அடுத்ததாக விண்ணில் உள்ள வெஸ்டா (asteroid vesta) என்னும் குறுங்கோளில் இருந்து வந்து விழுந்த விண்கல் மாதிரியில், நீர் இருப்பதற்கான சான்றுகளை ஆராய்ந்தனர். இந்த குறுங்கோளானது பூமி தோன்றிய சம காலத்தில் உருவான ஒன்று. இரண்டு விண் கல்லிலும் ஒரே மாதிரியான நீர்மக்கூறுகள் உள்ள Carbonaceous chondrite இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக பூமி உருவாகும்போதே அதனுடன் தண்ணீரும் இருந்தது என்ற உண்மை அறியப்பட்டது. (“The planet formed as a wet planet with water on the surface.”)
A new study is helping to answer a longstanding question that has recently moved to the forefront of earth science: Did our planet make its own water through geologic processes, or did water come to us via icy comets from the far reaches of the solar system?
Artist’s concept showing the time sequence of water ice, starting in the sun’s parent molecular cloud, traveling through the stages of star formation, and eventually being incorporated into the planetary system itself.
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நமது பூமி மட்டுமே ஆழிசூழ் உலகாக அழகுடன் விளங்குகிறது. மூன்று பங்கு நீரும் ஒரு பங்கு நிலமும் உள்ளது. நிலத்தில் வாழும் கோடானுகோடி உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாரமான ஜீவநீர் ஆதியில் எப்படி வந்தது எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் பல்வேறு பதில்களை கூறி வந்தது.
The answer is likely “both,” according to researchers at The Ohio State University — and the same amount of water that currently fills the Pacific Ocean could be buried deep inside the planet right now.
www.sciencedaily.com. 18,December 2014
இந்து வேதங்களில் கூறப்படும் கடவுளான திருமால் வாசம் செய்யும் இடம் நமது பூலோகமல்ல. வானத்தில் அதாவது விண்வெளியில் உள்ள வைகுண்டம். அங்கு பெரும் வெள்ளப் பரப்பான பாற்கடலில் பள்ளிகொள்கிறார். இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்) பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். பாற்கடல் என்னும் பெருவெள்ளக் கடல் பரப்பு பூமி உருவாவதற்கு முன்பே விண்வெளியில் படைக்கப்பட்டுவிட்டது.
யஜுர் வேதத்தை சார்ந்த தைத்ரிய ஆரண்யகம் ( 1:22) இந்த மந்திர புஷ்பத்தில் கூறுவதாவது,
கிரேக்க புராணங்களின் கூற்றுப்படி முதலில் எங்கும் வெட்டவெளி, அதைச்சுற்றி பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தவள் ஓசியானிஸ் (Oceanus) கடல் தேவதை. அவளுக்கும் வடக்கு காற்றுக்கும் காதல் வந்து இணைந்தார்கள். அவர்களுக்கு ஈரினோம் (Eurynome) என்ற பெண் குழந்தை பிறந்தது. இவள் காதல் கடவுள். தன் மகள் ஓடி விளையாட ஓசியானிஸ் கடலில் அலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அந்த அலைகளோடு விளையாடினால், அந்த ஆட்டத்தில் பிறந்தன விண்ணுலகம் மண்ணுலகம் வானம் கடல் மிருகம் பறவை….
பைபிளின் ஆரம்ப வசனங்களும் இக்கருத்தையே கூறுகின்றன.
நாலரை கோடி பில்லியன் ஆண்டுகளுக்குமுன்பு பூமி, எரிமலைகளால் சூழப்பட்ட நெருப்பு கோளமாக இருந்தது. இதிலிருந்து வெளியான நீராவியும், வாயுக்களும்தான் வளிமண்டலத்தில் நிறைந்திருந்தது. பின்பு பூமி குளிர்ந்தபோது வளி மண்டல நீராவியும் குளிர்விக்கப்பட்டு மழையாக பொழிந்தது. பூமியின் தாழ்வான இடங்கள் நிரப்பப்பட்டு ஏரிகளும் கடல்களும் உருவாயின.
அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட்ட விளக்கமாக இவ்வாறு கூறப்பட்டது. கடும் வெப்பமான பூமியின் மீது விண்வெளியில் நிறைந்துள்ள ஆஸ்ட்ராயிடு எனும் நீர் நிறைந்த விண் கற்களும் பனிப்பந்து வால் நட்சத்திரங்களும் தொடர்ந்து மோதி பெரும் வெள்ளத்தை பூமிக்கு கொண்டு வந்து கடல் உருவானதாக கூறப்பட்டது. இதன் பின்னரே ஒரு செல் உயிரினங்கள் தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து தாவர, மிருக, மனிதனாக மாறியதாக கூறுகிறார்கள்.
இன்றைய நவீன அறிவியல் ஆய்வாளர்களிடம், பூமியில் முன்பே நீர் இருந்ததா அல்லது வால் நட்சத்திர பனிப்பந்துகள் மூலமாக விண்வெளியில் இருந்து இறங்கியதா? என்ற கேள்விக்கு இரண்டுமே காரணம் என்று கூறுகிறார்கள். இது மற்றுமன்றி பூமியின் 500 மைல் ஆழத்தில் பசுபிக் பெரும் கடலுக்குச் சமமான நீர் பாறைகளுக்கு அடியில் உள்ளதாக கூறுகின்றனர்.
www.sciencedaily.com. 18,December 2014
அனைத்து வேதங்களும் நீர், முதன் முதலில் உருவானது, சூரிய மண்டலம் மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே என்று கூறி வருவது அறிவியல் அறிஞர்களால் அலட்சியப்படுத்தப்பட்டது. காரணம் அறிவியலும் மதமும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது என்ற கருத்து மேலை நாட்டு அறிவு ஜீவிகளால் ஆழமாக பதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்று வேதங்கள் கூறும் விண்வெளி நீர், சூரிய நட்சத்திர மண்டலங்கள் உருவாவதற்கு முன்பே, ஆதார ஜீவ நீராக விண்வெளியில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதன் விளக்கத்தை இறுதியில் பார்ப்போம்.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள்
இந்து வேதங்களில் கூறப்படும் கடவுளான திருமால் வாசம் செய்யும் இடம் நமது பூலோகமல்ல. வானத்தில் அதாவது விண்வெளியில் உள்ள வைகுண்டம். அங்கு பெரும் வெள்ளப் பரப்பான பாற்கடலில் பள்ளிகொள்கிறார். இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்) பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். பாற்கடல் என்னும் பெருவெள்ளக் கடல் பரப்பு பூமி உருவாவதற்கு முன்பே விண்வெளியில் படைக்கப்பட்டுவிட்டது.
அந்த பாற்க்கடல் என்னும் நீரில் இருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின என்பதை குறியீடாக காட்டுவதே பாற்கடல் கடைந்து படைப்புக்கள் வருவது.
ரம்பை,ஊர்வசி,மேனகை, திலோத்தமை, உட்பட அறுபதாயிரம் அரம்பையர்கள். உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை. ஐராவதம் எனும் வெள்ளை யானை, கற்பக மரம், பாரிஜாதம், சந்தனம், மந்தாரம் போன்ற ஐவகை மரங்கள், தன் வந்திரி, சூரிய,சந்திரன், மற்றும் பல.ஆக சூரியன் சந்திரன் பூமி போன்றவைகள் படைக்கப்படுவதற்கு முன்பே ஆதியில் நீர் நிறைந்திருந்தும் அதிலிருந்து பிற ஜீவன்கள் வந்ததாக அறியமுடிகிறது.
இந்திய வேதத்தில் பழமையான ரிக் வேதம், பிரபஞ்சத்தின் மூலப்பொருளை “ஹிரண்ய கர்ப்பம்” என்று சித்தரிக்கிறது. இதன் பொருள் “தங்கமயமான முட்டை” ஆரம்பத்தில் எதுவுமற்ற பெருவெளியில் எல்லையற்று எங்கும் விரிந்து கிடந்த நீர்ப்பரப்பில் அந்த தங்க முட்டை தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்தது. பின் அது இரண்டாக உடைந்து ஒரு பாதி “பிரகிருதி” (பூமி) யாகவும்,மறுபாதி சுவர்க்கமாகவும் (ஆகாயம்) உருக்கொண்டது.
மந்திர புஷ்பம்
யஜுர் வேதத்தை சார்ந்த தைத்ரிய ஆரண்யகம் ( 1:22) இந்த மந்திர புஷ்பத்தில் கூறுவதாவது,
ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)
‘நிலவே நீரின் மலர்” என்ற முதலாம் ஸ்லோகத்தில் ஆரம்பித்து மீண்டும் மீண்டும் இயற்கையின் ஆதாரங்களான நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகம், மழைக்காலம், என்று சுழன்று, நீருடன் ஒவ்வொன்றும் ஆதாரம், நீரே அனைத்திற்கும் ஆதாரம் என்று உறுதியாகச் சொல்கிறது.
பிரபஞ்சம் என்னும் ஜலக்கூட்டம் மேல் கிருகத்தில் இருக்கிறது அனைத்து உலகங்களும் நீரிலிருந்துதான் பிறந்துள்ளது. கடவுளுக்கு ஒப்பாக ஒருவரும் இருக்க முடியாது. ஆனால் கடவுளும் நீரும் நெருக்கமாகக் இருப்பதை அறிய முடிகிறது. தண்ணீர் திரவப்பொருள். உறைந்து விட்டால் திடப் பொருள். கொதி நிலையில் வாயுப்பொருள் கடவுளும் ஏறக்குறைய அப்படித்தான், அவருக்கு உருவம் இருக்கிறது. உருவம் இல்லாமலும் இருக்கிறார். அதே நேரம் அறுதியிட்டு கூற முடியாத அருவுருவ நிலையிலும் இருக்கிறார்.
தெய்வ நம்பிக்கை கொண்ட மானிடர்கள் தங்கள் நம்பிக்கைக்கு தகுந்தாற்போல் உருவ கடவுளையும், உருவம் இல்லா கடவுளையும், இறைவனுக்கு உருவம் உண்டு ஆனால் அது இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாத அருவுருவ நிலையையும் வணங்கி வருகின்றனர். வேதமுடைய அனைத்து மதங்களும் இம்மூன்று நம்பிக்கையில் உள்ளனர். அனைத்து வேதங்களும் ஒரு கடவுள் கொள்கையையே போதிக்கின்றன.
இதை ரிக் வேதம் இப்படிச் சொல்கிறது. “ஏகம் சத் விப்ரா பஹூதா வதந்தி” அதாவது ஒன்றான மெய்ப்பொருளை ஞானிகள் பலவாறு அழைக்கிறார்கள். கடவுளின் மூன்று நிலையை சச்சிதானந்த பெருநிலை என்று கூறுவார். “சத்” என்றால் எப்போதும் அழியாமல் இருக்கும் உண்மைப்பொருள். “சித்” என்றால் எல்லாவற்றையும் அறியும், அறிந்து கொண்ட பேரறிவு. “ஆனந்தம்” என்றால் எப்போதும் அழியாத இன்பம்.
அதாவது கடவுள் உண்மையாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறார். தண்ணீர்தான் படைப்பினங்களுக்கு மூலம், ஆனால் இவை அனைத்திற்கும் படைத்த இறைவனே மூலம் மூலவர்.
“அம்ருதம் பிரம்மா பூர் புவஸுவரோம்”-இதன் பொருள்
தண்ணீர் உயிர்களின் அமிருதம், அதுவே அசைவுடைய உயிர்களைக் கொண்ட இந்த உலகத்தின் அசைவுக்கும், சுவர்க்கத்தின் இயக்கத்திற்கும், ஆதாரமாக அமைகிறது.
கிரேக்க,எகிப்திய புராணம் கூறும் செய்தி.
கிரேக்க புராணங்களின் கூற்றுப்படி முதலில் எங்கும் வெட்டவெளி, அதைச்சுற்றி பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தவள் ஓசியானிஸ் (Oceanus) கடல் தேவதை. அவளுக்கும் வடக்கு காற்றுக்கும் காதல் வந்து இணைந்தார்கள். அவர்களுக்கு ஈரினோம் (Eurynome) என்ற பெண் குழந்தை பிறந்தது. இவள் காதல் கடவுள். தன் மகள் ஓடி விளையாட ஓசியானிஸ் கடலில் அலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அந்த அலைகளோடு விளையாடினால், அந்த ஆட்டத்தில் பிறந்தன விண்ணுலகம் மண்ணுலகம் வானம் கடல் மிருகம் பறவை….
எகிப்து நாட்டு மக்களின் புராண நம்பிக்கை. ஆரம்பத்தில் எங்கும் தண்ணீர், அங்கே ஆண், பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுளர்கள். இவர்களின் சேர்க்கையால் முதலில் சூரியன் பிறகு பிற உயிரினங்கள் பிறக்கின்றன. ஆக இவ்விரு புராண செய்திகளிலும் தண்ணீர்தான் படைப்பின் ஆரம்பமாக உள்ளதை அறிய முடிகிறது.
கிருஸ்துவ வேதம் பைபிள் சொல்லும் செய்தி
பைபிளின் ஆரம்ப வசனங்களும் இக்கருத்தையே கூறுகின்றன.
“தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். “-ஆதியாகமம்-1:2
ஆதியில் தேவனும் அவரது வார்த்தையும் இருந்தது. அடுத்தாற்போல் அந்த தேவன் தான் முதலில் படைத்த ஜலத்தில் அசைவாடிக்கொண்டிருந்தார். பெருமாள் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு பின்பு அதிலிருந்து படைப்புகளை படைத்தும்,தேவ ஆவியானவர் ஜலத்தின் மீதிருந்து வானம் பூமியைப் படைத்ததும் ஒன்றே!
பிறகு “தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி ஆகாய விரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்திற்க்கும் ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று.” -ஆதி ஆகமம்.1:7.
“ஆகாய மண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரை துதியுங்கள்…”-சங்கீதம்.148
புதிய ஏற்பாட்டிலும் இச் செய்தியை காணலாம்.
“ஜலத்தினின்று தோன்றி, ஜலத்தினாலே நிலை கொண்டிருக்கின்ற பூமியும் உண்டாயினவென்பதையும்…..” -II பேதுரு.
இறுதி வேதம் திருக் குர்ஆன் கூறும் செய்தி
இந்து மற்றும் கிருஸ்துவ வேதத்தில் விண்வெளியில் உருவான பெருவெள்ள நீர்ப்பரப்பைப் பற்றி பார்த்தோம். இனி இஸ்லாம் என்ன சொல்கின்றது என்பதைப் பார்ப்போம்.
“அவன்தான் வானங்களையும்,பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு (அரியணை ஆட்சிக்கேந்திரம்) நீரின் மேல் இருந்தது. குர் ஆன்.11:7.
இந்த வசனத்திற்கு விளக்கவுரையாக இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறுவது.
“ஆதியில் அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விசயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்.” அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி). நூல்: புஹாரி.3191
மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
“அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது.” அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5160.
திருக் குர்ஆன் விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர்.
“வானங்கள், பூமி உள்ளிட்ட பேரண்டத்தை அல்லாஹ் படைப்பதற்கு முன் அவனது அரியணை அதாவது ஆட்சியின் கேந்திரம் தண்ணீரின் மீது இருந்தது. அதற்கும் முன்பே அல்லாஹ் இருக்கின்றான். அல்லாஹ்வுக்கு ஆரம்பம், முடிவு என்பதெல்லாம் கிடையாது. எனவே அல்லாஹ் எப்போதும் இருக்கின்றான். முதலில் அவன் தண்ணீரைப் படைத்தான். தண்ணீரால் மற்ற பொருட்களைப் படைத்தான். வானங்கள், பூமி, அவற்றில் உள்ள எல்லாப் பொருட்களும் அவ்வாறு படைக்கப்பட்டதுதான்.” நூல்: தப்ஸீர் தபரி,தப்ஸீர் இப்ன் அபீ ஹாத்தம்.
இப்பேரண்ட பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்பே இறைவன் தண்ணீரைப் படைத்து விட்டான் என்று மூன்று வேதங்களும் தெளிவாக உரைக்கின்றன. இறைவன் இருப்பது எங்கே? அது “வைகுண்டத்தில் திருப்பாற்கடலில்” என்று இந்து மதம் கூறுகிறது. ”தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடிக் கொண்டிருந்ததாக” கிருஸ்துவ பைபிள் கூறுகிறது. பிரபஞ்சத்தை படைப்பதற்க்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வின் அரியணை தண்ணீரில் இருந்ததாக இஸ்லாம் கூறுகிறது.
இந்த மூன்று முப்பெரு வேதங்கள் கூறும் இறைவன், ஒருவனே என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் மதங்களையும் வேதங்களையும் மறுத்து இறைவன் உண்டா எனும் கேள்வி எழுப்பும் அறிவியல் ஆய்வாளர்கள், பூமிக்கு தண்ணீர் வந்த மர்மத்தை இப்பொழுதுதான் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் சொல்லும் செய்தி, இப்பிரபஞ்சம் படைக்கப்படுவதற்க்கு முன்பே தண்ணீர் உள்ளது. சூரியன், சந்திரன், பூமி உருவாவதற்கு முன்பே நீர் நிறைந்த விண்வெளி பெரு வெள்ளப் பரப்பு இருந்தது. அணைத்து நட்சத்திரம் மற்றும் எல்லாக் கோள்களிலும் நீர் நிறைந்துள்ளது.
Where do the oceans come from? The study headed by Adam Sarafian of the Woods Hole Oceanographic Institution (WHOI) in Woods Hole, Massachusetts, found that our seas may have arrived much earlier on our planet than previously thought. The study pushes back the clock on the origin of Earth’s water by hundreds of millions of years, to around 4.6 billion years ago, when all the worlds of the inner solar system were still forming.http://news.nationalgeographic.com/news/2014/10/141030-starstruck-earth-water-origin-vesta-science/
அமெரிக்காவின் வுட்ஸ் ஹோல் கடலாய்வு கழகத்தை (Woods Hole Oceanographic Institution –WHOI) சேர்ந்த ஆய்வாளர்கள் பூமியில் வீழ்ந்த கார்போனேசியஸ் விண்கற்களில் (Carbonaceous Chondrite Meteorites) நீர் இருப்பதற்கான சான்றுகளை ஆராய்ந்தனர். ஏனெனில் இந்த விண்கல்லானது சூரிய மண்டலம் உருவாகிய காலத்தைச் சேர்ந்த ஒன்று.
இம்மாதம் டிசம்பர் 17 ல் நடந்த அமெரிக்கா புவி இயற்பியல் ஒன்றிய மாநாட்டில் ( American Geophysical Union ) சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் கூறுவது,
Ancient Earth may have made its own water: Rock circulating in mantle feeds world’s oceans even today, evidence suggests-
“Wendy Panero, associate professor of earth sciences at Ohio State, and doctoral student Jeff Pigott are pursuing a different hypothesis: that Earth was formed with entire oceans of water in its interior, and has been continuously supplying water to the surface via plate tectonics ever since”
http://news.osu.edu/news/2014/12/17/study-hints-that-ancient-earth-made-its-own-water%E2%80%94geologically/
“Wendy Panero, associate professor of earth sciences at Ohio State, and doctoral student Jeff Pigott are pursuing a different hypothesis: that Earth was formed with entire oceans of water in its interior, and has been continuously supplying water to the surface via plate tectonics ever since”
http://news.osu.edu/news/2014/12/17/study-hints-that-ancient-earth-made-its-own-water%E2%80%94geologically/
பூமி தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே பெரும் கடல் பரப்பு நீர் பூமிக்கு அடியில் தங்கி இருந்தது. அவ்வப்போது நிகழும் பூமித்தட்டு நகர்வின் போதும் (Tectonic Plate Movements) இந்நீரானது பூமியின் மேல்தளத்திற்க்கு வந்து தேங்கி கடலாக மாறியுள்ளது. இந்த நவீன அறிவியல் உண்மையையும் அல்குர்ஆன் அன்றே கூறியுள்ளது.
நூஹு(அலை) அவர்கள் காலத்தில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ள பிரளயத்தில் மலைகளே மூழ்கும்படியானா அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்தது. அப்பெரு வெள்ள நீர் எங்கிருந்து வந்தது என்பதை அல்லாஹ் கூறுகிறான்.
இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்பு பொங்கவே, ( நாம் நூஹை நோக்கி ) “உயிர்ப்பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை அக்கப்பலில் ஏற்றிக்கொள்ளும்;…. -அல்குர்ஆன்.11:40,23:27.
நாம் கொட்டும் மழையைக்கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம்; இவ்வாறாக குறிப்பிட்ட ஒரு அளவின்படி (இருவகை) நீரும் கலந்து பெருக்கெடுத்தது. அல் குர்ஆன்.54:11-12.
மேற்படி வசனத்தில் இடம்பெறும் “அடுப்பு பொங்கவே..” என்ற சொல் அரபி மூலத்தில் “அத்தன்னூர்’ என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்க்கு அடுப்பு (oven) என்ற பொருளும், மேற்பரப்பு என்ற பொருளும் உள்ளது. இப்ன் அப்பாஸ்(ரலி) அவர்கள் மேற்பரப்பு என்று பொருள் கூறினார்கள். அதாவது பூமி முழுவதுமே பொங்கி வழியும் நீறுற்றுகளாக மாறியது. இறுதியில் நெருப்பு பற்றவைக்கும் இடங்களாகிய அடுப்புக்களிலிருந்தும் கூட நீர் பீறிட பூமி முழுவதும் வெள்ளக்காடாயிற்று. தமிழ் தப்ஸீர் இப்னு கஸீர்.பாகம்-4 பக்கம். 624.
அல்லாஹ்வின் கட்டளைப்படி பூமியில் அடுப்பு பொங்கி நீர் வழிந்ததாக அல் குர்ஆன் கூறுகிறது. இன்று ஆய்வாளர்கள், பிரமாண்ட கடல் போன்ற நீர்ப் பரப்பு பூமிக்கு கீழ் இருப்பதாக அறிவிக்கின்றனர். பூமியின் ஆழத்தில் கடும் வெப்பத்தில் பாறைகள் உருகி நெருப்புக்குழம்பாக உள்ளன. இவைகளே எரிமலையாக வெடித்து வெளிவருகின்றன. இந்த நெருப்புக்குழம்பிற்கு மேற்புறம் அமைந்த பாறை அடுக்குகளில் பெரும் கடல் நீர் தேங்கி உள்ளது. இந்த வெப்பமான (அடுப்பின் மேல் அமர்ந்த) நீரே பொங்கி ஊற்றாக பிரளய வெள்ளமாக நூஹு (அலை) காலத்தில் வெளிவந்தது.
பிறகு அல்லாஹ் பூமிக்கு கட்டளையிட்டான்.“பூமியே நீ உன் நீரை விழுங்கிவிடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள் என்று சொல்லப்பட்டது. –அல் குர்ஆன்.11:44.
உலகத்தையே மூழ்கடித்த பிரளய வெள்ளத்தைப் பற்றி கிருஸ்துவ மதம் கூறும் செய்தி.
“ஜலப் பிரளயம் நாற்பது நாள் பூமியின் மீது உண்டானபோது, ஜலம் பெருகி பேழையை (Nova’s Ark) கிளம்பப்பண்ணிற்று. அது பூமிக்கு மேல் மிதந்தது. ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகினதினால், வானத்தின் கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய் பதினைந்து முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.” -ஆதியாகமம்.7:17-20.
பிரளய வெள்ளத்தைப்பற்றி இந்து மதமும் குறிப்பிடும் செய்தி.
‘பிரளய நீரில் நீந்திய ஜீவ கும்பத்தை பாணமொன்றால் கயிலாயநாதன்
தகர்க்க கண்டோமே; அமிர்தமது நின்ற துவித்தலமும்
மகாமகமொடு பொற்றாமரை பொய்கையானதே
சிவனே தன்னமிர்த கரத்தால் கும்பத்தைக் கூட்டி
மலரசஞ்சாய்ந்து மணலிங்கமாக்கிட்டானே’ -அகத்திய நாடி
“அப்படி க்ருத யுகம் முடிவடையும்போது வெள்ளம் பெருக்கெடுத்து பூமியை சூழ்ந்து கொண்டது. அப்போது படைக்கும் தொழிலை புரியும் பிரம்மன் உயிர்களையெல்லாம் சேர்த்து அமிர்தத்துடன் கலந்து ஒரு மண் பானையில் வைத்து, அதனை மாவிலை போன்ற திரவியங்களால் அலங்கரித்து, கலச பூஜை செய்து மகாமேரு மலை மீது வைத்தார். பிரளய வெள்ளம் அளவுக்கு அதிகமாய் பீறிட்டு ஜீவன்கள் நிரப்பப்பட்ட பானையை அடித்துக் கொண்டு பாரத நாட்டின் தென் திசையை நோக்கி மின்னல் வேகத்தில் வந்தது. தேவர்கள் சிவபெருமானை பிரார்த்தித்து ஜீவன்கள் அடைக்கப்பட்ட பானையை நிறுத்தும்படி வேண்ட , சிவனும் கிருதமூர்த்தி வடிவம் கொண்டு பாணம் ஒன்றால் அப்பானையை உடைத்தார். அப்படி அந்த கும்பம் என்ற பானை உடைந்து அதிலிருந்து அமிர்தமும் ஜீவன்களும் வெளிப்பட, மீண்டும் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின.” இதனை அகத்திய முனிவர் தனது நாடியில் கூறுகிறார்.
இன்று பூமிக்கு கீழ் உள்ள நீரும்,நெருப்பும் பூமியும் சுழற்சிக்கு அச்சாக ஆதாரமாக உள்ளது.கடலடியில் ஏற்படும் பெரும் பூகம்பத்தால் நிலம் பிளவுபடுவதன் காரணமாக. ஆழத்தில் அடைபட்டுள்ள பெருங்கடல் நீர் பொங்கி எழுந்து மேலுள்ள கடல் நீருடன் சேர்ந்து சுனாமியாக மாற்றம் பெறவும் வாய்ப்பு உள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
இன்றைய ஆய்வாளர்கள் அறிவித்தபடி பூமி உருவாவதற்கு முன்பே நீர் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருந்தது என்ற உண்மையை இந்து, கிருஸ்துவ வேதங்களில் குறிப்புகள் இருந்தாலும், இறுதி வேதமான அல்குர்ஆன் இவ்வுண்மைகளை தெளிவாக முன்னறிவிக்கிறது.
- இப்பிரபஞ்சம், சூரியக் குடும்பம், பூமி படைப்பதற்கு முன்பே அல்லாஹ் நீரைப் படைத்து விட்டான். நீரிலிருந்துதான் அனைத்தும், அனைத்து ஜீவன்களும் உருவாகின.
- பூமி உருவான போது ஆழத்தில் மறைந்திருந்த நீரே நூஹு(அலை) காலத்தில் பிரளய ஊற்றாக பொங்கி எழுந்தது. இன்றும் அந்த நீரே கடலடி தட்டு நகர்வின் போது (Tectonic Plate Movement) மேற்புற கடல் நீரில் கலக்கிறது.
அல்லாஹ் நாடினால் ஆழத்தில் அடைபட்ட நீர் ஊற்றாக பொங்கி எழுந்து பிரளய வெள்ளம் ஏற்படலாம்; அல்லாஹ் நாடினால் பூமியில் உள்ள தண்ணீர் முற்றிலும் உருஞ்சப்பட்டுப் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம். ஏனெனில் இன்று மனிதன் மற்றும் அனைத்து ஜீவன்களும் உயிர்வாழ உதவும் நன்னீர் சுமார் 0.67% சதவிகித அற்ப அளவே இவ்வுலகில் உள்ளது.
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியுனுள் (உருஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்கு கொண்டு வருபவன் யார்? என்பதைக் கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்.) -அல் குர் ஆன்.67:30.
எஸ்.ஹலரத் அலி
0 comments:
Post a Comment