Nov 5, 2010

அமைப்பு

                          ஐரோப்பாவிலுள்ள அன்றைய அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் தங்கள் பார்வைகளை அல்குர்ஆனில் செலுதிருப்பர்களனால் தங்கள் அறிவியல் பயணத்தின் பாதையில் அறிவுச் சுடரை பிரகாசிக்க வைக்கும் அல்குரானின் வெளிச்சத்தை கண்டு அதிசயித்து போயிருப்பார்கள்.

                      ஒட்டகம் எவ்வாறு படைகப்படுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது ? மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?  பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?(என்பதையும் பார்க்க வேண்டாமா?)
                                                                                                                        அல்குர் ஆன் 88:17-20

                     ஒட்டகத்தை பற்றி அகன்று நீண்டு கிடக்கும் வானத்தை பற்றி, ஓயாது சுழன்று கொண்டிருக்கும் பூமியைப் பற்றி, அந்த பூமி பொதிந்து நிற்கும் மலைகளைப் பற்றி ஆராயச் சொல்லி மனிதனின் அறிவுக் கண்களை அல்குர் ஆன் திறந்து விடுகின்றது.

                    (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன் இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.
                                                                                                                         அல்குர் ஆன் 55:17


                   கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.
                                                                                                                          அல்குர் ஆன் 70:40

                   பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில உதித்து மறு இடத்தில மறைந்து விடும். ஒரு கிழக்கு, ஒரு மேற்கு தான் இருக்கும்.

                  பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

            பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர் ஆன் பேசுகிறது.

                 பூமி உருண்டையானது என்ற புதுக் கருத்தை, புரட்சிக் கருத்தை முதன் முதலில் புரிய வைத்தது உலகப் பொதுமறையான அல்குர் ஆன் தான்.

             மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
                                                                                                                        அல்குர் ஆன் 55:33
            பரந்த வானப் பெருவெளியில், பறைவகள் பறப்பதைக் கண்டு மட்டுமே பழக்கப்பட்ட மனித சமுதாயத்தை பார்த்து, ' இந்த ஆகாய வெளியில் பலம் கொண்ட காலங்கள் மூலம் பறந்து செல்லுங்கள்' என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பறை சாற்றியது இந்தக் திருக்குர் ஆன்.


                 இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது. 
                                                                                                                        அல்குர் ஆன் 55:19,20

                 கடல் ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத அன்றைய மக்களிடம் திருக்குர் ஆன் கூறிய இந்த வார்த்தைகள் இன்றைய காலத்துக் கண்டுபிடிப்பானது. 

                 இந்த வசனங்களிலிருந்து நாம் கிடைக்கப் பெரும் உண்மை, அறிவியலுக்கு திருக்குர் ஆன் தடை போடவில்லை என்பதே! மாறாக அறிவு ஆராய்ச்சிக்கு ஆர்வத் தீயை மூட்டி அதன் ஒளி வெள்ளத்தை உலகம் முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. 

                அறிவியல் ஆராய்ச்சிக்கு ஆர்வமூட்டும் வசனங்கள் அல்குர் ஆன் நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. தலைப்பிற்காக இங்கு ஓரிரு வசனங்களை மட்டும் சுட்டிக் காட்டுகின்றோம். 




0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )