அஸ்ஸலாமு அழைக்கும்,
"இஸ்லாம் கூறும் ஒழுக்கம்"
கட்டுரைப் போட்டி நடத்த தக்வா டிரஸ்ட் முடிவு
இளையான்குடி தக்வா டிரஸ்ட்-ன் ஆண்டு நிர்வாகக்குழு கூட்டம் 27-01-2013 அன்று டிரஸ்ட்-ன் தலைவர் எ.சையத் மாலிக் தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் டிரஸ்ட்-ன் 2012-2013 ஆண்டுக்கான இதுவரையிலான வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. இன்ஷா அல்லாஹ் வருகின்ற மே - மாதம் "இஸ்லாம் கூறும் ஒழுக்கம்" என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
2. இளையங்குடியில் ஏகத்துவ பிரச்சாரத்தை அதிகப்படுத்தும் விதமாக மாதந்தோறும் பிட் நோட்டீஸ் மற்றும் வால் போஸ்டர் மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது.
3. தக்வா டிரஸ்ட்-ன் சார்பில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய நூலகத்தை இளையான்குடி மக்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
4. ஏகத்துவ பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கு இளையான்குடியில் உள்ள தௌஹீத் கொள்கை சகோதரர்கள் ஒன்றிணைந்து செயல்பட தக்வா டிரஸ்ட் கேட்டுக்கொள்கிறது.
5. அல்லாஹ்வுக்கு இணைவைக்ககூடிய வகையில் உள்ள மொவ்லீதை பள்ளிவாசல்களில் ஓதுவதை தடை செய்ய வேண்டும் என தக்வா டிரஸ்ட் வேண்டுகோள் விடுக்கிறது.
நிர்வாகக்குழு கூட்டத்தில் பொருளாளர் த.ம. ஷேக் முஹம்மது, செயலாளர்(பொறுப்பு) ச.ப.அஸ்கர் அலி கான், செயற்குழு உறுப்பினர்கள் ச.இப்ராகிம், ம. அஷ்ரப் அலி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment