Jun 4, 2013

சுன்னாவும் சஹாபாக்களும்



நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள் "சஹாபாக்கள்'' எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னாவைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். இன்னும் உங் கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான் என்று (நபியே) கூறுவீராக. (3:31)
அல்லாஹ்வின் பாவமன்னிப்பும் அருளும் கிடைப்பதற்கு இறைத் தூதரை முழுமையாக நேசித்து தங்களது வாழ்க்கையின் செயற் பாடுகளுக்கு முன்மாதிரியாக கொண்டு செயலாற்றுவது இன்றி யமையாதது என்றும் நம்பினார்கள்.
உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவுவைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (33:21)
மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த சஹாபாக்கள் ஒவ்வொரு அசைவிலும் நபிகளாரின் அடிச்சுவடையே முன்மாதிரியாக கொண்டு பின்பற்றினர். வஹியைக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து காரியமாற்றினார்கள். இந்த உலகத்திலுள்ள எந்த மனிதனுடைய வார்த்தைகளையும் செயல்களையும் விரும்பினால் ஏற்கலாம் விரும்பினால் நிராகரிக்கலாம். ஆனால் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளையும் செயல்களையும் அவ்வாறு கணிக்க முடியாது என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார்கள். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு ஒளிவு மறைவின்றி திறந்த புத்தக மாக இருந்தது. மக்களுக்கு எந்த இரகசியமும் மறைக்கப்பட வில்லை. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் மக்களுக்கான செய்திகள் வெளிப்படையாகக் கிடைத்தன. மார்க்கத்தை உரிய முறையில் விளங்கி நடைமுறைப்படுத்திட சஹாபாக்கள் முழு ஈடுபாடு கொண்டார்கள்.
ஈமானை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக எதிரி களின் அச்சுறுத்தல் களை சஹாபாக்கள் சந்தித்தார்கள். யுத்த களத்தில் எதிரிகளை எதிர்கொள்வதும் மார்க்கத்தை கற்பதும் என்ற நிலையில் இருந்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது ஷஷநம்பிக்கையாளர்கள் அனைவருமாக (போருக்காக புறப்பட வேண்டியதில்லை. அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பாரிலும் ஒரு கூட்டத்தினர் மார்க்கத் தை விளங்கிக் கொள்வதற்காகவும் தமது சமூகத்திற்கு திரும்பியதும் அவர்கள் (தமது தவறுகளி லிருந்து) விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களை எச்சரிப்பதற் காகவும் புறப்பட வேண்டாமா?" (9:122)
அல்லாஹ்வின் அறிவுரைக்கேற்ப மார்க்கத்தை கற்பதிலும் சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்களில் ஈடுபடுதல் என்ற உயரிய இலட்சியத்திலும் வாழ்ந்த சஹாபாக்கள் மார்க்க தெளிவை வேண்டி நபி(ஸல்)அவர்களிடம் விளக்கம் கேட்டு வந்தார்கள். இவர்களது இந்த ஈடுபாட்டை அல்குர்ஆன் பின்வருமாறு கோடிட்டுக் காட்டுகிறது.
(நபியே!) மது சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட் கின்றனர். அவ் விரண்டிலும் பெரும்கேடும் மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும் அவ்விரண்டின் பயனை விட கேடு மிகப் பெரியதாகும்|| எனக் கூறிவீராக. (2:219)
நபியே! மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அது ஒரு உபாதை எனக் கூறுவீராக. எனவே மாதவிலக்கின் போது (உடலுறவு கொள்வதைத் தவிர்த்து) பெண்களை விட்டு விலகியிருங்கள். (2:22)
நபியே! அவர்கள் உம்மிடம் எதை (யாருக்கு) செலவு செய்வது? என்று கேட்கின்றனர். நன்மை தரும் எதனை நீங்கள் செல வளித்தாலும் நன்மையே. (அது) பெற்றோர்கள், நெருங்கிய உறவி னர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோ ருக்குரியதாகும் என்று நீர் கூறுவீராக. மேலும் நீங்கள் செய்கின்ற எந்தவொரு நன்மையானாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன் கறிந்தவனாவான். (2:215)
மார்க்கம் படிக்கும் வாய்ப்பை ஆண்கள் பெற்றுக் கொள்வது போல் தங்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என பெண்கள் கேட்டுக் கொண்டார்கள்.
உங்களிடம் எப்போதும் ஆண்களே மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக் கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கென ஒரு நாளை வாக்களித்து அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்குப் போதனை செய்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
தங்களுடைய ஜீவனோபாயத்தை தேடிக்கொள்வதற்காக உழைப்பில் ஈடுபட்ட அதேவேளை சுன்னாவை படித்துக் கொள்வதற்கும் சஹாபாக்கள் நாட்களை ஒதுக்கிக் கொண்டார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அன்ஸாரி நபித்தோழரும் தொழிலாளிகள் இருவரும் தொழிலுக்குச் சென்றால் மார்க்கம் படிக்கும் சந்தர்ப்பம் அரிதாகவே இருக்கும் என்பதற்காக இரு வரும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அது பற்றி அன்ஸாரித் தோழர் இப்படி கூறுகிறார்கள்: நாங்கள் (முறை வைத்து) ஒட்டகங்களை மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்த போது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக் கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பி வந்தேன்). அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழூ செய்து அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்கு சுவர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதைக் கேட்டேன்.
உடனே நான், ''என்ன அருமையான வார்த்தை'' என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதை விட அருமையானது| என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்ததை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:உங்களில் ஒருவர் முழுமையான முறையில் வுழூ செய்துவிட்டு "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி மொழிகிறேன்" என்று கூறினால் சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம்நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம் எனக் கூறினார்கள் என்றார். (அறிவிப்பவர்: உக்பத் பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-397)
வாழ்வாதாரமும் தேவை மார்க்க அறிவும் தேவை என்ற நிலையில் சிரமங்கள் பாராது நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு பயணித்தார்கள்.
வசதி படைத்தவர்கள் தங்களது பொருளாதாரத்தினால் அதிக நன்மைகள் பெற வாய்ப்பு உண்டு. வசதி குறைந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகக் குறைவு என்று கவலைக் கொண்ட நபித்தோழர்கள் நபிகளாரிடம் வந்து பின்வருமாறு முறை யிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! ஏழைகளான நாங்கள் தொழுவது போலவே வசதி படைத்தவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு நோற்பது போலவே அவர்களும் நோன்பு நோற்கிறார் கள். தங்கள் செல்வங்களிலிருந்து மிஞ்சியவற்றை தர்மமம் செய்கிறார்கள். எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையே என்று சில நபித் தோழர்கள் கூறினார்கள். அப்போது நபியவர்கள் நீங்கள் தர்மம் வழங்கக் கூடிய தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்த வில்லையா? நிச்சயமாக ஒவ்வொரு தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்)வும் தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீல்(லாயிலாஹ இல்லல்லாஹ்)வும் தர்மமாகும். நல்லதை ஏவுவதும் தர்மமாகும். தீயதை விட்டு தடுப்பதும் தர்மமாகும். உங்களில் ஒருவர் மனைவியிடம் உறவு கொள்வதும் தர்மமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் இச்சையைத் தீர்க்க மனைவியிடம் வருகிறார். அவருக்கு இதில் என்ன கூலி உண்டு? என்று கேட்டார்கள். தவறான வழியில் அவர் தன் இச்சையை நிறைவேற்றிக் கொண்டால் அவர்மீது குற்றம் ஏற்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே. அவ்வாறே அனுமதிக்கப் பட்ட வழியில் அவர் தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டால் அவர்களுக்கு தர்மமாக) கூலியாக அது அமைந்து விடுகிறது என கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-1006)
நன்மைகளை தேடிக்கொள்வதில் சுன்னாவை நடைமுறைப் படுத்துவதில் ஏக்கம் கொண்டவர்களாக நடமாடிய அற்புத மனிதர்கள் இவர்கள்.நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இரவில் தங்கியிருந்தேன். அவர் களுக்கு வுழுச் செய்யும் தண்ணீர் எடுத்துவைத்து அவர்களது தேவைகளையும் செய்து வந்தேன். அப்போது என்னிடம் விரும்பி யதை கேட்பீராக என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சுவர்க்கத்தில் உங்களுடனான நட்பையே கேட்கிறேன் என்று நான் கூறினேன். வேறு ஏதாவது? என்று நபியவர்கள் கேட்டார் கள். நான் அதுமட்டும் தான் என்றேன். நீ அதிகமாக ஸஜ்தா செய்வதன் மூலம் உமக்காக நான் அல்லாஹ்விடம் சுவர்க்கம் கேட்டுப்பெற எனக்கு உதவுவீராக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ பிராஸ் ரபீஆ இப்னு கஃப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 489)
ஃபர்ளான ஐவேளை தொழுகைகளுக்குப் பின் செய்கின்ற நபிலான வணக்கங்கள் மூலம் சுவர்க்கத்தில் நபிகளாருடன் சேர்ந் திருக்கின்ற பாக்கியம்கிடைக்கும் என்ற நற்செய்தியை தெரி விக்கிறார்கள். அப்பாக் கியத்தை பெற்றுக்கொள்ள துடித்த நபித் தோழரின் ஆசையின் வேகத்தை என்னவென்று வர்ணிப்பது!
மதீனாவில் ஒரு நபித்தோழர் இருந்தார். அவரை விட பள்ளிக்கு வெகுதூரமாக இருந்த நபரை நான் பார்த்ததில்லை. (அதே வேளை) அவருக்கு ஒரு தொழுகை கூட தவறியதில்லை. கும் மிருட்டிலும் கடும்வெப்பத்திலும் ஏறிவருவதற்காக ஒரு கழுதையை வாங்கலாம் தானே என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி யளிக்கவில்லை. பள்ளிக்கு நான் நடந்து வருவதிலும் குடும்பத்தாரிடம் திரும்பி செல்வதிலும் (என் கால் எட்டுக்களுக்குமான) நன்மைகள் பதியப்படுவதையே விரும்பு கிறேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் சேர்த்துத் தருவானாக என கூறினார்கள். (அறிவிப்பவர் உபை இப்னு கஃப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-663)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகள் மீது அபரிதமான நம் பிக்கை வைத்து நன்மைகளை அறுவடை செய்வதில் இவர்கள் காட்டிய ஈடுபாடு நம்மை புல்லரிக்கச் செய்கிறது.
உள்ளும் புறமும் உண்மைத்தன்மையுடன் வாழ வேண்டும். சிறிது நேரம் கூட சுன்னாவின் நிழலிலிருந்து அகன்று விடக் கூடாது. சுன்னாவுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் சறுகி விட்டால் அதனை நயவஞ்சகத் தன்மையாகவே கருதினார்கள்.
ஒருமுறை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னைச் சந்தித்து ஹன்லலா எப்படி இருக்கிறாய் என்று கேட்டார்கள். ''ஹன்லலா முனாபிக் ஆகிவிட்டார்" என்று நான் கூறினேன். சுப்ஹானல்லாஹ் என்ன கூறுகிறாய்? என்று கேட்டார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாம் இருக்கும்போது சுவர்க்கத்தையும் நரகத்தையும் நேரில் பார்ப்பது போல் நினைவுகூர்கிறோம். அவர்களிடமிருந்து வெளியேறினால் மனைவியரை குழந்தைகளை வாழ்க்கைகளை கவனிப்பதில் மூழ்கிவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று கூறினேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக இதுபோன்றே நானும் உணர்கிறேன் என்று அபூபக்கர ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். உடனே நானும் அபூபக்கர் அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சேர்ந்தோம். அல்லாஹ்வின் தூதரே! ஹன்லலா நயவஞ்சகனாகி விட்டான் என்று நான் கூறினேன். என்ன கூறுகிறாய் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அல் லாஹ்வின் தூதரே! உங்களிடம் இருக்கும்போது சுவர்க்கத்தை யும் நரகத்தையும் கண்ணால் பார்ப்பது போல் நினைவு கூர்கி றோம். உங்களை விட்டும் விலகிபோய் விட்டால் மனைவியர் குழந்தைகள் வாழ்க்கைத் தேவை என மூழ்கி அதிகமாக மறந்து விடுகிறோம் என கூறினேன்.
என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்திய மாக! என்னிடம் நீங்கள் இருக்கும் நிலையிலே அல்லாஹ்வை நினைவுகூர்வதிலேயே தொடர்ந்து இருந்தால் உங்கள் படுக்கை யிலும் உங்கள் தெருக்களிலும் வானவர்கள் உங்களிடம் முஸாபஹா செய்வார்கள் எனக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனினும், ஹன்லலாவே! வணக்கத்திற்கு என ஒரு நேரமும் வாழ்க்கைக்கு என ஒரு நேரமும் உண்டு என மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹன்லலா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2750)
ஆன்மீகம் லௌகீகம் என்ற இரு நிலையிலும் ஒரு முஸ்லிம் தனது வாழ்வை மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் மட்டும் மூழ்கி விடக்கூடாது. தன்னுடைய நேரங்காலங்களை குடும்ப வாழ்வுக்கும் இறைவழிபாட்டுக்கும் ஒதுக்கி வாழ வேண்டும். அவ்வாறான வாழ்வே இஸ்லாமிய வாழ்வு முறை என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளங்கப்படுத்தினார்கள்.

மௌலவி M.S.M. இம்தியாஸ் யூசுஃப் ஸலஃபி 

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )