Aug 29, 2011

பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகையின் அவசியம் பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.

(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது) ஜமாஅத்

நரகம்


நரகம்
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நரகம் ஆசைகளைக் கொண்டு சூழப்பட்டிருக்கின்றது, சுவனம் உள்ளம் வெறுக்கும் (வணக்கங்களைக்கொண்டு) சூழப்பட்டிருக்கின்றது. (புஹாரி, முஸ்லிம்)
Ø  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரழி) கூறினார்கள்: சுவனம் என்பது உங்களில் ஒருவருக்கு தன் செருப்பின் வாரைவிட மிக நெறுக்கமாக இருக்கின்றது, மெலும் நரகமும் அவ்வாரே நெறுக்கமாக இருக்கின்றது. (புஹாரி)

Ø  நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: சுவனம் ரஹ்மத்தக அருளாக இருக்கின்றது, நரகமோ என் தண்டனையாக இருக்கின்றது. ()

ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா?


o  ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானது'' என்பது நபிமொழி; பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா?

o ஹஜ்ஜுக்கு செல்வோரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என் சலாத்தினை எத்தி வைத்து விடுங்கள் என்று கூறலாமா?

ஐயம் 1 : ஜும்ஆவும் பெருநாளும் இணைந்து வந்தால் பெருநாள் மட்டும் தொழுதால் போதுமானது என்பது நபிமொழி; பெருநாள் தொழாமல் ஜும்ஆ மட்டும் தொழலாமா? ஜும்ஆ தொழாவிட்டல் லுஹர் தொழ வேண்டுமா? வேண்டாமா? இதற்குச் சரியான ஆதாரம் உண்டா? விளக்கவும்.

தெளிவு: இது பற்றிய ஹதீஸ்கள் வருமாறு:

Aug 25, 2011

திருக்குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காதா?

[ அறியாமை எனும் இருளை அகற்றி அறிவொளி பெருக்கிட, அகிலத்தின் இரட்சகன் அருளாளன் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அதி அற்புதமே அருள்மறைக் குர்ஆன் ஆகும்.

அல்குர்ஆன் அனைத்து துறைகளைப் பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எளிமையாகவும், அதே வேளை உயர்ந்த இலக்கிய நயத்துடனும் பேசுவதன் மூலம் தன்னிகரில்லா வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இஸ்லாமிய சமுதாய மக்களோ அல்குர்ஆனை படித்து விளங்கி, அதன்படி செயற்படுவதை விடுத்து தகடு, தட்டு, தாயத்துக்களில் எழுதிக் கொள்வதற்கும், இறந்தவர்களுக்காக ஓதுவதற்காவும் அல்குர்ஆனை பயன்படுத்தி அல்லாஹ்வின் சாபத்தை பெற்று வருகின்னர்.

லைலத்துல் கத்ரின் சிறப்பு

''ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!'' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரி 2014. 


மகத்துவ மிக்க இறைவனின் கிருபையால் ரமளான் மாதத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் நாம் நெருங்கிக்

நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

நோன்பு - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
o நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல் o மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
o நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல்
o நோன்பாளி உணவை ருசி பார்த்தல், நறுமணம் பூசிக் கொள்ளுதல்
o இரத்தத்தை வெளியேற்றுதல்
o நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்றல்
o சிறுவர்கள் நோன்பு நோற்பது

 நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

நோன்பை முறிக்கும் காரியங்களை ஒருவர், தான் நோன்பு நோற்றுள்ள நினைவு இல்லாமல் செய்து விடலாம். பதினோரு மாதப் பழக்கத்தின் காரணமாக, தாகம் எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்து விடுவது உண்டு. குடித்தவுடன் அல்லது பாதி குடித்தும் குடிக்காமலும் உள்ள நிலையில் நோன்பு நோற்ற நினைவு வரும். இந்த நோன்பின் கதி என்ன? மறதியாகச் சாப்பிட்டால் அல்லது குடித்தால் எப்போது நினைவு வருகிறதோ உடனே அதை நிறுத்திக் கொண்டு விட்டால் அவரது நோன்புக்கு எள்ளளவும் குறைவு ஏற்படாது. நோன்பாளியாகவே அவர் தனது நிலையைத் தொடரலாம்.

Aug 12, 2011

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?


o நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
o மருத்துவ பலனா?
o உண்ணாவிரதமா?
o பசியை புரிந்துகொள்ளவா?
o சுயமரியாதை
o பிச்சை எடுத்தல்:
o விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி:
o கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!
o பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!
o ஹலாலான சம்பாத்தியம்!
o கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!
முஸ்லிம்கள் அதிகமதிகம் எதிர்பார்க்கக்கூடிய ரமழான் நம்மை வந்தடைந்து இருக்கிறது. முஸ்லிம்கள் அனைவரையும் இந்த மாதத்தில் ஆன்மீகத்தில் மிக ஈடுபாடு உடையவர்களாக நம்மால் காணமுடியும். தள்ளாத வயதிலும் கூட

ரமளான் எதிர்பார்க்கும் இலட்சியம்

‘யார் பொய்யான பேச்சையும் பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதார நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்).

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். 

அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது. 

இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித்

Aug 1, 2011

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

                இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளுள் நோன்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் மனித வாழ்க்கையின் முழுமையான நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இதன் விளைவுகள் அமைந்திருக்கின்றன. 

                  மனித வாழ்க்கைக்குரிய இறைவழிக்காட்டலான அல்குர்ஆனை ரமழான் மாதத்தில் இறைவன் இறக்கி வைத்ததிலிருந்து இம்மாதத்தினதும், இக்கடமையினதும் புனிதத்துவத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

              ஏனைய எல்லாக் கடமைகளோடும் தொடர்புபட்ட விளக்கங்களை வழங்கும் அல்குர்ஆனின் போதனைகள் இப்புனிதமான மாதத்தோடு தொடர்புபட்டதாகவே அமைந்திருக்கின்றன.
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ரமழான் வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களிடம் வளம் மிக்க மாதமொன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.
ஆயிரம் மாதங்களை விடச்சிறந்த ஓர் இரவு அதில் இருக்கிறது. அந்த நன்மையை இழந்தவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான்.'' என்று கூறினார்கள். (அஹ்மத், நஸாஈ, பைஹகீ) 

                 நோன்பு மனித வாழ்வில் ஆத்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல மகத்தான மாற்றங்களை ஏற்படுத்துகின்றுது.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )