நரகம்
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நரகம் ஆசைகளைக் கொண்டு சூழப்பட்டிருக்கின்றது, சுவனம் உள்ளம் வெறுக்கும் (வணக்கங்களைக்கொண்டு) சூழப்பட்டிருக்கின்றது. (புஹாரி, முஸ்லிம்)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரழி) கூறினார்கள்: சுவனம் என்பது உங்களில் ஒருவருக்கு தன் செருப்பின் வாரைவிட மிக நெறுக்கமாக இருக்கின்றது, மெலும் நரகமும் அவ்வாரே நெறுக்கமாக இருக்கின்றது. (புஹாரி)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: சுவனம் ரஹ்மத்தக அருளாக இருக்கின்றது, நரகமோ என் தண்டனையாக இருக்கின்றது. ()
v சூட்டின் கொடூரம்
Ø அபூ தர் (ரழி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயனத்தில் இருந்தார்கள், லுஹர் நேரம் வந்தபோது நிழல் வரும்வரை தாமதப்படுத்துங்கள் தாமதப்படுத்துங்கள் என்று கூறிவிட்டு, சூட்டின் கடுமை என்பது நரகின் பெருமூச்சின் காரணமாக உண்டாகின்றது. என்று கூறினார்கள். (புஹாரி 3258)
Ø அபூ ஜம்ரா அள்ளுபயீ என்பவர் கூறியதாவது, நான் மார்க்க அறிவு பெறுவதற்காக மக்காவில் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் அமர்வது வழக்கம், ஒரு முறை என்னைக் காய்ச்சல் பீடித்தது, அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: ஸம்ஸம் தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக்கொள், ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் ஏற்படுகின்றது. ஆகவே அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள். என்று கூறினார்கள். (புஹாரி 3261)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நரகம் தன் இறைவனிடம், என் இறைவா என்னுடைய ஒரு பகுதி ஒரு பகுதியை சாப்பிடுகிறதே, என்று முறையிட்டது, எனவே அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும், மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரு மூச்சுக்களை விட்டுக்கொள்ள அனுமதியளித்தான். அவ்விரண்டும்தான் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுங் குளிரும் ஆகும். (புஹாரி 3260)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நீங்கள் பாவிக்கும் உலக நெறுப்பு நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்.உடனே அல்லாஹ்வின் தூதரே இந்த உலக நெருப்பே வேதனைக்கு போதுமானதே என்று கேட்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் அப்படியல்ல, உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும். என்று கூறினார்கள். (புஹாரி 3265)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) கூறினார்கள்: மறுமை நாளில் நரகிலிருந்து உலகில் அதிகம் அருள் செய்யப்பட்ட ஒரு மனிதர் அழைத்து வரப்பட்டு, நரக நெருப்பில் காட்டி எடுக்கப்படுவார், பிறகு அவரிடம் ஆதமின் மகனே, (உலகில்) நீ ஏதாவது நலவைக் கண்டாயா? என்று கேட்கப்படும், அதற்கவன் என் றப்பே நான் எந்த நலவையும் கண்டதில்லை என்பானாம்.சுவனத்திலிருந்து உலகில் அதிகம் கஷ்டப்பட்ட ஒரு மனிதர் அழைத்து வரப்பட்டு, சுவன இன்பத்தைக் காட்டி எடுக்கப்படுவார், பிறகு அவரிடம் ஆதமின் மகனே, (உலகில்) நீ ஏதாவது கஷ்டத்தைக் கண்டாயா? என்று கேட்கப்படும், அதற்கவன் என் றப்பே நான் எந்த கஷ்டத்தையும் கண்டதில்லை என்பானாம். (முஸ்லிம்)
v அதன் வர்னனைகள்
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் (ரழி) கூறினார்கள்: மறுமை நாளில் நரகம் கொண்டு வரப்படும், அதற்கு எழுபது கடிவாளங்கள் இருக்கும், ஒவ்வொரு கடிவாளத்தையும் எழுபதுநாயிரம் மலக்குகள் பிடித்து இலுத்து வருவார்கள். (முஸ்லிம்)
Ø அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நாங்கள் ஒரு நாள் நபிகளாரோடு இருக்கும் போது, ஏதோ விழும் சப்தம் கேட்டது, அப்போது நபியவர்கள் இது என்ன சப்தம் என்று தெறியுமா என்று கேட்க, நாம் அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிந்தவர்கள் என்று கூறிய போது, நபியவர்கள் இது ஒரு கல்லு, எழுபது வருடங்களுக்கு முன்னர் நரக ஓரத்திலிருந்து எறியப்பட்டது, தற்போதுதான் நரகின் அடித்தலத்தை அடைந்தது. என்று கூறினார்கள். (முஸ்லிம்)
v அதன் காவலாலிகள் (மலக்குகள்)
Ø விசுவாசிகளே, நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பைவிட்டும் காத்துக் கொள்ளுங்கள். அதன் அரிபொருள் மனிதர்களும் கல்லுமாகும். அதில் குணத்தால் கடினமானவர்களும், பலசாலியான மலக்குகள் உள்ளனர்... (அல்குர் ஆன் 66:6)
Ø நான் அவனை சகர் எனும் நரகில் புகச்செய்வேன், இன்னும் சகர் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?, அது நரகவாசிகள் எவரையும் மிச்சம் வைக்காது, விட்டும் விடாது, மனித்ர்களை சுட்டுக் கரித்து அவர்களின் மேனியையும் மாற்றிவிடக்கூடியது, காவலர்களாக அதன் மீது மலக்குகளில் பத்தொன்பது பேர்கள் இருப்பார்கள்... (அல்குர் ஆன் 74: 26- 30)
Ø நரகத்தின் பொறுப்பாளரிடம் மாலிக்கே உமதிரட்சகன் எங்களுக்கு மரணத்தின் மூலமாவது தீர்ப்பளிக்கட்டும், என்று சப்தமிடுவார்கள், அதற்கு அவர் நிச்சியமாக நீங்கள் இதே நிலையில் மரணிக்காது தங்கியிருக்கவேண்டியவர்களே, என்று கூறுவார்...(அல்குர் ஆன்: 43: 77)
v நரக வாசியின் பண்புகள்
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நரகத்தில் காபிரின் சக்கைப்பல், அல்லது வேட்டைப்ப்ல்லு உஹது மலையைப் போன்றிருக்கும், அவனது தோழின் பறுமன் மூன்று நாள் நடக்கும் அளவாக இருக்கும். (முஸ்லிம்)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) கூறினார்கள்: நரக வாசியின் இரு தோழ்களுக்கிடையிலான தூரம் வேகமாக குதிரையில் மூன்று நாட்கள் பயணிக்கும் தூரமாகும். (முஸ்லிம்)
Ø நிச்சியமாக காபிர்களை நாம் நரகில் நுளைவிப்போம், அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்காக அவர்களுடைய தேழ்கள் கருகி விடும் போதெல்லாம் அவையல்லாத வேறு புதிய தோழ்களை நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்...(அல்குர் ஆன் 4:56)
Ø நிராகரிக்கும் காபிர்களுக்கு நெருப்பு ஆடைகள் வெட்டி வைக்கப்பட்டு, தயார் படுத்தப்பட்டுள்ளன, அக்கினியைப் போல் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களின் தலைகள் மீது ஊற்றப்படும், அதனால் அவர்களுடைய வயிறுகளில் இருப்பவைகளும் அவர்களின் தோழ்களும் உருக்கப்பட்டு வடிந்துவிடும், அவர்களுக்காக இரும்பினாலான சம்மட்டிகளுமுண்டு, அவைகளைக் கொண்டு அவர்கள் அடிக்கப்படுவார்கள். துக்கத்தால் நரகிலிருந்து வெளியேற நினைக்கும் போதெல்லாம் அதிலேயே திருப்பப்படுவார்கள், இன்னும் எரிக்கும் வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் என்றும் கூறப்படும்.(அல்குர் ஆன் 22:19- 22)
v உணவின் தண்மையும் வகைகளும்
Ø அவனுக்கு முன்பாக நரகம் தான் இருக்கின்றது, மேலும் சீல் நீரிலிருந்து அவனுக்கு புகட்டப்படும், அதனை அவன் சங்கடத்தோடு சிறுகச் சிறுக விழுங்குவான், எனினும் அதை அவன் எளிதாக விழுங்க நெருங்கவும்மாட்டான், ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணம் அவனுக்கு வந்துகொண்டுமிருக்கும், அவன் மரணிக்கவும் மாட்டான், அதற்கப்பால் கடினமான வேதனையுமுண்டு.. (அல்குர் ஆன் 14:16,17)
Ø நிச்சியமாக நரகிலிருக்கும் கள்ளி மரம் பாவிகளின் உணவாகும், அது உருகிய செம்பைப் போல் வயிறுகளில் கொதிக்கும், கடுமையக காய்ச்சப்பட்ட நீர் கொதிப்பதைப் போல் அது கொதித்து பொங்கி வரும், குற்றவாளியான அவனைப் பிடியுங்கள், நரகின் மையப் பகுதிக்கு இலுத்து செல்லுங்கள், அவனுடைய தலைக்கு மேல் கொதி நீரின் வேத்னையிலிருந்து ஊற்றுங்கள், என்று கூறப்படுவதோடு, நீ சுவைத்துப் பார் என்றும் கூறப்படும்..(அல்குர் ஆன் 44:43- 49)
Ø நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) கூறினார்கள்: உலகில் மதுபானம் (போதை பொருள் பாவிப்பவன்) அறுந்தியவனுக்கு மறுமையில் தீனதுல் கபால் பருகக் கொடுப்பதாக அல்லாஹ் உறுதி செய்துல்லானாம், தீனதுல் கபால் என்றால் என்ன எனக் கேற்கப்பட்ட போது, நரக வாசியின் சீல், அல்லது வியர்வை என்று நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
Ø பின்னர் நரக வாசிகள் சுவன வாசிகளை அழைத்து, தண்ணீரில் சிறிதளவு எங்கள் மீது கொட்டுங்கள், அல்லது அல்லாஹ் உங்களுக்கு உணவாக அளித்ததிலிருந்து எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்பார்கள், அதற்கு சுவன வாசிகள் நிச்சியமாக அல்லாஹ் உங்களைப் போன்ற் காபிர்களுக்கு இவ்விரண்டையும் ஹராமாக்கிவிட்டான். என்று பதில் கூறுவார்கள். (அல்குர் ஆன் 7: 50)
அல்லாஹ் எம் அனைவரையும் அந்த கொடூர நரகிலிருந்து காப்பானாக!!!!
M.S.M MURSHID ABBASI
0 comments:
Post a Comment