Jul 16, 2013

மனிதனை புனிதனாக்க வந்த ரமழான்



இஸ்லாமிய உறவுகளே எம்மிடம் வந்திருக்கும் ரமழான் மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவிதமான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது, அதனால் இந்த ரமழான் மாதத்தை அல்லாஹ்வின் அருலுக்குறிய மாதம் என்கின்றோம். உண்மியில் இந்த ரமழான் மாதத்தை பயன்படுத்தி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தாதவன் ஒரு துர்ப்பாக்கியம் பிடித்தவனே. எனவே மாற்றத்தை ஏற்காத மனிதனிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த படைத்தவன் அல்லாஹ் ஏற்பாடு செய்திருக்கும் முன்னேற்பாடுகளை இந்த கட்டுரையினூடாக நோக்குவோம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
·         ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  2:183.
சுவன வாயில்கள் திறக்கப்படுவதும், நரக வாயில்கள் மூடப்படுவதும்;
  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ
·         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.  (புஹாரி:1899, முஸ்லிம்)

சுவன வாயில்கள் திறக்கப்படுவதென்றால் அதன் அறுத்தம் என்ன, அதில் மனித சமூகத்திற்கு என்ன நன்மை இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்த்தால்!சுவன்னத்தின் சூழாக இருப்பது மனித உள்ளங்கள் செய்வதை கஷ்டமாக நினைக்கும் வணக்க வழிபாடுகளே,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ»،
·         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சுவனம் (மனிதனால்) வெறுக்கப்பட்ட (வணக்கங்களை) சூழகக் கொண்டிருக்கின்றது, நரகம் (மனித உள்ளங்கள்) விரும்பும் (பாவங்களால்)சூழப்பட்டிருக்கின்றது.  (முஸ்லிம்: 2822)
எனவே சுவன வாயில்கள் திரப்பதன் மூலம் சுவனத்திற்கு இட்டுச்செல்லும் வணக்க வழிபாடுகளை செய்வதில் மனிதனுக்கு வித்தியாசமான ஆசை பிறந்துவிடுகின்றது. இது சாதாரண முஸ்லிமின் வாழ்வில் வெளிப்படையாகவே தென்படும் ரமழான் மாதம் வந்துவிட்டால். சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்; ரமழானுக்கு முன்னுள்ள 11 மாதகாலத்திலும் பர்ளான தொழுகைகளை தொழாத மனிதன் ரமழான் மாதம் வந்தவுடன் தொழ ஆரம்பித்து விடுவதும், ஒரு ரக்அத் வித்ரையேனும் ஏனைய காலங்களில் தொழாதவன் இம்மாதத்தில் இரவுத் தொழுகையில் ஆர்வம் காட்டுவதும், சுபஹ் தொழுகைக்கே விழித்தெழுவதை கஷ்டமாக நினைக்கும் ஒரு மனிதன் சுபஹுடைய பாங்குக்கு அரை மணித்தியாளத்திற்கு முன்னரே ஸஹர் உணவுக்காக எழும்பிவிடுவதும், ஸகாத் என்ற கடமையையே நிறைவேற்றாத மனிதர்களெல்லாம் ஸகாத்தையும் கொடுத்து, சதகாவும் செய்வதும், பெண்கள் பள்ளிக்கே வரக்கூடாது என்று நினைக்கும் பள்ளி நிர்வாகங்களெல்லாம் அம்மாதத்தில் பெண்களுக்கென்று தனி வசதிகளை பள்ளிகளில் ஏற்பாடு செய்வதும் மிகச் சிரந்த எடுத்துக்காட்டுகளாகும்.
நரகின் வாயில்களை மூடுவதன் மூலம் பாவங்களில் வெருப்பை ஏற்படுத்துகின்றான் எம்மைப் படைத்த ரப்பு அல்லாஹ். பவங்களே நரகை சூழ்ந்திருக்கின்றன,(முன்னால் கூறப்பட்ட ஹதீஸில் வந்திருப்பது போன்று)அதனால்தான் 11 மாத காலங்களிலும் பாவத்தில் மூழ்கியிருக்கும் ஒரு முஸ்லிம் எந்த பாவங்களையெல்லாம் விட முடியாது என்று நினைக்கின்றானோ அவற்றையெல்லாம் ரமழான் காலத்தில் விட்டுவிடுகின்றான். இதுவே ரமழான் மனித குலத்திற்கு செய்யும் பெரும் நன்மையாகும். ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்; 11 மாத காலமும் புகைத்தல் பலக்கத்தில் மூழ்கியுள்ள் மனிதன் ரமழான் காலத்தில் 14 மணித்தியாளங்களை புகைத்தலின்றி கழிக்கின்றான், படங்களையும் நாடகங்களையும் பார்ப்பதில் இன்பம் காணும் மனிதன் ரமழான் காலத்தில் அதற்கும் விடுமுரை அழிக்கின்றான், குறைந்தது பகல் நேரத்திலாவது!! சண்டை பிடிப்பவர்களும் கூட இம்மாதம் வந்துவிட்டால் சண்டைகளை விழக்கிவைக்கும் அளவுக்கு மாறிவிடுவது மிகப் பெரும் எடுத்திக்காட்டுகளாகும்.
எனவே எம்மிடம் வந்திருக்கும் ரமழானை வணக்கங்கள் மூலம் அழங்கரித்து, நல்லவற்றை செய்வதற்கும், பாவங்களை விட்டொதுங்கி நல்லவர்களாக மாறுவதற்கும் எம்மை பலக்குவோமாக!!.
அல்லாஹ்வுக்காக ஹலாலை விடவைப்பதன் மூலம் பயிற்சி;
நோன்பு என்றால் ஹலாலான உண்வையும், பாணத்தையும், விட்டுவிடுவதோடு, ஹலாலான மனைவியை இல்லரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதுமே.
இந்தப் பயிற்சியே எம்மிடம் பெரும் மாற்றத்தை கொண்டுவரப் போதுமானது. ஏன்! மனிதனின் இயழ்பு; பாவத்தை விடுவதை கஷ்டமாக கறுதுவதே. அப்படி இயழ்பைக் கொண்ட மனிதன் அல்லாஹ்வுக்காக் ஹலாலையே விடுகின்றான் என்றால் ஏன் அந்த அல்லாஹ்வுக்காக ஹராத்தை பாவத்தை விட முடியாது. எனவே இப்படி ஹலாலை விடப் பலக்குவதன் நோக்கமே ஹராத்தை விடுவதற்குத்தான், இல்லையென்றால் ஒரு மனிதன் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு என்ன தேவை இருக்கப்போகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ»
·         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பொய் பேச்சையும், பொயான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவன் உணவையும், பாணத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.  (புஹாரி:1903)
எனவே; அல்லாஹ்வுக்காக ஹாலாலை விடும் நாம் அவனுக்காக ஹராமான, பாவமான, ஷிர்க்கான, பித்அத்தான எல்லாகாரியங்களையும் விட்டு விடுவதன் மூலம் ரமழான் மாத நோன்பு எம்மிடம் எதிர்பார்க்கும் நோக்கத்தை அடைந்து கொள்ள முயற்சிப்போம்.
சண்டை,சச்சரவுக்கு வருபவனை எதிர்க்காமல் ஒதுங்கி நடப்பது;
எம்மிடம் வந்திருக்கும் ரமழான் மனிதனிடம் ஏற்படுத்தும் இன்னுமொரு மாற்றமே பொருமை என்பது. பொதுவாகவே மனிதனின் இயழ்புக் குணம் என்னவென்றால்; தன்னை எதிர்ப்பவனை எதிர்ப்பதும், பழி வாங்குவதும், விட்டுக் கொடுக்காமல் இருப்பது போன்ற தீய குணங்களாகும். இப்படிப்பட்ட மனிதனுக்கு ரமழான் மாத நோன்பு கொடுக்குக்கும் பயிற்சி அற்புதமானதே!!!
 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ، وَإِنِ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ
·         இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! (புஹாரி:1894,முஸ்லிம்)
எனவே, நீ அடித்தால் நானும் அடிப்பேன், உனக்கு முடியுமென்றால் என்னாலும் முடியும் என்று வரட்டு கௌரவம் பேசும் மனிதனுக்கு ரமழான் வழங்கும் பயிற்சி, 'நான் நோன்பாளி' என்று கூறி ஒதுங்கிக் கொள்வதே. இப்படி சண்டைக்கு வந்தவனோடும், ஏசியவனோடும் சண்டைக்கு செல்லாமல் பயிற்சி பெற்ற மனிதன், எப்படி அப்பாவி மனிதனோடு, வம்புக்கு வராதவனோடு வீன் வம்புக்கு செல்வான், எப்படி ஒரு முஸ்லிமை ஏமாற்றுவான், எப்படி அவனின் சொத்தை அபகரிப்பான். சுறுக்கம் நோன்பு இந்தப் பயிற்சியின் மூலம் ஒருவனை உண்மை முஸ்லிமாக மாற்றுகின்றது. உண்மை முஸ்லிம் என்பவன் தன் நாவாலோ கரத்தாலோ யாருக்கும் தீங்கு செய்யாதவனே.
عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ: إِنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ؟ قَالَ: «مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
·         'இறைத்தூதர் அவர்களே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரே உண்மை முஸ்லிமாவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:11 ,முஸ்லிம்)
எனவே ரமழான் எமக்களிக்கும் இந்தப் பயிற்சியை சரியாகப் பெற்று நாமும் சிறந்த முஸ்லிமாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
மனிதனை மடமைத் தனத்திலிருந்து காத்தல்;
ரமழான் கால பயிற்சியில் ஒரு முஸ்லிம் பெற்றுக் கொள்ளும் முக்கிய பயிற்சியாக; தனது அறிவை, சுய புத்தியை, சிந்தனையை போக்கும் எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதாகும்.ஏனெனில் இன்று மனிதன் தன் கையாலே தன் புத்திக்கு வேட்டு வைக்கின்றான். சிந்தனைத் தெளிவோடு நடக்கவேண்டிய மனிதன் தன் புத்தியை போக்கும் போதை வஸ்துக்களை பாவித்து அறிவை இழந்து மிறுகமாக மாறிவிடுகின்றான், சினிமா படங்கள், நாடகங்கள் என்று மற்றொரு வழியில் தன் சுய புத்தியை இழக்கின்றான். இப்படி ஏறாலமான வழிகளில் மனிதன் மடையனாக மாறுகின்றான். இப்படி மனிதன் வாழும் போது அவனுக்கு நோன்பைக் கடமையாக்கிய அல்லாஹ் அவனுக்கு கொடுக்கும் பயிற்சி; நோன்பு பிடித்திருப்பவன் தன்னை மடையனாக்கும் எந்தச் செயலையும் செய்யக்கூட்டது என்பதே!.
عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ رِوَايَةً، قَالَ: " إِذَا أَصْبَحَ أَحَدُكُمْ يَوْمًا صَائِمًا، فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ، فَإِنِ امْرُؤٌ شَاتَمَهُ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ: إِنِّي صَائِمٌ، إِنِّي صَائِمٌ "
·         நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!" (புஹாரி: 1894, முஸ்லிம்)
எனவே ஒரு உண்மையான நோன்பாளி தன்னை மடையனாக்கும் சினிமாக்கள் படங்களைப் பார்க்கலாமா, ட்ராமா நாடகங்களை பார்க்களாமா, அவைகள் வெறும் பொய்களே, ஏன்! பட நடிகர்கள் ஒரு படக் காட்ச்சிக்காக செய்யும் அட்டகாசங்களை ஒருவன் தன் நடமுறை வாழ்க்கையில் கொண்டுவருகின்றான். என்றால் இவனை விட ஒரு முட்டால் இருக்க முடியுமா!!?? ஒரு பட நடிகன் ஒரே படத்தில் பல விதமாக கொண்டையை மேகாப் பன்னுகின்றான், ஒவ்வொரு காட்சிக்கும் ஆடைகளை மாற்றுகின்றான் இவை அனைத்தும் அவனது உண்மை வாழ்க்கையிலல்ல, ஆனால் அந்தப் படத்தைப் பார்க்கும் பைத்தியக்காரர்கள் தன் உண்மை வாழ்வில் அப்படி செய்ய முயற்சிக்கின்றனர். இதுவே இன்றைய உலகில் மனிதனை சீரழித்திருக்கின்றது.
எனவே ரமழான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்கும் நாம் இது போன்ற எல்லா மடமைத் தனங்களிலிருந்தும் எம்மைக் காத்து, எப்போதும் புத்தி, யோசினையோடு வாழப் பழகுவோமாக!!
 என்னைக் கேற்க, என்னைப் பார்க்க யாரிருக்கின்றார் என்ற உணர்வை உடைத் தெரிதல்;
பொதுவாக மனிதன் சீரழிந்து போவதற்கு இந்தக் கேள்விகளும் சிந்தனைகளுமே காரணம் எனலாம். ஏனெனில் இன்டர்னெட் தலங்களில் தனிமையில் அமர்ந்து ஆபாசத்தைப் பார்ப்பவன் என்ன நினைக்கின்றான்?, தன் கையில் இருக்கும் கையடக்கத் தொலைபேசிகளில் படங்களையும், பாடல்களையும், ஆபாசக் காற்சிகளையும், நிர்வாணப் புகைப் படங்களையும் மறைத்து வைத்துக்கொண்டு, தனிமையில் பார்த்து ரசிப்பவன் என்ன எண்ணுகின்றான்? அடுத்தவனை அடித்துவிட்டு முடியுமானால் திருப்பி அடித்துப் பார் என்று கூறும் ஒருவன் என்ன நினைக்கின்றான்?, இப்படி அநியாயங்களையும் அட்டகாசங்களையும் செய்யும் ஒவ்வொருவனும் என்ன நினைக்கின்றான்? என்றால்; எல்லோரும் நினைப்பது என்னைத் தட்டிக் கேட்க யாரால் முடியும், என்னை யார் கண்கானிக்கின்றார். என்ற உணர்வுகளே!!
இப்படிப்பட்ட மனிதனுக்கு ரமழான் மூலம் அல்லாஹ் வழங்கும் பயிற்சியே வியப்பிற்குறியது. அதுதான்; தன் வீட்டில், தன் உளைப்பில், தன் மனைவி சமைத்ததை அல்லாஹ்வைப் பயந்து விட்டுவிடுகின்றான், தன் பணத்தில் பாணத்தை வாங்கி அருந்த முடியுமென்றாலும் அல்லாஹ்வைப் பயந்து விடுகின்றான், தான் கரம்பிடித்த ஹலாலான மனைவி தன் பக்கத்தில் இருக்க அவளை ஒரு நோன்பாளி கட்டிப்பிடிப்பதில்லை, ஏன் அல்லாஹ் பார்க்கின்றான் என்ற உணர்வே. இப்படி அல்லாஹ் பார்க்கின்றான், அவன் தட்டிக் கேட்பான் என்ற உணர்வை இந்த நோன்பு மனிதனிடம் ஏற்படுத்தி மனிதனை புனிதனாக்க முயற்சிக்கின்றது இஸ்லாம். இப்படி அல்லாஹ்வுக்காக என்ற ஓர் உணர்வு நோன்பின் மூலம் ஏற்படுவதனாலேயே நோன்பின் விடையத்தில் அல்லாஹ் விஷேட கவனம் செலுத்துகின்றான். ஏனெனில் ஒருவன் தான் தொழுகையாளி, கொடையாளி, ஹாஜி, என்றெல்லாம் மனிதனுக்கு காட்டலாம், ஆனால் நோன்பாளி என்பதை அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் காட்டவும் முடியாது, மனிதனால் அறியவும் முடியாது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ، فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»
·         இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு நானே பிரதிபலன் கூழி அளிக்கிறேன். மேலும்,நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.  (புஹாரி:5927 ,முஸ்லிம்)
எனவே நாம் பிடிக்கும் நோன்பினூடாக அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தூய்மையான முறையில் அல்லாஹ்வுக்காக வாழப் பழகுவோமாக!!.
ஷைத்தான் விலங்கிடப்படல்;
மனிதனை எப்படியாவது வழி கெடுத்து நரகில் சேர்க்க வேண்டும் என்பதே ஷைத்தானின் ஆசையாகும். அந்த ஷைத்தானுக்கு அந்த அதிகார்த்தைக் கொடுத்த அல்லாஹ் ரமழான் மாத வருகையின் மூலம் அவனின் சூழ்ச்சிகளை முடக்கிவிடுகின்றான். அதனால் தான் கெட்டவர்களும் ரமழானில் நல்லவர்களாக, பள்ளிகளுடன் தொடர்புள்ளவர்களாக மாறிவிடுகின்றனர்.
 أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ، وَغُلِّقَتْ أَبْوَابُ جَهَنَّمَ، وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
·         இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்."  (புஹாரி:1899, முஸ்லிம்)
ஷைத்தன் விழங்கிடப்பட்டிருக்கும் மாத்தத்தில் நாம் பெறுகின்ற பயிற்சி ரமழானோடு நின்று விடுமாக இருந்தால் நாம் ரமழானில் நல்லவர்களாக இருப்பதில் என்னதான் பயனிருக்கப் போகின்றது. எனவே நாம் ரமழானில் பெறும் பயிற்சிகள் மூலம் ஷைத்தானை அடக்கும் வழிகளைக் கற்று, இறையச்சம் என்ற கேடயத்தை வரவழைத்துக் கொண்டு ரமழான் முடிந்த பிறகு அந்த கேடயத்தைப் பயன் படுத்தி ஷைத்தானை வெற்றிகொள்ள முயற்சிக்க வேண்டும். இதுவே எமக்கு ரமழான் மாத நோன்பைத் தந்த அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பதுமாகும்.
எனவே இந்த நோக்கத்தை சரியாக விளங்கி இந்த ரமழானை பயன் படுத்தமுயற்சிப்போமாக. அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் துனை புறிவானாக!!
 வஆகிரு தஃவானா அனில்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.
www.murshidabbasi.com





0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )