Jul 31, 2013

பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்?

இவ்வாழ்கை என்ற பரீட்சையில் ஒவ்வொருவருக்கும் வித விதமான வாய்ப்புகளும் சோதனைகளும் இறைவனால் வழங்கப்படுகின்றன. நமக்கு வாய்த்த சூழ்நிலையில் எவ்வாறு அதை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அதை இறைவனுக்குப் பொருத்தமான முறையில் எதிர்கொண்டால் நமக்கு பரீட்சையில் வெற்றி! அவனுக்கு பொருத்தமற்ற அல்லது அவன் தடுத்த முறையில் அதை எதிர்கொண்டால் அதுவே தோல்வியில் முடிகிறது!

நமது வாழ்கை பரீட்சையின் ஒரு இன்றியமையாத அங்கமாக நம்மோடு வருபவர்கள் பெண்கள். குழந்தைகளாக அவர்கள் நமக்கு வழங்கப் பட்டால்....! இன்று பலரும் நிம்மதி இழப்பது அதனால் தான் என்பதை கண்டு வருகிறோம்! வரதட்சனைக் கொடுமை, அவர்களை வளர்ப்பதிலுள்ள சிக்கல்கள், அவர்களின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட பிரட்சனைகள்...... என பலவற்றையும் கருதி 'எதற்கு வம்பு?' என்று கருவில்  இருக்கும் போதே பெண்குழந்தைகளை கொன்று வருவதையும்,ஸஸ மீறி பிறந்துவிட்டால் குப்பைத் தொட்டியிலோ அரசு தொட்டிலிலோ அவர்களை எறிந்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

ஆனால் தூய இறைவன் தன்னை நம்புவோருக்கு  இப்பிரட்சினைகளை  அழகான முறையில் அணுக தன் திருமறை மூலமும் தன் திருத்தூதர் மூலமும் வழிகாட்டுகிறான். அடிப்படையாக சில உண்மைகளைப் புரிய வைப்பதன் மூலம் நமது மனதை வீண் சஞ்சலங்களிளிருந்தும் அதன் மூலம் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்தும் காத்தருள்கிறான்.:

Jul 29, 2013

இளையான்குடி தக்வா டிரஸ்ட்

அஸ்ஸலாமு அழைக்கும்

ஏகத்துவ பிரட்சாரத்தை  முதன்மையாக கொண்டு தொடங்கப்பட்ட இளையான்குடி தக்வா டிரஸ்ட் அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக இயங்கி வருகிறது. டிரஸ்ட்-இன் சார்பாக நன்மையை ஏவி தீமையை தடுக்கும் வகையிலான துண்டு பிரசுரங்கள் , வால்  போஸ்டர்கள் மற்றும் இஸ்லாமிய நூலகம் என இஸ்லாமிய பிரச்சார பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வாழ்வாதார உதவிகள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பணிகளை தங்கள் அளிக்கும் நன்கொடைகள் மட்டும் ஜக்காத் தொகைகள் மூலமே செயல்படுத்த முடியும்.

Jul 25, 2013

நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்!


Post image for நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்!

அல்லாஹ்வின் கிருபையால் ரமழானை சந்திக்கும் வாய்ப்பினை அல்லாஹ் நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)
இந்த இறக்கட்டளையில் ரமழான் மாதத்தின் சிறப்பையும் அதன் காரணத்தையும் விசுவாசிகள் நோன்பு நோற்பது கட்டாயக்கடமை என்பதையும் தெளிவாக விளக்கி விட்டான். இன்று முஸ்லிம்களில் எத்தனைபேர் இதனை செயல்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வே “உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; ” என்று கூறிய பின்னரும் இன்று முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு ரமழானில் நோன்பு நோற்பது இலகுவானதாக தெரிகிறது? எத்தை பேர் நோன்பு நோற்காமல் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!


Post image for “பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.
இறைவன் அளித்த உயிர் அவனுடைய மார்க்கத்திற்காக அவனுடைய வழியிலேயே அர்ப்பணமாவதை நபிதோழர்கள் பெரும் பேராய்க் கருதினார்கள். இறைநெறியை

உணவு என்ற இறை அற்புதம்!



நாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்.
ஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம்? எங்கிருந்து பெறுகிறோம்?
வேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று - இதை யார் நமக்கு வழங்குகிறார்கள்?
அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பசி, அதை சுவைக்க நாக்கு, ஜீரணிக்க வாய், வயிறு, குடல்கள்... அதிலிருந்து சத்தை உறிஞ்சி சக்தியாக்கும் உடற்கூறுகள் என இவற்றை எல்லாம் வழங்கி நமக்கு ஓயாது இன்ப்மூட்டிக் கொண்டிருக்கும் நம் இரட்சகனை நன்றி உணர்வோடு என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
நம் மீது இவ்வளவு நேசமும் பாசமும் கொண்ட அவனிடம் நாம் நேசம் பாராட்டுகிறோமா?

'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள  பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.' (திருக்குர்ஆன் 17:70)

இந்த உணவு என்பது எவ்வளவு பெரிய அருட்கொடை என்பது மட்டுமல்ல, அதில் அடங்கியுள்ள நம் இறைவனின் வல்லமையை எடுத்துச்சொல்லும் அற்புதங்களைப் பற்றி நாம் சிந்தித்தோமா? மண்ணிலிருந்து உருவாகி மீண்டும் மண்ணுக்கே சென்றடையும் வரை இந்த உணவு பயணிக்கும் பாதை நிறைய எவ்வளவு அற்புதங்கள்? விதை, முளை, செடி,கொடி, மரம், பூ, காய், பழம், தானியம்...... என்று ஒருபுறம்! ருசி, பசி,தாகம், வாய், நாக்கு, பற்கள், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள், மலக்குடல், குதம், சிறுநீர், மலம்..... என நம் உடலோடு தொடர்புடையவை ஒருபுறம்! அந்த உணவிலிருந்து பெறப்படும் சக்தி, ஆற்றல், தெம்பு, ஊக்கம், வீரம், வேகம், உழைப்பு.... என உலகையே இயக்கும் விந்தை ஒருபுறம்!

இறையச்சத்தை இளமனங்களில் எவ்வாறு விதைப்பது?




மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். அதுவே இறையச்சம் எனப்படும்.. இன்று கற்கும் கல்வி மனிதனுக்கும் மனிதகுலத்துக்கும் பயனுள்ளதாகவும் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டுமானால் மாணவ இதயங்களில் இறையச்சம் கட்டாயமாக விதைக்கப் பட வேண்டும். அதுதான் அவர்களை கல்வி கற்கும்போதும் கற்ற பின்னும் நெறிமிக்கவர்களாக வார்த்தெடுக்கும்.
இறையச்சம் மனதில் நுழைந்து விட்டால் அம்மனிதனை மற்ற எந்த அச்சமும் தீண்டுவதில்லை. அதனால் அவனுக்கு சமூகத்தில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் துணிவு வந்துவிடுகிறது.
 
இறையச்சத்தை இளமனங்களில் எவ்வாறு விதைப்பது?

Jul 18, 2013

வழிகேடுகளை மார்க்கமாகப் போதிக்கும் அநியாயக்காரர்கள்

9:9
அவர்கள்   அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய (நேர்)   வழியிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை   மிகவும் கெட்டவை. (அல்குர்ஆன் 9:9)
9:34
நம்பிக்கைக் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரியிலும்,துறவிகளிலும்…   அநேகர் மக்களின் பொருள்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின்   பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும் எவர்கள் பொன்னையும்,   வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில்   செலவிடாதிருக்கிறார்களோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று (நபியே!)   நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)
3:187
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க   வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு   நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப்   பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக்   கொண்டார்கள் – அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.   (அல்குர்ஆன் 3:187)
5:63
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள்   உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க   வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.   (அல்குர்ஆன் 5:63)
  அல்லாஹ் இறக்கியருளிய நேர்வழியை மிகமிக   சொற்பமானவர்களே விளங்குவார்கள்;  மிகமிகக் குறைந்தவர்களே விளங்குவார்கள்   என்று அல்குர்ஆனில் ஆணித்தரமாக அல்லாஹ் அறிவிக்கிறான்.
7:3
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்;   அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்;   நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.    (அல்குர்ஆன் 7:3)

உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!


Post image for உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!


அல்லாஹ் கூறுகின்றான்:
“(நம்   தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள்   உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான்   நன்கு அறிபவன்’ (23:51)
‘அல்லாஹ்   அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு   திரியாதீர்கள்” (2;60)
ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற   மறந்துவிட்டால்!
بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ
உங்களில்   ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம்   செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு   வந்து)விட்டால்
‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’
எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.
பொருள்: இதன்   ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)
பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால்   அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!
“நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்’ கூறாத உணவை   ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.”  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)-   ஆதாரம்: முஸ்லிம.;
நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!
‘நின்றுக்   கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’ அறிவிப்பவர்: அபூ   ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.
‘உங்களில்   எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி   எடுக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.
  நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்
நபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி
அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: “மக்களில்   சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு   குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான்   பார்த்திருக்கின்றேன்”  நூல்: புகாரி
குடிக்கும் பாத்திரத்தில் ஊதி   குடிக்கலாகாது!
குடிக்கும்   பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை   செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத்,   இப்னுமாஜா
“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்)   அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.
‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப்   பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’ அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி),   ஆதாரம்: புகாரி
இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!
‘உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ,   சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்;   சாப்பிடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.
தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில்   குடிப்பது கூடாது!
‘எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ   அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்’ என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.
“வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில்   அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.”   அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி “நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன்   புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள்.   (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை   இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான)   உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக்   கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.

இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!


Post image for இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு!

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4:48,116)
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகனே! என்னிடம் ஆதரவு வைத்து என்னை நீ அழைத்தால் நீ செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகிறேன், நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆதமுடைய மகனே! நீ செய்த பாவங்கள் வானம் நிரம்ப இருந்தாலும் பிறகு என்னிடம் நீ மன்னிப்புக் கோரினால் நான் உன்னை மன்னித்து விடுகிறேன். நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன். நீ இப்பூமி நிரம்ப பாவங்கள் செய்து எனக்கு எதையும் இணை வைக்காமல் என்னை சந்தித்தால் இப்பூமி நிறைய மன்னிப்பை உனக்கு வழங்குவேன். அறிவிப்பவர்:அனஸ்(ரழி) நூல்:திர்மிதி
சிலர் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடுகின்றனர். காரணம் அதிகம் பாவம் செய்ததனால் அல்லது ஒரு முறையோ பல முறையோ தவ்பா செய்து விட்ட பிறகு மீண்டும் பாவம் செய்து விடுவதனால் அல்லாஹ் நம்மை மன்னிக்க மாட்டான் என்று கருதிக் கொண்டு தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். தவ்பா செய்து அல்லாஹ்விடமே திரும்பி விடுவதை விட்டுவிடுகிறார்கள். இது மாபெரும் தவறாகும். ஏனென்றால் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் காஃபிர்கள் தாம்.
அல்லாஹ் கூறுகிறான்: தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துவிட்ட எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில், அன்பில் நம்பிக்கை இழைத்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும் கருணையாளனுமாவான். (39:53) மேலும் கூறுகிறான்: அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பவர்கள் அவனை நிராகரித்த மக்களே! (12:87)
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் வின் கருணை-அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது. (7:56)
அடக்கத்தலங்களை வணங்குவது “ஷிர்க்”

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்


Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33
நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும்படிக் கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

Jul 16, 2013

மாதத்துடனான உறவு மார்க்கத்துடன் இருந்தால்...




ரமழான் அருள்களின் பொக்கிஷமாய் வருகிற மாதம். பாவமன்னிப்பு, சுவனம், நரக விடுதலைமுதலானவற்றை அது நமக்காக சுமந்து வருகிறது.
அன்பு, மனிதநேயம், உபசரிப்பு, ஒத்துழைப்பு என்பவற்றை அது எம்மிடையே வளர்க்கிறது. சுய கட்டுப்பாட்டையும் உன்னதமான நற்குணங்களையும் அது நம் மத்தியில் உருவாக்கி விடுகிறது.
நற்செயல்கள் புரிய அது நம்மைத் தூண்டுகிறது. நல்லவற்றை ஏவி அதன்பால் மக்களை அழைக்கும் பண்பையும் தீமைகளை எச்சரித்து அதன்பால் செல்லாது மக்களைப் பாதுகாக்கும் கரிசனையையும் அது நமக்குள் உருவாக்குகிறது.
அமானிதங்களை ஒப்படைத்து இரத்த உறவுகளைப் பேணி சுமுகமாகவும் இணக்கத்தோடும் வாழும் பக்குவத்தை அது நமக்குள் ஏற்படுத்துகிறது.
ரமழான் இதுபோன்ற எண்ணற்ற சிறப்புகளுடன் வருகிற மாதம் என்பதால் அதனை ஆவலோடும் ஆசையோடும் முஸ்லிம்கள் வரவேற்கிறார்கள், சிறப்பிக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இந்த மாதத்தோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவைத் தமது மார்க்கத்தோடும் ஏற்படுத்திக் கொண்டால் எப்படியிருக்கும்? அதனால் விளையும் நன்மைகள் எத்துணை தாக்கமுள்ளதாக இருக்கும்? அவ்வாறு செய்தால் பன்னிரண்டு மாதங்களும் ரமழான் போன்றிருக்குமல்லவா?
மாதத்தோடு உள்ள உறவு மார்க்கத்தோடும் வந்து விட்டால் முஸ்லிம்களின் வாழ்வில் எப்போதும் ரமழான்தான். எனினும், இன்றோ ரமழான் சிறிது களைகட்டி பிரகாசித்துவிட்டு மறைந்து செல்கிறது. ஏனைய காலங்கள் அமாவாசையாகி விடுகின்றன. ஏன் இந்த நிலை என்று சிந்தித்தபோது ரமழானை எதிர்கொள்ளும் அன்பு நெஞ்சங்களோடு ஆலோசனையையும் வழிகாட்டலையும் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அதன் விளைவே இந்தப் பத்தியாகும்.
ரமழான் வந்துவிட்டால் பிறரது ஆலோசனைகளை செவிமடுக்காமலே நாம் செய்யத் துவங்கிவிடும் நற்செயல்கள் பல இருக்கின்றன. அவற்றை மீண்டும் வலியுறுத்தி ஒரு புதிய ஆலோசனைபோல முன்வைக்க வேண்டியதில்லை. அத்தகைய நற்செயல்களை வழமைபோன்று அல்லது அதனைவிடச் சிறப்பாக நிறைவேற்ற முயற்சிப்போம். நோன்பு நோற்று... இரவுத் தொழுகையை நீண்ட நேரம் தொழுது... ஸகாத்தையும் கொடுத்து... இரத்த உறவுகளைப் பேணி... ஏழைகளையும் எளியவர்களையும் கவனித்து... அன்பு சகோதரத்துவம் என்பவற்றை வளர்த்து ரமழானை சிறப்பாக கௌரவிப்போம்.

மனிதனை புனிதனாக்க வந்த ரமழான்



இஸ்லாமிய உறவுகளே எம்மிடம் வந்திருக்கும் ரமழான் மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவிதமான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது, அதனால் இந்த ரமழான் மாதத்தை அல்லாஹ்வின் அருலுக்குறிய மாதம் என்கின்றோம். உண்மியில் இந்த ரமழான் மாதத்தை பயன்படுத்தி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாதவன் ஒரு துர்ப்பாக்கியம் பிடித்தவனே. எனவே மாற்றத்தை ஏற்காத மனிதனிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த படைத்தவன் அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கும் முன்னேற்பாடுகளை இந்த கட்டுரையினூடாக நோக்குவோம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
·         ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  2:183.
சுவன வாயில்கள் திறக்கப்படுவதும், நரக வாயில்கள் மூடப்படுவதும்;
  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ
·         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.  (புஹாரி:1899, முஸ்லிம்)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )