Nov 6, 2010

பெருநாள் தொழுகை

 திடலில் தொழுகை:
                                   நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் முசல்லா என்ற திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள்.
                                        (அறிவிப்பவர் : அபூசயித் அல்குத்ரி(ரலி) நூல் : புகாரி 956 முஸ்லிம் 1612) 
                                                     நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக் அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் எதையும் தொழவில்லை.
                                        (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி1431 முஸ்லிம் 1616)

தொழும் முறை:
                                நபி (ஸல்) அவர்கள் முதல் ரக் அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாம் ரக் அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிரா அத்திற்கு முன்பு  கூறுவார்கள். 
                                          (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ( ரலி) 
                                          நூல்கள் : அபூதாவுத் 971, தராகுத்னி, பைஹகி) 

பெருநாள் தொழுகைக்குப் பிறகு சாப்பிடுதல்:
                                நோன்பு பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிடமாட்டார்கள்.
                                            (அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : இப்னுகுஸைமா 1426)

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )