Jul 15, 2011

இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும், 

                                                        இளையான்குடி தக்வா சென்டர், சமூக நீதி பேரவை வழங்கும் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம். இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூலை 16,17,18 (சனி,ஞாயிறு,திங்கள்) ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். 

"நபியே விவேகத்துடனும் , அழகிய அறிவுரைகள் மூலமாகவும் , உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக " (திருக் குரான் 6:125)

 என்ற இறை வசனத்திற்கேற்ப...
இளையான்குடி தக்வா சென்டர் தன் சக்திக்கும் மீறி இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை நடத்துகிறது. நமது இளையான்குடி வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு சமூக மக்களும் நமக்கிடையே சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் தவறான புரிந்துணர்வை அகற்றும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமையும் என்பதால் தாங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் கலந்து கொள்ள இளையான்குடி இஸ்லாமிய மக்கள் சார்பாக  உங்களை சகோதர துவத்துடன் அழைக்கிறோம். 






                                  அல்லாஹ்வின் பேரருளால் இளையான்குடி தக்வா சென்ட் கடந்த நான்கு வருடங்களாக இளையங்குடியை மையமாக வைத்து சுற்றியுள்ள கிராம மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கும் , இறைவழி நல்லறங்கள் செய்வதற்கும் மேலும் கல்வி மற்றும் சமூக தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் ஒத்த கருத்துள்ள பல சகோதரர்கள் ஒன்று சேர்ந்து அழைப்புப்பணி எனும் சேவைகள் செய்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். 


                                    இந்த கண்காட்சி பற்றிய தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். மேலும் இந்த மகத்தான பணியில் தங்களது சக்திக்கேற்ப பொருளாதார உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். 



0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )