Jan 21, 2012

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (7)


குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு பெண்தான் காரணம் என்ற கருத்து அன்று முதல் இன்றுவரை பாமர மக்களிடையே நம்பப்பட்டு வருகிறதுபடித்த மருத்துவ அறிஞர்களிடமும் இந்த மூட நம்பிக்கை ஆழமாக வேரூன்றிருப்பது வேடிக்கையாகும்அதனால் அன்றும் இன்றும் ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவிகளை கடும் சித்தரவதை செய்து வருகிறார்கள் இந்த ஆண்வர்க்கம்.
பெண்ணுரிமைச் சங்கம்பெண்விடுதலை இயக்கம் எல்லாம் தோன்றிபெண்ணுரிமைகளுக்காக (!)பல மாநாடுகளும்போராட்டங்களும் நடத்தி பெண்ணுரிமைபெண் விடுதலை(!) என மூச்சுக்கு மூச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப் படுகின்றனவாஅவர்களின் உயிருக்கும்உடமைக்கும்கற்புக்கும் பாதுகாப்பு உள்ளதாஅல்லது இந்த பெண்சிசுக் கொலைதான் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதா?.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த சங்கங்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டவில்லையாபெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை வாங்கித்தர ஏன் இந்த இயக்கங்கள் பாடுபட வில்லை.தஸ்லீமாவைப் போல் வேலிதாண்டியவர்களுக்கு வக்காலத்து வாங்கி களத்தில் இறங்கிய இயக்கங்கள் இந்தசிசுக் கொலை கொடுமையை கண்டிக்க முன்வரவில்லையேஏன்?
என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரைவேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.]
முன் தொடர்களில் விந்துவின் தன்மைகள் குறித்தும், அது எங்கு, எவ்வாறு, உற்பத்தியாகி எவ்வாறு வெளிப்படுகிறது என்பது குறித்தும் பார்த்தோம். இந்த விந்து சம்பந்தப்பட்ட இன்னொரு மிக முக்கியமான தகவலையும் இந்த இடத்தில் பார்த்துக் கொள்வது மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது பாலை (Sex) தீர்மானிப்பதற்கும் விந்துவில் உள்ள உயிரணுதான் காரணமாக இருக்கிறது என்று இன்றைய மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளார்கள்.
இந்த தகவலை குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதுடன், இந்த பாலை தீர்மானிப்பதற்கு பெண்ணை எந்த விதத்திலும் காரணமாக ஆக்க முடியாது என்ற தகவலையும் சேர்த்துச் சொல்வது குர்ஆனின் அற்புதமாக உள்ளது. அறிவியல் தகவலையும், குர்ஆன் கூறும் உண்மைகளையும் பார்ப்பதற்கு முன்பு ஆண், பெண் குழந்தை உருவாகுவது குறித்து அன்றும் இன்றும் என்ன கருத்து இந்த சமுதாய மக்களிடையே நிலவிவருகிறது என்று சற்று அலசுவோம்.
பெண்ணுக்கு உயிருடன் சமாதி கட்டிய அநியாயம்
குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு பெண்தான் காரணம் என்ற கருத்து அன்று முதல் இன்றுவரை பாமர மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. படித்த மருத்துவ அறிஞர்களிடமும் இந்த மூட நம்பிக்கை ஆழமாக வேரூன்றிருப்பது வேடிக்கையாகும். அதனால் அன்றும் இன்றும் ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவிகளை கடும் சித்தரவதை செய்து வருகிறார்கள் இந்த ஆண்வர்க்கம். பெண் சிசுவைப் பெற்ற பெண்ணை வேதனைப்படுத்துவதில் தானும் ஒரு பெண் என்ற நினைவில்லாத மாமியாரும் சேர்ந்திருப்பது இன்றைய நவீன காலத்தின் சாதனையாகும். பெண் குழந்தை பெற்றதால் ஒரு தாய் வார்த்தையில் எழுதமுடியாத அளவிற்கு அன்றும் இன்றும் பல சங்கடத்திற்கு உள்ளாகிறாள்.
அன்று பெண்குழந்தையின் நிலை:
ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற சந்தோஷமான சுப செய்தி சொல்லப்படும் போது,தன்மீது இடிவிழுந்து தனது வாழ்க்கையே நாசமாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டுபெண்ணைப் பெற்றுத்தந்த தனது மனைவியின் மீதுள்ள கோபத்தை விழுங்கிய நிலையில் செய்வதறியாது முகம் கருத்துப் போய்விடுகிறான்யாருக்கும் தெரியாமல் அந்த பெண் சிசுவை மண்ணுக்குள் புதைத்து விடுவதாஅல்லது காலம் முழுவதும் இழிவை சுமந்த நிலையில் அந்த குழந்தையை வளர்ப்பதாஎன்ற வேதனையான யோசனையில் ஆழ்ந்துதனக்கு நிவர்த்தி செய்யமுடியாத பேரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக நினைத்து கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி மக்களின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்கிறான்அந்தளவு பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து வந்தார்கள் அன்றைய ஆண்வர்க்கத்தினர்இந்த தகவலை குர்ஆன் பின் வருமாறு எடுத்துரைக்கிறது.
وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدّاً وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلا سَاءَ مَا يَحْكُمُونَ
இன்னும் 
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பதுகொண்டு நன்மாராயங் கூறப்பட்டால்கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க அவனுடைய முகம் (துக்கத்தால்)கருத்ததாக ஆகிவிடுகிறதுஎதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதாஅல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதாஎன்று(கவலைப்பட்டுமக்கள் முன் வராமல்சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான்அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்அல் குர்ஆன்: 16: 58,59
பெண் குழந்தை பிறந்த இழிவைத்தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள்எந்தப் பாவமும்யாருக்கு எந்தத் தீமையும் செய்யாத அந்த குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்துவந்தார்கள்உயிருக்குப் போராடும்கல் மனதையும் கரைய வைக்கும் தனது குழந்தையின் மரண ஓலத்தை கேட்டுக் கொண்டே இந்தக் கொடூரச் செயலை எவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது.?
பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்:
அன்றைய அறியாமை காலத்தில் பெண்ணுரிமைச் சங்கம் இல்லை பெண் விடுதலை இயக்கம் நடத்தப்படவில்லைஅதனால் பெண்கள் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டுஉயிருடன் புதைக்கப்பட்டனர்அவர்களுக்கு ஆன்மா என்பது ஒன்று இருக்கிறதாஎன்றெல்லாம் பேசப்பட்டுவந்த அறியாமைக்காலம் அதுஆனால் பெண்ணுரிமைச் சங்கம்பெண்விடுதலை இயக்கம் எல்லாம் தோன்றிபெண்ணுரிமைகளுக்காகபல மாநாடுகளும்போராட்டங்களும் நடத்தி பெண்ணுரிமை,பெண் விடுதலைஎன மூச்சுக்கு மூச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப் படுகின்றனவா?
அவர்களின் உயிருக்கும்உடமைக்கும்கற்புக்கும் பாதுகாப்பு உள்ளதாஅல்லது இந்த பெண்சிசுக் கொலைதான் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதா?. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த சங்கங்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டவில்லையா?
பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை வாங்கித்தர ஏன் இந்த இயக்கங்கள் பாடுபட வில்லைதஸ்லீமாவைப் போல் வேலிதாண்டியவர்களுக்கு வக்காலத்து வாங்கி களத்தில் இறங்கிய இயக்கங்கள் இந்தசிசுக் கொலை கொடுமையை கண்டிக்க முன்வரவில்லையே!ஏன்இந்தக் கொடுமை தாங்கள் சார்ந்திருக்கும் இந்து மதமக்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தினாலேயா?
அறியாமை காலத்தில் நடந்த முறையை விட மிகக் கொடூரமான முறையை பின்பற்றியல்லவா இன்று பெண் சிசுக்கள் கொல்லப்படுகிறதுஅன்று ஆண்கள் தான் இந்த மன்னிக்கமுடியாத குற்றத்தை செய்தார்கள் என்றால் இன்றோ தனது மாமியார்கணவனின் தொல்லைகளுக்கு பயந்துபாலூட்டி தாலாட்டி வளர்க்க வேண்டிய அன்புள்ள அன்னையே தனது கருணையான உள்ளத்தை கல்லாக்கி,துடிதுடித்து உயிரை விடப்போகும் தனது அன்புக் குழந்தையைக் காண தைரியம் இல்லாமல் தனது இருக்கண்களையும் இறுக மூடிக் கொண்டுஅரவணைக்க வேண்டிய அன்புக் கரங்களாலேயே கள்ளிப்பாலை ஊற்றி சாகடிக்கும் கொடுமையான நிகழ்வுகள் அல்லவா அன்றாட செய்தியாக மாறிவிட்டது.
தனது அன்புத் தாய் தனது பசியை போக்க தனக்கு அமுதூட்டுகிறாள் என்று கருதி நாக்கை வளைத்து,சுழித்து சப்பைக் கொட்டிசுவைத்து கள்ளிப்பாலை அருந்தும் அந்த குழந்தைக்கு இது கள்ளிப்பால்நீ துடிதுடிக்க உனது உயிரைக் குடிக்கப்போகும் பால்உனது பசியை நீக்க அல்லஅழுகிய இருதயம் பெற்ற மனிதர்கள் வாழும் இந்த உலகத்திலிருந்தே உன்னை நீக்கப்போகும் பால் என்பதை எடுத்துச் சொல்தவற்குக்கூட அப்போது யாருமில்லையே.
பெரியவர்களே உண்பதற்கு முடியாத உம்மியுடன் கூடிய நெல்லை அந்த சிசுவின் சிறிய வாயில் திணித்து கொல்லப்படும் கொடூரமான முறையையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கடைபிடித்து வருவதை எழுதுவதற்கே வெட்கமாக இருக்கிறதுவேதனையால் பேனா முணை எழுத மறுக்கிறதுஇந்தளவிற்கு கொடூரமான வழிமுறையை பின்பற்றி கொல்லப்படும் அளவிற்கு அந்த சிசு என்ன மன்னிக்கமுடியாத பாவம் செய்தது?. பெண்ணாக பிறந்தது அந்த சிசுவின் குற்றமாஅல்லது அதனைப் பெண்ணாகப் பெற்ற தாய் குற்றத்திற்காக அந்த சிசு தண்டிக்கப்படுகிறதாபெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம்?ஆண் மகன் நீ அல்லவாயோசனை செய்து பார்.
இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கு உருப்படியான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திஇந்த ஈனச்செயலை நிறுத்த முடிந்ததா இந்த பெண்ணுரிமை இயக்கங்களால்?. தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்கி இருப்பதுடன்அந்தப் பெண் வளர்ந்து புரிந்து கொள்ளும் பருவம் அடைந்தப்பின் தாய்தந்தை அறியாத தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமான நிலையை நினைத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கல்லவா இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளதுஇதனால் சிசுக் கொலை குறைந்துள்ளதாஇல்லையேகற்பனைக்கெட்டாத அளவிற்கு பல சமுதாயப்பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த திட்டம் காரணமாக ஆகிவிட்டது.
என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரைவேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதுமறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும்அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.
وَإِذَا الْمَوْؤُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண்பிள்ளை வினவப்படும் போதுஸஅல் குர்ஆன்: 81: 8,9.
இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும்இந்த கொடூரத்தைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.உதாரணத்திற்குக் கூட முஸ்லிம் சமூகத்திடம் ஒரு நிகழ்வினை காண முடியாதுஅறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறிதான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )