Oct 4, 2011

மானக் கேடான செயல்கள் எவை?

இறைவன் தடுக்கப்பட்டவை (ஹராம்) எனத் தடுத்திருப்பதையெல்லாம் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான மானக்கேடான செயல்கள் - பாவங்கள்: 


நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது: ஆதாரமில்லாமலே நீங்கள் அல்லாஹ்வுக:கு இணைவைத்தல்: நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது. (ஆகிய இவைகளே என்று நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 7:33)


2. நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:22)

3. நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும்(அது வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியுமாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)

4. லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் கூறினார். நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்ய முனைந்துவிட்டீர்கள்? (அல்குர்ஆன் 29:28, 7:80)



5. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 7:81)

6. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழிமறி(த்துப் பிராணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கிறீர்கள். உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்க (மானக்கேடான) வற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் 29:2)

7. லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் "நீங்கள் பார்த்துக் கொண்டே மான்கேடான செயலைச் செய்கின்றீர்களா, நீங்கள் பெண்களை விட்டுவிட்டு மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லா மக்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் 27: 54,55)

8. (நன்மை செய்வோர் யாரெனில்) எவர்கள் பாவங்களையும் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் (அல்குர்ஆன் 53:32)

9. (இறை நம்பிக்கையாளர்களான) அவர்கள் (எத்தகையோரெனில்) பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (அல்குர்ஆன் 42:37)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )