அன்று முதல் இன்று வரை உலகில் பல வடிவங்களில் விபசாரம் பல இடங்களிலும் சமூகத்தை சீரழித்து வருகின்றது. இத்தீய செயற்பாடு மனிதர்களின் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகின்றது. இதனால் குடும்பங்களில் பிரிவினைகள், கலாசார சீர்கேடுகள், நோய்கள், தந்தை யார் என அறிய முடியாத குழந்தைகளின் உருவாக்கம், அநாதை விடுதிகள் அதிகரிப்பு, கருக் கலைப்பு, குழந்தைக் கொலைகள் அதிகரிப்பு, விலை மாதர் விடுதிகள் அதிகரிப்பு, பேதைப் பெண்களின் தற்கொலைகள் அதிகரிப்பு என பல கோணங்களில் உலகில் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
பல தெய்வ மத நம்பிக்கையுடையவர்களிடம் உங்கள் மதங்களில் விபசாரம் செய்வது பாவம் எனச் சொல்லவில்லையா? எனக் கேட்பின் அவர்கள் சரியான பதிலைத் தருவதில்லை. அவர்கள், தமது மதங்களில் விபசாரம் செய்வது பாவம் எனக் கூறுகின்றனர். ஆனால் அதைத் தடுப்பதற்குப் பொருத்தமான தண்டனைகள் அவர்கள் தமது மதத்தில் இருப்பதாகக் கூறுவதில்லை. இதனால் அவ்வாறான சமூகங்களில் விபசாரம் சாதாரண நிகழ்வுகளாக நடை பெறுகின்றன. ஆனால் முன்னைய இறை நெறி நூல்களிலும் விபசாரத்திற்கான கடும் தண்டனைகள் இருந்தன. ஆனால் அவர்களின் குருமார்கள் அவற்றை மறைத்தே போதனை செய்து வந்ததுடன், அத் தண்டனைகளை நெறிநூல்களிலிருந்து மறைத்தும் விட்டனர். இதனால் அல்லாஹ் இறுதி இறைநெறியான அல்குர்ஆன் மூலம் விபசாரத்தைத் தடுப்பதற்கு பொருத்தமான சட்டங்களை இறக்கி வைத்தான். அல்குர்ஆன் விபசாரத்தை எவ்வாறு தடுக்கின்றது என்பதை அவதானியுங்கள்.
நீங்கள் விபசாரத்தை நெருங்காதீர்கள். நிச்சய மாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 17:32)
அல்லாஹ் அல்குர்ஆனில் விபசாரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம் என எச்சரிக்கிறான். அத்துடன் விபசாரம் ஒரு மானக்கேடான செயல் எனச் சுட்டிக் காட்டுகின்றான். நபி(ஸல்) அவர்கள் விபசாரத்தைப் பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.
விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. திருடன் திருடும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. மது அருந்துபவன் மது அருந்தும் போது, இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவ மன்னிப்புக் கோருதல் பின்னர் தான் ஏற்படுகிறது. (புகாரி : 6810)
ஒருவன் விபசாரம் புரிகின்ற போது இறை நம்பிக்கையாளனாக இருக்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேலும் கூறுவதைப் பாருங்கள்.
அல்லாஹ் தனது (அரியணையில்) நிழலே இல்லாத மறுமை நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்.
அல்லாஹ் தனது (அரியணையில்) நிழலே இல்லாத மறுமை நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்.
1. நீதிமிக்க ஆட்சியாளன்
2. இறை வணக்கத்திலேயே வாழ்ந்த இளைஞன்
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அவனது அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதர்.
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
5. இறைவழியில் நட்புக் கொண்ட இருவர்
6. அந்தஸ்த்தும் அழகும் உடைய ஒரு பெண் தன்னை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவன்.
7. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (புகாரி : 6806)
(இறைவனின் உண்மையான அடிமைகள்) விபசாரம் செய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன்:25:68)
நபி(ஸல்) அவர்கள் :
எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளயதான( மர்ம உறுப்பி)ற்கும் தம் இரு தாடைகளுக்குமிடையே உள்ளதான( நாவி)ற்கும் என்னிடம் உத்தர வாதமளிக்கின்றாரோ அவர்களுக்காக நான் சொர்க்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்.(புகாரி : 6807)
எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளயதான( மர்ம உறுப்பி)ற்கும் தம் இரு தாடைகளுக்குமிடையே உள்ளதான( நாவி)ற்கும் என்னிடம் உத்தர வாதமளிக்கின்றாரோ அவர்களுக்காக நான் சொர்க்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்.(புகாரி : 6807)
மனித சமுதாயமே! விபசாரம் செய்தல் மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகும். ஆகவே அவ்வாறான பாவங்களைச் செய்யாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்யாதவராக இருப்பின், உங்களை விபசாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது எனக் கருதினால் நல்ல கற்புடைய பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு, விபசாரம் செய்தவர்களுக்கு வழங்கப் பணித்துள்ள சட்டங்கள் யாவை என அறிந்து கொள்ளவில்லையா? அத்துடன் அல்லாஹ் மறுமையின் மிக நீதியான விசாரணையாளனாக இருக்கிறான். அல்லாஹ் பணித்துள்ள விபசாரச் சட்டங்களை அவதானியுங்கள்.
விபசாரியும், விபசாரனும், அவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார்(நேரில்) பார்க்கட்டும்.
விபசாரன், விபசாரியையோ, அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான். விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு யாவரையும்) விவாகம் செய்ய மாட்டான். இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. (அல்குர்ஆன் : 24:2,3)
நபி(ஸல்) அவர்கள் விபசாரத்திற்கான தண்டனை பின்வருமாறு செயற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்து விட்டவருக்கு நூறு சாட்டையடிகள் கொடுத்து, அவரை ஓராண்டு காலம் நாடு கடத்த வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட நான் கேட்டுள்ளேன். (புகாரி: 6831)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி இறைத் தூதர் ஆவார்கள். அவர்கள் மக்கள் நலனில் மிகவும் பரிவும் இரக்கம் மிக்கவராக இருந்தார்கள். அவர்கள் தானாக எதனையும் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளையே சட்டமாகச் செயற்படுத்திக் காட்டினார்கள். இஸ்லாம் மார்க்கம் திருமணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கொடுக்கும் தண்டனை….
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்று தம்மைக் குறித்தே கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு அவரின் முகத்தைத் திருப்பிக் கொண்டார் கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்து “”அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்து விட்டேன்” என்று சொன்னார். (மீண்டும்) அவரை விட்டு நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர் (திரும்பவும்) நபி(ஸல்) முகத்தைத் திருப்பிக் கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர்(தாம் விபசாரம் புரிந்து விட்ட தாக) தமக்கெதிராக தாமே நான்கு தடவை சாட்சியம் அளித்தபோது அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, “உமக்கு பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “”இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்றார். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், “”உமக்கு திருமணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார். நபி(ஸல்) அவர்கள், “”இவரைக் கொண்டு சென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று கூறினார்கள். (புகாரி : 6825)
ஆகவே திருமணம் செய்தவர் விபசாரம் செய்தால் அது நிரூபிக்கப்பட்டால் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவருக்கு கல்லெறி தண்டனை இறுதியாக வழங்கப்பட வேண்டும். இத் தண்டனை வழங்குவதன் மூலம் இறையச்சம் இல்லாத மக்கள் விபசாரத்தின் பக்கம் நினைத்துப் பார்க்காது இருக்கும் தடையாக அமைகின்றது. இது அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள சட்டமாகும். இதற்கு முன் அல்லாஹ் இதே சட்டத்தை வேதக்காரர்களாக இருந்த யூதர்கள் வைத்திருந்த வேதப் புத்தகங்களிலும் விதியாக்கி இருந்தான்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை(ரஜ்ம்) குறித்து “”தவ்ராத்” நெறிநூலில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபசாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு சாட்டையடி வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.
(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தைத் தழுவிய) அப்துல்லாஹ் பின் சலாம்(ரழி) அவர்கள், “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை(ரஜ்ம்) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவன் கல்லெறி தண்டனை பற்றி கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தான். அவனிடம் அப்துல்லாஹ் பின் சலாம்(ரழி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொல்ல, அவன் தனது கையை எடுத்தான். அப்போது அங்கே கல்லெறி தண்டனை வசனம் இருந்தது.
யூதர்கள், “இவர்(அப்துல்லாஹ் பின் சலாம்) உண்மையே சொன்னார்; முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கு மாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. (புகாரி : 6841)
இச்சட்டங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு முன் இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்களின் இறை நெறிநூல்களிலும் காணப்படுகின்றன. சிலர் சொல்வது போல் இந்த விபசாரச் சட்டங்கள் மிருகத்தனமானவை அல்ல. இவை எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட சட்டங்களாகும். விபசாரிகளுக்கு உறுதியான தண்டனைகள் வழங்காத சட்டங்கள் போலியானவைகளாகும். ஒழுக்கப் பண்புகளற்ற மிருகத்தனமான விபசாரம் சட்ட ரீதியான முறையில் நடைபெறவே, இப்போலிச் சட்டங்கள் வழி அமைக்கின்றன. இஸ்லாம் மார்க்கம் இவ்விபசாரச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன் பின்வரும் ஒழுக்கப் பண்புகளை படிப்படியாக நடைமுறைப் படுத்திக் காட்டியது. அவையாவன.
1. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பூரணமாக விசுவாசித்தால்.
2. கற்புடைய ஆணும், பெண்ணும் கவர்ச்சியை வெளிக்காட்டாத முறையில் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய ஆடை அணிதல்.
3. பெண்கள் தனியாக வெளியே செல்லாது, உரிய துணையுடன் செல்லல்,
4. ஆண்களும், பெண்களும் ஆபாசமான பார்வைகளிலிருந்து தம் பார்வைகளைத் தாழ்த்திப் பேணிக் கொள்ளுதல்.
5. அந்நிய ஆண்களுடன் உரிய துணைகள் இன்றி பெண்கள் தனித்திருப்பதைத் தவிர்த்தல்.
6. ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்தல்.
7. மதுபானம் அருந்துவதை முற்றாக தவிர்த்து வாழுதல்
8. ஆண்மையில்லாத கணவர்களிடமிருந்து பெண்களுக்கு விவாகரத்துச் செய்வதற்கு அனுமதியுண்டு.
9. விதவைப் பெண்களுக்கு தாம் விரும்பும் நல்ல கணவர்களை மறுமணம் செய்வதற்கான அனுமதி.
10. தவிர்க்க முடியாத காரணங்களினாலும், பொருளாதார வசதி காரணமாகவும், நீதமாக நடக்கக்கூடிய ஆண்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு திருமணங்கள் செய்வதற் கான அனுமதி.
2. கற்புடைய ஆணும், பெண்ணும் கவர்ச்சியை வெளிக்காட்டாத முறையில் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய ஆடை அணிதல்.
3. பெண்கள் தனியாக வெளியே செல்லாது, உரிய துணையுடன் செல்லல்,
4. ஆண்களும், பெண்களும் ஆபாசமான பார்வைகளிலிருந்து தம் பார்வைகளைத் தாழ்த்திப் பேணிக் கொள்ளுதல்.
5. அந்நிய ஆண்களுடன் உரிய துணைகள் இன்றி பெண்கள் தனித்திருப்பதைத் தவிர்த்தல்.
6. ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்தல்.
7. மதுபானம் அருந்துவதை முற்றாக தவிர்த்து வாழுதல்
8. ஆண்மையில்லாத கணவர்களிடமிருந்து பெண்களுக்கு விவாகரத்துச் செய்வதற்கு அனுமதியுண்டு.
9. விதவைப் பெண்களுக்கு தாம் விரும்பும் நல்ல கணவர்களை மறுமணம் செய்வதற்கான அனுமதி.
10. தவிர்க்க முடியாத காரணங்களினாலும், பொருளாதார வசதி காரணமாகவும், நீதமாக நடக்கக்கூடிய ஆண்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு திருமணங்கள் செய்வதற் கான அனுமதி.
இஸ்லாம் மார்க்கத்தில் முன்கூட்டியே விபசாரம் போன்ற ஒழுக்கக்கேடான செயற்பாடுகளின் பக்கம் மக்கள் சென்றுவிடாது தவிர்க்கக் கூடிய பல நடைமுறை வசதிகள் ஆண், பெண் இருபாலார் வாழ்விலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையும் தாண்டி விபசாரத்தின் கொடிய தீங்கினுள் நுழைப வர்களுக்கே இஸ்லாம் மார்க்கம் இவ்வாறான தண்டனைகளை வழங்கக் கட்டளையிட்டுள்ளது. விபசாரத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதை அவதானியுங்கள்.
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும், நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகின்றது. (புகாரி: 6243)
மனித நாகரீகத்தினை அழிக்கும் மிகவும் தீய செயற்பாடுகளில் ஒன்றே விபசாரமாகும். நபி(ஸல்) அவர்கள் உலக முடிவு நிகழ்வதற்கு முன் இடம் பெறும் சில நிகழ்வுகளை முன் அறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் விபசாரம் சம்பந்தமாகக் கூறிய ஹதீஃத்களில் ஒன்று இதுவாகும். அவதானியுங்கள்.
அன்ஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது:
எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபி மொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். நபி(ஸல்) அவர்கள் அறிவிக்க நான் கேட்டுள்ளேன். கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது அதிகமாக அருந்தப்படுவதும், விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்களின் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் அல்லது இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது” (புகாரி: 6808)
எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபி மொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். நபி(ஸல்) அவர்கள் அறிவிக்க நான் கேட்டுள்ளேன். கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது அதிகமாக அருந்தப்படுவதும், விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்களின் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் அல்லது இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது” (புகாரி: 6808)
விபசாரம் ஓர் மானக்கேடான மிக இழிவான செயல் ஆகும். இங்கு தீய செயலை ஒழிப்பதற்கான சட்டங்களை அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் முன்வைத்தான். இதனையே நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள்.
“”நபி(ஸல்) அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபசாரம் செய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்டார். (அங்கிருந்த) மனிதர்கள் கூச்சலிட்டு வாயை மூடுகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை என்னிடம் நெருங்கிவரச் செய்யுங்கள் எனக் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (அந்த வாலிபனிடம்) உனதுதாயுடன் எவனாவது விபசாரம் செய்வதை நீ விரும்புவாயா? எனக் கேட்க, அவர் இல்லை என்றார். (அதற்கு நபி(ஸல்) அவர்கள்) அவ்வாறு தான் ஏனைய மனிதர்களும் தங்களது தாய்மார்களுடன் விபசாரம் செய்வதை விரும்ப மாட்டார்கள் என்றார்கள்.
(யாராவது) உமது சகோதரியுடன் விபசாரம் புரிவதை விரும்புவாயா? எனக் கேட்க அவர் இல்லை என்றார். அதே போன்று தான் ஏனைய மனிதர்களும் தங்களது சகோதரிகளுக்கு அ(து நடப்ப)தை விரும்பமாட்டார்கள். விபசாரம் உனது மாமியுடன் ஒருவன் புரிவதை நீ விரும்புவாயா? எனக் கேட்க (வாலிபர்) இல்லை என்றார். நபி (ஸல்)அவர்கள் அவ்வாறு தான் ஏனையவர்களும் அது தங்களது மாமியாருக்கு விபசாரம் நடப்பதை விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
அது(விபசாரம்) உமது சிற்றன்னைக்கு நடப்பதை விரும்புவாயா? எனக் கேட்க (அந்த வாலிபர்) இல்லை என்றார். அதே போன்று தான் ஏனைய மனிதர்களும் தங்கள் சிற்றன்னைக்கு அது (விபசாரம்) நடப்பதை விரும்பமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு உனக்காக நீ வெறுப்பவை அனைத்தையும், மற்றவர்களுக்காகவும் வெறுப்பாயாக எனச் சொன்னார்கள். (உடனே அந்த வாலிபர்) அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திட பிரார்த்தியுங்கள் எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கையை அவரது நெஞ்சில் வைத்து யா அல்லாஹ்! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! இவருடைய மர்மஸ்தானத்தைப் பாதுகாப்பாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். (அதன் பின்னர்) அந்த (வாலிபர்) எந்தப் பாவத்தின் பக்கமும் திரும்பவில்லை என (அறிவிப்பாளர்) கூறுகிறார். (நூல் : தப்ரானி:7679)
உலகில் அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்து தமது சொந்த மனைவியை விடுத்து, இறையச்சமும் வெட்கமும் இல்லாது, வேறு அந்நிய பெண்களுடன் விபசாரத்தில் ஈடுபடும் மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்களில் சில மனிதர்கள் பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றனர். இதே அடிப்படையில் சில பெண்கள் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடமும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவ தற்கு செல்வதைக் காண்கிறோம். இதுவும் இஸ்லாத்தின் பார்வையில் பெரும் பாவமான ஈனச் செயலாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் இறைத் தூதர்களில் ஒருவரான லூத்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இவ்வாறான இயற்கைக்கு மாற்றமான முறையில் உடலுறவு கொள்ளுதல் இருந்ததாக கூறுகின்றான். இந்த மானக்கேடான செயலை அல்லாஹ் பின்வருமாறு கண்டிக்கிறான்.
மேலும் லூத்தை(அவர் சமூகத்தாரிடையே) நபியாக அனுப்பினோம்) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார். “”உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைகிறீர்கள்? “மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தவராகவே இருக்கிறீர்கள்.”
(லூத்தின் சமூகத்தினர்) நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கின்றார்கள். இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதும்) அவரது சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை.
எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத் தவிர அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின்தங்கி விட்டாள். இன்னும் நாம் அவர்கள் மீது(கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்னவாயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (அல்குர்ஆன் : 7:80- 84)
அன்றும் இன்றும் உலக நாடுகளில், இறைவன் மீது நம்பிக்கையில்லாத சமுதாயத்திலுள்ள அநாகரிகமான மக்கள் கூட்டத்தினர் உள்ளனர். அவர்கள் தமது மனைவிமார்களைப் புறம் தள்ளி விட்டு ஆண்களிடம் தமது உடல் ரீதியான இச்சைகளைத் தணித்துக் கொள்கின்றனர். இதனால் சமுதாயத்தில் குழப்பங்களும், சீரழிவுகளும் மலிந்து காணப்படுகின்றன. இந்த அநாகரிகமான மனிதர்கள் பாடசாலைக்குச் செல்கின்ற சிறு பிள்ளைகளையும் விட்டு வைக்கவில்லை. தமது காம இச்சையைத் தணிக்க பயன்படுத்தி, உலகினை இயற்கைக்கு மாற்றமான அநாகரிகமான சமுதாயமாக மாற்றியுள்ளனர். இன்று, அல்லாஹ்வினால் ரத்துச் செய்யப்பட்ட மனித கருத்துக்கள் உள் நுழைந்துள்ள நெறிநூல் தொகுப்புகளை சில மக்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறைநெறியாக தப்பாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் வைத்துள்ள இந்நெறிநூல் தொகுப்புகளிலும், சமயங்களிலும் இத்தீய செயற்பாடுகள் கண்டிக்கப்பட்டே உள்ளன. ஆனால் அவர்கள் குருமார்களினாலும், அரசர்களினாலும் உருவாக்கிக் கொண்டுள்ள சட்டங்கள், சம்பிரதாயங்கள், உற்சவங்கள், அதிலுள்ள கேளிக்கைகளிலும், ஆடம்பரமான களியாட்டங்களிலும் தமது பெற்றோர் வழிப்பட்ட மதம் என்ற பெயரால் கண்மூடிக் குருட்டுத்தனமாக நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இதனால் நன்மை எது? அல்லது தீமை எது? எனப் பிரித்தறிய முடியாதுள்ளது.
இவ்வாறான சிந்தனையற்ற அறியாமை என்ற மதவெறியே அவர்களுக்கு தீமைகள் நன்மைகளாக அழகானவைகளாக காண்பதற்கு அடிப்படையாக அமைகின்றது. அதனால் அவர்களின் பெற்றோர் வழிபட்டவை தவறானவை என அறிந்தும் அவற்றையே பின் தொடர்கின்றனர். இதன் அடிப்படையலேயே தற்போதும் பல தெய்வ நம்பிக்கையுடைய மக்களும் ஆய்வின்றி, ஆதாரமின்றிப் பின் தொடர் கின்றனர். இதன் காரணமாகவே ஏக இறைவன் அருளிய இறுதி இறை வாழ்க்கை நெறியான அல்குர் ஆனைப் பார்க்காது, ஆராயாது விடுகின்றனர். இதனால் மனிதன் செய்து வருகின்ற தீமைகளைச் சுட்டிக் காட்டும் இறுதி இறைநெறி நூலைப் புறந் தள்ளுகின்றனர். அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை அவமதிக்கின்றனர். இதனால் உலகிலுள்ள அதிகமான மக்கள் இம்மையிலும், மறுமையிலும் தம்மை அறியாமல் இறைவனின் அருட்கொடைகளை இழந்து நட்டத்தை அடையப் போகிறார்கள். அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர்வழி காட்டிப் பாதுகாக்க வேண்டும்.
MTM. முஜீபுதீன், இலங்கை
0 comments:
Post a Comment