சமத்துவத்தை பாராட்டப்பட வேண்டிய அளவுக்கு சாதித்துக் காட்டிய மதம் இஸ்லாம்தான்; இஸ்லாம் மட்டுமே.
- சுவாமி விவேகானந்தா
(COMPLETE WORKS OF VIVEKANANDHA VOL:6 PARA 415)
இறைவனுக்கு முன்பு அனைவரும் சமம் என்ற கருத்தை இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மதமும் செயல்படுத்திக் காட்டவில்லை.
- பி. ராமசாமி அய்யர்
( EASTERN TIMES, 22nd DECEMBER 1944)
முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்றும் கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக மிக அதிகமாக தேவைப்படுகிறது.
- வரலாற்றாசிரியர். ஆர்னால்டு டாயின்பீ
( CIVILIZATION ON TRAIL)
இஸ்லாம் சமத்துவத்தைத் தூக்கிப் பிடித்தது. இஸ்லாம் சகோதரத்துவத்தைக் கொண்டாடியது. அதற்கு நேர்மாறாக தொன்மையான, அதே சமயம் வீழ்ச்சிப் பாதையில் வேகமாக சரிந்து கொண்டிருந்த பண்டைய பண்பாடுகள் செழிந்தோங்கியிருந்த நாடுகளில் சமத்துவமும் சகோதரத்துவமும் மறக்கடிக்கப் பட்டிருந்தன என்பதுதான் உண்மை.
- M.N. ராய்
( HISTORICAL ROLE OF ISLAM)
இஸ்லாத்தைப் பொறுத்த வரை சமயம் என்றோ, மதம் என்றோ சொல்லுவதில்லை. மார்க்கம் - வழி என்று சொல்லுவார்கள்.
மதம் என்று சொன்னாலே பல பேருக்கு 'மதம்' பிடித்து விடுகிறது. மதமான பேய் பிடிக்காதிருக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் பாடினார்கள். எனவே, இது ஒரு வழி; வாழும் வழி; அவ்வளவுதான்! வாழும் வழியைச் சொல்வது இஸ்லாம்; வாழும் வழியை வாழ்ந்து காட்டியர் நபி பிரான்.
- பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்
( என்னைக் கவர்ந்த பெருமானார்(ஸல்)-பக்கம்:4 )
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சொல் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுக்குதான் பொருந்தும். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதும், ஏழை - பணக்காரன் , உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாததும் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றில் தான். இது வேறு மதத்திலும் கிடையாது. மானிட சமத்துவம் இதில்தான் கொடுக்கப்படுகிறது.
- T.P.கணபதி(முன்னாள் காவல்துறை ஆய்வாளர்)
( மானிட சமத்துவம்: பக்கம்:26)
இந்த மண்ணின் மைந்தர்களாகிய மக்கள் சுய மரியாதையோடும், தன்மானத்தோடும், பகுத்தறிவோடும் வாழ ஆசைப்பட்டார்கள். சமத்துவம் - சகோதரத்துவம் உள்ளவர்களாக வாழ விரும்பினார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்மானம் உள்ள கூட்டமாகவும் சுயமரியாதை, பகுத்தறிவு உள்ள கூட்டமாகவும் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள்.
- T.M. மணி
(கடவுளர்களை மாற்றுவோம் - பக்கம்: 13)
தொகுப்பு : K.A. முஹம்மது ஆசிப்.
இளையான்குடி.