அளவற்ற அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
வானம் ஒரு பாதுகாப்பான விதானம்
Earth’s “plasmaspheric hiss” protects against a harmful radiation belt
Earth’s “plasmaspheric hiss” protects against a harmful radiation belt
எஸ்.ஹலரத்அலி. திருச்சி-7
மனித சமூதாயத்திற்கு நேர்வழி காட்ட இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன்,ஏராளமான வசனங்கள் மூலம் நமக்கு நேர்வழி காட்டுகிறது.அது இறக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி நாள் வரை பிறக்கும் மனிதர்களின்அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தவாறு சிந்தித்து செயல்படச் சொல்கிறது. அவ்வகையில் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனை சிந்திக்கச் சொல்லும் ஒரு வசனம்,
“ இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.” அல்குர்ஆன்.21:32
உலக உயிர் ஜீவன்களைப் காப்பதற்கு அல்லாஹ் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளான். உயிரினங்களுக்கு ஆதாரமான உணவு உற்பத்திக்கு சூரிய ஒளி இன்றியமையாதது. சூரியன் இல்லையேல் உயிரினங்கள் இல்லை. ஆனாலும் அதே சூரியனிடமிருந்து உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா, அகச்சிவப்பு கதிர்கள் பூமியை நோக்கி பாய்கின்றன. இக்கதிர்களை தடுப்பதற்கு பூமியிலிருந்து 6-30 மைல் உயரத்தில் ஓசோன் என்னும் தடுப்பை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். ஓசோன் படலம் கூரை போன்று பூமியை பாதுகாக்கிறது.
ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்கு கோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீஉயரத்திலிருந்து, 15-30 கி. மீதூரம்வரை (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது. இந்த ஓசோன்தான் சூரியனிடமிருந்து வரும், உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம்.
மேலும் சூரியனிலிருந்து வெடித்துக்கிளம்பும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான் மின்துகள்களினால் (Charged Particles) ஆன பிளாஸ்மா பொருள், தொடர்ந்து அனைத்து திசைகளிலிருந்தும் வெளிப்படும் அதிவேகப்புயல் (Solar Storms) உலகத்தை தாக்காமல் நமது பூமியின் மின்காந்தப் புலம் தடுத்துவிடுகிறது. சூரியப்புயலில் உள்ள மின்துகள் பிளாஸ்மா எவ்வாறு நமது பூமியின் மின்காந்தப் புலனால் தடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் இன்னும் பதில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆக சூரியனின் அபாயகரமான கதிர்வீச்சு மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சுக்களை, ஓசோன் படலமும், புவியின் மின்காந்த மண்டலமும் கவசம் போல பூமியை சுற்றி காத்து வருவதாக இதுவரை அறிவியல் உலகம்கூறி வந்தது. ஆனால் கடந்த வாரம் வெளியான ஒரு அறிவியல் ஆய்வு (Nature-Journal 26.Nov.2014) மூலம் அபாயகரமான விண்வெளிக் கதிர்களால் (Ultrarelativistic electrons) ஊடுருவ முடியாத, கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு அமைப்பு பூமிக்கு மேல் இருப்பதாக அமெரிக்காவின் MIT மற்றும் Colorado University பல்கலைகழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
An impenetrable barrier to ultrarelativistic electrons in the Van Allen radiation belts. http://www.nature.com/nature/journal/v515/n7528/full/nature13956.html
சூரியனிலிருந்து புறப்பட்டு ஒளி வேகத்தில் வரும் ஆட்கொல்லி எலெக்ட்ரான்கள் ஐந்து நிமிடத்தில் பூமியை தாக்கி சின்னாபின்னப்படுத்த முடியும், இப்படி வரும் எலெக்ட்ரான்களை பூமியில் இருந்து 1000-60000 KM தொலைவில் உள்ள வான் ஆலன் கதிர்வீச்சு வளையத்தில் (Van Allen radiation belts) உள்ள கண்ணுக்குப் புலனாகாத, கதிர்வீச்சு ஊடுருவ முடியாத ஒரு பாதுகாப்பு ஒலித் தடுப்பு (plasmaspheric hiss) தடுத்து விடுவதாக தற்போது கண்டு பிடித்துள்ளனர்.
இந்த அசாதரணமான, மிக விசித்திரமான மிகக்குறை மின்காந்த அதிர்வெண் அலைகள் (very low-frequency electromagnetic waves) இதுவரை அறியப்படததாகும். பூமியின் மின்காந்தப் புலத்திலோ அல்லது நீண்ட தொலைவு செல்லும் ரேடியோ அலைகளாளோ உருவானதல்ல. இந்த விசித்திர “பிளாஸ்மாஸ்பெரிக்” ஒலியானது சூரியப்புயல் எலெக்டிரான்களோடு மோதி அவற்றை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.
Researchers find that Earth’s “plasmaspheric hiss” protects against a harmful radiation belt.” Based on their data and calculations, the researchers believe that plasmaspheric hiss essentially deflects incoming electrons, causing them to collide with neutral gas atoms in the Earth’s upper atmosphere, and ultimately disappear. This natural, impenetrable barrier appears to be extremely rigid, keeping high-energy electrons from coming no closer than about 2.8 Earth radii — or 11,000 kilometers from the Earth’s surface. “It’s a very unusual, extraordinary, and pronounced phenomenon,” says John Foster, associate director of MIT’s Haystack Observatory.
அல்லாஹ் பல வசனங்களில் வானத்தை ஒரு விதானமாக அமைத்திருப்பதாக குறிப்பிடுகிறான். பூமி என்ற வீட்டிற்கு பாதுகாப்பான மேற்கூரை விதானமாக கண்ணுக்குத் தெரியாத “பிளாஸ்மாஸ்பெரிக்”(Plasmaspheric hiss) அமைப்பை அமைத்துள்ளான்.
அந்த இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் (Roof) அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கின்றான்; நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். –அல்குர்ஆன்.2:22.
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் (Roof) உண்டாக்கியிருக்கிறான்…. –அல்குர்ஆன்.40:64.
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக ( Protected Roof ) அமைத்தோம்- எனினும் அவர்கள் அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். –அல்குர்ஆன்.21:32.
நாத்திகம் பேசும் இன்றைய அறிவியலாளர்கள் அல்குர்ஆனை ஆராய மறுத்த காரணத்தால், அல்லாஹ் அமைத்த பாதுகாப்பு விதானம் என்னும் அத்தாட்சியை அடையாளம் காண முடியாமல் புறக்கணித்து, “It’s a very unusual, extraordinary, and pronounced phenomenon” என்று கூறி விடுகிறார்கள். அதற்கு காரணம் என்ன என்பதையும் அல்லாஹ் கூறி விடுகிறான். ஏனெனில் அவர்களுடைய மொத்த கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான். -அல்குர்ஆன்.53:30.
அல்குர்ஆனை ஆராய்ந்து, அதன்அறிவியல் ரகசியங்களை பிறருக்குச் சொல்லக் கடமைப்பட்ட படித்த முஸ்லிம்கள், மூட முல்லாக்களின் கைப்பிள்ளையாய் மாறி, வணக்க வழிபாடுகளுக்கு மட்டுமே குர்ஆன் என்று கூறி தங்கள் கல்வி அறிவையும் முடக்கி விட்டனர். முஸ்லிம்களின் மூளை முனை மழுங்கி மூலையில் உறங்குகிறது.
“ யார் கல்வியைத்தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்கத்திற்க்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.5231.
இஸ்லாம் கூறும் இம்மை மறுமை கல்வியை மதரசாக்களில் மட்டுமே இவர்கள் தேடுவதால், அல்லாஹ் கூறும் அறிவியல் அற்புதங்களை அடையாளம் காண முஸ்லிம்களும் தவறி விடுகின்றனர். சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் கல்வியை மதரஸாக்களில் மட்டும் தேடாமல் அறிவியல் ஆய்வுக்கூடங்களிலும் தேடாதவரை வெற்றியில்லை. விடிவுமில்லை. மேலும் அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின்மீது பூட்டுப்போடப்பட்டு விட்டனவா? -அல்குர்ஆன்.47:24
0 comments:
Post a Comment