நோக்கம்:
'(குர்பானி பிராணியான) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடம் உள்ள (இறை) அச்சமே அவனை சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்கு பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!'
திருக்குர் ஆன் 22:37
குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை:
'நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையை கண்டால் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடியை வெட்ட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) நூல் : முஸ்லிம் 3999)
பிராணியின் தன்மைகள்:
'தெளிவாக தெரியும் நொண்டி, தெளிவாக தெரியும் கண்பார்வை குறைவு, தெளிவாக தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடு உள்ளவைகளை குர்பானி கொடுக்க கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
(அறிவிப்பவர் : பராபின் ஆசிப் (ரலி) நூல் திர்மீதி : 1417)
'உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.'
(அறிவிப்பவர் : அலி (ரலி) nool : நஸயி 4301)
பிராணிகளை அறுக்கும் முறை:
'நபி (ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அதைத் தன் கையால் அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும் தக்பீரும் கூறினார்கள்'.
(முஸ்லிமின் மற்றுமொரு அறிவிப்பில் 'பிஸ்மில்லாஹி வல்லஹு அக்பர்' என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது).
எத்தனை நாட்கள் கொடுக்கலாம்:
' ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும், அதற்கு பிறகு உள்ள மூன்று நாட்கள் வரை குர்பானி கொடுக்கலாம்.
தஸ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்கு உரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.
(arivippavar : ஜூபைர்(ரலி) நூல் : தாரகுத்னி )
குர்பானி இறைச்சியை பங்கிடுதல்:
(குர்பானி பிராணியிலிருந்து) அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்கதவருக்கும் உண்ணக் கொடுங்கள்.
திருக்குர் ஆன் : 22:36
நபி (ஸல்) அவர்கள் தாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்கள்.
(அறிவிப்பவர் : அதாபின் யாசர் நூல் : திர்மிதி, இப்னுமாஜா )
0 comments:
Post a Comment