Jul 15, 2011

கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள்

முஸ்லிம்கள் இந்த விசயங்களை கட்டாயம் நம்ப வேண்டும் 

                                1.அல்லாஹ்வை நம்ப வேண்டும்
                                2.வானவர்களை  நம்ப வேண்டும்
                                3.வேதங்களை நம்ப வேண்டும்
                                4.தூதர்களை நம்ப வேண்டும்
                                5.இறுதி நாளை நம்ப வேண்டும்
                                6.விதியை நம்ப வேண்டும்


               இவ்வுலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும். அவ்வாறு அழிக்கப்பட்ட பின் மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள் . அப்போது அனைவரையும் இறைவன் விசாரித்து நல்லோருக்கு சொர்கத்தையும் தீயோர்க்கு நரகத்தையும் அளிப்பான். என்பது ஆறு விசயங்களில் ஒன்றாகும். 

                 மேற்கொண்டவாறு நம்புதல் தான் இறுதி நாளை நமபுதல் என்ற சொற்றொடரால் குறிப்பிடப் படுகிறது.


                அந்த நாள் எப்போது வரும் என்பதை அல்லா ஒருவனால் மட்டுமே அறிய முடியும் திருக் குரான் கீழ்கண்டவாறு கூறுகின்றது. ....

"அந்த நேரம் எப்போது வரும்?"என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடம் மட்டுமே உள்ளது . அதற்குரிய நேரத்தில் அவனை தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும் பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும் " என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் அல்லாஹ்விடமே உள்ளது " என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை. (திருக் குரான் : 7-187)
             அந்த நாள் எப்போதுவரும் என்பதை இறைவன் கூறாவிட்டாலும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்து சென்றுள்ளார்கள். அந்த முன் அறிவிப்புகள் :
சிறிய அடையாளங்கள்:-

மகளின் தயவில் தாய்

          ஒரு பெண் தனது எஜமானியை பெற்றெடுத்தாள் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். (நூல் புகாரி : 4777,50


பின் தங்கியவர்கள் பொருளாதரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்: 

         வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வேறு காலுடனும் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் " என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். (நூல் புகாரி : 4777 )




           ஒட்டகம் மேய்த்து திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களை கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல் புகாரி : 50)


விபச்சாரமும் மது பழக்கமும் பெருகும்
 
                           யுக முடிவு நாள் நெருங்கும் பொது விபச்சாரமும் மது பழக்கமும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (நூல் புகாரி :80,815577,6808,5231)

                  ஒளிவு மறைவாக நடந்த விபச்சாரம் இன்று வீதியிலே அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்த அவல நிலை இன்று அரபு நாடுகளிலும் நடக்கிறது பெரிய கொடுமை. மக்களை நல்வழி படுத்த கடமை பட்ட அரசாங்கமே இன்று மதுக்கடைகளை திறந்து வியாபாரம் செய்கிறது


தகுதியற்றவர்களிடம் பொறுப்பு 

          . தகுதியற்றவர்களிடம் பௌர்ப்புகள் ஒப்படைக்கப் படுவதும் அதில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிபடுத்துகிறது.

             "நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர்நோக்கு" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய போது "எவ்வாறு பாழ்படுத்த படும்?" என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'தகுதியற்றவரிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிநோக்கு " என்று விடையளித்தார்கள்.  (நூல்: புகாரி :59,6496)


பாலைவனம் சோலைவனமாகும்

              செல்வம் பொங்கி பிரவாகித்து, அதற்கான சகாத்தை பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும் ,  அரபு பிரதேசம் நதிகளும் சோலைகளும் மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது. (நூல் : முஸ்லிம் 1681)

             எதற்கும் உதவாத பாலை நிலம் என்று உலகத்தால் புறக்கணிக்கப் பட்ட அந்த பிரதேசத்தில் சோலைகளை உருவாகும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது என்பதற்கு அடையாளமே. 

காலம் சுருங்குதல்
        

              காலம் வெகு வேகமாக ஓடுவதை இன்று நாம் காண்கிறோம். மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று நேரத்தை சுருக்கி விட்டன. எந்திர உலகத்தில் எந்திர வாழ்கையில் மனிதன் இருக்கிறான் அதனால் காலம் செல்லும் வேகம் அதிகமே. 

           காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போல் ஆகிவிடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போல் ஆகிவிடும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். (நூல் : திர்மிதி 2254)

கொலைகள் பெருகுதல்

பள்ளிவாசல்களை வைத்து பெருமை அடிப்பது


பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் 


ஆடை அணிந்தும் நிர்வாணம் 


தெரிந்தவர்க்கு மட்டும் சலாம் கூறுதல்


பள்ளிவாசல்களை பாதைகளாக பயன்படுத்துதல் 


இறைதூதர் என வாதிடும் பொய்யர்கள்
 

 


 








 






















 















0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )