Jul 22, 2011

இளையான்குடியை சேர்ந்த கவிஞர் மு.சண்முகம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

                     இளையான்குடி Dr.Zakir Hussain கல்லூரியில் அலுவலக உதவியாளராக பனி புரிந்தவர் சண்முகம் அவர்கள். ஆரம்ப காலம் முதலே இவர் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்தி வந்தார். இஸ்லாம் சம்பந்தப்பட்ட கட்டுரை மற்றும் கருத்தரங்கு பலவற்றில் கலந்து கொண்டு அதில் தானும் பங்கு செலுத்தியவர்.

சண்முகம் அவர்கள் நம்முடைய தக்வா டிரஸ்ட் ஒரு முறை தொடர்பு கொண்டு அங்கு கட்டுரைப்போட்டி சம்பந்தமாக புத்தகங்கள் மற்றும் சீடிக்களை பெற்றுச் சென்றார். அப்போது அவருக்கு தக்வா டிரஸ்ட் சார்பில் திருக் குரானும், திர்மிதி ஹதீஸ் கிதாப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

                 மலேசியா வில் நடைபெற்ற இஸ்லாமிய புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு அதற்காக பரிசும் பெற்றவர். "வஹியாய் வந்த வசந்தம்" என்ற நூலுக்காக சீதக்காதி அறக்கட்டளையின் ஷேய்க் அப்துல்லாஹ் அப்பா பரிசினை பெற்றவர்.

                             இளையான்குடி யில் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய நிகழ்வின் போது அவர் இஸ்லாத்தை தழுவினார். தன்னுடைய பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார்.

                    அவர் தனது பெயரை ஹிதாயத்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார். அவருடைய தொடர்பு எண்: 99763 72229

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )