவன் கூறினான். (அல்குர்ஆன் 38:82-85)
மனிதனை வழிகெடுத்து நரகத்தில் சேர்ப்பதற்கான வழிகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்தையும் ஷைத்தான் கையாண்டு வழிகெடுப்பான் என்பதும் அதற்கு இறைவனும் அவனுக்கு அனுமதி கொடுத்து விட்டான் என்பதும் மேற்காணும் வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது. இன்று ஷைத்தான் பல வழிகளிலும் மனிதனுடைய உள்ளத்தில் ஊடுருவி வழிகெடுத்துக் கொண்டிருக்கின்றான். அவற்றில் ஒன்று தான் சூனியம் என்பது. ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். (அல்குர்ஆன் 2:102) ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அந்த சூனியக்காரர்களுக்கு அவன் உதவி செய்யும் காரணத்தால்தான் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி கணவர் மனைவியிடையே பிரிவினையை உண்டாக்க முடிகிறது. மனதில் குழப்பத்தை உண்டாக்குவதில் ஷைத்தான் மிகத் தீவிரமானவன், திறமையானவன்! எனினும் (ஆதம் அலைஹிஸ்ஸலாம், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகிய) அவ்விருவருக்கும் மறைந்திருக்கும் அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையே ஆட்டிப் பார்த்த அவனுக்கு, பிற மனிதர்களை வழிகெடுப்பது ஒன்றும் கடினமல்ல. பிறருடைய உள்ளத்தில் ஊசலாட்டம் செய்வது, அவனுக்கு இலகுவான செயல்! அந்த அடிப்படையில் சூனியத்தின் மூலம் மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டத்தை உண்டு பண்ணி அவர்களைக் கோவில், தர்கா, போன்ற இடங்களுக்கோ அல்லது சூனியக்காரன் வசிக்கும் இடத்திற்கோ இழுத்துச் சென்று இறைமறுப்பாளர்களாக ஆக்கி தன் இலட்சியத்தில் வெற்றி காண்கிறான். இதை அறியாத மக்கள் அவனுடைய அச்சசூழ்ச்சிக்குள்ளாகி தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்கின்றனர். ஷைத்தானுடைய சூழ்ச்சி எப்படி இருப்பினும் உண்மையான இறை நல்லடியார்களிடம் அது செல்லாது என்பதையும் 38:33 வது வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
''சூனியம், ஷைத்தானின் சூழ்ச்சிகளில் ஒன்று'' நல்லடியார்களிடம் ஷைத்தானுடைய சூழ்ச்சி செல்லாது என்றால் இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏன் சூனியத்தால் பாதிப்பு ஏற்பட்டது என்ற ஐயம் இப்போது நமக்கு வந்திருக்கும். ஆம்! இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை தான். அதன் விளைவாக அவர்கள், தாம் செய்த வேலையைச் செய்யவில்லை என்றும், தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்றும் எண்ணிக்கொண்டு சிறிது காலம் மனத்தடுமாற்றத்தில் இருந்தார்கள். தாம் சூனியம் செய்யப்பட்டிருந்ததும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லாஹ் தான் வானவர்கள் மூலம் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு தீர்வையும் கூறினான் என்பதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸின் வாயிலாக அறிகின்றோம். இறைத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்கள், தாம் செய்யாத ஒரு செயலைச் செய்திருப்பதாக அவர்களுக்கு(குறுகிய காலத்தில்) மாயை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி)
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் செய்யாத செயலைச் செய்தது போன்று மாயை ஏற்படும் அளவிற்கு அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இறுதியில் ஒருநாள் அவர்கள் பிரார்த்தனை செய்த வாறு இருந்தார்கள். அதன் பிறகு : ''என்(மீது செய்யப்பட்டுள்ள சசூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ, அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு நபர் (இருவானவர்களான ஜிப்ரயிலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரயில்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என் கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் ''இந்த மனிதரை பீடித்துள்ள நோய் என்ன'' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்) ''இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர் ''இவருக்கு சசூனியம் செய்தது யார்?'' என்று கேட்டார் .அவர்(பதிலுக்கு) ''லபீத் இப்னு அஃஸம் (என்னும் ரூதன்)'' என்று பதிலளித்தார். ''(அவன் சூனியம் வைத்தது) எதில்?'' என்று அவர்(மீக்காயில்) கேட்க அதற்கு, ''சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண்(பேரிச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ''அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, ''(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்'' என்று பதிலளித்தார்கள் என்று, இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ''அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், ''அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே(சூனியக்கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது. (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சூனியம் வைத்ததும் அது நிகழ்ந்ததும் உண்மையென்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் அது ஏன் நிகழ்ந்தது என்பதைச் சிந்திக்கத் தவறி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே சூனியம் பாதித்துவிட்டது என்றால் அது நம்மை விட்டு வைக்குமா என்று மட்டும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இச்சம்பவத்தின் மூலம் இறைவன் நமக்கு ஏராளமான படிப்பினைகளைத் தந்துள்ளான். நாம் அவற்றைக் கவனிக்க வேண்டும். 1. சூனியம் என்பது மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்துவிடாது. 2. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மனிதர்தான். அவர்கள் இறைத்தன்மையைப் பெற்றவரோ, வானவர்களின் பண்புகளைப் பெற்றவரோ இல்லை. இறைத்தூதர் என்பதால் மனிதர்களில் உயர்ந்தவர் என்ற சிறப்புதான் அவர்களுக்கு உண்டு. 3. ஒருவன் மற்றொருவனுக்கு, சூனியம் செய்துவிட்டால், அதை சசூனியம் செய்யப்பட்டவன் அறிந்து கொள்ள முடியாது அல்லது மற்றொரு சூனியக்காரனிடம் சென்று கேட்டாலும் அவனும் அதை அறிந்திருக்க முடியாது. அப்படி யாரும் அறிந்து கொள்ள முடியும் என்றிருப்பின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் முதலில் அதை அறிந்திருக்க முடியும். அவர்களுக்கே அல்லாஹ்தான் தன் வானவர்கள் மூலமாக அறிவித்தான்.
ஒருவன் மற்றொருவனுக்கு சூனியம் செய்துவிட்டான் என்பதை சசூனியம் செய்தவனும் அல்லாஹ்வும் மட்டுமே அறிய முடியும். எனவேதான் சூனியம் செய்யப்பட்டிருப்போமோ என்று எவரும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. 4. அப்படியே தனக்கு சூனியம் செய்யப்பட்டதை ஒருவன் அறிந்து கொண்டாலும், அதற்கான தீர்வு உலகத்தில் எங்கும் கிடையாது. அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கிறது. எனவே அவனிடமே பாதுகாப்பு தேட வேண்டும். சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் ஆகிய அத்தியாயங்களை அருளி இறைவன் தன்னிடம் மட்டுமே ஒவ்வொரு தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுமாறு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்கள் சமுதாயத்தினருக்கும் கட்டளை யிட்டுள்ளான். இறைவன் காட்டித்தந்துள்ள, தீர்வை விட்டு விட்டு நாம் நமது விருப்பத்திற்கு இணங்கி கோவில், தர்கா போன்ற இடங்கள் சென்று தீர்வைத் தேடினாலோ மற்றொரு சூனியக்காரனிடம் சென்று தீர்வைக் கேட்டாலோ நிச்சயம் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என்பதில் ஏதும் ஐயமில்லை.
வானவர்கள்தான் மனிதர்கள் மத்தியில் சூனியத்தை பரப்பினார்கள் என்றும் ஒரு கதை கட்டி விடப்பட்டுள்ளது. வானவர்கள் ஒரு போதும் சூனியத்தைப் பரப்பவில்லை என்ற விஷயத்தை 2:102 வசனத்தின் விளக்கவுரைகளை நன்றாகக் கவனிக்கும் போது நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த அளவிற்கு பெரும் குழப்பத்தை உண்டாக்கி மக்களைக் கெடுக்கும் சூனியத்தை எவன் செய்கின்றானோ அவன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். இப்பெரும் பாவத்திலிருந்து இறைவன் மனித இனத்தைக் காப்பானாக!
நன்றி: நதியலை

Feb 11, 2013

காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?


காதலிக்கலாமா என்பது முதல் விஷயம். காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான் திரும்ணமே செய்ய வேண்டும்.


இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. வலிமையான ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்

 காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235

கணவனை இழந்த பெண்கள் மற்ற பெண்களை விட அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அலங்காரம் செய்யக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. கனவனை இழந்து இத்தாவில் இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக அவர்களிடம் ஆண்கள் வாக்களிக்கக் கூடாது; ஆனாலும் சாடைமாடையாக் பேசலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். இத்தாவில் இல்லாத மற்ற பெண்களிடம் ஆண்கள் பேசலாம் என்பதும் தந்து விருப்பத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கலாம் என்பது இந்த வசனத்தில் அடங்கியுள்ளது.

Feb 5, 2013

இஸ்லாத்தில் பெண்கள் நிலை



இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.


கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.



ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால் தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.



பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.


பெண் இனத்திற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்




"நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும் அன்றி, தங்கள் தேகத்தில் வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர. தங்கள் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும் தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்." (திருக்குர்ஆன் 24:31)

மேலே உள்ள இந்த கட்டளை ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு கொடுக்கக்கூடிய கண்ணியம் அல்ல, மாறாக பெண்ணினத்திற்கே அல்லாஹ் வழங்கிய கண்ணியம் ஆகும்.

ஏனென்றால் இறைவன் மனித இனத்தை படைத்து, அதிலும் பெண்ணினத்திற்கு மட்டும் ஹிஜாப் என்னும் ஆடை முறையையும் குறிப்பிட்டு சொல்வதனால் இதனை இறைவன் பெண்களுக்கு வழங்கிய கண்ணியம் என்றே பெண் சமுதாயம் எண்ண வேண்டும்.

ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?


[ ஆண்களுக்கு பெண்கள் மேலுள்ள அதிகாரத்தை காண்பிக்கும் வகையில் கத்தோலிக்க சந்நியாசிப்பெண்களால் அணியப்படும் தலைமறைவை 'புனித' அடையாளம் என மதிக்கப்படும் அதே வேளையில் பாதுகப்பிற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் அதே தலைமறைவை 'அடக்குமுறை'யின் அடையாளம் என கருதப்படுவது இன்றைய உலகில் உள்ள மிகப்பெரும் ஆச்சரியங்களில் ஒன்றானதேயாகும்.]
பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ளமுடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே! இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.
எனக்கு எழும் சந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

சுன்னாவும் சஹாபாக்களும்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள் "சஹாபாக்கள்'' எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னாவைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். இன்னும் உங் கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான் என்று (நபியே) கூறுவீராக. (3:31)
அல்லாஹ்வின் பாவமன்னிப்பும் அருளும் கிடைப்பதற்கு இறைத் தூதரை முழுமையாக நேசித்து தங்களது வாழ்க்கையின் செயற் பாடுகளுக்கு முன்மாதிரியாக கொண்டு செயலாற்றுவது இன்றி யமையாதது என்றும் நம்பினார்கள்.
உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவுவைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (33:21)
மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த சஹாபாக்கள் ஒவ்வொரு அசைவிலும் நபிகளாரின் அடிச்சுவடையே முன்மாதிரியாக கொண்டு பின்பற்றினர். வஹியைக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து காரியமாற்றினார்கள். இந்த உலகத்திலுள்ள எந்த மனிதனுடைய வார்த்தைகளையும் செயல்களையும் விரும்பினால் ஏற்கலாம் விரும்பினால் நிராகரிக்கலாம். ஆனால் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளையும் செயல்களையும் அவ்வாறு கணிக்க முடியாது என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார்கள். 

நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு




{ஸைமா. – 753)அன்னை ஜுவைரிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்வில் கிடைக்கும் இந்தப் படிப்பினையை நமது பெண்களும் கடைப்பிடிக்குமிடத்து அதில் அதிக நன்மைகளை இம்மையிலும், மறுமையிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
மார்க்கமுள்ள பெண்ணே தனது கணவனின் வெற்றிக்கு காரணமாக இருப்பாள். இதை நபியவர்களின் ஹதீஸில் இருந்து நாம் அறிய முடியும்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவேஇ மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (புகாரி –5090)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )