"எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை." (அஹ்மத்)
அல்லாஹ் சூரா அஹ்ஸாப்பில் கூறுகிறான்;
"நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்." (சூரத்துல் அஹ்ஷாப்: 72)
இந்த குர்ஆன் அத்தியாயம் நம்மீது அல்லாஹ்வின் அமானிதம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மனிதனோ விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. எனவே அல்லாஹ்விடமிருந்து நாம் பொறுப்பேற்றுள்ள இந்த அமானிதம் என்றால் என்ற? அதனை நாம் எவ்வாறு சுமக்க வேண்டும்? என்பதை தெளிவாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அல்;லாஹ் எம் மீது சுமத்திலுள்ள இந்த பாரிய அமானிதத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்னர் அமானிதங்கள் என நாம் அன்றாட வாழ்வில் கருதும் சில விடயங்களை விளங்கிக்கொள்வது முக்கியமாகும்.]
அமானாஹ் - அமானிதம்
இது ஒரு இஸ்லாமிய அழைப்பாளன் ஆற்றிய உரையின் பிரதியாக்கம்.
"விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில நீங்கள் தீர்வு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்." (சூரத்துல் நிஸா: 58)
அன்பான சகோதர்களே!
அமானிதம் என்பதும், அதனுடன் இணையாக வருகின்ற விடயங்களும் ஒரு முஸ்லிமை பொருத்தவரையில் இலகுவாக அல்லது கவனயீனமாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு விடயமல்ல. அமானிதத்தின் எதிர்பொருள் மோசடியாகும். அல்லாஹ் இறைமறையில் அமானிதம் குறித்தும், அதற்கு செய்யப்படுகின்ற அநியாயம் குறித்தும் தெளிவுபடுத்தும்போது அமானிதத்தின் மீதான அத்துமீறல் மோசடி என தெரிவிக்கின்றான்.
"மேலும், ஏதாவது ஒரு கூட்டத்தாரிடமிருந்து துரோகத்தை நீர் பயந்தால் அதற்கு சமமாவே அவ்வுடன்படிக்கையை அவர்கள் பால் எறிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் துரோகம் செய்வோரை நேசிக்க மாட்டான்.'' (சூரத்துல் அன்பால்: 58)
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமானிதம் குறித்த விடயத்தின் பாரதூரத்தை, அதன் மீதுள்ள பொறுப்பினையும், அமானிதத்தை அலட்சியம் செய்வது நயவஞ்சகத்தனம் என விளக்குவதன் ஊடாக தெளிவுபடுத்துகிறார்கள்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்ததாக அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
"நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று அவன் பேசினால் பொய்யே பேசுவான். அவன் வாக்களித்தால் அதனை மீறி விடுவான். அவனிடம் அமானிதங்கள் வழங்கப்பட்டால் அதனை நிறைவேற்ற மாட்டான். அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று அழைத்துக்கொண்டாலும் சரியே."
புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்ஸரஸ}ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
"எவரிடமாவது பின்வரும் நான்கு பண்புகள் காணப்படுமாயின் அவாக்ள நயவஞ்சகர்களாவார்கள். மேலும் எவரிடமாவது இந்த நான்கு பண்புகளில் ஒன்றேனும் காணப்பட்டால் அதனை அவன் கைவிடும் வரை அவனிடம் நவவஞ்சகரின் ஒரு பண்பு உள்ளது.
அவையாவன, அவன் கதைத்தால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் மீறி விடுவான், உடன்படிக்கை செய்தால் மோசடி செய்வான், தர்க்கிக்க நேரிட்டால் பிறரை அசிங்கப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வான்."
என் அருமை சகோதர்களே!
அமானிதம் குறித்த எண்ணக்கரு அல்லாஹ் மனிதனை படைத்த காலத்திலேயே எம்மிடம் வழங்கப்பட்டுவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அல்லாஹ்வின் அமானிதத்தை ஏற்கும்படி அல்லாஹ் வானங்களிடம் கேட்டான். அவை மறுத்து விட்டன. அல்லாஹ் பூமியிடம் கேட்டான். அதுவும் மறுத்து விட்டது. மலைகளிடம் கேட்டபோதும் அவையும் மறுத்து விட்டன. பின்னர் மனிதனிடம் அல்லாஹ் கேட்டான். அப்போது அறிவீனனான மனிதன் அல்லாஹ்வின் அமானிதத்தை ஏற்றுக்கொண்டான்.
அல்லாஹ் சூரா அஹ்ஸாப்பில் கூறுகிறான்;
"நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்." (சூரத்துல் அஹ்ஷாப்: 72)
இந்த குர்ஆன் அத்தியாயம் நம்மீது அல்லாஹ்வின் அமானிதம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மனிதனோ விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. எனவே அல்லாஹ்விடமிருந்து நாம் பொறுப்பேற்றுள்ள இந்த அமானிதம் என்றால் என்ற? அதனை நாம் எவ்வாறு சுமக்க வேண்டும்? என்பதை தெளிவாக புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அல்;லாஹ் எம் மீது சுமத்திலுள்ள இந்த பாரிய அமானிதத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்னர் அமானிதங்கள் என நாம் அன்றாட வாழ்வில் கருதும் சில விடயங்களை விளங்கிக்கொள்வது முக்கியமாகும்.
இத்தகைய அமானிதங்களில் ஒரு வகைதான் ஒருவர் இரகசியமாக வைத்திருக்க விரும்புகின்ற விடயத்தை பிறருடன் கலந்துரையாடாது பாதுகாப்பதாகும்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிப்பதாக இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்.
"தன்னுடைய பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒருவரது கலந்துரையாடலை எவரேனும் செவியுற நேரிட்டால், அந்த கலந்துரையாடல் இரகசியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அது ஒரு அமானிதமாகும். அந்த நபர் அதனை இரகசியமாக வைத்துக்கொள்ளும்படி வினவாவிட்டாலும் கூட."
ஒரு முஸ்லிம் தமது கலந்துரையாடல்களை இரகசியமாக வைத்துக்கொள்ளலாம். அதனை இரகசியமாக பாதுகாக்கும்படி வேண்டலாம். அதிலுள்ள முக்கிய விடயங்களை வெளியிட வேண்டாம் என கோரலாம். அவ்வாறு செய்யப்பட்டால் அது அமானிதமாகும். அதனை மீறுவது துரோகமாகும்.
அல்லாஹ் அல்குர்ஆனில் தெரிவிக்கிறான்;
"இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர்."
"அவர்கள் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்."
"இன்னும் அவர்கள், தங்கள் தொழுகையின் மீது பேணுதலுடையவர்கள்."
"மேற்கூறப்பட்ட தகுதியுடைய அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்." (சூரத்துல் மஆரிஜ்: 32-35)
அன்பான சகோதரர்களே!
இஸ்லாத்தின் ஒளியில் இந்த உலகம் வழிநடாத்தப்படாத துரதிஸ்டமான ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம். இறைவனுக்கு அஞ்சாத, அவன் எம்மீது சுமத்தியிருக்கும் பொறுப்புக்களை துதறித்தள்ளிவிட்டு செயற்படும் ஒரு சடவாத உலகில் நாம் வாழ்கிறோம். இஸ்லாத்தில் பாரது}ரமான விடயங்களாக சொல்லப்பட்டுள்ள விடயங்களை மிக இலகுவான விடயங்களாக எடுத்துக்கொண்டு மேற்குலகி;ன் கேவலாமான அளவுகோள்களை எமது அடிப்படைகளாக கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே இத்தகையதொரு உலகில் அமானிதமும், நம்பிக்கையும், சத்தியமும் செல்லாக்காசுகளாக கருதப்படுகின்றன. ஆகவே அது பற்றி அதிக அக்கறை காட்டுவது வடிகட்டபட்ட முட்டாள்தனமாக இன்றைய உலகில் கருதப்படுவது எமக்கு ஆச்சரியமளிக்கத் தேவையில்லை. இஸ்லாத்தை கொண்டு அல்லாஹ் எந்த முஸ்லிம்களை கண்ணியப்படுத்தினானோ, அந்த முஸ்லிம்களே இஸ்லாத்தை சடத்துவக் கண்ணோட்டத்துடனும், இலாபநோக்கை அடிப்படையாகக் கொண்டும் நோக்குவதும் முஸ்லிம்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ள அமானிதங்களுக்கு மோசடி செய்வதற்கு காரணமாக அமைந்து விடுவது எமக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
எனவே இத்தகைய கொடிய சூழலிலிருந்து அல்லாஹ்வின் அடியார்களையும், முஸ்லிம் உலகயையும் மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை நாம் மேற்கொள்வதற்கு மீண்டும் உலகில் பூரணமாக இஸ்லாத்தையும், அதனது அளவுகோள்களையும் நிலைநாட்டுவதற்காக அல்லாஹ் எம்மீது சுமத்தியுள்ள ‘இஸ்லாத்தை நிலைநாட்டுதல்’ என்ற அந்த அடிப்படை அமானிதத்தை நாம் நிறைவேற்ற விரைய வேண்டுமல்லாவா?
உங்களில் எவரிடம் இந்த உம்மத்தினை பாதுகாக்கும், அல்லது இந்த உலகில் மீண்டும் இஸ்லாத்தை நிலைநாட்டும் தைரியம் இருக்கின்றதோ, அவர்களிடம் நான் கேட்கிறேன்;
நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் வாக்குறுதியளித்துவிட்டு அதனை மீறுவது முறையாகுமா? ஓரு சகோதரரிடம் நான் உங்களை சந்திக்கிறேன் எனக்கூறிவிட்டு, அல்லது இஸ்லாமிய இயக்கம் உங்களிடம் ஒப்படைத்த பணிகளை செய்கிறேன் என வாக்குறுதியளித்துவிட்டு அதனை மீறுவது உங்களுக்கு தகுந்த காரியமா? அல்லது ஒருவரை சந்திப்பதற்காக ஒரு குறித்த நேரத்தை வாக்குறுதியளித்துவிட்டு அதற்கு மாறு செய்வது ஒரு சிறந்த தாயியின் பண்பாக அமைய முடியுமா? இவையெல்லாம் அமானிதங்கள் இல்லையா? இவை இஸ்லாத்தின் பகுதிகளில்லையா?
நாங்கள் எமது வைத்தியரிடம் நேரம் குறித்துவிட்டு, அல்லது பரீட்சைக்கு நேரம் தெரிந்த பின்பு, அல்லது ஒரு நேர்முகத்தேர்வுக்கு நேரம் ஒதுக்கப்பட்ட பின்பு நாம் அவற்றில் அசட்டை செய்கிறோமா? அத்தகைய நேரங்களில் தாமதிக்கிறோமா? இத்தகைய உலகாயத தேவைகள் எமக்கு எவ்வாறு பெரிய விடயங்களாக மாறிவிடுகின்றன? உலகாயத அடைவுகளிலும், எமது விருப்பத்திற்குரியகளுக்கு உதவுவதில், அவர்களை பாதுகாப்பதில் எமக்கிருக்கின்ற அக்கறை அல்லாஹ}ம், ரஸ}லும் எம்மீது சுமத்திய அமானிதங்களை, வேண்டுகோள்களை செய்வதில் ஏன் எமக்கு ஏற்படுவதில்லை?
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்;
"எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை." (அஹ்மத்)
மேலும் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
"உங்களிடம் நான்கு தகுதிகள் காணப்பட்டால் நீங்கள் உங்கள் வாழ்வில் எதனையும் தவறவிட்டுவிட்டேனே என கவலைப்படத்தேவையில்லை. அத்தகுதிகளாவன: அமானிதத்தை பாதுகாத்தல், உண்மையை பாதுகாத்தல், நற்பண்புகளை பேணல், நேர்மையான, து}ய்மையான உணவை உட்கொள்ளல்." (அஹ்மத்)
அன்பான சகோதரர்களே!
நாம் வாக்குறுதியளித்தால் அதனை மிகவும் கவனமாக நிறைவேற்ற வேண்டும். ஏதேனும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் அல்லது ஏதேனும் ஒரு பணி எம்மீது பொறுப்புச்சாட்டப்பட்டால் அதனை கட்டாயமாக செய்ய வேண்டும்.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவிக்கிறார்கள்;
"எவரொருவரிடத்தில் உங்களுக்கு பொறுப்புக்கள் இருக்கிறதோ, அவற்றை நீங்கள் நிறைவேற்றி விடுங்கள். அந்த நபர் தனது சத்தியங்களை முறிப்பவராக இருந்தபோதிலும்."(அஹ்மத், அபு தாவூத்)
சகோதரர்களே! எமக்குத்தெரியும்ஸ மனிதகுலத்தின் முன்மாதிரியான எங்கள் தலைவர் ரஸ}ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அளித்த எந்தவொரு வாக்குறுதிகளுக்கும் துரோகமிழைத்ததில்லை.
ஹிஜ்ரத்தின் இறுதிக்கட்டத்தில் குறைஷிகளால் கொலை அச்சுறுத்தலை சந்திக்க நேரிட்ட பொழுதிலும்கூட, அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தன்னை நம்பி குறைஷிகள் ஒப்படைத்திருந்த பொருட்களை மக்காவில் தங்கியிருந்து ஒப்படைத்து விடுமாறு பொறுப்புச்சாட்டி சென்றதை நாம் காண்கிறோம். தனது எதிரிகள் தன்னை கொலை செய்ய தேடிக்கொண்டிருந்த நிலையிலும் எதிரிகளிடம் தான் பெற்ற அமானிதங்களை நிறைவேற்ற துடித்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் தன் மீது ஒப்படைத்த "தீனை நிலைநாட்டுதல்" என்ற விடயத்தில் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். அதேபோல நபித்தோழர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை எவ்வாறு கவனமாக நிறைவேற்றினார்கள் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்ஸ
ஒருமுறை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபரைச்சேர்ந்த யூதர்களிடமிருந்து அவர்களது பயிர்களுக்காகவும், பழங்களுக்காகவும் வரியை பெற்று வருமாறு அப்துல்லாஹ் இப்னு ருவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பினார்கள். அப்போது யூதர்களோ அந்த நபித்தோழரிடம் சில பரிசுப்பொருட்களை லஞ்சமாக கொடுத்து பலனடைய நினைத்தனர். அந்த லஞ்சத்தினை பெற்று வரியில் மாறுதல் செய்யுமாறு கோரினார்கள். அதற்கு அப்துல்லாஹ் இப்னு ருவாஹா ரளியல்லாஹு அன்ஹு அதனை மறுத்து விட்டு கூறினார்கள்:"யூதர்களே! நீங்கள் தான் அல்லாஹ்வின் இடத்தில் மிகக்கேவலமான படைப்புக்கள். இருந்தாலும் உங்களின் இந்த நிலை என்னை உங்களிடம் அநீதியாக செயற்பட து}ண்டாது என்றார்கள். நீங்கள் என்னிடம் தர முயன்றதோ லஞ்சமாகும். அது தடை செய்யப்பட்டதாகும். நாங்கள் அதனை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்கள்."இந்த சம்பவம் அப்துல்லாஹ் இப்னு ருவாஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அமானிதத்தின் பாரதூரத்தையும், ஒரு அரசின் பிரதிநிதி என்ற தனது பொறுப்பையும் எவ்வாறு விளங்கி வைத்திருந்தார்கள் என்பதை எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
எனினும் எமது வாழ்வை எடுத்துப்பாருங்கள். எமது வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் ஏதேனும் ஒரு விடயத்திற்கு ‘ஆம்’ எனக்கூறி பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கிறோம். அந்த பொறுப்புக்கள் சாதாரணமான ஒன்றாகவோ, அல்லது பாரது}ரமானதொன்றாகவோ இருக்கலாம். உதாரணமாக நாம் ஒரு மனிதனுக்கு அல்லது அவரது கோரிக்கைக்கு உடன்பட்டுவிட்டு பின்னர் அந்த அமானிதத்தை அலட்சியம் செய்து விடுகிறோம், அல்லது அமானிதமாக ஏற்றுக்கொண்ட விடயங்களை ஒரு புறம் வைத்துவிட்டு எமது தனிப்பட்;ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அமானிதங்களை மறந்து விடுகிறோம்.
நாம் மனிதர்களிடம் ஒரு பணிக்காக நேரம் குறித்துவிட்டு பின் அந்த நேரத்தில் அதனைச்செய்யாது விடுவதன் ஊடாக அந்த அமானிதத்திற்கு மிக இலகுவாக மாறு செய்து விடுகிறோம். சில பொழுதுகளில் நாம் நேரம் தவறிவிடுவதை அந்த குறித்த நபருக்கு அறிவித்துவிடுவதைக்கூட செய்யாது விட்டுவிடுகிறோம். இத்தகைய நிலையைதான் எம்மிடம் ஒப்படைக்கப்படும் அமானிதங்கள் சந்திக்கின்றன.
அமானிதங்களை ஏற்றல்
அமானிதம் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும், அதற்கு செய்யப்படும் துரோகம் முனாபிக் தனத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையையும் ஒரு முஸ்லிம் தெளிவாக புரிந்து கொள்வானாகில், அவன் அமானிதங்களை ஏற்றுக்கொள்வதை மிகவுமே பயப்படுவான். மேலும் அதனை ஏற்றுக்கொண்டு, பின் அதனை மீறுவதால் ஏற்படும் கெடுதலுக்கும் மிகவும் அஞ்சுவான். எனினும் இதனு}டாக அமானிதம் எதனையும் ஏற்றுக்கொளக்கூடாது என சிந்திப்பது தவறாகும். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கு அதிகமான பொறுப்புகள் காணப்படுகின்றன. இஸ்லாமிய அகீதாவும், அல்லாஹ்வின் ஷரிஆ சட்டங்களும் அவன் மீது பல அமானிதங்களை ஒப்படைத்துள்ளன.
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நீங்கள் எல்லோரும் பொறுப்பாளர்கள். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். இமாம் ஒரு பொறுப்பாளர். அவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர். ஆவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவனின் வீடு (குடும்பம்) திற்கு பொறுப்பாளர். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தனது எஜமானனின் பொருட்கள் குறித்த பொறுப்பாளி. அது குறித்து அவன் விசாரிக்கப்படுவான். தொடர்ந்து அந்த ஸஹாபி நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறும் சொன்னார்கள் என நினைக்கிறேன் எனக்கூறிவிட்டு சொன்னார்கள்ஸ தகப்பனின் பணத்தின் மீது பொறுப்பாளியான ஒரு மனிதன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நீங்கள் எல்லோரும் பொறுப்பாளிகளே. உங்களுடைய பொறுப்புக்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்." (புகாரி)
எனவே அமானிதங்கள், பொறுப்புகளை விலகிச்செல்வதிலிருந்து தவிர்ந்து அதனை எம்மால் முடிந்தவரை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும்.
தீன் ஒரு அமானிதமாகும்
அல்லாஹ்வின் து}தர்கள் மிகப்பெரிய அமானிதத்துடன் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இந்த மனிகுலத்திறகு அவர்களது இறைவன் மக்களிடமிருந்து எதனை எதிர்பார்க்கிறானோ, அதனை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டார்கள்.இத்தகைய முக்கியமானதொரு அமானிதத்தை நிறைவேற்றுவதில் இந்த நபிமார்களே உலகில் உருவான உருவாக இருக்கின்ற அனைவரையும் விட மேலானவர்கள்.
இறுதியாக இந்த அமானிதத்தை சுமந்து வந்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எம்மை விட்டு பிரிந்த பின்னர் அவர் இந்த மிகப்பெரிய அமானிதத்தை எம்மீது விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். மனிதர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய அனைத்து அமானிதங்களையும்விட இந்த அமானிதம்தான் மிகவும் பெரியது. இந்த அமானிதம் ஒரு விலை மதிக்க முடியாத அலங்காரமாகும். இது இல்லாத நிலையில், மனிதகுலம் மிருகங்களைவிட கேவலமான நிலைக்கு சென்று விடுகின்றது.
அல்குர்ஆனின் ஸூரா அஹ்ராவ் 172-ம் வசனம் கூறுகிறது;
"நபியே! உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தங்களுக்கே சாட்சியாட்சி, (அவர்களிடம்) நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று(கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் ஆம் ( நீதான் இரட்சகன், அதன்மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம், என்று அவர்கள் கூறியதை (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! இது ஏனென்றால், இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால்) நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்து விட்டோம் என்றும் மறுமை நாளில் நீங்கள் சொல்லாது இருப்பதற்காக."ஆகவே அல்லாஹ்விடத்தில் பாரிய தண்டனை பெற்றுத்தரும் இந்த அமானிதம் என்பது என்ன?
நிச்சயமாக அது சத்தியத்தை( இஸ்லாத்தை) உரைப்பதை, அல்லது எத்திவைப்பதைத்தவிர வேறோன்று இல்லை. குறிப்பாக அதனை யார் ஏற்றுக்கொண்டார்களோ, அதனை நம்பிக்கை கொண்டார்களோ, அவர்களுக்கு அதுவே அமானிதமாகும்.
அல்லாஹ் அல் மாயிதாவின் முதலாம் வசனத்தில் கூறுகிறான்.
"விசுவாசிகளே! நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை(ப் பூரணமாக) நிறைவேற்றுங்கள், (அன்றி) உங்களுக்கு, (இனி) ஒதிக்காட்டப்படுபவற்றைத்தவிர, (மற்ற ஆடு, மாடு, ஓட்டகை முதலிய) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம், வேட்டையாடலாம். எனினும் உம்ரா, ஹஜ் யாத்திரை நிமித்தம்) நீங்கள் இஹ்ராமுடைய நிலையிலிருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவதை உங்களுக்கு ஆகுமாக்கிக்கொள்ளாதவர்களாக (இருப்பது கடமையாகும்) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை (உங்களுக்கு)க் கட்டளையிடுகிறான்." (அல் மாயிதா: 1)
அறிஞர்கள் இந்த ஆயத் குறித்து தெரிவி;க்கின்றபோது;
அல்லாஹ் இந்த ஸ{ராவினை ஆரம்பிக்கும்போதே, விசுவாசிகளே! நீங்கள் உங்கள் உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள் என ஆரம்பித்துவிட்டு உணவு குறித்;த தனது கட்டளைகளை கீழே தொடர்ந்து விபரிக்கிறான்.
அதாவது உங்களுக்கு இனி ஓதிக்காட்டப்படுபவற்றைத்தவிர, ஏனைய (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன, எனக்குறிப்பிடுகிறான்.
இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் உரைத்திருக்கும் ஷஹாதாவை அல்லாஹ் ஞாபகப்படுத்தி நாம் அவனுக்கு முழுமையாக கட்டுப்படுதல் வேண்டும் என்ற எமது அமானிதத்தை அல்லாஹ் கூறிவிட்டு தனது கட்டளைகளை விபரித்திருத்து அதற்கு கட்டுப்படும் படி விபரிக்கிறான் என்கிறார்கள்.
இந்த அமானிதத்தின் முக்கிய ஒரு பகுதிதான் இஸ்லாமிய அழைப்பு பணியும், மீண்டும் இஸ்லாத்தை இந்த மண்ணில் நிலைநாட்டுவதுமாகும்.
இந்த அமானிதம்தான் உஸ்பகிஸ்தான் சிறைச்சாலைகளிலே ஆண்களும், பெண்களுமாக நிறைந்திருக்கும், அந்த மனிதர்கள் அமானிதமாக ஏற்றது.
இந்த அமானிதம் தான் கிலாபத்தை இந்த மண்ணிலே மீண்டும் நிறுவுவதற்காக பாடுபட்டு கொடுங்கோல் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட அழைப்பாளர்கள் ஏற்றது,
இந்த அமானிதத்திற்குதான் மிக வேகமான அவதானமும், அவசரமும் தேவைப்படுகிறது.
இந்த அமானிதத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் நாம் ஒரு வைராக்கியமான முடிவுடன் ஓய்வில்லாமல் இயங்க வேண்டி இருக்கிறது.
எனினும் இந்த அமானிதம்; இன்றைய உலகில் எம்மை ஆபத்தின்பாலும் கஷ்டத்தின்பாலும் கொண்டு செல்லக்கூடியது. இருந்தாலும் நாம் முழு மனதுடன் அவற்றை ஏற்று நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.
அல்லாஹ் அல் மஆரிஜ் என்ற அத்தியாயத்தில் கூறுகிறான்;
"இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களின் அமானிதங்களையும்(தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணிக்கொள்கின்றனர். இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள். இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையின் மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குறிய முறைகளை பேணி) பாதுகாத்து கொள்வார்கள். அவர்கள் சுவனங்களில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள்" (அல் மஆரிஜ்: 32-35)
நாம் எல்லோரும் கவனமாக சிந்திக்க வேண்டிய சிலதை வினவிக்கொண்டு இந்த உரையை முடித்துக்கொள்ள நினைக்கிறேன்.
நாம் இஸ்லாத்திற்காக ஒவ்வொரு ஸஹாபிகளும், பாரிய தியாகங்களை புரிந்தார்கள் என்பதை வரலாற்றிலே படிக்கிறோம். அவர்கள் முழுமையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். இஸ்லாத்திற்காக மிக அதிகமாக செலவளித்தார்கள்.
இவற்றையெல்லாம் நாம் வாசிக்கின்றபோது, கேற்கின்றபோது அவர்களுடைய பண்புகளில் ஒரு சிலவேணும் எம்மிடம் இருக்கிறதா என கேட்டுப்பாருங்கள்.
அவர்களிடம் இந்த தீனை நிலைநாட்டுகின்ற அமானிதத்தின் மீது இருந்த தீவிரத்தை பார்க்கும்போது எம்மிடமும் அது போன்ற தீவிரத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்க தோன்றுகிறதல்லவா?
மேலும் இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ள எமது தலைமுறையினரில் சிலரின் வரலாற்றைப்பார்க்;கும்போதும் இந்நிலை எமக்கு ஏற்படுகிறதல்லவா?
உஸ்பஹிஸ்தான் சிறைக்காவலர்கள் எமது சகோதரர் பர்ஹத் உஸ்மானோவிடம் உன்னுடைய சிறுநீரகத்தை தாக்குவோம் என பயமுறுத்தியபோது "என்னிடம் ஆயிரம் சிறுநீரகங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் நான் எனது தீனுக்காக கொடுக்க தயாராக இருக்கும் நிலையில் நீங்கள் எனது ஒரு சிறுநீரகத்தைப்பற்றிப் பேசுகிறீர்கள்" என கூறியதை கேள்விப்படும்போது, எமது தியாகங்களின் எடை என்ன என்ற வினா எம்முன் எழுகிறதல்லவா?
இப்போது வேறொரு கோணத்தில் சிந்தித்து பாருங்கள்...
எத்தகைய தியாகங்கiயும் இந்த தீனுக்காக செய்யாமலும் தீனுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருக்கும் மக்களை பற்றி நாம் கேள்விப்படும்போது எமக்கு எத்தகைய விசனம் ஏற்படுகிறது. அவர்களில் ஒருவராக நாம் எம்மை கண்டால் எவ்வாறிருக்கும் என எண்ணிப்பாருங்கள்.
எனது அன்பான சகோதரர்களே!
இவ்வாறு நான் முன்னுரைத்த எதிரும், புதிருமான இரு தரப்பினரும் அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கே உரிய பிரச்சினைகளுடனும், அவர்களுக்கே வழிமுறைகளுடனும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
இதேபோல நாமும் ஒரு நாள் இந்த வரலாற்றில் ஒரு அங்கமாக மாறப்போகிறோம் என்பது பற்றி சிந்தித்து பாருங்கள்.
நமது வாழ்வும், சாதனையும், தியாகமும், பலகீனங்களும் நாளைய சமூகத்தின் படிப்பினைகளாக மாறப்போகின்றன. இன்ஷா அல்லாஹ்.
அதன்போது அந்த புதிய தலைமுறை எம்மைப்பார்த்து தாமும் எவ்வாறு இருக்க வேண்டும, அல்லது தாமும் இவர்களைப்போல் துரோகிகளாக இருந்துவிடக்கூடாது என படிப்பினை பெறுவதற்கு நாம் காரணமாக அமையப்போகிறோம். இன்ஷா அல்லாஹ்.
நமது முன்னோர்களை நாம் பார்த்து அல்லது நமது உம்மத்தில் தோன்றிய மிகச்சிறந்த மனிதர்களை பார்த்து அல்லது நமக்கு அண்மையில் ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய தியாகிகளின் தியாகளில் நாம் எந்தளவிற்கு செய்திருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்த்து நம்மை எடை போட வேண்டியிருக்கிறது.
நமது மரணத்தின் பின்பு...
அந்த மனிதர் நம்பிக்கைக்குரியவர், அவர் வீரமிக்கவர், அடிபணிவதில் முன்மாதிரியானவர், அவரது வணக்கங்களை நேர்த்தியாக நிறைவேற்றுவார், அவர் ஒரு மிகச்சிறந்த அழைப்பாளர், அவர் முழுமையானதொரு தியாகி, து}ய்மையான எண்ணத்துடன் செயற்பட்டவர், சிறந்த அஹ்லாக்குடையவர், அவரை சூழ இருந்தவர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி, அவர் சத்தியங்களை நிறைவேற்றுபவர், அவர் மீது சுமத்தப்பட்ட அமானிதங்களுக்கு மோசடி செய்யாதவர், அவர் இந்த உலகில் அல்லாஹ்வின் அமானிதமான கிலாபா ராஸிதாவை நிறுவுவதற்கு பாடுபட்டவர்ஸ
என எதிர்கால சந்ததியினரால் அழைக்கப்பட்டால் அத்தகைய மனிதனை சார்ந்து இருப்பதை நான் ஆசைப்படுகிறேன் அவ்வாறு நான் செய்வதன் ஊடாக நான் பாதுகாப்பு பெற்று விட்டேன். எனது தாய் கௌரவம் பெற்று விட்டார், எனது சகோதரர்கள் அச்சமற்றவர்களானார்கள். அல்லாஹ்வின் தீன் இந்த உலகில் மேலோங்கும்.
யா அல்லாஹ்!
இத்தகைய மனிதனுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை அருளுவாயாக! அவனுடன் சார்ந்திருந்த எனக்கும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவாயாக!
0 comments:
Post a Comment