நம்மில் பலர் சிறியதொரு துன்பம் வந்தால்கூட அதையே நினைத்து நினைத்து தங்களையே மாய்த்துக் கொள்(ல்)கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை எப்படி எதிர்கொண்டார்கள்? நபிகளாரின் வாழ்க்கையில் துன்பத்திற்கா பஞ்சம்?
நபிகளார் பட்ட துன்பத்தை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்கிற அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் பெரும் துன்பங்கள் இடம் பெற்றிருக்கிறது. அவைகளையெல்லாம் எந்த முறையில் அணுகினார்கள்.
அந்த வழிமுறைகளை நாமும் கண்டறிந்தால் துன்பங்களை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடம் வருவதோடு எப்படிப்பட்ட துன்பமானாலும் ஒரு போதும் துவண்டு விட மாட்டோம்.
முன்னோர்களின் சிரமத்தை நினைத்துப் பார்த்தல்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ பின் ஹாபிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும் போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்" என்று கூறினார். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்" என்று கூறினேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கற்டம் சென்று அதைத் தெரிவித்தேன்.
உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர் தான்" என்று பதிலற்த்தார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)" என்று பதிலற்த்தார்கள். நான், "அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளா விட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத் தூதர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்துக் கொண்டார்கள்" என்று கூறினார்கள். (நூல் புகாரி 3150)
நமக்கு நேரும் துன்பத்தினை சகித்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் அறிவுரை கூறாமல் எப்படி அதனை சகித்துக் கொள்ள வேண்டும் என்று நமக்கு கற்றுத் தருகிறார்கள். சிலர்கள் நபிகள் நாயகத்தை அநீதியாக நடந்து கொண்டார் என்று குறை கூறுவது நபிகள் நாயகத்தை பெரிதும் மனவேதனைக்கு உள்ளாக்குகிறது. உடனே இவ்வாறு குறைமதியுடன் பேசியவர்களோடு மல்லுக்கட்டவில்லை. வாய்க்கு வந்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்யவில்லை. மாறாக தமக்கு முன்னர் வாழ்ந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துன்பத்தை நினைத்து பார்க்கிறார்கள். தன்னையெல்லாம் விட அதிகளவில் மக்களால் துன்பப்பட்டிருக்கிறார் அப்படியிருந்தும் அவைகளை சகித்துக் கொண்டாரே. அவர் பட்ட துன்பத்துக்கு முன்னால் இதெல்லாம் ஒரு துன்பமா? என்று தம்மனதை தானே தேற்றிக் கொள்கிறார்கள்.
இது போன்ற துன்பங்களை நாம் அனுபவிக்கும் போது நமக்கு முன்னர் வாழ்ந்த நபிமார்கள் அடைந்த துன்பங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏனைய ஸஹாபாக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை அசை போட வேண்டும். அவர்கள் பட்ட துன்பத்திற்கு முன்பு நாம் அடைந்ததெல்லாம் ஒரு துன்பமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அவ்வாறு எண்ணிப் பார்க்கும் போது நம்முடைய துன்பம் ஒரு துன்பமாகவே தெரியாது. மனதி ருந்து பாரத்தை, சுமையை இறக்கி வைத்தாற்போல நம்மனது இறகைப் போல இலகுவாகி விடும்.
அல்லாஹ்வின் உதவியை நம்புதல்:
நமக்கு என்ன ஒரு துன்பம் நேர்ந்தாலும் அதிலேயே மனதை உழல விடாமல் இறையருளை நம்பி இருக்க வேண்டும். நிச்சயம் இந்த துன்பத்தை இறைவன் நீக்குவான் என்ற நம்பிக்கை நம்மனதில் நீங்காமல் இடம் பெறவேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறைவனின் உதவியின் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது. நமது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தலைபோகிற துன்பம் தாக்கிய போதும் கூட அதை அசராமல் எதிர்கொண்டார்கள். அவைகளை கண்டு மலைத்துப் போகவில்லை. இறையுதவியின் மீது நபிகளார் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்ததே இதற்கு காரணம். இதை பின் வரும் சம்பவம் தெளிவாக உணர்த்துகின்றன.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (போரிலிருந்து) திரும்பிய போது அவர் களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்கற்ன் நிழல் தேடி (பல திசைகற்லும்) பிரிந்து போய் விட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தமது வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண் விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்கவிட்டிருந்த எனது) வாளை எனக்கெதிராக உருவிக் கொண்டார். நான் கண் விழித்துப் பார்த்தபோது இவரது கையில் உறையிலிருந்து உருவிய (எனது) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்றுமுறை) கூறினேன்" என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும்கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை. (நூல்: புகாரி 2910)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பாராத விதத்தில் அவர்களது உயிருக்கே உலைவைக்கிற ஆபத்து ஏற்படுகிறது. உன்னுயிரை எடுக்கப்போகிறேன் இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? என்று எதிரி கேட்கும் போது கொஞ்சம் கூட சலைக்காமல் எவ்வித சலனமுமில்லாமல் அல்லாஹ் என்னை காப்பாற்றுவான் என்று நம்பிக்கை தெரிக்க பேசுகிறார். இதைப் போன்று நாமும் இறையுதவியின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக மாறவேண்டும்.
ஆனால் இன்றைய முஸ் ம்களின் நம்பிக்கை எப்படியிருக்கிறது என்று பார்த்தால் தங்களுக்கு சிலவருடமாக குழந்தை இல்லையென்றால் தங்களை படைத்த இறைவனின் மீது நம்பிக்கை இழந்து அவனால் படைக்கப்பட்ட சாதாரண மனிதர்களிடம் போய் முறையிடுகிறார்கள். நோய் ஏற்பட்டாலும் இவர்களைத்தான் அழைத்து துன்பத்தை நீக்குமாறு கெஞ்சுகிறார்கள். கால் சறுக்கி கீழே விழுந்தாலும் இந்த அவ்லியாக்களை? அழைக்க மறப்பதில்லை. தங்களுக்கு துன்பம் நேரும்போது சாதாரண மனிதர்களின் உதவியை நம்புகிற அளவுக்கு கூட இவர்கள் இறையுதவியை நம்பாததுதான் நம்மை மிகவும் மனம் வருந்தச் செய்கிறது.
''அவனுக்குத் தீங்கு ஏற்படுமானால் அப்போது அவன் நம்பிக்கையிழந்தவனாகவும், நிராசையுடையவனாகவும் இருக்கிறான்''. (அல்குர்ஆன் 41:49)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறைவனின் உதவியை எந்தளவிற்கு நம்பியிருந்தார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவமும் ஒரு சான்று.
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) ... அப்போது (நடந்ததை) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:
உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதர் தான்" என்று பதிலற்த்தார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)" என்று பதிலற்த்தார்கள். நான், "அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்" என்று பதிலற்த்தார்கள். நான், " ‘விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம்’ என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?" எனக் கேட்டார்கள். நான், "இல்லை" என்று பதிலற்த்தேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்" என்று கூறினார்கள். பிறகு நான் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று, "அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ் வின் தூதரல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்" என்று கூறினார்கள். நான், "நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். நான், "அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். நான், "அவர்கள் நம்மிடம், ‘நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்’ என்று சொல்ல வில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; (சொன்னார்கள்.)
ஆனால், ‘நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்’ என்று உங்களிடம் சொன்னார்களா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)" என்று பதிலற்த்தேன். அதற்கு அவர்கள், "நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்" என்று கூறினார்கள். (நூல்: புகாரி 2732)
இதுவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துன்பத்தில் அல்லல்படுகிற ஒரு சம்பவமே. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாரைப்பார்த்து நீங்கள் இறைத்தூதர் இல்லையா? பிறகேன் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க வேண்டும்? என்று கேட்கிறார்கள். இந்த வார்த்தை நபிகளாரை உண்மையிலேயே காயப்படுத்தியிருக்கும். தன்னை இறைத்தூதர் என்று நம்பிய ஒருவரே இவ்வாறு கேட்பது மனதை வேதனைப்படுத்தக்கூடிய விஷயமே.
இருப்பினும் இந்த நேரத்தில் நபிகள் நாயகம் நம்பிக்கை தளராமல் இதை என்விருப்பப்படி செய்யவில்லை. இறைவனின் கட்டளைப்படியே செய்தேன் இது விஷயத்தில் இறைவன் எனக்கு உதவி செய்வான் என்று கூறுகிறார்கள். இந்தளவிற்கு எந்த துன்பம் நம்மை ஆட்டிப்பார்த்தாலும் ஆடிவிடாமல் இது விஷயத்தில் என் இறைவன் நிச்சயம் எனக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிய வேண்டும்.. அவ்வாறு நம் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தால் எந்த துன்பமும் நம்மை எதுவும் செய்து விடாது.
துன்பத்திற்கான கூலியை நம்புதல்:
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை தொழுகை தர்மம் போன்ற வணக்க வழிபாடுகளை செய்வதற்கு மட்டும் இறைவன் கூ தருவதில்லை. அதைப்போல் நமக்கு அவ்வப்போது ஏற்படுகிற துன்பத்துக்கும் நற்கூ யை வழங்குகிறான். நமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது அதையே நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல் அதற்கான கூ யை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு துன்பத்தை அணுகும் போது எந்த துன்பத்தையும் இன்முகத்தோடு ஏற்பவர்களாய் மாறுவோம். எதையும் தாங்கும் இதயம் பெற்றவர்களாக ஆகுவோம்.
நாம் பெறுகின்ற துன்பத்திற்கும் கூலியுண்டு
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி 5640)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அவர்களை(ப் பரிவோடு) எனது கையால் தொட்டு, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!" என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் ஒருவனே சிரமப்படுகிறேன்" என்றார்கள். நான், "இத்துன்பத்தின் காரணமாகத் தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டு தானே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, "ஒரு முஸ்ரி முக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு எந்தத் துன்பமாயினுலம் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை" என்றார்கள். (நூல்: முஸ்லிம் 5023)
கால் முள் குத்துதல் என்ற சிறிய துன்பமானாலும் இதற்கும் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு அளப்பரிய கூ வழங்குகிறான். நமக்கு வரக்கூடிய நோய் நொடி, பிரியமானவர்களின் மரணம், வறுமை, வியாபாரத்தில் நஷ்டம், போன்ற சோகங்கள் வந்து தாக்கும் போதெல்லாம் என் இறைவன் இதன் மூலம் என் பாவங்களை மன்னிக்கின்றான் என்பதை நினைவில் கொண்டால், துன்பம் கூட இன்பமாய் அழகான ரணமாய் மாறுவதை உணரலாம்.
பிறரின் உரிமையை விளங்குதல்:
சில சமயங்களில் பிறர் நம்மிடத்தில் தகாத முறையில் நடந்து கொள்ளக்கூடும். பிறர் நம்மை திட்டிவிடுவார். மனம் புண்படும்படி தகாத வார்த்தைகளை பேசி கடுமையாக நடந்து கொள்வார். இது மாதிரியான சந்தர்ப்பத்தில் நியாய உணர்வுடன் சிந்தித்து தவறு நம் பக்கம் இருப்பின் இது என் தவறு தான். அவர் இவ்வாறு நடந்து கொள்ள நான் தான் காரணம். தவறு என்னிடத்தில் நிகழ்ந்திருப்பதினால் இப்படி நடந்து கொள்ள அவருக்கு உரிமையுண்டு என்பதை விளங்க வேண்டும். அதை விளங்கினால் நம் மனம் தேவையில்லாமல் புண்படுவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளலாம். பின் வரும் செய்தி ருந்து இதை விளங்கமுடிகிறது.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினர். நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது’என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், ‘அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை’என்றார்கள். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள். (நூல்: புகாரி 2306)
அல்லாஹ்வின் தூதருக்கு கடன் கொடுத்தவர் கடுமையான வார்த்தைகளால் பேசி கொடுத்த கடனை திருப்பிக் கேட்கின்றார். இதை நபிகளார் எப்படி எடுத்துக் கொள்கின்றார்கள் என்பதை பாப்ருங்கள். கடன் கொடுத்தவருக்கு இப்படி கூற அனுமதியுண்டு. எனவே அவரை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று ரொம்ப ஈஸியாக எடுத்துக் கொள்கின்றார்கள். தன் மீது அவருக்கு உள்ள உரிமையை விளங்கி செயல்படுகின்றார்கள். இதனால் வீணான மனஉளைச்சல் படவில்லை. நாமும் நபிகள் நாயகத்தின் இந்த அணுகுமுறையை கையாண்டால் வீணான புலம்பலை தவிர்க்கலாம்.
இறுதியாக...
மேற்கூறப்பட்ட செய்திகளை படித்தவுடன் எந்த துன்பம் வந்தாலும் அதற்காக சிரித்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? வேறு எந்த ரியாக்ஷனையும் வெளிப்படுத்தக் கூடாதா? என்று நம்மில் சிலருக்கு நினைக்கத் தோன்றும். நிச்சயம் அப்படி கூறவில்லை மாறாக துன்பம் ஏற்படும் போது மார்க்கம் அனுமதித்த காரியங்களை தாரளமாக செய்யலாம். மார்க்க வரம்பிற்கு உட்பட்டு, மார்க்கம் நமக்கு விதித்த எல்லையை மீறாத வகையில் நமது துன்பத்தை தாராளமாக வெளிப்படுத்தலாம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன் மகன் இறந்த போது கண்ணீர் விட்டு அழுது, தன் துன்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். இதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கிறது.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்துவந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம்.
அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?" என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அவ்ஃபின் புதல்வரே!" என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள்.
பிறகு "’கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்" என்றார்கள். (நூல்: புகாரி 1303)
துக்கம் மேலிடும் போது கண்ணீர் விட்டு அழுவதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கிறது. ஆனால் துக்கம் அனுஷ்டித்தல் என்ற பெயரில் மொட்டை அடித்தல், ஒப்பாரி வைத்து அழுதல், தலைவிரி கோலமாய் இருத்தல் போன்ற பிறமதக் கலாச்சாரத்தை ஒரு போதும் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காது. அதே போல் துன்பம் ஏற்படும் போது தம்மை தாமே துன்புறுத்திக் கொள்வதையும் சிலர் செய்கிறார்கள். கையை கிழித்துக் கொள்கிறார்கள் யாருடனும் பேசாமல் சாப்பிடாமல் உம்மனாமூஞ்சியாக இருப்பது போன்ற முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இவைகளையெல்லாம் தவிர்த்து விட்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விதத்தில் தமக்கு ஏற்பட்ட துன்பங்களை அணுகினார்களோ அந்த வழிமுறைகளை நாமும் தவறாமல் கடைபிடிப்போமாக.
அன்புடன்,
நாஷித் அஹமத்
0 comments:
Post a Comment