Jul 29, 2011
நோன்பு கால இரவில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டதே!
நோன்பாளிகளின் கவனத்திற்கு!
நிய்யத்து வைத்தல்: -
எல்லாச் செயல்களும் எண்ணத்(நிய்யத்)தின் அடிப்படையிலே அமையும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
நிய்யத் எப்போது வைக்க வேண்டும்?
கடமையான நோன்பு நோற்பவர், சுப்ஹுக்கு முன்பே இன்று நோன்பு நோற்கிறேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும்.
நஃபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் நினைத்து நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. அதே நேரம் சுப்ஹிலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.
நஃபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் நினைத்து நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. அதே நேரம் சுப்ஹிலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.
Jul 28, 2011
ரமலான் மாதம்
அல்லாஹ் கூறுகிறான்...
''விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.'' (அல்குர்ஆன் 2:183)
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)
நோன்பு - சலுகை அளிக்கப்பட்டவர்கள்!
நோன்பு - சலுகை அளிக்கப்பட்டவர்கள்
மனித பலவீனங்களை கருத்தில் கொண்டு இறைவன் இஸ்லாமிய வரையறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளான். நோன்பும் சிலருக்கு சலுகையளிக்கின்றது..........
1) நோயாளிகள்.
நோன்பு நாட்களில் ஒருவர் நோய்வாய்படுகிறார். அது தலைவலியோ, காய்ச்சலோ, அல்லது வயிற்றுக் கோளாறுகளோ அல்லது இன்ன பிற எதோ ஒரு நோய். இந்த நோயின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த நோயால் நோன்பு வைக்க முடியாது அல்லது நோன்பு வைத்தால் நோயின் பாதிப்பு அதிகமாகும் என்று கருதுபவர்கள் நோயின் போது நோன்பு வைக்காமல் ரமளானுக்கு பிறகு நோயிலிருந்து குணமடைந்தவுடன் விடுபட்ட அனைத்து நோன்பையும் நோற்றுவிட வேண்டும்.
ஏமாறுவது நாமே!
இறைவன் பொதுவாக நோயாளி
Jul 25, 2011
உள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்…
டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் “Masters in Divinity” பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.
பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.
இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.
அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்
சிலர், அதிக கஷ்டங்களின்றி இஸ்லாத்திற்குள் வந்து விடுகின்றனர். சுபானல்லாஹ். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. அவர்கள் அனுபவிக்கக்கூடிய மனப் போராட்டங்களை அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் தான் புரியும். டாக்டர் டர்க்ஸ் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த விதமும் அப்படித்தான். சுலபத்தில் அது நடந்து விடவில்லை.
இந்த பதிவில், இன்ஷா அல்லாஹ், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் குறித்து, அவர் சொன்ன தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்….
Jul 22, 2011
இளையான்குடியை சேர்ந்த கவிஞர் மு.சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
இளையான்குடி Dr.Zakir Hussain கல்லூரியில் அலுவலக உதவியாளராக பனி புரிந்தவர் சண்முகம் அவர்கள். ஆரம்ப காலம் முதலே இவர் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வந்தார். இஸ்லாம் சம்பந்தப்பட்ட கட்டுரை மற்றும் கருத்தரங்கு பலவற்றில் கலந்து கொண்டு அதில் தானும் பங்கு செலுத்தியவர்.
சண்முகம் அவர்கள் நம்முடைய தக்வா டிரஸ்ட் ஒரு முறை தொடர்பு கொண்டு அங்கு கட்டுரைப்போட்டி சம்பந்தமாக புத்தகங்கள் மற்றும் சீடிக்களை பெற்றுச் சென்றார். அப்போது அவருக்கு தக்வா டிரஸ்ட் சார்பில் திருக் குரானும், திர்மிதி ஹதீஸ் கிதாப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியா வில் நடைபெற்ற இஸ்லாமிய புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு அதற்காக பரிசும் பெற்றவர். "வஹியாய் வந்த வசந்தம்" என்ற நூலுக்காக சீதக்காதி அறக்கட்டளையின் ஷேய்க் அப்துல்லாஹ் அப்பா பரிசினை பெற்றவர்.
இளையான்குடி யில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய நிகழ்வின் போது அவர் இஸ்லாத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார்.
சண்முகம் அவர்கள் நம்முடைய தக்வா டிரஸ்ட் ஒரு முறை தொடர்பு கொண்டு அங்கு கட்டுரைப்போட்டி சம்பந்தமாக புத்தகங்கள் மற்றும் சீடிக்களை பெற்றுச் சென்றார். அப்போது அவருக்கு தக்வா டிரஸ்ட் சார்பில் திருக் குரானும், திர்மிதி ஹதீஸ் கிதாப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியா வில் நடைபெற்ற இஸ்லாமிய புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு அதற்காக பரிசும் பெற்றவர். "வஹியாய் வந்த வசந்தம்" என்ற நூலுக்காக சீதக்காதி அறக்கட்டளையின் ஷேய்க் அப்துல்லாஹ் அப்பா பரிசினை பெற்றவர்.
இளையான்குடி யில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய நிகழ்வின் போது அவர் இஸ்லாத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார்.
Jul 15, 2011
கியாமத் நாளின் மாபெரும் பத்து அடையாளங்கள்
மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விசயங்களை குறிப்பிட்டார்கள்
- புகை மூட்டம்
- தஜ்ஜால்
- (அதிசய) பிராணி
- சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
- ஈசா (அலை) இறங்கி வருவது
- யஹ்சூஜ், மக்சூஜ்
- கிழக்கே ஒரு பூகம்பம்
- மேற்கே ஒரு பூகம்பம்
- அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
- இறுதியாக ஏமனில் இருந்து புறப்படும் தீ பிழம்பு மக்களை விரட்டி சென்று ஒன்று சேர்த்தல்
புகை மூட்டம்
இதில் முதலாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அடையாளத்திற்கு அதிகமான விளக்கம் எதையும் அவர்கள் கூறவில்லை. ஆயினும் திருமறை குர்ஆனில் 44 -வது அத்தியாயத்தில் ஓரளவு இது பற்றி குறிப்பிடப்படுகிறது....................
கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்,
இளையான்குடி தக்வா டிரஸ்ட் நடத்திய " இஸ்லாமிய கட்டுரை போட்டி - 2011" -ன் முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 170 பேர்கள் பங்கேற்றனர். பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் விவரம் பின்வருமாறு :
இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இளையான்குடி தக்வா சென்டர், சமூக நீதி பேரவை வழங்கும் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம். இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூலை 16,17,18 (சனி,ஞாயிறு,திங்கள்) ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
"நபியே விவேகத்துடனும் , அழகிய அறிவுரைகள் மூலமாகவும் , உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக " (திருக் குரான் 6:125)
என்ற இறை வசனத்திற்கேற்ப...
கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள்
முஸ்லிம்கள் இந்த விசயங்களை கட்டாயம் நம்ப வேண்டும்
1.அல்லாஹ்வை நம்ப வேண்டும்
1.அல்லாஹ்வை நம்ப வேண்டும்
2.வானவர்களை நம்ப வேண்டும்
3.வேதங்களை நம்ப வேண்டும்
4.தூதர்களை நம்ப வேண்டும்
5.இறுதி நாளை நம்ப வேண்டும்
6.விதியை நம்ப வேண்டும்
இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள் . அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோருக்கு சொர்கத்தையும் தீயோர்க்கு நரகத்தையும் அளிப்பான். என்பது ஆறு விசயங்களில் ஒன்றாகும்.
மேற்கொண்டவாறு நம்புதல் தான் இறுதி நாளை நமபுதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப் படுகிறது.
அந்த நாள் எப்போது வரும் என்பதை அல்லா ஒருவனால் மட்டுமே அறிய முடியும் திருக் குரான் கீழ்கண்டவாறு கூறுகின்றது. ....
Subscribe to:
Posts (Atom)
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )