Jan 21, 2012

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (8-A)


பெண் சிசுவதைக்கு முற்றுப்புள்ளி

கடந்த தொடரில் பெண் சிசு எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம்இந்த கொடுமைகளுக்குஈவு இரக்கமற்ற ஈனச்செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மார்க்கமே இல்லையாநிச்சயம் இருக்க வேண்டும்இந்த கொடூரத்திற்கு சமுதாயத்திலிருந்து இறுதி விடை கொடுத்துவிட வேண்டும்.
என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரைவேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாதுமறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும்அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.
''உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது..'' (அல் குர்ஆன்: 82: 8,9)
இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த இஸ்லாமியச் சமூகமக்கள் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டிற்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும்இந்த கொடூரமான கொலை பாதகச் செயலைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.
அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறிதான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி கால முழுவதும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
பெண்ணுரிமை போற்றிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பெண் குலத்திற்கு பெருமைச் சேர்த்த இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதாஎன்று எதிர்பார்த்து வாழும் நிலைக்கு பெண்களின் புகழை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள்அரபு மொழி பேசும் இஸ்லாமிய நாடுகளில் பெண்குழந்தையை பெருமைபடுத்தும் காட்சிகளைதனக்கு பெண் குழந்தை பிறப்பதை பெருமையாக கருதும் நிலையை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறார்கள்இந்த உயர் நிலை அவர்களிடையே எவ்வாறு ஏற்பட்டது?
பெண் குழந்தை பிறப்பது தனக்கு பெருத்த அவமானம் என்று கருதிக் கொண்டிருந்த அந்த அரபு மக்கள்பெண்களை போகப்பொருளாககுழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக கருதிக் கொண்டிருந்த அந்த அறியாமைக் காலத்து மக்களிடையேபெண்களுக்கு உயிர்உரிமை உள்ளதா என்று விவாதம் புரிந்து கொண்டிருந்த காட்டு மிராண்டி குணம் படைத்த அந்த மக்களிடையே பெண்மைக்கு உயிருள்ளதுஆண் மகனுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் பெண்ணுக்கும் உண்டுவாழ்க்கையில் ஆண் ஒரு பக்கம் எனில்பெண் இன்னொரு பக்கம்பெண்மை இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்று உணர்ந்துபெண்ணினத்தை மதிக்க அந்த மக்களுக்கு கற்றுத்தந்தது எது?
அந்த அறியாமைக் காலத்து மக்கள் மிகக்குறைந்த நாட்களில் மனம் மாற்றம் அடைவதற்கு எது காரணமாக அமைந்ததுஅதற்கெல்லாம் பின் வரும் நபி மொழி பதிலாக அமைகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாஅவர்கள் கூறியதாவதுஎன்னிடம் ஏதேனும் (தரும்படிகேட்டு ஒரு பெண்மணி வந்தார்அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர்அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு கொடுக்க என்னிடம் கிடைக்கவில்லைஆகவே அதை அவருக்குக் கொடுத்தேன்உடனே,அதனை இரண்டாக பங்கிட்டு தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார்பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார்பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள்.அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன்அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள்நூல்புஹாரி
இந்த நபிமொழியைக் கேட்ட ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதாஅதனை மனம் நோகாமல் சீராட்டிசிறப்பாக வளர்க்க வேண்டும்அதற்கு பரிசாக இறைவனிடத்தில் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரவு பகலாக கனவு காண ஆரம்பித்து விட்டார்கள்பெண் குலத்தின் பெருமைக்கும்சிறப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள பின் வரும் இன்னொரு நபி மொழியைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்யார் தனது குடும்பத்திற்கு(மனைவிக்குசிறந்தவனாக விளங்குகிறாரோ அவரே சிறந்தவராவார்எனது குடும்பத்திற்கு நான் சிறந்தவனாக விளங்குகிறேன்அறிவிப்பாளர்அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்,நூல் திர்மிதிஇப்னு ஹிப்பான்.
இந்த நபிமொழியில் ஒரு ஆண்மகன் சிறந்தவனாக கருதப்படுவதற்கு அளவுகோலாக தனது மனைவியிடத்தில் நல்ல நடைமுறை கடைபிடித்துஅவளின் மதிப்பிற்குரிய சிறப்பான கணவனாக திகழவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றால் பெண்குலத்தின் மரியாதைக்கு எவ்வளவு பெரிய மணிமகுடம் சூட்டியிருக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இந்த நிலையில் தனது மனைவிக்கு ஆறாத மனவேதனை தரும் சிசுவதை செய்வதற்கு அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட எந்த ஆண் மகன் துணிவான்சிந்தித்துப் பாருங்கள்.
நபிகள் நாயகத்தின் இந்த மந்திர வார்த்தைகள்தான் பெண்சிசுக் கொலையில் இன்பம் கண்டுவந்த அந்த அரபிகளை முற்றிலுமாக மாற்றியமைத்ததுஅந்த இறைத்தூதரின் வார்த்தைகளை தங்களின் உயிரினும் மேலாக மதித்து வந்தார்கள் என்றால் அது மிகையாகாதுஉலக அழிவுவரைக்கும் அவர்களிடையே இந்த சிசுக் கொலை நடைபெற முடியாத அளவிற்கு இந்த சமுதாயத்தை உருவாக்கிய பெருமை மனிதப்புனிதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத்தான் உண்டுபெண்ணினத்திற்கு உயிர் வாழும் உரிமம் பெற்றுத்தந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத ஒன்றாகும்.
எனினும் இன்று வாழும் சாமான்ய இஸ்லாமியர்களில் சிலர் தங்களுக்கு பெண்குழந்தை பிறப்பதை வெறுத்து வருகிறார்கள். (அந்த வெறுப்பு பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு மாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்காரணம் தூய இஸ்லாமிய நெறியிலிருந்து சற்று விலகி வாழும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் எப்படியோ வரதட்சிணைப் பேய் புகுந்து,அவர்களது இறைவிசுவாசத்தில் சிறிய சிராய்ப்பை ஏற்படுத்தி விட்டதுஅதனை சரிசெய்வது விவரம் அறிந்த ஒவ்வொரு இஸ்லாமியர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை என்றுணர்ந்து அதற்காக இந்த அறிவியல் தொடரில் சில வரிகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன்.
பெண்மையில்லாத உலகம்
பெண் குழந்தை பிறப்பதை வெறுத்துதங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள்இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள்நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.
பெண்மை இல்லாத ஓர் உலகத்தை எவ்வாறு கற்பனை செய்ய முடியும்அது சாத்தியமா?
ஓவ்வொரு தாயும் ஆண்குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தால் மனித இனம் விரைவில் அழிந்து போய்விடுமேஇது இறைவிதிக்கு முற்றிலும் மாற்றமானதுஏனெனில் இறைவன் உலகில் எல்லாப் பொருளையும் ஆண்பெண் என ஜோடிகளாகத்தான் படைத்திருக்கிறான்அது பல்கிப் பெருக வேண்டும் என்பது அவனது திட்டம்இது அல்லாஹ் ஏற்படுத்திய எல்லாப்படைப்புகளுக்கும் உள்ள பொதுவான மாற்றி எழுத முடியாத நியதி.
''ஓவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் (ஆண்பெண் என இருவகை கொண்டஜோடிகள் இரண்டை அதில் உண்டாக்கினான்.'' (அல் குர்ஆன்: 13: 3)
''நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட)இருவகையை நாம் படைத்திருக்கிறோம்.'' (அல் குர்ஆன்: 51: 49)
ஆண்பெண் என பாகுபடுத்தி பார்க்க முடியாத கனிவர்க்கங்களிலும்மரம் செடி முதல் எல்லாப் பொருளிலும் ஆண் பெண் என இரு இனம் இருக்கும் போது மனித குலம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமாஎனவேபெண்ணினம் இல்லாத ஓர் உலகை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாதுபெண்மை இல்லாத இனம் விரைவில் அழிந்து போய்விடும்.
அல்லாஹ்வின் அருளே!
எனவேஎந்த குழந்தை பிறந்தாலும் அல்லாஹ் தனக்கு செய்த அருள் என்று கருதி அவனுக்கு நன்றிசெய்யும் பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும்பெண் குழந்தை கொடுத்தவன் இறைவனே!அதனை பாதுகாப்பாக வளர்ப்பவனும் அவனேஎன்ற ஆழமான இறை நம்பிக்கை நம்மில் வளர்ந்து மிளிர வேண்டும்தாம் விரும்பும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உலகில் யாருக்கும் வழங்கப்பட வில்லைஅது சாத்தியமும் அன்றுயாருக்கு என்ன குழந்தையை தர வேண்டும் என்று தீர்மானிப்பதில் இறைவனைத்தவிர வேறு யாருடைய தலையீடும்அந்த தீர்மானத்தை மாற்றி எழுதும் வல்லமை பெற்ற யாரும் இந்த உலகில் இல்லைஇதனை பின்வரும் இறைவசனம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
பெண்ணினத்தை வெறுப்பவன் இறைவனை வெறுப்பவனாவான்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும் அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான் (ஆகவேஅவன் நாடியவர்களுக்குப் பெண்மக்களை அன்பளிப்பு செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான்அல்லதுஆண்மக்களையும்,பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான் அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகிறான்நிச்சயமாக அவன் (யாவற்றையும்நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்யமிக்க ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 42: 49, 50)
யாருக்கு என்ன குழந்தையைக் கொடுக்க வேண்டும்யாரை குழந்தைப் பாக்கியமற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது என்று இந்த வசனம் உரக்கப் பேசுவதைக் கவனியுங்கள்.
எனவேபெண்குழந்தை பிறப்பதை வெறுக்கும் ஒருவன் இறைவன் செய்த தீர்மானத்தை வெறுத்தவனாக கருதப்பட்டு இஸ்லாத்தின் வட்டத்திலிருந்தே வெளியேறியவன் என்று முத்திரை குத்தப்படும்அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்இறைவனுடைய தீர்மானம்அது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது இறைவிசுவாசியின் கடமைகளில் ஒன்றாகும்அதனை ஏற்றுக் கொள்ளாத போது அவன் ஒரு முஸ்லிமாக அறவே இருக்கமுடியாதுஎனவே ஒருவனுக்கு பெண் குழந்தை பிறப்பதும்ஆண் குழந்தை பிறப்பதும் அல்லாஹ்வின் தீர்மானமாகும்.
இறைவன் மட்டும் அறிந்த இரகசியம்
ஆணின் உயிரணுவை மனித வடிவமாக மாற்றிகண்காது மற்றும் பல உடலுறுப்புகளையும் உருவாக்க வேண்டும் எனும் கட்டளைகள் வழங்கப்பட்ட வானவருக்குஉரிய நேரம் வரும்வரை ஆணாக அல்லது பெண்ணாக அதனை ஆக்க வேண்டுமாஎன்பது அறிவித்துக் கொடுக்கப்பட வில்லைஅதனால் அதனை ஆணாக அல்லது பெண்ணாக ஆக்க வேண்டுமாஎன்பதற்கான அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்என்னவாக ஆக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் கேட்டும் விடுகிறார்.
உண்மையில் உயிரணு கருவறைக்குள் செல்லும் போதே அது ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானமாகிவிடும். (இது குறித்து பின்பு உரிய இடத்தில் விளக்கப்படும்.) எனினும் பாலுறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வரும் வரை அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியமாக அது பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உரிய நேரம் வந்ததும்தான் எதுவாகப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தானோ அதற்குரிய பாலுறுப்பை வெளிப்படுத்த வானவருக்கு உத்தரவிடுகிறான்அந்த இறை உத்தரவைப் பெற்ற பிறகுதான் அந்த வானவர் அதனைச் செயல் படுத்துகிறார்அதற்கு முன்புவரை அந்த வானவராலும் அறிய முடியாது.
அது மட்டுமாவேறு எவ்வளவு பெரிய அதிநுட்பமான நவீன கருவியின் மூலமும் ஆணாபெண்ணா?என்பதை அறவே அறிந்து கொள்ள முடியாதுவானவர் பாலுறுப்பை வெளிப்படுத்தியப்பின்புதான் அதனை நவீன கருவிகளைப் பயன் படுத்தி அதன் மூலம் மனிதர்களால் அறிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு பாலுறுப்பு வெளிப்படுத்தப்பட்டப்பின்பு நவீன கருவிகள் மூலம் பார்த்து ஆணாபெண்ணா?என அறிந்து கொள்வதில் நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?.
சிறு குழந்தை கூட இந்த நவீன கருவிகளின் துணை கொண்டு கருவறையை உற்று நோக்கி அதனுள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துத் தெள்ளத் தெளிவாக சொல்லி விடுமே.அதனைத் தெரிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லையேவெளிப்படுத்தப் பட்டுவிட்ட ஒரு பொருளை கருவிகளின் துணை கொண்டு அறிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?.
பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அந்த கரு ஆணாபெண்ணாஎன்பதை ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அது பெரிய சாதனைதான்அந்த அளவிற்கு விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்துள்ளதாஎன்றால் அதுதான் இல்லைஇனி ஒரு போதும் அது சாத்தியமும் இல்லை.

0 comments:

Post a Comment

அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )