இளையான்குடி தக்வா டிரஸ்ட் சார்பாக " இஸ்லாம் கூறும் ஒழுக்கம் " என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 26.05.2013 ஞாயிற்று கிழமை அன்று " தக்வா டிரஸ்ட் " அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எ.தஸ்னீம் பாத்திமா முதல் பரிசு பெற்றவராகவும், A.தாஜுல் நிசா, S.மிஹ்ராஜ் நிசா ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றவராகவும் A.அஸ்பர் யாஸ்மின், K.S. இஜாஸ் பாத்திமா, K.U.சமீம் இம்தியாஸ் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்போட்டியில் பங்கு பெற்ற மற்ற அனைவருக்கும் இஸ்லாமிய புத்தகங்களும், பரிசுப் பொருளும் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment