Sep 1, 2014

நபிகளார் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்த இடங்கள்

எல்லா இடங்களில் பிரார்த்தனை செய்யலாம் என்றாலும் நபி (ஸல்) அவர்கள் சில இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த இடங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.
 
ஹஜ்ஜின்போது  மினா பள்ளிவாசலுக்கு
அருகில் உள்ள மூன்று ஜம்ராக்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு இரண்டா வது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப் பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறுகற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பின்பு அங்கிருந்து திரும்பிவிடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் :புகாரி (1753)
 
கஅபத்துல்லாஹ்வின் அனைத்து திசைகளும்
 
(மக்கா வெற்றிகொண்ட நாளில்) நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழா மலேயே அதிலிருந்து வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, "இது தான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி (398)
 
ஸஃபா மர்வா என்ற இரண்டு குன்றிற்கிடையில்...
 
...பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ் வத்' அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா' மலைக் குன்றை நோக் கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர் வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்'' எனும் (2:158ஆவது) வச னத்தை ஓதிக் காட்டிவிட்டு, "அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட் டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்'' என்று சொன் னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா' மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறை யில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழி யும் தக்பீரும் சொன்னார்கள்.

மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்த வன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். (அந்த) அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறை வேற்றித் தந்தான். தன் அடி யாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)'' என்றும் கூறினார்கள்.
 
பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள்.
 
பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத் தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
நூல் :முஸ்லிம் (2334)
 
மஷ்அருல் ஹராம் ...
 
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்து விட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப் பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. பிறகு "கஸ்வா' ஒட்ட கத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு ("குஸஹ்' மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல் லாஹ் மிகப் பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல் லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், "அவன் தனித்தவன்' என்று (ஓரிறை உறுதிமொ ழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும்வரை அங்கேயே தங்கியி ருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல் : முஸ்லிம் (2334)
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
 
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளில் செய்யும் துஆ வாகும். நானும் எனக்கு முன்னாலுள்ள நபிமார்களும் செய்த துஆக்களில் சிறந்தது "லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லகுல் முல்கு வலஹுல் ஹம்து வகுவ அலா குல்லி ஷையின் கதீர்' (வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் வைத்தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்து பொருள்கள் மீதும் ஆற்றல் படைத்தவன்) என்ற துஆ வாகும்.     
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் :திர்மிதீ (3509)
 
இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அபீஹுமைத் என்பவர் பலவீனமானவராவார். இவரை அஹ்மத் பின் ஹன் பல், இமாம் புகாரி, யஹ்யா பின் மயீன், அபூதாவூத், அபூஸுர்ஆ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
 
இதே கருத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக லுஅஃபாவுல் உகைலீ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இதில் பர்ஜ் பின் புலாலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீ னமானவரே! இதைப் போன்று தப்ரானீ அவர்கள் அல்மனாஸிக் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதில் கைஸ் பின் ரபீவு என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே!
நூல் : தகல்கீஸுல் ஹபீர்
 
இதே செய்தி வேறு அறிவிப்பாளர் வரிசையில் முஅத்தாவில் இடம்பெற் றுள்ளது. இச்செய்தி முர்ஸல் வகைச் சார்ந்ததாகும். நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை நபித்தோழர்களே கேட்டிருக்க முடியும். ஆனால் இந்த செய்தியில் நபித்தோழர் விடுபட்டு ஒரு தாபியீ (நபித்தோழர் வாழ்ந்த காலத்தில் இருந்த வர்) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். எனவே இது தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். பொதுவாக எல்லா இடங்களிலும் துஆச் செய்யலாம் என்ற அடிப்படையில் அரஃபாவிலும் துஆச் செய்யலாம். முக்கி யத்துவம் கொடுத்து செய்வதற்குரிய செய்தியே பலவீனமானதாக இடம்பெற் றுள்ளது. 
 
முபராக் அலீ, மாணவர், தவ்ஹீத் கல்லூரி, சேலம்

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )