Oct 12, 2011

பெண்கள் வெளியில் நடந்து கொள்ளும் முறை


நம்முடைய இஸ்லாம் மார்க்கம் நம் வாழ்க்கையை அழகான முறையில்; அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு வழங்கியுள்ளது. நம்முடைய ஒவ்வொரு செயலையும் அழகிய முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை நமக்கு அருகியுள்ளது. இன்று நம் இஸ்லாமிய பெண்களின் நிலை மார்க்கப்படி உள்ளதா என்று பார்க்கும் போது அவ்வாறு அமையவில்லை என்றே கூறலாம்.
     ஒரு குடும்பத்தின் அடையாளமாக பெண் கருதப்படுகிறாள். அவளுடைய செயலே அந்த அடையாளத்தை நல்ல முறையிலோஇ தீய முறையிலோ அமைக்கிறது.
    
     'ஒரு மனிதர் சேமிக்கின்ற சொத்துக்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டுவிட்டு 'அது நல்ல பெண்மணியாகும்' என்று கூறினார்கள்.
                          அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
                          நுல் : அபுதாவுத் 1417

     மார்க்கமுடைய பெண்களே ஆணுடைய வெற்றிக்கு காரணமாக இருப்பாள் என்று நபி(ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள். ஒரு பெண் நல்ல பெண்ணாக திகழ வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை அவள் கடைபிடிப்பதின் மூலமே அவ்வாறு திகழ முடியும். பெண்கள் வெளியில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சுp மார்க்க வழிமுறைகளை இங்கு காண்போம்.


ஹிஜாப் அணிதல்:-


     பெண்கள் முகத்தையும்இ மணிக்கட்டு வரை இரு கைகளையும் பாதத்தையும் வெளிப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இது தவிர மற்ற உறுப்புகளை அந்நிய ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டும். அவ்வாறு மறைக்கும் ஆடைக்கு ஹிஜாப் என்று பெயர். நமது வழக்கில் பர்தா என்றும் புர்கா என்றும் கூறப்படுகிறது.

     தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்களஇ; தமது தந்தையாஇ; தமது கணவர்களுடைய தந்தையாஇ; தமது புதல்வர்களஇ; தமது கணவர்களின் புதல்வர்களஇ; தமது சகோதரர்களஇ; தமது சகோதரர்களின் புதல்வர்களஇ; தமது சகோதரிகளின் புதல்வர்களஇ; பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகளஇ; ஆண்களில் ( தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்களஇ; பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றிடையவீர்கள்.
                                       (அல் குர்ஆன் 24: 31)

    நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்குமஇ; (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளை தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள்(ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்
                                       (அல் குர்ஆன் 33:59)

    இன்று இந்த புர்கா விஷயத்திலும் பெண்களின் நிலை மோசமாகவே உள்ளது. தன் அழகை பார்க்க கூடாது என்பதற்காகவே ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இன்று இந்த புர்காவிலும் மிகவும் டைட்டான புர்கா மற்றும் டிஷைனான புர்காவையும் அணிந்து ஆண்களின் பார்வைகளை தன் பக்கம் இழுக்கின்றனர்.

    அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வனையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக் கொண்டிருப்பர். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகர மாட்டார்கள்.
                            அறிவிப்பவர் : அபூஹீரைரா(ரலி)
                            நுல் : முஸ்லிம் 3971

முகத்தை மறைப்பதில் தவறில்லை :-

     பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்வதிற்கும் மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

     இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                               அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
                               நுல் : புகாரி 1838

    நபி(;ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள காலத்தில் இதற்கு தடைசெய்யப் படவில்லை. இஹ்ராமின் போது அணியக் கூடாது எனும் போது அவர்கள் காலத்தில் முகத்திரை அணிந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

     முகத்திரை அணிவது மார்க்கப்படி தடையில்லை என்றாலும் இன்று அதன் மூலம் பல தவறுகளும் நடக்கிறது. சுp பெண்கள் தவறான வழிகளுக்கும் முகத்திரையை பயன்படுத்துகின்றார்கள். ஒரு பெண் முழுமையாக முகத்தை மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவை பெற்று விடுகின்றாள்.

கணவனிடம் அனுமதி :-

     பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கணவனிடம் அனுமதி கோர வேண்டும். பெண்கள் கணவனின் அனுமதி பெற்று வெளியில் செல்வது மார்க்கத்தில்; உண்டு என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
         
     நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
                              அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
                              நூல்     : புகாரீ 5238

கடைத்தெருக்களுக்கு செல்லலாமா :-

     உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவுமஇ; உங்களை முழுமையாக பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
                               (அல் குர்ஆன் 33:33)

    அறியாமைக் காலத்தில் வெளியில் சுற்றித் திரிந்ததைப் போல் சுற்றித் திரியக் கூடாது என்று நான் உன்னிடத்தில் உறுதிப் பிரமானம் வாங்கிக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா(ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
                 அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ்(ரலி)
                 நூல் : அஹ்மத் 6554

    பெண் மறைக்கப்பட வேண்டியவள்.அவள் வெளியே சென்றால் (வழிகெடுப்பதற்காக) ஷைத்தான் அவளை நோக்கி வந்து விடுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                          அறிவிப்பவர் : இப்னு மஸ்வுத்(ரலி)
                          நூல் : திர்மிதி 1093

     பெண்கள் எந்த தேவையும் இல்லாமல் அநாவசியமாக வெளியே செல்லக்கூடாது. ஆனால் இன்று பெண்கள் ஆண்களைப் போல் வெளியில் சுற்றித் திரிகிறார்கள். ஜவுளிக் கடைகள் கண்காட்சிக் கூடங்கள்இ கடைத்தெருக்கள் சினிமா தியேட்டர்கள் போன்ற அனைத்து இடங்களிலும் மாற்று மத பெண்களை விட நம் இஸ்லாமிய பெண்களையே அதிகமாக காணமுடிகிறது.

     இதற்கு ஆண்களும் ஒரு வகையில் காரணமாகிறார்கள். வீட்டில் பெண்களை கண்டிப்பது கிடையாது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதிலும் அலட்சியம் இதனால் பெண்களே கடைத் தெரு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதை ஆண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியாக பயணம் செய்யலாமா ?

     அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகலஇ; ஒர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
                          அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி)
                          நூல் : புகாரி 1088

    ஒரு நாளைக் கடந்து விடாத தூரத்திற்குள் பெண்கள் பயணம் செல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் ஒரு நாளை விட அதிகமாகுமென்றால் தனியாக பயணம் செய்தல் கூடாது. இது போன்ற நேரத்தில் திருமணம் முடிக்கத்தகாத நெருங்கிய உறவினருடன் சேர்ந்துதான் பயணம் செய்ய வேண்டும். இதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

     நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்துஇ ' அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன புனிதப்போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டியலில்) எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் என் மனைவி ஹஜ் செய்ய விருக்கிறாள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள்இ 'நீ திரும்பிச் சென்று உன் மனைவியுடன் ஹஜ் செய் ' என்று கூறினார்கள்.
                               அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
                               நூல் : புகாரி 3061  

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )