ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)
வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)
ஜும்ஆவும் அதானும்
ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இரு குத்பாக்கள்
நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள.; பின்னர் உட்கார்ந்து விட்டு மீண்டும் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம் )
நாயகத் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவு ஆற்றினார்கள். அவர்கள் (மிம்பர்; மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி;விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மயின்னத்துன் மின் ஃபிக்ஹிஹி) மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள்.
قال صلي الله عليه وسلم : ان في البيان لسحرا