Aug 25, 2014

பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்

 
                ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான். அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தினான்.
 
                நடுநடுங்க வைக்கும் நரக வேதனையை பற்றி நாளெல்லாம் நமது அறிஞர்களின் பயான்களிலிருந்து கேட்டிருந்தாலும் கவனக்குறைவாக வாழ்வதே நமது நிலையாக கொண்டிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் அழித்துவிடுமளவு பாவம் செய்த என் அடியார்களே! உங்கள் கடந்த கால பாவங்களை விட்டும் உங்களை மன்னிக்கிறேன் என்று இறைவன் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறான். ஆனாலும் அந்த அழைப்பை அலட்சியம் செய்துவிடுகிறோம். இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. எனவே தமது பாவங்களை போக்கும் நல்லறங்களை கண்டறிந்து மறுமை வெற்றிக்கு வழி காண்போம்.
 
திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நமது பாவங்களை அழிக்கும அழகிய நல்லறங்களை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அந்த நல்லறங்களை செய்து மறுமை வெற்றிக்கு வித்திடுவோம்.
திக்ர் செய்தல்
 
அல்ஹ்வுக்கு மிகவும் பிரியான இரண்டு எளிமையான வாசகங்கள். அவை நன்மை தராசில் கனமானவையாகவும். பாவங்களை அழிப்பவையாகவும் இருக்கும்.
 
6406 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ
اللَّهِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ رواه البخاري
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எüதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப் படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.
நூல் : புகாரி 6406
 
6405 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாüல் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கட-ன் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர-), நூல் :புகாரி 6405
உளூ மற்றும் தொழுகை
ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும் உபரியான தொழுகைக்காகவும் நாம் செய்யும் உளூவின் மூலம் பாவங்களை மன்னிக்கப்படும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
361 عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ رواه مسلم
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடரிரிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரரிலி), நூல் : முஸ்லிம் (413)
 
பள்ளிவாசலுக்கு செல்லுதல்
 
கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாசலுக்கு சென்றால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பாவம் அழிக்கப்படும்.
477 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي يَعْنِي عَلَيْهِ الْمَلَائِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ رواه البخاري
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிட வும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் "ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்கüல் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ü வாசலுக்கு வந்தால் அவர் பள்ü வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்üவாச-ல் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெüயேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்üக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், "இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.
நூல் :புகாரி 477
 
தொழுகைக்காக காத்திருத்தல்
 
ஐவேளைத் தொழுகைக்காக விரைவாக சென்று அதை நிûவேற்ற காத்திருந்தால் அந்த நேரத்தில் வானவர்கள் நமக்காக பாவமன்னிப்பு தேடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கிறார்கள்.
நூல் : புகாரி (445)
               
 இவ்வாறு  முறையாக உளூ செய்வதினாலும் தொழுவதினாலும் நமது சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் ஒரு தொழுகையிலிருந்து அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது வானவர்களே அல்லாஹ்விடம் நமக்காக துஆ செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
ஐவேளைத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை
கடமையான ஐவேளைத் தொழுகைகை சரிவர நிறைவேற்றிவருவதன் மூலமும் ஜுமுஆத் தொழுகை நிறைவேற்றுவதன் மூலமும் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ الْخَمْسُ وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُنَّ مَا لَمْ تُغْشَ الْكَبَائِرُ رواه مسلم
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ விரிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.
நூல் : முஸ்லிம் (394)
 
நோன்பு மற்றும் இரவில் நின்று வணங்குதல்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري
எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரரிலி), நூல் :புகாரி (38)
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரரிலி), நூல் :புகாரி (37)
 
1901 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் "லைலத்துல் கத்ர்' இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிரி), நூல் : புகாரி (1901)
 
ஹஜ் மற்றும் உம்ரா செய்தல்
 
இஸ்லாத்தின் முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை செய்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று ஆகிவிடுவார்.
قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிரி), நூல் : புகாரி (1521)
 
இடையூறுகளை நீக்கினால் மன்னிப்பு
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَذَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார்.  அவரது  இந்த   நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கü-ருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிரி), நூல் : புகாரி (2472)
 
தர்மம் செய்தல்
 
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌالبقرة : 271
 
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:271)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
யார் சத்தியம் செய்யும்போது "லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!' என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) "லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், "வா சூது விளையாடுவோம்'' என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிரி), நூல் : புகாரி (4860)
ஏழையின் கடனை தள்ளுபடி செய்தல்
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ فَكَانَ يَقُولُ لِفَتَاهُ إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا قَالَ فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ رواه البخاري
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூ-க்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வா-பரிடம், "(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்'' என்று சொல்-வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து  அவன் மன்னித்து விட்டான்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலிரி), நூல் : புகாரி (3480)
 
நன்மையை ஏவி தீமையை தடுத்தல்
 
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ الْأَعْمَشِ قَالَ حَدَّثَنِي شَقِيقٌ قَالَ سَمِعْتُ حُذَيْفَةَ قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفِتْنَةِ قُلْتُ أَنَا كَمَا قَالَهُ قَالَ إِنَّكَ عَلَيْهِ أَوْ عَلَيْهَا لَجَرِيءٌ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلَاةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ وَالْأَمْرُ وَالنَّهْيُ قَالَ لَيْسَ هَذَا أُرِيدُ وَلَكِنْ الْفِتْنَةُ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ قَالَ لَيْسَ عَلَيْكَ مِنْهَا بَأْسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا قَالَ أَيُكْسَرُ أَمْ يُفْتَحُ قَالَ يُكْسَرُ قَالَ إِذًا لَا يُغْلَقَ أَبَدًا قُلْنَا أَكَانَ عُمَرُ يَعْلَمُ الْبَابَ قَالَ نَعَمْ كَمَا أَنَّ دُونَ الْغَدِ اللَّيْلَةَ إِنِّي حَدَّثْتُهُ بِحَدِيثٍ لَيْسَ بِالْأَغَالِيطِ فَهِبْنَا أَنْ نَسْأَلَ حُذَيْفَةَ فَأَمَرْنَا مَسْرُوقًا فَسَأَلَهُ فَقَالَ الْبَابُ عُمَرُ رواه البخاري
 
ஹுதைஃபா பின் அல்யமான் (ர-) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ர-) அவர்கüடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ர-) அவர்கள், "உங்கüல் யார் (இனி தலைதூக்கவி ருக்கும்) ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்?'' என்று கேட்டார்கள். நான்,  "நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்'' என்று சொன்னேன். உமர் (ர-) அவர்கள், "(அதைக்கூறுங்கள்)நீங்கள்தான் "நபி (ஸல்) அவர்கüடம்' அல்லது "(நபி (ஸல்) அவர்கüன்) அக்கூற்றின் மீது' துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள்'' என்று சொன்னார்கள்.
 
நான், "ஒரு மனிதன் தன் குடும்பத்தார், தனது சொத்து, தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (இறைவழிபாட்டி-ருந்து தனது கவனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்கüன் உரிமைகüல் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை (புரியும்படி கட்டளையிட்டு)-தீமை (யி-ருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும்'' எனளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகனச் சொன்னேன்.
நூல் : புகாரி 525

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )