Jan 21, 2012

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (12)


சின்ன வார்த்தையில் பெரிய அர்த்தங்கள்
கடந்த தொடரில், கருக் குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆண் விந்தணுதான் என்று இறைமறையில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் உண்மையை அதனுடைய ஆதாரத்துடன் பார்த்தோம். இந்த அறிவியல் உண்மை நபி மொழியிலும் இடம் பெற்றிருக்கிறது. அது எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதினை உங்கள் முன் தருவதில் பெருமிதம் அடைகிறேன்.
ஒரு குறிப்பட்ட காலத்தில் வாழந்திருந்த ஒரு மனிதரால் எல்லாக்காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேச, எழுத முடியாது, அவரது காலத்திலும், அதனைத் தொடர்ந்த சில காலங்களிலும் வாழ்ந்தவர்களால் மட்டும் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் அவரது பேச்சுகள், எழுத்துக்கள் அமைந்திருக்கும். குறிப்பிட்ட காலம் சென்றதும் அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாததாக, அல்லது வார்த்தைப் பிரயோகம் மாறிவிட்டதாக ஆகிவிடுகிறது.
அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்காக தனி விளக்கவுரை அவசியப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டுகள் நமது நடைமுறையில் ஏராளம் உண்டு. இடம் சுருக்கம் கருதி இங்கு எழுதுவதைத் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஆனால் 1430 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பேசிய வார்த்தைகள், அவரது மொழி பேசும் இன்றுள்ள அனைவராலும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. இது அவர்களது வார்த்தைகளுக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். காரணம் அவர்களது அந்த வார்த்தைகள் வஹி அறிவிக்கப்படாத இன்னொரு குர்ஆனாக திகழ்கிறது.
அஹ்மது, மற்றும் அபூ தாவூத் ஆகிய நூட்களில் இடம் பெற்றுள்ள குர்ஆனும், அது போன்ற இன்னொன்றும் எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்ற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. குர்ஆன் எல்லோரும் புரிந்து கொள்ளும் பொருட்டு எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப் பட்டுவருவது போல, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு, எளிமையாக்கப்பட்டு, இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் அது இனிமேலும் தொடரும். மேலும் அவர்களது வார்த்தைகளிலிருக்கும் அர்த்தமுள்ள போதனைகள் அனைத்து நாட்டவருக்கும், அனைத்து காலத்தில் வாழ்பவர்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாகவே அமைந்துள்ளன.
குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.
இதனையே அவர்கள் பின் வருமாறு சிலாகித்து கூறுவதைக் கேளுங்கள்.
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ ، فَوُضِعَتْ فِى يَدِى . رواه البخاري
நபி 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நான் ஒருங்கினைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு உதவப் பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்கள் கொண்டுவரப்பட்டு, என் கையில் வைக்கப்பட்டன. நூல்: புஹாரி.
இந்த நபி மொழியில் ஒருங்கினைந்த பொருள்களைத் தரும் சொற்கள் என்பதற்கு பல அர்த்தம் கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிப் போகாமல் எல்லாக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியான ஒருங்கினைத்த வார்த்தை என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். அதே போல், குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சு என்றும் அதனைப் புரிந்து கொள்ளலாம்.
அதே போல், சாதாரணப் அர்த்தத்தை பிரிதி பலிக்கும் அவர்களது வார்த்தையானது அறிவியல் உண்மையையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல அறிவியல் உண்மைகளையும் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பலஅறிவியல் உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள் என்பது வியப்பிலும் மிகப் பெரும் வியப்பாக இருக்கிறது.
அவர்கள் பேசிய அந்த அறிவியல் உண்மைகள் அவர் ஒரு இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களில் மிக முக்கிய ஒன்றாக இன்றும் திகழ்கிறது. அன்றைக்கும், இன்றைக்கும் நபிகளாரின் வார்த்தைகளில் உள்ள அந்த அறிவியல் உண்மையை அறிந்தவர்கள் பலரும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருங்கிச் சொல்லி நிறைய கருத்துகள் கூறும் நபிகள் நாயகம்
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் அமைப்பில் பல அறிவியல் உண்மைகளை மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் எழுதி வரும் கருயியல் அறிவியல் குறித்து அவர்கள் கூறியிருக்கும் ஒரு தகவல். இதோ! அதனை உங்களுக்கு முன் சமர்பிக்கிறேன்.
عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال كنت قائما عند رسول الله صلى الله عليه وسلم فجاء حبر من أحبار اليهود فقال السلام عليك يا محمد فدفعته دفعة كاد يصرع منها فقال لم تدفعني فقلت ألا تقول يا رسول الله فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله فقال رسول الله صلى الله عليه وسلم إن اسمىمحمد الذي سماني به أهلي فقال اليهودي جئت أسألك فقال له رسول الله صلى الله عليه وسلم أينفعك شيء إن حدثتك قال أسمع بأذني فنكت رسول الله صلى الله عليه وسلم بعود معه فقال سل فقال اليهودي أين يكون الناس يوم تبدل الأرض غير الأرض والسماوات فقال رسول الله صلى الله عليه وسلم هم في الظلمة دون الجسر قال فمن أول الناس إجازة قال فقراء المهاجرين قال اليهودي فما تحفتهم حين يدخلون الجنة قال زيادة كبد النون قال فما غذاؤهم على أثرها قال ينحر لهم ثور الجنة الذي كان يأكل من أطرافها قال فما شرابهم عليه قال من عين فيها تسمى سلسبيلا قال صدقت قال وجئت أسألك عن شيء لا يعلمه أحد من أهل الأرض إلا نبي أو رجل أو رجلان قال ينفعك إن حدثتك قال أسمع بأذني قال جئت أسألك عن الولد قال ماء الرجل أبيض وماء المرأة أصفر فإذا اجتمعا فعلا مني الرجل مني المرأة أذكرا بإذن الله وإذا علا مني المرأة مني الرجل آنثا بإذن الله قال اليهودي لقد صدقت وإنك لنبي ثم انصرف فذهب فقال رسول الله صلى الله عليه وسلم لقد سألني هذا عن الذي سألني عنه ومالي علم بشيء منه حتى أتاني الله به رواه مسلم
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஃதவ்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இறைத்தூதர் அருகில் நின்று கொண்டிருக்கும் போது, யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினார். (அதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த) நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே என்று நீ சொல்லக் கூடாதா? (முஹம்மதே! என்று பெயர் கூறி அழைக்கிறாயே அதனால்தான் தள்ளினேன்) என்றேன். அதற்கு அந்த யூதர் அவருக்கு அவரின் குடும்பத்தினர் சூட்டிய பெயர் கொண்டுதான் நாங்கள் அழைப்போம் என்று கூறினார். (இதனைக் கண்டு கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர்
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம்! எனது பெயர் முஹம்மத்-தான் இதுவே எனது குடும்பத்தினர் இட்ட பெயராகும் என்றார்கள்.
பின்பு, யூத அறிஞர் உங்களிடம் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர்
 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் கூறப் போகும் எந்த விஷயமும் உமக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வந்த யூதர். தன்னிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறிக் கொண்டே (ஆழ்ந்த சிந்தனையுடன்) கேளுங்கள் என்றார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
"இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?", என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அஸ்ஸிராத் எனும்) பாலத்தின் அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.
மக்களிலேயே முதன் முதலில் (அப்பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று அடுத்து வினவினார் அந்த யூதர். ஏழை முஹாஜிரீன்கள் (மக்காவைத் துறந்து மதீனா வந்து குடியேறிய அகதிகள்) என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். அவர்கள் சுவனத்தில் நுழையும் போது வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று வினவினார்.
அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு எனப் பதிலளித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க, சுவனத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப் படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் வினவினார்.
அதற்கு அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்த போது, நீர் கூறியது முற்றிலும் உண்மையே என்றார் அந்த யூதர்.பூமியில் வசிப்பவர்களில் ஒர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே உம்மிடம் நான் வந்தேன். என்று கூறினார்.
நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
குழந்தை(யின் பிறப்பு) குறித்து கேட்பதற்காக நாம் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணின் நீர் (விந்தணு) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவை இரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்தணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும், பெண்ணின் நீர் (சினை முட்டை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள்.
அந்த யூத அறிஞர் நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஒர் இறைத்தூதர்(நபி)தாம் எனக் கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அல்லாஹ்வின் தூதர் 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் எதைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்.
இந்த நபி மொழியினை சற்று ஆழ்ந்த சிந்தனையோடு மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மையைகளை மிக எளிமையாகவும், அதே நேரத்தில் அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்திலும் கூறப்பட்டிருப்பது தெரியவரும்.
மேலும், குழந்தை உருவாக்கத்திற்கு ஆண் விந்தணுவின் நிறமும், பெண்ணின் மதனநீரின் நிறமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைத்தூதர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்னொரு நபி மொழியில் ஆணின் விந்தணு கெட்டியாகவும், வென்மை நிறமுடையதாகவும், பெண்ணின் மதன நீர் மெருதுவாகவும், மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆரோக்கியமான குழந்தை உருவாக வேண்டுமானால் ஆணின் விந்து கெட்டியாகவும், வென்மையாகவும் இருக்க வேண்டும். காரணம் அதில்தான் வீரியமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும், அதனால் குழந்தை தரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். பெண்ணின் விந்து மெருதுவாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அப்போது தோன்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். அப்போது தன்னை நோக்கி வரும் உயிரணுவை முழு அளவில் ஏற்றுக் கொண்டு குழந்தை உருவாக காரணமாக அமைகிறது.
ஆணின் விந்து கெட்டி குறைந்ததாகவோ, அல்லது நிறமாறியதாகவோ இருக்குமானால் அவனது விந்துவில் உள்ள உயிரணுக்கள் வீரியம் குறைந்ததாகவும், எண்ணிக்கை குறைந்தாகவும் இருக்கும். அதனால் குழந்தை தரிக்க வைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதுபோல், பெண்ணின் விந்து, அதன் தன்மையிலோ, நிறத்திலோ மாறுபட்டிருக்குமானால் குழந்தை தரிப்பதில் தடங்கல்கள் பலவும் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.
அடுத்து, இந்த நபி மொழித் தொடரில், இரண்டும் கலந்து விடும் போது என்று நபியவர்கள் கூறியதன் மூலம், குழந்தை உருவாகுவதற்கு ஆண் பெண் ஆகிய இருவரின் விந்துவும் அவசியம் என்பதை எளிமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இந்த உண்மையை கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்றைய அறிவியல் உலகில் யாருமே அறிந்திருக்க வில்லை. அதற்குப் பிறகுதான் இந்தச் செய்தியினை ஆய்வு செய்து அறிந்து கொள்ள முனைந்தார்கள்.
நபி மொழியில் மோதல் போக்கா?
இந்த நபி மொழியில் சொல்லப்பட்டிருக்கும் தகவலை மேலோட்டமாக படித்துப் பார்க்கும் போது, குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துடன் மோதுவது போன்றும், இன்றைய அறிவியல் உண்மைக்கு மாறு பட்டிருப்பது போன்றும் தோன்றலாம்.
காரணம், குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்று குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது. இதனையே இன்றைய அறிவியல் உலகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
ஆனால், நபி மொழியில் இடம் பெற்றிருக்கும் கருத்து அதற்கு மாறுபட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். ஏனெனில், ஆணின் விந்து பெண்ணின் விந்தினை மிகைத்து விட்டால், அப்போது அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை ஆணாகவும், பெண்ணின் விந்து ஆணின் விந்தை மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் அனுமதியின் படி குழந்தை பெண்ணாகவும் உருவாகும் என்று கூறும் போது குழந்தையின் பாலைத் தீர்மனிப்பது ஆண்விந்தணுவிற்கு இருக்கும் அதே பங்களிப்பு பெண்ணின் விந்துவிற்கும் உண்டு என்றுதானே விளங்குகிறது என்று கருத இடம் உண்டு.
இது போன்ற ஐயங்கள் தோன்றுவதற்கு காரணம் இந்த நபி மொழியின் சரியான பொருளை சரிவர புரிந்து கொள்ளாமையே. எனவே, இந்த நபி மொழியின் பொருளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நபி மொழி, இன்னொரு நபி மொழிக்கு விளக்கமாக அமைகிறது என்பதால், கருயியல் குறித்து வந்திருக்கும் வேறு நபி மொழிகளையும் பார்க்க வேண்டும். அப்போது மேற் கூறப்பட்ட நபி மொழி எந்தக் கருத்தை வலியுறுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.
இது குறித்த விரிவான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பு, பெண்ணின் கருவறை அமைப்பினையும், அங்கு எவ்வாறு கருத்தரிக்கிறது, கருத்தரிக்கும் போது அங்கு என்ன என்ன நிகழ்கிறது என்பது குறித்து புரிந்து கொள்வது மிக அவசியமானதாகும். அப்போதான் இந்த நபி மொழியின் பொருளை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (11)


அழியாத அற்புதம்:
கடந்த தொடரில் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்ற அறிவியல் ஆய்வின் முடிவினை தெரிந்து கொண்டோம். இந்தச் செய்தியினை அறிவியல் வாடை கூட இல்லாத அறியாமைக் காலம் என வர்ணிக்கப்பட்ட 1430 ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலேயே எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் சொல்லப்பட்டு விட்டது. இந்தச் செய்தியினை எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, அவ்வாறு சொல்லப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை இந்தத் தொடரில் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராக ஏற்று, ஏக இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த அறியாமை காலத்து மக்களிடம், அவர் ஒரு இறைத்தூதர்தான் என நிரூபனம் செய்தவற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கி இருந்தான். அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலேயே மிகச்சிறந்த பேரற்புதமாக விளங்குவது அருள் மறை குர்ஆனாகும். இதனை ஒரு அரபுக் கவிஞர் எல்லா அற்புதங்களையும் மிகைத்து, நம்மோடு காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பேரற்புதம் அருள் மறைக் குர்ஆன் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.
இலக்கணமும், இலக்கியமும் செரிந்த கருத்தாழமிக்க அதன் வசன நடை கண்டு அன்றைய பிறவிக் கவிஞர்களும் அதிசயித்துப் போனார்கள். உம்மி நபியினால் சொல்லப்பட்டது போல் நாமும் ஏன் எழுத முடியாது? என்று போட்டிக்கு நின்றவர்கள் கூட அதன் சொற்பிரயோகத்தில் சொக்கிப் போனார்கள்.
குர்ஆனின் ஒரேயொரு வசனத்தைப் போன்ற மாற்று வசனம் ஒன்றை உருவாக்கிட நீங்கள், விரும்புவோரையெல்லாம் கூட்டுக்கு அழைத்துக் கொண்டு முயன்றுபாருங்கள் என 1430 ஆண்டுகளுக்கு முன்னால் உம்மி நபியின் மூலம் இந்த உலகிற்கு எடுத்து வைக்கப்பட்ட அந்த சவால் இது வரைக்கும் யாராலும் எதிர் கொள்ள முடியாத சவாலாகவே இருந்து கொண்டிருப்பது அந்த குர்ஆன் இறைவேதம் என்பதற்கான அழியாத அடையாளமாகும். உலக அழிவு வரை அந்த சவாலை யாரும் எதிர்க் கொள்ள முடியாது என்பது வேறு விஷயம்.
ஏகத்துவப் பிரச்சாரம் ஏற்புடையதல்ல என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசித் திரிந்த, அடங்காத அட்டூழியங்களை அப்பாவி முஸ்லிம்களின் மீது தகாத முறையில் ஏவி விட்டு, அதனால் அவர்கள் படும் அவஸ்தையை கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்து வந்த, அறியாமையின் பிறப்பிடம் எனும் அடை மொழிக்கு சொந்தக்காரன் அபுஜஹில் கூட இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் இருளடைந்த கனத்த இதயத்துடன் இறைவேதம் ஓதப்படும் ஓசை வரும் திசை நோக்கி மெல்ல சென்று யாரும் அறியாத வண்ணம் ஒட்டுக் கேட்கத் தூண்டியதே! அது எது? குர்ஆன் வசனங்கள், மனித படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் வெளிப்பாடு என்பதை அவன் உணர்ந்து கொண்டதல்லவா?
மாற்றுக் கருத்து கொண்டிருந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனதில் உள்ள விடயங்களை மாற்றிய வசனம்தான் மறக்க முடிகிறதா? கேட்கக்கூடாதென காதில் பஞ்சடைத்து கால் கடுக்க மக்கா வீதியிலேயே நடந்து திரிந்த துஃபைல்
 ரளியல்லாஹு அன்ஹு அவர்களை துக்கம் துறந்திட துள்ளிக் குதித்து தூய நபியின் பக்கம் செல்ல வைத்த சிறப்பினை இன்றைக்கும் படித்துப் பார்க்கிறோம். துஃபைல்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காதுப் பஞ்சு பறந்தது, அவரது செவிப்பறையில் அல்லாஹ் அருள் வசனம் புகுந்தது. அதனால் அவரது உள்ளமோ ஆனந்த ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் குர்ஆன் இருளடைந்த மனித மனங்களில் ஏற்படுத்திய பேரொளிப் புரட்சிகளின் வெளிப்பாடுகளில் சிலவைகள்தான். இன்னும் இது போல, அல்லது இதை விட வியத்தகு ஆச்சரியங்கள் நிறைந்த வரலாறுகள் ஏராளம் உண்டு.
உதாரணத்திற்குச் சொல்லப்பட்ட இவர்களை குர்ஆன் இறைமறைதான் என ஏற்க வைத்ததுதான் எது? அந்தக் காலத்தில் அறிவியல் உண்மைகள் உணரப்பட்டிருந்தனவா? இல்லை அறவே இல்லை. ஏன்? அதன் வாடையைக் கூட அவர்கள் நுகரவில்லை என்பது உலகமறிந்த உண்மை. எனவே, குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் கருத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. என்றாலும் இலக்கணமும், இலக்கியமும் அரபிகளின் உள்ளங்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது என்று சொல்வதை விட ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.
அதனால் இலக்கிய சுவையும், கருத்துக் கோர்வையும் உள்ள கவிதைகள் அவர்களின் உயிரினும் மேலாக மதித்து வந்த கஃபாவின் சுவர்களில் தங்களுக்கும் ஓர் இடம் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் அனைத்து இலக்கிய காவியங்களையும் மிகைத்து நிற்கும், அனைத்து அரபிக் கவிஞர்களுக்கும் சவாலாக விளங்கும் குர்ஆன் ஒரு உம்மியின் மீது இறக்கியருளப்பட்டது. அதனை இல்லாமல் ஆக்க எதிரிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். இறுதியில் தோற்றுப்போய், அதன் இலக்கியத்திற்கு முன் சரணடைந்து இஸ்லாத்தில் தஞ்சம் புகுந்து விட்டார்கள். அதனால் அழிவும், முடிவும் இல்லாத எல்லையில்லா ஆனந்தம் கரைபுரண்டோடும் சுவர்க்கத்தின் சுகத்தில் தஞ்சமானார்கள். அது அன்றைய சரித்திரம்.
அறிவியல் பார்வை:
இன்றோ இலக்கண-இலக்கிய உணர்வுகள் உறைந்து போய், அறிவியல் முதிர்ச்சியில் அலை மோதிக் கொண்டிருக்கும் மனித மனங்களை, குர்ஆன் தனது தீர்க்கமான அறிவியல் உண்மையால் வெற்றி கொண்டுள்ளது என்பதே சரியான உண்மையாகும். அதனால் குர்ஆனின் இலக்கியம் முக்கியத்துவம் இழந்து விட்டது என்று பொருளல்ல. மாறாக மக்களின் மனநிலை இலக்கியத்தில் திளைத்திருந்த காலம் மாறி, அறிவியல் பக்கம் பார்வை செலுத்தி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்கும் காலம் பிறந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் குர்ஆன் கூறும் பல அறிவியல் உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு, பல விஞ்ஞானிகளும், அறிவியல் வல்லுனர்களும் குர்ஆன் ஒர் இறைவேதம்தான் என்று உறுதியாக சான்று பகர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான எடுத்துக் காட்டுகள் சமீபத்திய வரலாறுகளில் ஏராளம்! ஏராளம்! எனினும் அவர்களின் வரலாறு கூற இது பொருத்தமான இடமில்லை என்பதால் தவிர்த்துக் கொண்டேன்.
இன்றைய அறிவியல் உண்மைகள் குர்ஆனில் ஏராளமாக இடம் பெற்றுள்ளது என்பதை விளக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளோம். அந்த வகையில், கருவில் உருவாகும் சிசு ஆணாக, பெண்ணாக பிறப்பதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்பது குர்ஆனில் பல வசனங்களில் மறைமுகமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை பல முறை நாம் படித்துள்ளோம், படித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், ஆய்வுக் கண்ணோட்டத்தில் அந்த வசனங்களை படித்துப் பார்க்க வில்லை. எனவே, அந்த உண்மைகள் பலரின் கவனத்திற்கு வராமல் போய்விட்டது.
அவர்கள் குர்ஆனை ஆராய்ந்து படிக்க வேண்டாமா? அல்லது அவர்களது இதயங்களில் அதற்குரிய பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா? என்றும், இந்த குர்ஆனை சிந்தித்துப் படிப்போருக்கு அதில் பல அத்தாட்சிகள் உண்டு என்றும் குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தும் இன்று முஸ்லிம்களான நாம் சிந்தித்துப் படிப்பதே இல்லை. அதிலும் வேதனை என்னவென்றால், குர்ஆனின் அரபி எழுத்துக்களையே வாசிக்கத் தெரியாதவர்கள்தான் நம்மில் ஏராளம், ஏராளம். அவர்களால் அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியுமா? குர்ஆனை வாசிப்பதற்கே தெரியாத இவர்களால் அதனின் பொருளை அறிந்து, எப்படி ஆய்வுகள் செய்து அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்?.
இன்று மாற்று மதச் சகோதரர்கள் குர்ஆனைப் படித்து, அதில் கூறப்படும் விவரங்களை புரிந்து ஆய்வுகள் நடத்துகிறார்கள். ஆனால் நமது நிலைபாடு என்ன? ஒருவர் வீட்டில் மரணம் விழுந்தால் மட்டுமே பலர் கூடி குர்ஆன் ஓதும் சம்பிரதாயம் நமது சமூகத்தில் வேரூன்றி நிற்கிறது. மற்ற காலங்களில் பட்டுத் துணியில், அல்லது வெல்வெட்டுத் துணியில் துயில் கொள்ளச் செய்து, தூக்கி ஓரம் கட்டி விடுகிறார்கள் நம்மில் பலர். இளவு வீடுகளில் உச்சரிக்கப்படும் மந்திரமாகவே நாம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். குர்ஆன் உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காக அருளப்பட்டது என்ற உண்மையை மறந்து, இந்த இறைமறையையே மரணிக்கச்செய்யும் அவலம் நமது சமூக அமைப்பில் உள்ள வரை உயிரோட்டம் உள்ள சமுதாயமாக நாம் ஒரு போதும் திகழ முடியாது என்பது நிச்சயம்.
மேலும் வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய் தேடி அலைந்த கதையைப் போல, அறிவியல் கருவூலத்தை கையில் வைத்துக் கொண்டு, அறிவியல் உண்மைகளை வேறெடங்களில் நாம் தேடி அலைவது வேடிக்கையானதும் வேதனை தரக் கூடியதுமாகும். அறிவியல் உலகில் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் போதெல்லாம் வாய்பிளந்து நிற்கிறோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நமது இறைவேதம் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது என்பதை மறந்து விடுகிறோம்.
எனவே, குர்ஆனை ஆய்வு செய்து படியுங்கள். அதில் படிப்பினைகள் பல உண்டு. அறிவியல் உண்மையோ அள்ள அள்ள குறையாமல் நிறைந்து கிடக்கிறது. குர்ஆன் ஒரு முடிவுறா அறிவியல் சுரங்கம். தோண்டத் தோண்ட புதிய புதிய கருத்துகள் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, அன்பு வாசகர்களே! குர்ஆனை படிப்பதற்கென நமது நேரங்களில் கணிசமான அளவு அதற்காக செலவிட வேண்டும். அதில் ஆய்வுகள் பல நடத்த வேண்டும். ஆயுட்காலம் முழுவதும் அல்லாஹ்வின் அருளுக்கு அருகதையானவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
கர்பத்தில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற உண்மையை குர்ஆனின் வசனங்களை படித்துப் பார்க்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு எளிமையாக சொல்லப்பட்டிருப்பது குர்ஆனின் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இந்த அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தார்களா? என்று வரலாற்றை படித்துப் பார்க்கும் போது, வேறொரு பெரிய வாழ்வியல் உண்மை அந்த வசனங்களின் மூலம் உணர்த்தப்படுவது தெரியவரும். அறிவியல் வாடை கூட இல்லாத அம்மக்கள், இந்த உண்மையை புரிந்து கொள்வதற்காக மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ள இந்த வசனங்கள், மனிதாபிமானமற்ற கொடுமையான பெண் சிசு வதைகளுக்கு முற்று புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த உண்மையை அப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆம்! பெண் குழந்தை பெற்றுத் தந்த தனது மனைவியினை அவள்தான் அதற்கு காரணம் என்று கருதி பல சித்திரவதைகள் செய்து, அவள் பெற்ற குழந்தையை புதை குழியில் புதைத்து வந்த அவர்களுக்கு, குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு ஆண்மகனான நானேதான் காரணம், தன்னிலிருந்து வெளிப்பட்ட விந்தணுவின் மூலம்தான் பெண் குழந்தை படைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் போது, அந்த குற்ற உணர்வு தன் பக்கம் திரும்பி இது போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும். அதனைத் தான் இந்த வசனங்கள் சாதித்தன. வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் இது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்ஸான் என்றால் என்ன?
பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்று கூறும் வசனங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி, அதில் அந்தக் கருத்து எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களது சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ
விந்தணுவிலிருந்து மனிதனை (அல்லாஹ்) படைத்தான். அல் குர்ஆன்: 16:4
فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ . خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அல் குர்ஆன்: 86:5
முதல் வசனத்தில் நுத்ஃபாவிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும், இரண்டாவது வசனத்தில் குதித்து வெளியாகும் நீரிலிருந்து இன்ஸான் படைக்கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. நுத்ஃபா என்பதும், குதித்தும் வெளியாகும் நீர் என்பதும் முறையே ஆணின் விந்தணு, மற்றும் இந்திரியத்தைத்தான் குறிக்கிறது என்பதை முந்திய தொடர்களில் வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். விந்தணுவிலிருந்துதான் இன்சான் படைக்கப்பட்டான் என்ற உண்மை இந்த இரு வசனத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இங்கு இன்ஸான் என்ற அரபிச் சொல் எந்த பொருளில் பயன் படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு குர்ஆனின் பிரயோகமே நமக்கு பதிலாக அமைகிறது. தமிழில் மனிதன் என்ற வார்த்தையை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிப்பதற்கு நாம் பயன்படுத்துவது போல அரபி மொழியில் இன்ஸான் என்று வார்த்தை குறிப்பிடப்படும்.
குர்ஆனில் சுமார் 59 முறை இன்ஸான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அதன் தொடரில் இன்சான் செய்ய வேண்டிய சில கடமைகளும், வேறு சில செய்தித் துளிகளும் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கடமைகள் ஆண்கள் மீது மட்டுமல்ல, மாறாக பெண்கள் மீதும் விதியாக்கப்பட்டதாகும். மேலும் அந்த இன்சான் குறித்து சொல்லப்பட்ட செய்திகள் ஆண்கள் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறதோ, அதே போல பெண்களுக்கும் பொருந்தி வரும் செய்திகளாகவே உள்ளன என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாக இருப்பதைக் கவனியுங்கள்:
وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاًوَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً
மேலும், தனது பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனித(இன்சா)னுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய், சிரமத்துடன் அவ(இன்சா)னைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவ(இன்சா)னைப் பிரசவிக்கின்றாள், (அவள்) கர்பத்தில் அவ(இன்சா)னைச் சுமப்பதும், அவ(இன்சா)னுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். (அல் குர்ஆன்: 46:15.)
பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனித(இன்சா)னுக்கு உபதேசம் செய்ததாக இறைவன் கூறுகிறான். இது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல, பெண்களும் தங்களது பெற்றோருக்கு நன்மைகள் செய்ய வேண்டும். அது போல் ஒரு தாய் குழந்தையை கர்பத்தில் சுமந்திருப்பதும், அதற்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும் என இந்த தொடரில் சொல்லப்பட்ட செய்தித் துளி ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண் குழந்தைக்கும் அதே கால அளவுதான். எனவே, இன்சான் என்ற வார்த்தை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இந்த உண்மையை தெரிந்து கொண்டதற்குப் பிறகு மேலே கூறப்பட்ட இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். ஆண், பெண் என படைக்கப்படுவதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்ற உண்மை மிக எளிதாக புரியவரும்.
وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجاً وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ
மேலும், அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் விந்தணுவிலிருந்து – (ஆண்-பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான். எந்தப் பெண்ணும் கர்பமடைவதும், பிரசவிப்பதும் அல்லாஹ் அறியாமல் நடைபெறுவதில்லை. அல் குர்ஆன்: 35:11.
இந்த வசனத்தில் இன்னும் சற்று தெளிவாகவே இந்த உண்மை விவரிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதாவது உங்களை விந்தணுவிலிருந்துதான் படைத்தான், அந்த விந்தணுவின் மூலம்தான் ஆண், பெண் கொண்ட ஜோடிகளையும் உருவாக்கினான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள உங்களை என்ற அர்த்தத்திற்கு பயன் படுத்தப் பட்டுள்ள அரபி வார்த்தை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் குறிக்கும் வார்த்தையாகும்.
இந்த வசனத்தின் தொடரில் பெண்கள் கர்ப்பம் அடைவது பற்றிய செய்தியை குறிப்பதற்கு சுமத்தல் எனும் பொருளுடைய தஹ்மிலு என்ற வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. அதாவது பெண் என்பவள் ஆணிடமிருந்து உற்பத்தியாகி வரும் சிசு, அது எதுவாக இருந்தாலும் அதை சுமப்பவள்தான். அவள் குழந்தையை உற்பத்தி செய்பவள் அல்ல என்ற உண்மையும் மறைந்திருக்கிறது.
وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
அல்லாஹ்தான் (கர்பறையில்) செலுத்தப்படும் விந்தணுவிலிருந்து (உங்களை) ஆண் பெண் ஜோடிகளாகப் படைத்தான். அல் குர்ஆன்: 53:45,46.
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى . ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى . فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள ஒரு விந்தணுவாக அவன் இருக்கவில்லையா?
பின்னர் அவன் அலகத்தாக (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்) இருந்தான். பின்னர் அவனைப் படைத்து செம்மையாக்கினான்.
பின்னர் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் என்ற ஜோடிகளைப் படைத்தான். அல் குர்ஆன்: 75:37,38,39.
இந்த இரு வசனமும் ஐயத்திற்கு இடமின்றி, ஆண், பெண் என்பது ஆணின் விந்தணுவிலிருந்துதான் படைக்கப்படுகிறது என்ற உண்மையை 1430 ஆண்டுகளாக இந்த உலகிற்கு மிகத் தெளிவாகவே அதே நேரத்தில் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறன்றன. இந்த உண்மையை அறிவியல் உலகம் மிகத்தாமதமாக தற்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது. குர்ஆன் விஞ்ஞானத்தையும் போதிக்கும் அற்புத வேதம் என்பதை இனிமேலாவது இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்.
நபி மொழியில் முரண்பாடா?
பாலைத் தீர்மானிப்பது விந்தணுதான் என்பதை திருமறையில் இடம் பெற்ற பல வசனங்களின் மூலம் அறிந்து கொண்ட நாம், இது குறித்து வந்திருக்கும் ஒரு நபி மொழியினை படித்துப் பார்க்கும் சந்தர்பம் ஏற்படலாம். அப்போது அந்த நபி மொழி குர்ஆனுக்கு எதிரான மாற்று கருத்தினை வலியுறுத்துவது போன்று தோன்றலாம். எனவே, அந்த நபி மொழியையும், அதற்கு சரியான விளக்கம் என்ன என்பதையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (10)


ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும்மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறதுஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன் படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள்ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
டி.என்.வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்?
திகைப்பூட்டும் இந்த ஆய்வுஇறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறதுஅறிய முடியாத அந்த97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம்இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம்.
கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஅதாவது டி.என்.. (D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்றுஅதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் 1423 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட இறைவேதமான குர்ஆனில் இந்தச் செய்தி தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறதுஇந்தச் செய்தியை அவரால் சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் சொல்லியிருக்க முடியுமாஎன்றால் நிச்சயம் முடியாதுஇந்த டி.என்.வையும்அது சார்ந்திருக்கும் குரோமோசோம்களையும் யார் படைத்தானோஅவனால் மட்டுமே எல்லாக் காலத்திலும் சொல்ல முடியும்.]
கடந்த தொடரில் கரு ஆணாக அல்லது பெண்ணாக இருப்பதற்கு ஒரு பெண் காரணமாக இருப்பதில்லை என்பதைப் பார்த்தோம் இந்தத் தொடரில் அதற்குக் காரணம் ஆண்தான் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்தான் என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வதற்கு முன் சில அடிப்படைத் தகவலை நாம் தெரிந்தாக வேண்டும்.
பரம்பரையின் இரகசியம் அடங்கிய செல்
உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளதாகும். மரம், செடி, கொடி, தாவரங்கள் அனைத்தும் செல்லின் தொகுப்பே. சுருக்கமாகச் சொல்வதானால் உயிரினத்தின் துவக்கமே செல்தான்.
கருவின் நிலையும் இந்த செல்களின் தொகுப்பு என்பதால், செல்லின் செயல்பாடுகள் பற்றியும், அதன் அங்கங்கள் பற்றியும் சற்று தெரிந்து கொள்வது, கருவறையில் சங்கமமாகும் விந்தணு, சினை முட்டை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு துணை புரியும்.
மேலும், அங்கு உருவாகும் கருவின் பாலை (Sex) விந்தணு எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உறுதுணையாக அமையும்.
ஒரு செல்லின் சராசரி எடை, ஒரு கிராமின் நூறு கோடியில் ஒரு பகுதியாகும் என்றால், செல் எந்தளவிற்கு நுண்ணியது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் சில நிமிடங்கள் மட்டும் உயிர் வாழக் கூடியது, இரண்டு மாதங்கள், பல வருடங்கள், அதற்கும் மேலாக உயிர்வாழக் கூடியது என பல வகையான செல்கள் உண்டு. நாம் மனிதக் கருவியல் பற்றி புரிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளதால் மனித செல்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்வோம்.ஒரு மனிதனின் உடல் கோடிக்கணக்கான செல்களின் தொகுப்பாகும். மனித உடலில் இடைவிடாது செல் பெருக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு வினாடிக்கு 12.5 கோடி எனும் விகிதத்தில் செல்கள் புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஒரு நிமிடத்திற்கு 750 கோடி செல்கள் பெருக்கம் நடை பெறுகிறது. அதன்படி ஒரு மணிநேரத்தில் எத்தனை கோடி செல்கள், ஒரு நாளைக்கு எத்தனை கோடி செல்கள் புதுபிக்கப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
பழைய செல் செயலிழந்து இறந்து விடும் போது, புதிய புதிய செல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நாம் அறியாமலேயே இந்நிகழ்ச்சி நமது உடலில் இடை விடாது தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இந்த மனித செல்களில் மிகச் சிறியது ஆண் உயிரணுவாகவும், மிகப் பெரியது பெண் கருமுட்டையாகவும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
செல் அங்கங்கள்
முக்கியமாக செல்சுவர், அதனை அடுத்து திரவ வடிவத்திலான சைட்டோபிளாசம், அதில் மிதக்கும் மைட்டோ காண்ட்ரியா, அதன் மையப்பகுதியில் உட்கருவாகத் திகழும் நியூக்ளியஸ் ஆகிய முக்கிய பகுதிகளை அங்கங்களாகக் கொண்டுள்ளதாகும் ஒரு செல். மைட்டோ காண்ட்ரியாவின் பணிகளில் ஒன்று, செல் சுவாசிப்பதற்கு துணை புரிவதாகும்.
இதயம் போன்று விளங்கும் உட்கருவான நியூக்ளியஸ் ஒரு செல்லின் மிக மிக முக்கிய பகுதியாகும். இந்த உட்கரு இன்றி ஒரு செல் தனது பயணத்தை தொடர முடியாது. இந்த நியூக்ளியஸித்திற்குள் மிக சிறிய துணுக்குகளாக புரோட்டின்கள் உள்ளன. இதனை குரோமோசம் என்று கூறப்படும்.
ஒவ்வொரு செல்லினுள் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமத்திற்குள் தான் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் என்று ஒன்று உண்டு. அதனைச் சுருக்கமாக டி. என். ஏ. (D.N.A.) (டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் ஆசிட்) என்று கூறப்படும். இது முதன் முதலில் 1953ம் ஆண்டுதான் பிரட்னில் காவண்டிஷ் ஆய்வுக் கூடத்தில் வாட்ஸன் (Watson), க்ரிக் (Crick) ஆகிய இரு உயிரியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த டி.என்.ஏ ஆய்வில் மேலும் பல அறிஞர்கள் ஈடுபட்ட போது வியக்கத் தக்க பல கோடி அரிய செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
வம்ச பரம்பரைச் செய்திகள், பின் வரும் வாரிசுகள் பற்றிய செய்திகள், ஒரு மனிதனை வேறுபடுத்தி அடையாளப்படுத்தும் செய்திகள் என வேறுபட்ட பல செய்திகள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு வெவ்வேறு செய்திகளை குறிப்பிட நியூக்ளிக் அமிலங்கள் கொண்ட பல தொகுப்புகள் இந்த டி.என்.ஏ.வில் உள்ளது. இந்தத் தொகுப்புகளைத்தான் ஜீன் (gene) என்று குறிப்பிடுகின்றனர். கண், காது, மூக்கு, கை, கால், உடலமைப்பு உறுப்புகள் எவ்வாறு எந்த இடத்தில், எந்தெந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பது இந்த ஜீன்தான். முன்னோரின் தோற்றம் வாரிசுகளுக்கு ஏற்படுவதற்கும் இந்த டி.என்.ஏ.வில் உள்ள ஜீன்தான் காரணம்.
கருவில் வளரும் குழந்தை பிறந்து, இறக்கும் வரை அதன் இயக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அதன் இரத்த அழுத்தம், பார்க்கும், கேட்கும், விளங்கும் திறன் அனைத்தையும் தீர்மானிப்பதும் இந்த ஜீன்கள்தான். ஒவ்வொரு வயதிலும் எவ்வாறு உடலமைப்பு இருக்கும் என்பதையும் இந்த டி.என்.ஏ.வில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த ஜீன்களின் தீர்மானத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டு விட்டால் கூட, கண் இருக்க வேண்டிய இடத்தில் காதும், மூக்கு இருக்க வேண்டிய இடத்தில் வாயும் என மாறிவிடும். மேலும், பல்வேறு பிறவி நோய்கள், பிறவி ஊனங்கள் ஏற்படுவதற்கும், புற்று நோய் தோன்றுவதற்கும் காரணமாகவும் அது அமைகிறது.
இதில் வியப்பு என்னவெனில், டி.என்.ஏ. வில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளில் 3 விழுக்காடுதான் இது வரை அறியப்பட்டுள்ளன மீதமுள்ள 97 விழுக்காடு செய்திகள் இதுவரையும் அறியப்பட வில்லை என்று விஞ்ஞான உலகம் கையை விரிக்கிறது. அவ்வளவு செய்திகளை அதனுள் பதிவு செய்து வைத்தவன் யார்? திகைப்பூட்டும் இந்த ஆய்வு, இறுதியில் இறை நம்பிக்கையில் போய் முடிகிறது.அறிய முடியாத அந்த 97 விழுக்காடு செய்திகள் அதனைப்பதிந்து வைத்த இறைவனுக்கே வெளிச்சம். இது பற்றி எழுத வேண்டிய செய்திகள் ஏராளம். இது அதற்குரிய இடம் இல்லை. எனவே, நமது நோக்கத்திற்கு வருவோம்.
செல் பெருக்கம்
செல் பெருக்கம் மனித உடலில் இடையுறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று பார்த்தோம். உடலியல் செல், இனவிருத்தி செல் என இருவகை செல்கள் உள்ளன. இந்த இரண்டின் பெருக்கமும் இரு வேறு முறையில் நடைபெறுகிறது.
ஒரு உடலியல் செல் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்ததும் தன்னைத் தானே இரட்டிப்பாக ஆக்கிக் கொள்கிறது. அப்போது, அதன் உட்கருவான நியூக்ளியஸ் குறுக்கு வாக்கில் இரண்டாக பிரிந்து, அதனுள் இருக்கும் 46 குரோமோசோம்கள் 23, 23 என பிரிந்து எதிரெதிராக ஒதுங்கிவிடுகிறது. அப்போது குரோமோசோம்களில் உள்ள டி.என்.ஏ. வானது நீளவாக்கில் பிளந்து கொள்ளும். அதனால் ஏற்கனவே இரண்டாகப் பிரிந்து, ஒதுங்கியிருந்த ஒவ்வொரு 23 குரோமோசோம்களும் நீளவாக்கில் பிளந்து கொள்கின்றன.
நீளவாக்கில் பிரிந்த குரொமோசோம்கள், ஆர்.என்.ஏ. (ரிபோ நியூக்ளிக் ஆசிட்)வின் துணையுடன் எதிர் எதிராக உள்ளதுடன் இணைந்து, இரண்டு தனிச்செல்களாக ஆகிவிடுகிறது. அப்போது ஒவ்வொரு செல்லும் 46 குரோமோசோம்களைக் கொண்டிருக்கும். தாய் செல்லில் இருந்த அனைத்து தகவலும், பிரிந்த செல்கள் இரண்டிலும் ஆர்.என்.ஏ. வின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையான செல் பெருக்கத்தினை மைடாஸிஸ் (Mitosis) என்று கூறப்படும். அதாவது மிகுதல் பிரிகை ஆகும்.
இனவிருத்தி செல் பெருக்கம்
இனவிருத்தி செல் பெருக்கம் இதற்கு சற்று மாறு பட்ட முறையில் நடைபெறும். இனவிருத்தி உறுப்புகளில் உருவாகும் ஆணுயிர் செல்லானது 23 ஜோடி குரோமோசோம்களையும், பெண் கருமுட்டை செல்லானதும் 23 ஜோடி குரோமோசம்களையும் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொன்றிலும் முள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடியானது வம்சப் பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கியுள்ளன. இதனை உடற்கூறு குரோமோசோம்கள் (Autosomes) என்று கூறப்படும். இந்த வகைக் குரோமோசோம்கள் தான் பிறக்கப் போகும் சிசுவின் உடல் கூறு இயல்புகளையும், அதன் இயக்கங்களையும், அதன் இயல்புகளையும் தீர்மானிக்கும்.
23 வது ஜோடியானது பாலினத்தை (Sex) தீர்மானிக்கும் செய்தியினை உள்ளடக்கி இருக்கும். இதனை பாலினக் குரோமோசம் (Sex Chromosomes) என்று குறிப்பிடுகின்றர். இதில் ஆண் உயிரணுவில் உள்ள 23வது ஜோடியான இனக் குரோமோசம் X, Y என்றும், பெண் கருமுட்டையில் X, X என்றும் இருக்கும். என்பது ஆண் பாலைத் தீர்மானிக்கும், பெண் பாலைத் தீர்மானிக்கும் குரோமோசம் ஆகும்.இந்த 23 ஜோடி குரோமோசம்கள் முதிர்ச்சி அடையும் போது, இரண்டாக பிரிந்துவிடுகிறது. விந்தணுச் செல் இரண்டாகப் பிரியும் போது, 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசோம்), ஒரு
எனும் பெண் இனக் குரோமோசம் என்ற ஒரு பாதியாகவும், 22 உடற்கூறு குரோமோசம்கள் (ஆட்டோசம்), ஒரு எனும் ஆண் இனக் குரோமோசம் என்ற இன்னொரு பாதியாகவும் பிரிந்து விடும்.
சினை முட்டை செல்லிலும் இதே போன்றுதான் இரு பாதிகளாகப்பிரிந்து நிற்கும். ஆனால், இங்கு இரு பாதியிலும் எனும் பெண் இனக் குரோமோசம்தான் இருக்கும். இதனை மையாஸிஸ் (Meosis)குன்றுதல் பிரிகை என்று கூறப்படும்.விந்தணுச் செல், சினை முட்டையை அடையும் போது இரண்டிலும் உள்ள பிரிந்த 23, 23 செல்கள் ஒன்றிணையும். அப்போது ஒரு செல்லுக்குத் தேவையான 46 குரோமோசம்களைக் கொண்ட ஒரு செல்லாக வடிவம் பெறுகிறது. இவ்வாறு ஒன்றிணையும் போது விந்தணுச் (ஆணுயிர்) செல்லின் இனக் குரோமோசோம்
ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு பெண்ணாகவும், விந்தணுச் செல்லின் இனக் குரோமோசோம் ஆக இருந்தால் அப்போது உருவாகும் சிசு ஆணாகவும் இருக்கும் என இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறிக் கொண்டிருக்கிறது. சினை முட்டை செல்லின் பாலினக் குரோமோசம் எல்லா நிலையிலும் ஒன்றுபோலவே இருக்கும். பாலினத்தை (Sex) தீர்மானிப்பதில் இதற்கு எந்த பங்களிப்பும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.
இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, விந்தணுவும், சினை முட்டையும் ஒன்றிணையும் போதே அந்தக் கருவின் பாலினம் என்னவாக இருக்கும் என்பது தீர்மானிக்கபட்டுவிடுகிறது. ஆனால் அதனை உணர்ந்து கொள்ளும் திறனோ, அதனை கண்டு பிடிக்கும் அறிவியல் ஆற்றலோ மனிதனிடம் இல்லை. அது இறைவன் மட்டுமே அறிந்த இரகசியமாக உள்ளது.இந்த இடத்தில், கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே! என்ற இறை வசனம் விஞ்ஞானத்தை மிகைத்து நிற்பதை உங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
செல் தியரி
செல் எனும் வார்த்தைப் பிரயோகமே 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பர், தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள செல் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.
அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம் ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.
ஆரம்ப காலகட்டங்களில் இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி செல்லின் மையப்பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) எனவும் பெயரிட்டார். அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.
பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது. மேலும் பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற் கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 1890ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனை இன்று மைட்டோ காண்ட்ரிய (Mitochondtia) என்று நாம் அறிந்து வருகிறோம். அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus)குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனால், 1953ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த கண்டு பிடிப்பு உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் பல் வேறு தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.
மரபணுக்கூறான டி.என்.ஏ. (D.N.A) வில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் மட்டும் பல இலட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது மேதைகளுக்கே தலை சுற்றாக விளங்குகிறது. எனவேதான், 1958ம் ஆண்டு கோட்டர்ட் என்பர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்று அறிவிப்புச் செய்தார். அதன் பொருள்: இது வரையும் செல் பற்றிய செய்திகளையும், அதில் சார்ந்திருக்கும் மரபணுக் கூறான டி.என்.ஏ. பற்றியும் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர் பறை சாற்றுகிறார்.
செல் ஆய்வின் பின்னணியை புரிந்து கொண்ட நாம், 1665ம் ஆண்டுக்கு அதாவது 338 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் செல் பற்றியும், அதில் அடங்கியுள்ள குரோமோசம்கள் பற்றியும் துளி கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்ல, இதன் பெயர்களைக் கூட அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் எனும் போது 1423 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் இந்த செய்திகளை யெல்லாம் அறிந்திருந்தார் என்று சொன்னால் அதனை ஏற்க முடியுமா? நிச்சயமாக யாரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.ஏ. (
D.N.A) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் 1423 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட இறைவேதமான குர்ஆனில் இந்தச் செய்தி தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் செய்தியை அவரால் சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் சொல்லியிருக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. இந்த டி.என்.ஏ. வையும், அது சார்ந்திருக்கும் குரோமோசோம்களையும் யார் படைத்தானோ, அவனால் மட்டுமே எல்லாக் காலத்திலும் சொல்ல முடியும்.
சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது எது? என்ற இந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருப்பது, முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆன், இறைவானல் இறக்கியருளப்பட்டதுதான் முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் புனைந்து சொல்லப்பட்டதல்ல என்பதனை இன்றளவும் பறைச்சாற்றிக் கொண்டும் இருக்கிறது. இந்த செய்தி திருமறையில் ஒரு இடத்தில் அல்ல, பல இடங்களில் சொல்லப்பட்டிக்கிறது. எந்தெந்த வசனத்தில், எவ்வாறு இந்தக் கருத்து சொல்லப்பட்டுள்ளது என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (9)


பெண்கள் விளை நிலங்களே!
கடந்த இதழ் தொடர்களில் பெண் சிசுக்கள் பிறப்பதற்கு பெண்களே காரணம் என்று கருதி தாயும்,சேயும் எவ்வாறெல்லாம் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பது குறித்துப்பார்த்தோம்.இந்தந் தொடரில் பெண் சிசு பிறப்பதற்கு பெண்கள் காரணம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்வோம்.
نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ ... '
'உங்களது மனைவிகள் உங்களுக்குரிய விளை நிலங்களாகும்ஆகவேஉங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்.'' (அல் குர்ஆன்: 2:223)
இந்த வசனத்தில் பெண்களை ஆண்களின் விளை நிலங்கள் என்று குறிப்பிடுகிறான்இதனை பார்க்கும் சிலர்பெண் உரிமையின் கழுத்து நெறிக்கப்படுகிறதேஎன ஓநாய் கண்ணீர் வடிக்கிறார்கள்.பெண்களை வெறும் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டு அவர்களின் சுயமரியாதை சாகடிக்கப்படுகிறதே இஸ்லாத்தில் என்று கூச்சலிடுகின்றன இந்த ஓநாய் கூட்டங்கள்.
இவர்களது மயக்கு வார்த்தையில் மதியிழந்தபுதுமைப் பெண்ணுலகம் படைக்கப்போவதாக வாய்சவடால் அடிக்கும் சில அபலைப் பெண்கள் கர்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.அதனுடைய பின்விளைவுகளின் பரிணாமத்தை புரிந்து கொள்ளாமலேயே வெற்றுக் கோஷம் எழுப்பும் இவர்கள்இந்த இறைவசனத்தின் அர்த்தத்தை சரியான முறையில் சிந்தித்து புரிந்து கொண்டால்சில வார்த்தைகள் கொண்ட இந்த வரியில் இவ்வளவு ஆழமான அர்த்தம் மறைந்திருக்கிறதாஎன வியந்து போய்விடுவார்கள்தான் ஏமாற்றப்பட்டுசுரண்டப்படுவதையும் புரிந்து கொள்வார்கள்.
புதுமைப் பெண்ணேஉன்னைத் திரும்பிப்பார்!
குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்குபுதுமைப்பெண்ணேநீதான் காரணம் என்று எத்தனை கொடுமைகளுக்கு உள்ளாக்கபட்டாய்உன் கண் எதிரேயே நீ பெற்ற உன்னைச்சார்ந்த இனம் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதே!
பெண்ணுரிமை பேசப்படும் இந்த நவீன கம்யூட்டர் யுகத்தில்பெண்ணுக்கு ஆண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் உன் நிலை உயர்ந்திருக்கிறதா?நீ பெற்ற பெண் சிசுவை உன் கரத்தாலேயே கொலை செய்யப்படும் அளவிற்கல்லவா நீ துன்புறுத்தப்படுகிறாய்ஏன்? பெண்குழந்தை பிறப்பதற்கு நீதான் காரணம் என்று இந்த ஆண்வர்க்கம் கருதிக் கொண்டிருப்பதால் தான்உண்மையில் அவர்கள்தான் காரணம் என்பதை அடியோடு மறைத்தே விட்டார்களேகுழந்தை பிறக்காவிட்டாலும் உனது பெண்மையில் தான் முதலில் இந்த ஆண் வர்க்கத்திற்கு சந்தேகம் ஏற்படுகிறதுமருத்துவப் பரிசோதனைக்கு உன்னைத்தான் உட்படுத்துகிறது.
இறுதியில் பிள்ளைப்பேறு இல்லாத மலடி என்று முத்திரை குத்தப்பட்டு காலமுழுவதும் தண்டனைக்கு உள்ளாவது நீதானேஇவைகள் அனைத்திற்கும் ஆண்மகன் காரணமாக இருந்தாலும் தன்னை இந்த பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லைதன்னில் உள்ள குறைகள் வெளியேறிவிடாமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறது இந்த ஆணாதிக்கம் படைத்தவவர்கள்.
இந்நிலையில் பாலைத் தீர்மானிப்பதற்கு பெண்கள் காரணமல்லஆண்கள்தான் காரணம் என்ற உண்மையை இந்த வசனம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துதிணறிக் கொண்டிருந்த பெண்ணினத்தை,அவர்கள் அனுபவித்து வந்த வன்கொடுமைகளிலிருந்து விடுதலைப் பெறச் செய்துசுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்துள்ளது.
குழந்தை பிறப்பதற்கு பெண் காரணம் அல்லஅவள் ஒரு விளை நிலம்விதை விதைப்பவன் ஆண்மகன்அவன் எதை விதைக்கிறானோ அதனை அறுவடை செய்துக் கொள்வான்பெண் விதை விதைத்தால்பெண்ணையும்ஆண் விதை விதைத்தால் ஆணையும் அறுவடை செய்து கொள்வான்,தன்னில் எந்த விதை விதைக்கப்படுகிறோ அதனை சரியாக பாதுகாப்பாக விளைவிப்பது மட்டும்தான் ஒரு பெண்ணின் பங்காக இருக்கமுடியும் என்ற உண்மையை இந்த இறைவசனம் தெளிவு படுத்துகிறது.
வினையை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான்திணையை விதைத்தவன் திணையை அறுவடை செய்வான் என்ற முதுமொழிக்கு ஏற்பஎதை விதைக்கிறானோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
புல்லை விதைத்த ஒரு விவசாயி நெல்லை அறுவடை செய்ய வேண்டும் என ஆசைப்படுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லைநெல்லை அறுவடை செய்ய முடியவில்லையேவீணாப்போன இந்த நிலம் நெல்லை விளைவிக்க வில்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தால் அவனை பைத்தியக்காரன் என்று நாம் ஏசமாட்டமோ?
பெண் ஒரு விளைநிலம்நீ எதை விதைக்கிறாயோ அதனையே பெற்றுக் கொள்ள முடியும்அதற்கு மாற்றமாக எதையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்ற இந்த உண்மையை முதன் முதலில் உலகிற்கு சொன்னது இறைவேதம் குர்ஆன் அல்லவாஇதன் மூலம் எத்தனை கோடிப்பெண்களுக்கு உயிர் வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று புதுமைப் பெண்ணேசிந்தித்துப்பார்!.
மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த வசனம்
சில வார்த்தைகளைக் கொண்ட இந்த சிறிய வசனம் பல்வேறு சமூகப்பிரச்சனைகளுக்கும்தீர்வு காண முடியாமல்நீதி மன்றங்களில் நிலுவையில் தேங்கிக் கிடக்கும் பல வழக்குகளுக்கும்மூட நம்பிக்கைகளுக்கும் சரியான தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.
பின்புறமாக முன் பக்கத்தில் உடலுறவு கொள்வதால் பிறக்கும் குழந்தை பார்வை குறையுள்ளதாக(மாலைக் கண்இருக்கும் என்று மதீனாவில் வாழ்ந்த யூதர்கள் மதத்தின் பெயரால் சொல்லி மதீனா வாழ் மக்களை நம்பவைத்துபயமுறுத்தி வந்தார்கள்இந்த மூட நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகத்தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று பல விரிவுரையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள்இதன் படி மதத்தின் பெயரால் வதந்திகளை பரப்பி வருபவர்களுக்கு மிகப் பெரும் சாட்டையடியாக இந்த வசனம் அமைகிறது.
பெண்கள் பல ஆண்களை மணக்கலாமா?
ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களை மணக்க முடியாது என்று இஸ்லாம் கூறிவருகிற சட்டத்திற்கு சரியான காரணத்தை இந்த வசனம் எடுத்துரைக்கிறதுஉலக நடை முறையில் ஒரு விளை நிலத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே பயிரிட முடியும்பலர் சேர்ந்து சாகுபடி செய்தால் எந்த பயிர் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் பல பிரச்சனைகளும்சண்டை சச்ரவுகளும் உருவாகிவிடும்விதைவிதைத்த ஒவ்வொருவரும் உரிமை கேட்டுப் போராடுவார்கள்சமூத்தில் வேண்டாத பிரச்சனைகள் தோன்றுவதற்கு அது காரணமாக ஆகிவிடும்.
அது போல விளைநிலமாக இருக்கும் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைத்தான் மணம் முடிக்க முடியும்அவ்வாறில்லாமல் ஒரே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்துக் கொள்ள நேர்ந்தால்அந்த பல கணவன்களும் அவளுடன் ஒரே நேரத்தில் இல்வாழ்க்கையில் ஈடுபடுவார்கள்.அப்போது அவளுக்கும் பிறக்கும் குழந்தை எந்தக் கணவனுக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்குள் அமர்களமான போர்களமே உருவாகிவிடும்.
நல்ல குழந்தையாக இருந்தால் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடுவார்கள்குறையுள்ளதாக பிறந்திருந்தால் எல்லோரும் பின்வாங்கிவிடுவார்கள்அப்போது தந்தை விலாசம் இல்லாத குழந்தைகள் உருவாகிசமுதாயத்தின் தலைவலிகளாக வளர்வார்கள்அது போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வினைத்தான் இந்த வசனம் கூறுகிறது.
இன்னொரு சட்டத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த வசனம் வழிவகுக்கிறதுஅதாவது வசதி வாய்ப்புகள் உள்ள ஒருவன் பல விளைநிலங்களுக்கு சொந்தக்காரனாகவும்அதில் பயிரிடுவதற்கும் உரிமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல ஒரு ஆண் பல பெண்களை திருமணம் முடித்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் இந்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.பல திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி என்பதற்கு எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணமுடித்துக் கொள்ளலாம் என்று சிலர் தவறாக புரிந்து கொள்ளலாம் என்பதால் அதற்கான உச்ச வரம்பு நான்கிற்குள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இஸ்லாத்தில் விதிக்கப்பட்டிருக்கிறதுபல திருமணம் செய்வது அனுமதிதானே தவிரகட்டாயமில்லை என்பதையும் இந்த இடத்தில் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
விதவைகள் விறகு கட்டைகளா?
கணவனை இழந்த பெண் விதவைகள் வாழ தகுதியில்லாதவர்கள் எனக் கருதிகணவனுடன் சேர்ந்து உடன் கட்டை ஏற்றப்பட்டுஉயிருடன் எரித்துக் கொள்ளும் கொடுமை கடவுளின் பெயரால்மதத்தின் பெயரால் நமது நாடு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறதுவிதவைகள் கணவனை எரிக்கும் விறகு கட்டைகளா என்னஇந்த கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்த முதல் மதம் இஸ்லாம்தான்.கணவனை இழந்த ஒரு பெண்உயிர் வாழும் உரிமை இழந்தவள் என ஓதுக்கப் பட வேண்டியவளல்லமறுமணம் முடித்து பயனுள்ள ஒரு விளை நிலமாக இன்னொருவன் விரும்பினால் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த வசனம் நமக்கு போதிக்கிறது.
ஒருவனுக்குச் சொந்தமான நிலம் அவன் தனக்குத் தேவையில்லை என விட்டுவிடும் போதுஅந்த நிலத்தை வேறொருவன் வாங்கி பயன்படுத்திக் கொள்வது எவ்வாறு இயல்பானதோமேலும் அந்த நிலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுவது எவ்வளவு பெரிய அறியாமையோ அது போல கணவனால் வேண்டாமென கைவிடப்பட்டஅல்லது கணவனை இழந்த ஒரு பெண்ணை விரும்பும் மற்றொருவன் மணந்துஅவளுக்கு வாழ்க்கை கொடுப்பது இயல்பானதும்சமூகச் சீரமைப்பிற்கு அவசியமானதுமாகும் மனைவி கணவனின் விளைநிலம் என்பதால் அந்த நிலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுவது சமூகக் குற்றமுமாகும் என்பதை இந்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.
ஆலமரத்தை சுருட்டி விதையில் வைத்தவன் யார்?
மனைவிகள் உங்களின் விளைநிலம் எனச்சொல்லப்பட்டதில் நாம் புரிந்து கொண்ட அர்த்தங்கள்தான் இத்தனை என்றால்இன்னும் நாம் அறியாத அர்த்தங்கள்தான் எத்தனையோஆலமரத்தைச் சுருட்டி விதையில் வைத்தவன் யாரோ அவன் இறக்கி வைத்த அருள் வாக்குதான் இந்த வசனம் என்பதை நம்மையும் அறியாமல் நமது நாவு உறக்கக் கூறிக் கொண்டிருப்பது நமது செவிகளில் விழுகிறதுஇந்த குர்ஆன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற ஒரு மனிதரால் சொல்லப்பட்டிருக்க முடியாதுஎல்லாம் அறிந்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதற்கு இந்த ஒரு சிறிய வசனமே போதுமான ஆதாரமாகும்இதனைச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு அத்தாட்சிகள் பல உண்டு.
அறிவியல் கண்டுபிடித்தது என்ன?
மேற் கூறப்பட்ட வசனத்தின் மூலம் குழந்தையின் பாலைத்தீர்மானிப்பதில் பெண்ணுக்கு எவ்வித பங்குமில்லை என்பதை விரிவாகப்பார்த்தோம்ஆண்கள்தான் முழுக்க முழுக்க காரணமாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றைய அறிவியல் ஆய்வு எவ்வாறு தீர்மானித்துள்ளது என்பதை புரிந்து கொண்டுவாழ்க்கை நெறிகளைப் போதிக்கும் இஸ்லாமிய வேத நூலான குர்ஆன்இந்த அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு கூறியுள்ளது என்பதை இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும், தக்வா டிரஸ்ட்-ன் இந்த இணைய தளம் சம்பந்தமான கருத்துகள் மற்றும் கட்டுரைகளை " ilayangudithakwatrust@gmail.com " என்ற முகவரிக்கு அனுப்பவும். தங்களின் பங்களிப்பு இந்த இணைய தளத்தை மென்மேலும் விரிவு படுத்த உதவும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். (Facebook Group : இளையான்குடி தக்வா டிரஸ்ட் )